குரு+ராகு அல்லது கேது: கன்னியாருக்கு குருவும், ராகு அல்லது கேதுவும் சேர்ந்திருப்பின் கல்யாண விஷயங்களில் கலாட்டா பண்ணுவார்கள். இவர்களின் வாழ்க்கைத் துணையின் தொழிலை, ஒன்று நன்கு முன்னேற்றுவார்கள். அல்லது நன்றாக இழுத்து மூட வைத்துவிடுவார்கள். வீட்டிலும், தாயாருக்கும், வாழ்க்கைத் துணைக்கு இடையில், நன்கு சண்டை மூட்டிவிடுவர். இவர்கள், அரசியலில் இருந்தால், எந்த கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்த கலர் துண்டை மட்டுமே தோளில் போட்டுக்கொள்வர். இவர்களுக்குரிய அதீத புத்திசாலித்தனம், எதிரில் உள்ளவர்களை, எவ்விதம் ஏமாற்றலாம் என்றே கணக்கு போடும். இவர்கள் ஒரு கல்யாணம் என்றால் திருப்தியே இராது. ஊருக்கு ஒரு கல்யாணம் செய்து தம்பதி பெருக்கம் காண்பர். இதனால் இவருக்கு, ஊருக்கு ஒரு வீடு இருக்கும். இவர்களை கட்டிக்கொண்டவர்கள் ரொம்ப திண்டாடுவார்கள்.
பரிகாரம்: ஊரிலுள்ள சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வழிபடவும். பக்தி, ஸ்லோக புத்தக விநியோகம் நன்று. வயதான தம்பதிகளின் வீடு, கிணறு பழுது செலவை ஏற்றுக்கொள்ளவும்.
துலா லக்னம், துலா ராசி
சூரியன்+சந்திரன்: துலாத்தாருக்கு, இந்த இணைவு, சுபத்தன்மையுடன் இருந்தால், நிறைய மக்கள் பழக்கம் உடையவர் களாக இருப்பர். இந்த மக்கள் பழக்கம், இவர்களை பொதுநல சேவைக்கு இழுத்துச் செல்லும். இந்த பொதுநல சேவை, நாளா வட்டத்தில் அரசியல் அமைப்பில், ஒரு மந்திரி நாற்காலியில் உட்கார்த்தி வைத்துவிடும். இவர்கள் எந்த வேலையில் இருந்தாலும், அதில் பதவி உயர்வை, குறுக்குவழியைக் கையாண்டு, வாங்கிவிடுவர். இவர்களின் பெற்றோர் சமையல் தொழிலில் முதன்மை பெற்றவராக விளங்குவர்.சூரியன்+சந்திரன்: துலாத்தாருக்கு, இந்த கிரக சம்பந்தம் அசுபத்தன்மையுடன் இருப்பின், எந்தத் தொழில் செய்தாலும், அது விருத்தியாக வராது. பெற்றோர் சேர்ந்தே இருக்கமாட்டார்கள். மூத்த சகோதரன் உங்களை கரித்துக்கொட்டுவார். நீர் நிலைகளில் பத்திரமாக இருக்கவேண்டும். உங்கள் தாயார் மன பேதலிப்பு அடைவார்.
பரிகாரம்: ஞாயிறுதோறும் அம்பாளுக்கு அபிஷேகத்திற்கு, திரவ பெருட்கள் கொடுக்கலாம். அல்லது தினமும் அம்பாளை சேவித்து வாருங்கள். வ

பரிகாரம்: ஞாயிறுதோறும் அம்பாளுக்கு அபிஷேகத்திற்கு, திரவ பெருட்கள் கொடுக்கலாம். அல்லது தினமும் அம்பாளை சேவித்து வாருங்கள். வயதானவர்கள், விரும்பிய இனிப்பு பண்டம் அல்லது பழம் கேட்டு வாங்கிக் கொடுங்கள்.
