Advertisment

கிரக இணைவுகள் தரும் நன்மையும் தீமையும்! 12 லக்ன, ராசிக்காரர்களுக்கு... -ஆர். மகாலட்சுமி சென்ற இதழ் தொடர்ச்சி.....

kiragam


தனுசு லக்னம், தனுசு ராசி

சூரியன்+சந்திரன்: தனுசுத்தாருக்கு இந்த அமைப்பு சுபத்தன்மையுடன் இருப்பின், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். கிடைக்கும் அதிர்ஷ்டம் சற்று எதிர்மறை தன்மை கொண்டிருக்கும். நீர் ஆதாரங்கள் மறைமுக வருமானம் தரும். அரசு சார்ந்த, நீர் சுத்தகரிப்பு மற்றும் அணை கட்டுக்கள், நீர் தேக்கம், குடிநீர் வாரியம், கழிவு நீர் அகற்றும் வாரியம் இதன்மூலம் நேரிடையாகவும் மற்றும் மறைமுகமாகவும் வெகுமானம், வருமானம் பெறுவீர்கள். உங்களுக்கு தாய்வழி சொத்து கிடைக்கும். 

Advertisment

சூரியன்+சந்திரன்: தனுசுக்காரர்கள் இந்த அமைப்பை அசுபத்தன்மையுடன் பெற்றிருந்தால், தாயார் அல்லது தந்தை மனநலம் பாதித்து, வீட்டை விட்டு ஓடிவிடும் நிலை உண்டு. அரசு தண்டனைகள் கிடைக்கும். உங்கள் தந்தை, மறைமுகமாக, பெண்கள் தொடர்பு உடையவராக இருப் பார். பெற்றோர் எப் போதும் நோய் தாக்கம் உடையவராக இருப்பர். உங்களுக்கும் நீர் சார்ந்த நோய் எப்போதும் இம்சை தரும்.

Advertisment

பரிகாரம்: சிவன் கோவில்களில் விளக் கேற்றலாம். சிவன் பிரகாரம், இருட்டாக இருப்பின் மின் விளக்குகள் பொருத்த ஆவன செய்யவும்.

செவ்வாய்+புதன்: தனுசுக்காரர்கள், இந்த அமைப்பை சுபமாக பெற்றிருந்தால், கல்யாணம் முடித்துவிட்டு ஓடினாலும் சரி, ஓடிப்போய் கல்யாணம் செய்தாலும் எல்லாம் சுபமாக இருக்கும். இந்த கல்யாணம், சொந்தத் தொழில் ஆரம்பிக்கும் வழிவகை காட்டும். உங்கள் அதிகமான புத்திசாலித்தனம் மற்றும் தைரியம்மூலம் நிறைய நண்பர்களை பெறுவது மனிதர்களின் சந்திப்பு பெருகும். இது உள்நாடு மட்டுமல்ல, வெளிநாட்டிலும், தொழில் வளர்ச்சி அடைய உதவும். உங்கள் வாழ்க்கைத் துணையின் திட்டமும், வழி காட்டுதலும் பெரும் கௌரவம் தேடித் தரும்.

செவ்வாய்+புதன்: தனுசுக்காரர்களுக்கு அசுபமாக இவ்விணைவு இருப்பின், குறைவான புத்திசாலித


தனுசு லக்னம், தனுசு ராசி

சூரியன்+சந்திரன்: தனுசுத்தாருக்கு இந்த அமைப்பு சுபத்தன்மையுடன் இருப்பின், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். கிடைக்கும் அதிர்ஷ்டம் சற்று எதிர்மறை தன்மை கொண்டிருக்கும். நீர் ஆதாரங்கள் மறைமுக வருமானம் தரும். அரசு சார்ந்த, நீர் சுத்தகரிப்பு மற்றும் அணை கட்டுக்கள், நீர் தேக்கம், குடிநீர் வாரியம், கழிவு நீர் அகற்றும் வாரியம் இதன்மூலம் நேரிடையாகவும் மற்றும் மறைமுகமாகவும் வெகுமானம், வருமானம் பெறுவீர்கள். உங்களுக்கு தாய்வழி சொத்து கிடைக்கும். 

Advertisment

சூரியன்+சந்திரன்: தனுசுக்காரர்கள் இந்த அமைப்பை அசுபத்தன்மையுடன் பெற்றிருந்தால், தாயார் அல்லது தந்தை மனநலம் பாதித்து, வீட்டை விட்டு ஓடிவிடும் நிலை உண்டு. அரசு தண்டனைகள் கிடைக்கும். உங்கள் தந்தை, மறைமுகமாக, பெண்கள் தொடர்பு உடையவராக இருப் பார். பெற்றோர் எப் போதும் நோய் தாக்கம் உடையவராக இருப்பர். உங்களுக்கும் நீர் சார்ந்த நோய் எப்போதும் இம்சை தரும்.

