கடக லக்னம் கடக ராசி!
சூரியன்+சந்திரன்: சுபத்தன்மையுடன் இணைவுபெற்றால், வாக்கு வசீகரமாக அமையும். பணத் தட்டுப்பாடின்றி இருப்பர். குடும்ப மேன்மை காண்பர். புத்திக்கூர்மை மிக்கவராக இருப்பர். இவர்களின் சிந்தனைத்திறன் வெகு வேகமாக அமையும். ஞாபக சக்திமிக்கவர்கள். அரசு சார்ந்து, மிக ஆதாயம் பெறுவர். தாய்- தந்தையரின் ஆசிர்வாதம் பெற்றவர்கள்.
சூரியன்+சந்திரன்: கடகத்தாருக்கு இந்த அமைப்பு அசுப வகையில் அமைந்திருந்தால் திக்குவாய் அல்லது ஒன்றரைக் கண் இருக்கும். பல் நீண்டிருக்கும். புத்தி தடுமாற்றம் உண்டு. குடும்பம் எனும் அமைப்பு சரியாக இராது. ஞாபக மறதி நிறைய இருக்கும். இவரது பெற்றோர் ஒருவருக்கொருவர் எதிரி மனப்பான்மையுடன் நடந்துகொள்வர். பணவசதி ரொம்ப கம்மியாக இருக்கும். அரசுவகை சிரமம் தொடர்ந்து இருக்கும். நீரில் கண்டம் உண்டு.
பரிகாரம்: திங்கட்கிழமைதோறும் சிவனுக்கு, பால், தயிர், இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. வயதானவர்களின் கண் சார்ந்த கண்ணாடி போன்று உதவவும்.
செவ்வாய்+புதன்: கடகத்தாருக்கு இந்த இணைவு, சுபத்தன்மையுடன் இருப்பின் இவர்கள் புத்திக்கூர்மையும், மிக தைரியமாக தொழிலில் முதலீடு செய்வர். பங்கு வர்த்தகத்தில் மிக ரிஸ்க் எடுக்க சளைக்க மாட்டார்கள்.
கைபேசிமூலம், தொழிலை உள்நாடு மட்டுமல்ல; வெளிநாட்டுக்கும் பரப்புவர். தொழி லை விரிவுபடுத்தவும், பல கிளைகள் திறக்கவும் மிக முயற்சி எடுத்து வெற்றி பெறுவர். நிறைய பணியாளர்களை வைத்து, வேலை வாங்கும் திறமைசாலிகள். இவர்களின் துணிச்சல், இவர்களுக்கு மந்திரி பதவி வாங்கித் தரும்.
செவ்வாய்+புதன்: கடகத்தாருக்கு, இது அசுப அமைப்புக்குள் இருந்தால், வாழ்வில் முன்னேற்றம், முயற்சி என்பதே இருக்காது. மிக கோழையாக இருப்பர். புத்தி மழுங்கலாக அமையும். கௌரவம் இன்றி வாழ்வர். பயணங்கள் நன்மை தராது. எப்போதும் பணியாளராகவே இருப்பர். வாரிசு களால் நன்மை கிடைக்காது.
பரிகாரம்: நரசிம்மரின் அபிஷேகத்திற்கு உரிய திரவங்களை காணிக்கை அளிக்கவும். கடைநிலை ஊழியர்களின் பயண சீட்டு செலவை ஏற்றுக்கொள்ளவும்.
சுக்கிரன்+சனி: கடகத்தாருக்கு, அசுபத் தன்மையுடன் இருப்பின், அரசியலில் முதன்மை பெறுவீர்கள். வணிகம் சார்ந்து, நிறைய கிளைகள் ஆரம்பித்துவிடுவீர்கள். வெளிநாட்டு, ஏற்றுமதி விஷயம் நல்ல லாபம் தரும். மூத்த சகோதரியின் அனுசரணை கிடைக்கும். வாழ்க்கைத் துணையின், தொழிலில் நல்ல விருத்தி இருக்கும். உங்கள் தாயாரும் மூத்த சகோதரியும் நல்ல உழைப் பாளர்களாக நன்மை தருவர். பழைய வீடுகள் பற்றிய தொழில் லாபம் உண்டு.
சுக்கிரன்+சனி: கடகத்தாருக்கு அசுபத் தன்மையுடன் இருப்பின் மூத்த சகோதரி யுடன் வீடு விஷயமாக எப்போதும் சண்டை வழக்கு நடந்துகொண்டிருக்கும். அவ்வப் போது, வாகன விபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்களைவிட வயது அதிகமான பெண்களால், திருமணம், இரண் டாம் திருமணம் என எதுவும் சரிப்பட்டு வராது.