செவ்வாய்+புதன்: துலாத்தாருக்கு, இந்த அமைப்பு சுபத்தன்மையுடன் இருந்தால் உங்கள் திருமணம், மிக செலவுடன் நன்கு நடக்கும். திருமணமானவுடன் வெளியூர், வெளிநாடு செல்லலாம். மேலும் திருமணம் நல்லதிர்ஷ்டம் அழைத்து வரும். திருமணத்திற்குபின் வாழ்வு நிலை பல படிகள் உயரும். உங்கள் வணிகம் எத்தன்மை கொண்டதாக இருப்பினும், அது வெளிநாட்டிலும் பரவி செழித்து, வெளிநாட்டு பணம் சம்பாதித்துத் தரும். பரம்பரை தொடர்புகள் நல்ல பழக்கம் தரும். அது உங்களின் குலதொழிலான களறி பயிற்சி, வாள்வீச்சு, பாதுகாப்பு தருவது போன்ற சற்று கரடுமுரடான தொழில்களை வளர்க்கும். இதன்மூலம் உலகப் புகழ் பெறுவீர்கள்.செவ்வாய்+புதன்: துலாத்தாருக்கு, இது அசுபத்தன்மையுடன் இருந்தால், உங்கள் குடும்பத் தொழில் உங்களுக்கு சரிப்பட்டு வராது. உங்களுக்கு வெளி ஆட்களிடம் பழகத் தெரியாத நிலை ஏற்படும். ஏன், வாழ்க்கைத்துணை உங்களுடன் வாழ பிடிக்காமல் பிரிந்துவிடும் நிலை வரும். அதிர்ஷ்டக் குறைவு, வாழ்வை பொலிவிழக்கச் செய்துவிடும்.
பரிகாரம்: நரசிம்மருக்கு பானகம் வைத்து வணங்கவும். குடும்ப திருமணங்களின்போது, உடலுழைப்பை பரிசாக கொடுங்கள்.
சுக்கிரன்+சனி: துலாத்தாருக்கு, இவ்விணைவு சுபமாக இருப்பின், வீடு, வாகனம், வயல் தோட்டம் இவை பெருகும். இதில் பல சொத்துகள் அனாமத்தாக வந்துசேரும். சொந்தங்களில் வாரிசுகள் இல்லாதவர்கள், தங்கள் வீடு, வயலை இவர்கள் பெயருக்கு எழுதி வைத்துவிடுவர். சிலசமயம், இவர்களே வம்படியாக எழுதி வாங்கி வைத்துக்கொள்வதும் நடக்கும். இவர்கள் அரசியலில் இருந்தால், மந்திரி பதவியை பிடுங்கி வைத்துக்கொள்வர். இவர்களின் அறிவு, சற்று கோணலாக சிந்தித்து, புகழ்பெறும் இன்ஷூயூரன்ஸ், கிராஷூட்டி, புதையல் போன்ற விஷயங்கள் நன்கு ஆகிவரும். இவர்களுக்கு வாகனத்தில் செல்லும்பேது, சின்ன சிராய்ப்பு ஏற்பட்டாலும் அதை மலையளவு ஆக்கி, பெரும் பணம் தேற்றி விடுவார். சுக்கிரன்+சனி: துலாத்தாருக்கு, இந்த அமைப்பு அசுபத்தன்மையுடன் இருந்தால், இவர்களுக்கு அடிக்கடி வாகனவிபத்து ஏற்படும். ஆனால் நஷ்டஈடு கிடைக்காது. இதுபோல் வயல் தோட்டம் நஷ்டம் கொடுத்தாலும் அதற்கான பணம் இவர்களுக்கு மட்டும் வராது. இவர்களுக்கு தங்கள் கஷ்டத்தை பிறருக்கு புரிய வைக்க இயலாது. அதனால் இழப்பு உண்டு. பரிகாரம்: பெருமாளும், தாயாரும் உள்ள கோவில்களில் உழவாரப் பணி செய்யவும். அடிபட்டவர்களுக்கு, முடிந்த உதவி செய்யுங்கள். குரு+ராகு அல்லது கேது: துலாத்தாருக்கு இந்த அமைப்பு இருந்தால், சேவை செய்கிறேன் பேர்வழி என்று எப்போதும் ஊருக்குள் அலைந்துகொண்டே இருப்பீர்கள். சிலர் வெளிநாட்டில் வேலை கிடைத்தால் வேலை செய்வேன். இல்லை, வீட்டிலேயே தூங்குவேன் என்பர். சிலர் பத்திரிகைகளில், ஊர் சண்டையை, பெரிதுபடுத்தி எழுதி, இவர்கள் பிரபலமாகிவிடுவர். கைபேசியில் கண்டதையும் பிரசுரித்து, முதன்மைக்கு வருவர். இவர்களின் பொழுது போக்குகள், பின்னாளில் தொழிலாக பரிணாம வளர்ச்சி பெரும். தன் இளைய சகோதரனின் உழைப்பை, இவர் தனதாக்கி கொள்வர். ரொம்ப குசும்பு பேசி, கோள்மூட்டி, சண்டையை ரசிப்பர். இவர்கள் செய்யும் சேவை, தர்ம விஷயங்களில் இவர்களுக்கு என்று தனியாக பயன், பலன் இருந்தே ஆகவேண்டும். இல்லையெனில் உபகாரமாவது ஒன்றா வது என தள்ளிவிடுவர்.