Advertisment

பரிகாரம்: சிவன் கோவில்களில் விளக் கேற்றலாம். சிவன் பிரகாரம், இருட்டாக இருப்பின் மின் விளக்குகள் பொருத்த ஆவன செய்யவும்.

செவ்வாய்+புதன்: தனுசுக்காரர்கள், இந்த அமைப்பை சுபமாக பெற்றிருந்தால், கல்யாணம் முடித்துவிட்டு ஓடினாலும் சரி, ஓடிப்போய் கல்யாணம் செய்தாலும் எல்லாம் சுபமாக இருக்கும். இந்த கல்யாணம், சொந்தத் தொழில் ஆரம்பிக்கும் வழிவகை காட்டும். உங்கள் அதிகமான புத்திசாலித்தனம் மற்றும் தைரியம்மூலம் நிறைய நண்பர்களை பெறுவது மனிதர்களின் சந்திப்பு பெருகும். இது உள்நாடு மட்டுமல்ல, வெளிநாட்டிலும், தொழில் வளர்ச்சி அடைய உதவும். உங்கள் வாழ்க்கைத் துணையின் திட்டமும், வழி காட்டுதலும் பெரும் கௌரவம் தேடித் தரும்.

செவ்வாய்+புதன்: தனுசுக்காரர்களுக்கு அசுபமாக இவ்விணைவு இருப்பின், குறைவான புத்திசாலித்தனம் இருக்கும். காதல் விஷயம் சரிப்படாது. அப்படியே காதல் ஏற்பட்டாலும், அடித்துவிரட்டி விடுவர். 

திருமண வாழ்வு நீடிக்கும் வாய்ப்பு குறைவு. 

தொழில் முதலீடுகள் சரிவராது. வாரிசு களால் இம்சை உண்டு. உங்களுடன் பழகுகிறவர்கள் நன்றாக ஏமாற்றிவிடுவர். 

பரிகாரம்: நரசிம்மருக்கு வஸ்திரம் சாற்றியும், மஞ்சள் கொண்டும் வழிபடலாம். புதிதாக தொழில் தொடங்கும் தம்பதிகளுக்கு தேவைகேட்டறிந்து உதவவும். 

சுக்கிரன்+சனி: தனுசுக்காரர்களுக்கு, இந்த கிரக சேர்க்கை சுபத்தன்மை பெற்றிருந்தால் சிறு தூர அலைச்சலுடன், பிறந்த இடத்தில் சமூக சேவை செய்வீர்கள். நாளடைவில் இந்த பொதுநலத் தொண்டு, மெதுவாக அரசியலில் சேர்த்துவிடும். சேவையின் உழைப்பு ஒரு பங்கு என்றால், பேச்சு பல மடங்கு ஆக அமையும். இந்த இனிமையான சொற்கள், காசு செலவழிக்காமல் உங்களை, அரசியலில் மேன்மைக்கு வழிவகுத்துக் கொடுக்கும். வீட்டில் சமைத்து,  அன்னதானம் செய்வீர்கள். இதற்கு உங்கள் மூத்த சகோதரியும், இளைய சகோதரனும் துணையாக இருப்பார்கள். உங்களின் கடுமையான உழைப்பும், நல்ல ஞாபக சக்தியும் பதவி உயர்வையும், பண பெருக்கத்தையும் தரும்.

சுக்கிரன்+சனி: தனுசுக்காரர்களுக்கு, இந்த சேர்க்கை அசுபத்தன்மை கொண்டிருந்தால் உங்களுகளுக்கு வேலையை, தொடர்ச்சியாக செய்யமுடியாமல் அடிக்கடி காய்ச்சல் போன்று வந்துவிடும். மறதியும் சோம்பேறித்தனமும் அதிகமிருக்கும். பண புழக்கம் தடை, தாமதமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் வச்சு செய்வர். கண், பல், முகத்தில் சிறு குறையுண்டு.

பரிகாரம்: பெருமாளும், தாயாரும் சேர்ந்த கோவில்களில் உழவாரப்பணி மற்றும் கோவிலை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.