பரிகாரம்: பெருமாளும், தாயாரும் சேர்ந்த கோவில்களில், திரு மஞ்சனத் துக்குரிய திரவியங்களை கொடுக்கவும். வயதான,
பெண்களின், வீட்டு சமையல் சார்ந்த பொருட்களை தேவை கேட்டறிந்து வாங்கிக் கொடுக்கவும்.
குரு+ராகு அல்லது கேது: கடகத்தாருக்கு இவ்வமைப்பு இருப்பின், நாம் உழைத்தால் போதும். சாமியை தனியாக வணங்க வேண்டாம் என்பர். மக்களுக்கு செய்யும் சேவையே, மகேசனுக்கு செய்யும் சேவை என்பர். கோவில் நிதியை எடுத்து, வட்டிக்கு கொடுத்து சம்பாதிப்பர். கோவிலில் வேலை செய்வோர், கோவில் நிலத்தை, சல்லிசாக விற்றுவிடுவர். கோவில் சார்ந்த அனைத்து வில்லங்கமும் பண்ணிவிடுவர். சாமி இவர்களை பார்த்தாலே, ஏன் ஸ்டெப் பேக் அடித்துவிடும். இவர்களின் அதீத மூளை, அதிரச் செய்யும். வேலை சார்ந்த உயர்கல்வி யில் தாறுமாறு காட்டுவர். இவர்கள் நீதித் துறையில் இருப்பின், தீர்ப்புகள் தூள் பறக்கும். இந்த அமைப்பினர், பெரிய பதவிகளில் இருக்க இயலும். ஆனால் அனைத்திலும், ஒருவித எதிர்மறை தன்மையுடன் தங்கள் இருப்பை பிரபலப்படுத்துவர்.
பரிகாரம்: சிவனின் அபிஷேகத்திற்குரிய பொருட்களை அவ்வப்போது கொடுங்கள். இவரைச் சார்ந்தவர்கள், கோவிலில் உழவாரப் பணி செய்வது நல்லது.
சிம்ம லக்னம் சிம்ம ராசி!
சூரியன்+சந்திரன்: சுபத்துடன் இருந் தால் அரசு, நீர்வளத்துறை சார்ந்து, எப் போதும் அலைந்துகொண்டே இருப்பர். அரசாட்சியில், மந்திரி அளவில் இருந்தாலும், நிறைய செலவும், அலைச்சலும் இருந்துகொண்டே இருக்கும். இவர்களின் முதலீடுகள், எப்போதும் நீர் ஆதாரம் சம்பந்தமாக அமையும். இவரின் பெற்றோர்கள் ஒரு இடத்தில் நிலையாக இருக்க இயலாமல், அலைந்து கொண்டோ அல்லது பிரிந்தோ இருப்பர்.
சூரியன்+சந்திரன்: அசுபத் தன்மை பெற்றால், இருக்க வீடின்றி, பஞ்சை, பரதேசியாக ப்ளாட்பாரத்தில் தங்க நேரிடும். தாய்- தந்தை அனேகமாக கூட இருக்க மாட்டார்கள். சாப்பாடு என்பது அரிய பொருளாக இருக்கும். குடிக்க நல்ல தண்ணீர் கிடைக்காது.
அரசாங்க பயத்திலேயே காலம் தள்ள வேண்டியிருக்கும்.
பரிகாரம்: சூரியன் இவர்களின் லக்ன, ராசிநாதன். அவரே கெட்டு போயிருக்கும்போது, எவ்வித பரிகாரமும் செய்ய இயலாது. தினமும் சூரியனை நோக்கி, ஒரு கும்பிடு போட்டும், இரவில் சந்திரனை கொஞ்ச நேரம் பார்த்து, வணங்கினால் போதும்.
செவ்வாய்+புதன்: சிம்மத்தாருக்கு, இவ்விணைவு, சுபத்தன்ûயுடன் இருந்தால் இவர்கள் குடும்பம், எப்போதும் சேர்ந்து ஒற்றுமையாக, கூட்டுக் குடும்பமாக இருப்பர். அரசியலில் இருந்தாலும், குடும்பமே சேர்ந்து, அரசியல் செய்வார்கள். ரியல் எஸ்டேட் துறை, நல்ல லாபம் தரும். பணச் செழிப்பு இருந்துகொண்டே இருக்கும். சமையல் தொழிலில், இவர்கள் பரம்பரை புகழ்பெற்றதாக இருக்கும். கோவில் கட்டும் திருப்பணியில் எந்த விதத்திலாவது ஈடுபாடு கொண்டவர்கள்.