பரிகாரம்: உங்கள் ஊர் சிவன் கோவில் வாகனம் சுமப்பது, வாகனத்தை பழுது பார்க்கும் செலவை ஏற்றுக்கொள்ளவும். குழந்தைகளின் மருந்து செலவுக்கு பணம் செலவழிக்கவும்.
விருச்சிக லக்னம், விருச்சிக ராசி
சூரியன்+சந்திரன்: விருச்சிகத்தாருக்கு, இது சுப அமைப்பில் இருந்தால், உங்கள் தொழிலின் மேன்மை, முன்னேற்றம் இவை ஒரு பூ மலர்வதுபோல், இயல்பாக, எளிதாக அமையும். உங்கள் தந்தையின் தொழில், அப்படியே உங்கள் கைக்கு வந்துவிடும். அரசியலிலும், தந்தையின் மந்திரி போன்ற இன்னபிற பெத்த பதவிகள், தன்னிச்சையாக, தனயனுக்கு வந்து சேர்ந்துவிடும். அதிர்ஷ்டமும், கௌரவமும் பெருகும். இதனால் சேவை செய்யும் சூழல் உண்டாகி, பொதுமக்கள் தொடர்பு அதிகரிக்கும். உங்களின் சிறு உழைப்பும், பன்மடங்காக பெரிதுபடுத்தப்படும்.
சூரியன்+சந்திரன்: விருச்சிகத்தாருக்கு, இது சுப அமைப்பில் இருந்தால், தந்தை அனுசரணையும் அவரது தொழிலும் உங்கள் தொழிலின் மேன்மை, முன்னேற்றம் இவை ஒரு பூ மலர்வதுபோல், இயல்பாக, எளிதாக அமையும். உங்கள் தந்தையின் தொழில், அப்படியே உங்கள் கைக்கு வந்துவிடும். அரசியலிலும், தந்தையின் மந்திரி போன்ற இன்னபிற பெத்த பதவிகள், தன்னிச்சையாக, தனயனுக்கு வந்து சேர்ந்துவிடும். அதிர்ஷ்டமும், கௌரவமும் பெருகும். இதனால் சேவை செய்யும் சூழல் உண்டாகி, பொதுமக்கள் தொடர்பு அதிகரிக்கும். உங்களின் சிறு உழைப்பும் பன்மடங்காக பெரிதுபடுத்தப்படும்.சூரியன்+சந்திரன்: விருச்சிகத்தாருக்கு இந்த அமைப்பு, அசுபமாக இருந்தால், தந்தை அனுசரணையும், அவரது தொழிலும் உங்களுக்கு கிடைக்காது. பிறந்த இடத்தைவிட்டு வேறிடம் சென்று, பிழைக்கும் நிர்பந்தம் உண்டாகும். நீங்கள் எந்தத் தொழில் ஆரம்பித்தாலும், அது விரயமாகிவிடும். அரசு அதிகார தொந்தரவு தொடரும். கௌரவம் கிடைக்காது.
பரிகாரம்: திங்கட்கிழமைகளில், சிவன் அம்பாளுக்கு, விளக்கேற்றி வணங்கவும். வயதானவர்களின் வேலையை பகிர்ந்து செய்யவும்.
செவ்வாய்+புதன்: விருச்சிகத்தாருக்கு இந்த இணைவு, சுபத்தன்மையுடன் இருந்தால் அரசியலில், குறுக்குவழிகள் அத்தனையையும் பயன்படுத்தி, உயர்நிலைக்கு வந்துவிடுவீர்கள். உங்கள் எண்ணங்களை செயலாற்ற, நேர்மையான வழிகளே தென்படாது. வேலைகளில், பதவி உயர்வை, லஞ்சம் கொடுத்து பெற்றுக்கொள்வீர்கள். அசைவ சமையலில் அசத்துவீர்கள். சமையலின் ருசியை அதிகரிக்க, தடுக்கப்பட்ட உணவு வஸ்த்துக்களை, கலப்பட பொருளையும் சேர்த்து, நல்ல லாபம் சம்பாதித்து விடுவீர்கள். கள்ள கணக்கு எழுதுவதில் நிபுணராக இருப்பீர்கள். சேவை அமைப்புகளில் தலைவராக இருந்து, அதனை உங்கள் பெயருக்கு மாற்றிவிடும் வல்லமை படைத்தவர்கள். செவ்வாய்+புதன்: விருச்சிகத்தாருக்கு, இந்த அமைப்பு, அசுபத்தன்மை பெற்றிருந்தால் உழைப்பதற்கும், யோசிப்பதற்கும் ரொம்ப சோம்பறித்தனம் படுவீர்கள். இதனால் வாழ்வு ஓட்டமின்றி, சாக்கடைபோல் தேங்கி நாறிவிடும். நீங்கள் உழைக்காமல், ஊர்ல எல்லா பயலும் நல்லாயிருக்கான். எனக்கு மட்டும் அதிர்ஷ்டமில்லை என வயிறு ஏரிவீர்கள்.