குரு+ராகு அல்லது கேது: தனுசுக் காரர்களுக்கு குருபகவான், ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தால், உங்களுக்கு, வீடு, வாகன சேர்க்கை பெருகும். வயல், தோட்டம் சார்ந்த விவசாய இயந்திரங் களை அதிகப்படியாக வாங்க இயலும். கல்வியிலும் ஏதாவது தில்லாங்கடி செய்து, ஒரு அஞ்சாறு பட்டம் வாங்கி வைத்துக்கொள்வீர்கள். தாயாரை அன்பாக பேசியோ, மிரட்டியோ, அவரின் வீடு, தங்க நகைகளை வாங்கி, உங்கள் வசமாக்கிக்கொள்வீர்கள். ரொம்ப யோசித்து, உங்கள் கிணறை காணவில்லை என்று வழக்கு தொடர்ந்து, நஷ்டஈடு வாங்கிக் விடுவீர்கள். சிலர் எங்கள் வயலில், பெட்ரோல் ஊறி ஊற்றெடுக்கிறது என்று கத்தி, கூப்பாடு போட்டு, அதன்மூலம் நல்ல வருமானம், பார்த்துவிடுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலை மேன்மையாக்குகிறேன், வெளிநாட்டில் பிராஞ்ச் ஓப்பன் செய்கிறேன் என்று கூறி, அவரை பைத்தியமாக்கி விட்டுத்தான் ஓய்வார்கள். மஞ்சள் விளையும் வயல்களில், வேண்டாத்தனம் செய்து, மஞ்சள் விலையை உயர்த்திவிடுவர்.

பரிகாரம்: அருகிலுள்ள சிவனுக்கு வஸ்திரம் சாற்றி, மஞ்சள் காணிக்கை செய்யவும். அங்குள்ள அர்ச்சகருக்கு மஞ்சள் வேஷ்டி வாங்கிக் கொடுக்கவும். 

மகர லக்னம், மகர ராசி

சூரியன்+சந்திரன்: மகரத்தாருக்கு, இந்த கிரக சேர்க்கை, சுபத்தன்மையுடன் இருந்தால் அரசு சார்ந்த வழக்குகளை, குறுக்கு வழியிலாவது, வெற்றி அடைய செய்துவிடுவீர்கள். வணிகத்தில் ஏற்படும் அரசு சார்ந்த பிரச்சினைகளை, அண்டர் கிரவுண்ட் செயலால், சமாளித்துவிடுவீர்கள். நீங்கள் கிரிமினல் வக்கீலாக இருந்தால், மிக பிரபலமாக ஜொலிப்பீர்கள். ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தகம் முதன்மை பெறும். இன்ஷூயூரன்ஸ் துறை நன்கு ஆகிவரும். பழைய, பழமையான ஆதிகாலத்து கட்டடங்களை, மறுபடியும் அதே மோஸ்தரில், புதுப்பிப்பதில் வல்லவராக திகழ்வீர்கள்.

சூரியன்+சந்திரன்: மகரத்தாருக்கு இவ்விணைவு, அசுபத்தன்மை பெற்றிருந்தால், உங்கள் தாய்- தந்தையரிடையே இணக்கம் இருக்காது. திருமண வாழ்வில் சங்கடம் தோன்றும். அரசு சார்ந்த விஷயங்கள் தாமதமாகும். 

அரசியல்வாதிகள் வெகு தொல்லை கொடுப்பர். மது போன்ற பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும். வழக்குகள் வெற்றி பெறுவது மிக கடினமாக அமையும்.

பரிகாரம்: சிவனுக்கும், அம்பாளுக்கும் விளக்கேற்றி வழிபடவும். சிவன் கோவில் ஜலதாரையில் பழுது ஏற்பட்டால், சீர்செய்து கொடுங்கள். 

செவ்வாய்+புதன்: மகரத்தாருக்கு இந்த இணைவு, சுபத்தன்மையுடன் இருந்தால், கடுமையான உழைப்புமூலம், நினைத்ததை சாதித்துவிடுவீர்கள். அரசியலிலும், நீங்கள் ஆற்றும் கடும் சேவை வேலைகள், உங்களை முதன்மைக்கு கொண்டு சேர்க்கும். தந்தையின் பெயரிலுள்ள வீடு கிடைக்கும். வேலையில், பதவி உயர்வை, வெகு முயற்சி செய்து பெற்றுவிடுவீர்கள். நிறைய மக்கள் தொடர்பை வலுவாக்கிக்கொள்வீர்கள். தெய்வ பயம் கொண்டவர்கள். உங்கள் பெற்றோர் சண்டையிட்டுக்கொண்டே காலம் தள்ளுவர். கல்வி சார்ந்து பணி இருக்கும். சிலர் சீருடை பணியில் உயர் அளவு பதவி வகிப்பர். வீட்டு பெருக்கம் உண்டு.