செவ்வாய்+புதன்: சிம்மத்தாருக்கு, இது அசுபத்தன்மை கொண்டதாக இருந்தால், குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு காவல் துறையே கதியென்று இருப்பர். பணபுழக்கம் என்பது அரிதாகவே அமையும். நிரந்தர இருப்பிட வசதி இராது. எதை நினைத்தாலும் நடக்காது. வாக்கு தெளிவாக இராது. உணவு சரியாக இராது.
பரிகாரம்: நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கவும். மறுமணம் செய்பவர்களுக்கு முடிந்த உதவி செய்யலாம்.
சுக்கிரன்+சனி: சுபத்தன்மையுடன் இருந்தால் உங்கள் தொழில், நிறைய கிளைகள், பிரிவுகள் கொண்டு விளங்கும். நிறைய பணியாளர்களை வைத்து வேலை வாங்க இயலும்.
நிறைய பேருக்கு மாத சம்பளம் கொடுப்பீர் கள். இதேபோல், மாத சம்பளம் வாங்குபவர்கள், பெரிய கம்பெனிகளில் பணிபுரிவீர்கள்.
சிலர் கம்பெனிகளின் வரி, வழக்குகளை நிர்வகிக்கும் அதிகாரியாக இருப்பீர்கள். உங்கள் இளைய சகோதரி அல்லது மாமனாரின் அனுசரணை கிடைக்கும். தொழிலாளர்கள் சார்ந்த குத்தகை, ஒப்பந்தம் கிடைக்கும். எப்போதும் ஏதோ ஒரு வேலை பார்த்துக்கொண்டே இருப்பீர்கள்.
சுக்கிரன்+சனி: சிம்மத்தாருக்கு அசுப நிலை பெற்றிருந்தால், வேலை என்பது தொடர்ச்சியாக இருக்காது. பணியாளர்களின் தொல்லை இருக்கும். உங்கள் இளைய சகோதரியால் சண்டை உண்டாகும். உங்கள் மாமனார் முதல்தர எதிரியாவார். எப்போதும் ஏதோ ஒரு நோய் தாக்கத்தால் சிரமப்படுவீர்கள். நீங்கள் பழகும் ஆட்கள் உங்களுக்கு அவ்வளவாக மரியாதை தரமாட்டார்கள்.
பரிகாரம்: பெருமாளும், தாயாரும் சேர்ந்த கோவில்களில் விளக்கேற்றி வணங்கவும். எப்போதும் அலைந்து திரிந்து வேலை செய்யும் பெண் பணியாளர்களுக்கு உதவவும்.
குரு+ராகு அல்லது கேது: சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னத்தாருக்கு, குருவும், ராகு அல்லது கேதுவுடன் இருந்தால், ஊரிலுள்ள அத்தனை கெட்ட பழக்கமும் இருக்கும். பூர்வீக விஷயங்களை, இவர்களே அவமரியாதையாக பேசுவர். அவ்வப்போது வழக்குகளில், வாலண்ட்ரியாக சிக்கிக்கொள்வர். இவர்கள் வக்கீலாக இருப்பின், நீதிபதிகளுக்கு பெரிய டஃப் கொடுப்பர்.
மந்திரியாக இருந்தால் அனைத்துக்கட்சி, அரசியல்வாதிகளும் இவர்களை பார்த்து அஞ்சுவர். எண்ணில் அடங்கா காதல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும். கலையுலகில், எதிர்மறை தன்மையோடு புகழின் உச்சிக்கு செல்வர். வெளி நாட்டு தங்கம் சார்ந்த கள்ளக் கடத்தலில் தலையாக இருப்பர்.
சிவன் கோவிலில் தினமும் தீபமேற்றி வழிபடுவதை, வழக்கமாக வைத்திருக்க வேண்டும். பூர்வீக இடத்திலுள்ள சிவனுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாற்றியும் முடிந்தால் பழைய சிவன் கோவிலை சீர்படுத்தவும் உதவ வேண்டும்.
கன்னி லக்னம்
கன்னி ராசி!
சூரியன்+சந்திரன்: கன்னி யாருக்கு இந்த இணைவு சுபத்தன்மையுடன் இருப்பின் பிறந்த இடத்தைவிட்டு, வெளி இடங்களில் அரசியல் ஈடுபாட்டுடன் புகழ்பெறுவீர்கள். உங்கள் மூத்த சகோதரி, வெகு ஆதரவாக இருப்பார். நீங்கள் வெளிநாட்டில் வசித்தாலும், அங்கும், நிறைய பதவி உயர்வு பெற்று, முதன்மையாக விளங்குவீர்கள். உங்கள் பெற்றோர், பார்த்துவந்த சமையல் தொழிலை, புதியவகையில் பல மடங்கு உயர்த்தி, விரிவடையச் செய்வீர்கள். கடுமையாக உழைத்து அலைந்து நீங்கள் நினைத் ததை சாதித்துவிடுவீர்கள். சிலசமயம் வழிகள் கோணலாக இருக்கும்.
சூரியன்+சந்திரன்: கன்னியாருக்கு, இந்த கிரக சேர்க்கை பலவீனமாக இருப்பின், என்ன நினைத்தாலும் நடக்காது. காசு, பணம், கிட்டவே வராது. உங்கள் உடன்பிறந்த சகோதரிகள், வீடு விற்கும் விஷயத்தில் உங்களை மிக கஷ்டப்படுத்துவர். அரசு விஷயம், சமையல், பதவி உயர்வு எல்லாம் கனவாகவே இருந்துவிடும்.
பரிகாரம்: திங்கட்கிழமை தோறும், சிவன் கோவிலை, முடிந்தளவு வலம் வரவும், வயதான சமையல் தொழில் செய்யும் தம்பதிகளின் தேவைக் கேட்டு உதவுங்கள்.
செவ்வாய்+புதன்: கன்னியாருக்கு, இந்த இணைப்பு, சுபத் தன்மையுடன் இருந்தால், கூரியர் சேவை, வீடு மாற்றும் பேக்கர்ஸ் நிறுவனம், மாணவர்களுக்கு மனநல பயிற்சி கொடுப்பது, பள்ளி வாகன சேவை, பயணசீட்டு ஏற்பாடு செய்யும் தொழில், பத்திரிகை அலுவலகம், பத்திரபதிவு ஆபிஸ், ரேடியோ, டி.வி. பேச்சாளர் என திறமையும், அறிவும் சார்ந்த தொழில்களில் மிளிர்வர். இவர்களுடைய தொழிலில் கொஞ்சம் கள்ளத்தனமும் குசும்பும் கலந்திருக்கும்.
செவ்வாய்+புதன்: கன்னியாருக்கு, இது அசுபத்தன்மையுடன் இருந்தால், இவர்கள் விரும்பத்தகாத, சிறு பயண வாகன ஓட்டிகளாக இருப்பர். சிலர் இறுதிக் காரியம் செய்யும் நபராக அல்லது அது சார்ந்த கைபேசி இணைப்பாளராக இருப்பர். கன்னியாருக்கு இந்த இணைவு வெகு சங்கடம் தரும்.
பரிகாரம்: நரசிம்மர் கோவிலை சுத்தப்படுத்தலாம் மற்றும் அங்கு பூஜைக்கு உதவும் நந்தவனம் அமைக்கலாம். நோயுற்ற வயது முதிர்ந்தவர்களுக்கு உதவலாம்.
சுக்கிரன்+சனி: கன்னியார்களுக்கு, இவ்விணைவு சுபத்தன்மையுடன் இருப்பின், மதிப்புமிக்க பதவி, அதன்மூலம் நல்ல வருமானம், பேர், புகழ் இவை பெறலாம். நீங்கள் மந்திரியாகும் வாய்ப்புண்டு. பூர்வீக இடத்தில், நிறைய தர்மம் சார்ந்த சேவை புரிவீர்கள். வாரிசுகள், நிறைய பெருமை தேடித்தருவர். வாக்குமூலம் தொழில் இருக்கும். வாக்கின் தொனி திட்டவட்டமாக இருக்கும். உங்கள் சொற்கள், எதிரில் நிற்பவரை, நகரவிடாமல் செய்யும். கல்வி உங்களை உச்சத்தில் கொண்டுவிடும். உங்களில் சிலர் கலையுலகில் பிரபலமாக இருப்பீர்கள்.
சுக்கிரன்+சனி: இவ்வமைப்பு கன்னி யாருக்கு மோசமான நிலையில் இருந்தால், கல்வி தொடர முடியாதநிலை இருக்கும். பூர்வீக இடத்தில் நன்மை இராது. காசு, பண விஷயத்தில் நாணயம் அற்றவராக இருப்பீர்கள். உங்களை பார்த்தால், பிறர், தங்களது உடமைகளை ஒளித்து வைத்து விடுவர். உணவு கஷ்டம், வேலையின்மையால் ஏற்படும்.
பரிகாரம்: பெருமாளும், தாயாரும் சேர்ந்த கோவில்களில், வெள்ளை மலர் மாலை+ துளசி மாலை சாற்றி வணங்கவும். அங்கன்வாடியில், குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு உதவவும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/07/12laknam-2025-11-07-17-05-13.jpg)