பரிகாரம்: நரசிம்மருக்கு விளக்கேற்றி வணங்கவும். நீங்கள் ஒருத்தருக்கு உதவியே செய்ய மாட்டீர்கள்.
சுக்கிரன்+சனி: விருச்சிகத்தாருக்கு இந்த கிரக அமைப்பு சுபத்துடன் இருந்தால், உங்களின் வணிக ஒப்பந்தங்கள், வெளிநாடு வரை நீண்டு தொடரும். மனை, வீடு, ரியல் எஸ்டேட் தொழில், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களிலும் எடுத்துச் செய்வீர்கள். உங்கள் தொழில் மட்டுமல்லாது, உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலிலும் திறம்பட நிர்வாகம் செய்வீர்கள். வணிகம் சார்ந்த, சிறு தூர மற்றும் வெளிநாட்டு அலைச்சல் இருந்துகொண்டே இருக்கும். உங்களுக்கு நல்ல, கடுமையாக வேலை செய்யும் பணியாளர்கள் கிடைப்பார்கள். வீடு, மனை, வாகன முதலீடு மற்றும் ஒப்பந்த டீலர்ஷிப் கிடைக்கும்.சுக்கிரன்+சனி: விருச்சிகத்தாருக்கு இந்த அமைப்பு, அசுபத்தன்மையுடன் இருந்தால், வீண் விரயமும், வெட்டி அலைச்சலும் இருந்துகொண்டே இருக்கும். வீடு அமைவது கஷ்டமாக இருக்கும். உங்கள் வேலையில் சதா குற்றம் கண்டுபிடிக்கப்படும். உங்கள் திருமண வாழ்வை, உங்கள் மாமனார் முயற்சிசெய்து கெடுத்துவிடுவார். வணிக முதலீடுகள் வீணாகும்.
பரிகாரம்: பெருமாள், தாயார் இணைந்த கோவில்களில் துளசி மாலை கொண்டு வணங்கவும். கோவில்களிலுள்ள சிறுசிறு வேலைகளை கேட்டறிந்து, அனுமதி பெற்று செய்யுங்கள்.
குரு+ராகு அல்லது கேது: விருச்சிகத்தாருக்கு, குருபகவான் ராகு அல்லது கேதுவுடன் இணைந்திருந்தால், தெய்வ நம்பிக்கை இராது. அது மட்டுமல்ல. குலதெய்வத்தையும் உதாசினப்படுத்துவார்கள். இதற்கு காரணம் பிற மத பற்று கொண்டிருப்பதால் இருக்கும். காதல் விஷயங்களில் மானாவாரியாக ஈடுபாடு காட்டுவார்கள். நிறைய ரேஷன் அட்டைகளில், இவர்கள் பெயர் இடம் பெற்றிருக்கும். இவர்களின் குயுக்தியான மூளை, அபிரிதமான பணம் பெற்றுத் தரும். பங்கு வர்த்தகத்தில் இறங்கி அடித்து ஜெயித்துவிடுவர். சில புக்தி பூர்வமான விளையாட்டுகளில் அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. கலையுலகிலும், பொழுதுபோக்கு துறையிலும் குத்தாட்டம் போடுவர். வெளிநாடுகளிலும் இவர்களின் புத்திசாலித்தனம் பாராட்டப்படும். இவர்களின் பூர்வீக இடத்தின் பெயர், இவர்களின் நல்ல செயல் அல்லது மாறுபாடான விஷயமான உலகம் முழுவதும் தெரியவரும்.
பரிகாரம்: சிவனுக்கு வஸ்திரம் சாற்றுவது மற்றும் காணிக்கை செலுத்துவது நல்லது. குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்யும்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 94449 61845
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us