செவ்வாய்+புதன்: மகரத்தாருக்கு இந்த கிரக இணைவு அசுபமாக இருந்தால், உங்கள் திருமண வாழ்வு, உங்கள் பெற்றோரால் சீரழியும்.  வேலை செய்யும் இடத்தில், பதவி உயர்வோ அல்லது மனநிறைவோ கிடைக்காது. அதிர்ஷ்டம், யோகம் இவை சற்று நொண்டியடிக்கும். அரசியல் சரிப்படாது. வதந்திகளால் வாழ்வு கெடும். 

பரிகாரம்: நரசிம்மருக்கு விளக்கேற்றவும். உங்கள் பெற்றோர் வயதில் உள்ளவருக்கு நோயின் மருந்து கேட்டறிந்து வாங்கிக் கொடுங்கள். 

சுக்கிரன்+சனி: மகரத்தாருக்கு, இந்த கிரக சேர்க்கை, சுப சம்பந்தம் கொண்டிருந்தால், உங்களது அபிரிதமான யோசனை, சிந்தனை, புத்திசாலித்தனம் இவற்றால், சொந்தத் தொழில் ஆரம்பித்து நல்ல பணம் சம்பாதித்துவிடுவீர்கள். வாரிசுகளால் நல்ல கௌரவம் கிடைக்கும். சிலர் பேச்சினால் தொழில்புரிவர். மந்திரி பதவி யோக முண்டு. பூர்வீக பெருமை கொள்வர். கலைத் தொழிலில், நடிப்பு மட்டுமல்ல, வசனகர்த்தா, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், ஒளிப்பதிவாளர் எனும் தொழிலில் ஈடுபாடு கொள்வர். பங்கு பத்திரம், சம்பந்த பண பரிமாற்றத் தொழில் வெகு எளிதாக கைகூடும். விளையாட்டு பயிற்சி யாளர்களாக இருக்க இயலும். எந்தத் தொழில் செய்தாலும், அதில் கணிசமாக பணம் வருமாறு பார்த்துக்கொள்வர்.

சுக்கிரன்+சனி: மகரத்தாருக்கு அசுப இணைவில் இருந்தால், பிறர் பேசுவதை, சட்டென்று கிரகித்து அதனை சரியாக புரிந்துகொள்ள இயலாது. காசு, பண விஷயம் கையைக் கடிக்கும். கலைத்தொழிலில், ரொம்ப கௌரவ குறைச்சலுடன் அதிர்ஷ்டமின்மையும் புலப்படும். பெண் வாரிசுகள் ரொம்ப கஷ்டம் தருவர். ஜீரண சம்பந்த உடல்நல குறைவு இருக்கும்.

பரிகாரம்: பெருமாளும், தாயாரும் இணைந்த கோவில்களில் நந்தவனம் செழிக்க, உழைப்பைத் தரவும். குழந்தைபெற்ற பெண்களுக்கு முடிந்த உதவி செய்யவும். 

குரு+ராகு அல்லது கேது: மகரத்தாருக்கு இவ்வகை கிரக சேர்க்கை இருப்பின் இவர்கள் எந்த வகையில் லஞ்சம் கொடுத்தும், ஒப்பந்தங்களை வாங்கிவிடுவீர். இளைய சகோதரனை ஏமாற்றி, சொத்துகளை தன் பெயருக்கு வாங்கிவிடுவர். இவருடைய பயணங்கள் உள் நாட்டில் சிறு தூரமாக இருப்பினும், வெளிநாடாக இருப்பினும், மிக சௌகர்யமாக இருப்பதுபோல் பார்த்துக்கொள்வர். தங்களுடைய கறுப்பு பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்யஆலாய் பறப்பர். 

இவர்கள் ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களாக இருப்பின், இவர்களைபோல நல்லவர்கள் கிடையாது என்று நம்ப செய்வதில் கில்லாடியாக இருப்பர். 

இவர்களின் புத்தி சாதுர்யம், எதிரில் இருப்ப வர்களை, அப்படியே கட்டுப்படுத்திவிடும். வாகன டீலர்ஷிப் முதலீடு தோட்ட குத்தகை, கோவில் சார்ந்த அனைத்து ஒப்பந்தங்கள் வெகு நன்மை தரும்.

பரிகாரம்: சிவன் கோவிலுக்கு, விளக்கேற்ற நல்லெண்ணெய் வாங்கிக் கொடுக்கவும். கோவில் வாகனங்களை பழுது பார்க்க நீக்க உதவவும்.     

செல்: 94449 61845

bala221125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe