ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் உள்ளது. அதுபோல் எல்லா செயல்களுக்கும் இருவித பலன்கள் இருக்கும். நன்மையும் தீமையும் எல்லா செயல்களிலும் கலந்தே அமையும்.
இது ஜோதிடத்திற்கும் பொருந்தும். ஜோதிடத்தில், கிரக சேர்க்கை என்பது, ஒரேசமயத்தில், நாணயத்தின் நன்மையும், மறுவகையில் தீமையும் தரும். இது எல்லா லக்ன, ராசிகளுக்கு ஒன்றுபோல் இருக்காது. ஒவ்வொரு லக்னம் அல்லது ராசிக்கு வித்தியாசமான பலன்களைத் தரும்.
மேஷ லக்னம், மேஷ ராசி
சூரியன்+சந்திரன்: சுபத் தன்மை பெற்றால் தாயார் அனு சரணை, பெற்றோர் ஒற்றுமை, பூர்வீக சொத்து, வயல் மேன்மை, பரம்பரை இடத்தில் உயர்வு, சொந்த ஊரில் வாத்தியார் வேலை அல்லது மந்திரி ஆவது என நன்மை பல கிடைக்கும்.
சூரியனும், சந்திரனும் சேர்ந்து அசுபத்தன்மை பெற்றால், ஆரம்பக் கல்வி அடிபடும். பெற்றோர் உடல்நல பாதிப்புடன் இருப்பர். பூர்வீக சொத்து என்பதே இருக்காது.
ஜாதகர் எப்போது நீர் சார்ந்த ஆரோக்கிய குறைவை அனுபவிப்பார்.
பரிகாரம்: திங்கட்கிழமை சிவன் அபிஷேகத்துக்கு பால் வாங்கி கொடுப்பதும், ஏழைக் குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுப்பதும் நல்லது.
செவ்வாய்+புதன்: மேஷத்திற்கு செவ்வாய், புதன் சுபத்தன்மையுடன் சேர்ந்தால் இவர்களுக்கு வரும் பிரச்சினைகளை, சாதுர்ய மாக, புத்திசா-த்தனமாக கையாண்டு, அதி-ருந்து புகழும், நல்ல பேரும் பெற்றுவிடுவார்கள். இந்த அமைப்பிலுள்ள மேஷத் தாரை பார்க்கிறவர்கள், இந்த ஆளிடம் வீணாக வம்பு வைத்துக் கொள்ள வேண்டாம். நம்மை ஒரு வழியாக்கிவிடுவான் என்று அலறி அடித்து விலகுவர்.
செவ்வாய்+புதன்: அசுபத்தன்மையுடன் இருந்தால், ரொம்ப குசும்பு, வதந்தி பேசுகிறவர் என்ற பெயர் வந்துவிடும். ஒரு தெருவில் சண்டை நடந்தால் அடுத்த தெரு வழியாக தப்பி ஓடும் கோழையாக இருப்பர். யாரேனும் இவரை நைய புடைத்துவிடுவார்கள் எனும் பயம் எப்போதும் மனதில் குடிகொண்டிருக் கும். எனவே முகம் சதா தூங்கி வழிவதுபோல் இருக்கும். சிலருக்கு காது கேட்கும் தன்மை குறைவாக இருக்கும்.
பரிகாரம்: நரசிம்மருக்கு விளக்கேற்றி வணங்கவேண்டும். அருகிலுள்ள பள்ளி களுக்கு, தேவையறிந்து அவசரகால மருந்து வாங்கிக்கொடுங்கள்.
சுக்கிரன்+சனி: மேஷத்திற்கு சுபமாக இருப்பின் இவர்கள் வியாபாரம் அரசியல், பொதுஜன தொடர்பு என எதிலும் முதன்மை பெறுவர். இவர்கள் வசீகரமாக பேசி, பேசியே, எதிரில் உள்ளவர்களை, தன்வயப்படுத்தி விடுவார். இவர்களின் ஆளுமையான ஆதிக்கம் வெளியூர், வெளிநாடுகளிலும் பரவும்.
சுக்கிரன்+சனி: அசுபத்தன்மையுடன் இருந்தால், இவர்களுக்கு அமைதியாக அன்பாக பேச வராது. பேச ஆரம்பித்தாலே சண்டை போடுவதுமாதிரி இருக்கும். பிறரை அனுசரித்து போகும் தன்மையும் இருக்காது. வீண் வழக்கில் சிக்கிகொள்வர். கா-ல் எப்போதும் நரம்பு பிடித்து இழுக்கும். அல்லது பேச்சு குளறலாக அமையும்.
பரிகாரம்: பெருமாளும், தாயாரும் சேர்ந்த கோவில்களில் நெய் விளக்கேற்றி வணங்கவும். வயதான பெண் கண்பார்வை சார்ந்து சிரமப்பட்டால் தேவைக் கேட்ட றிந்து உதவவும்.
குரு+ராகு: அல்லது கேது: இது சுபத் தன்மைபெற வாய்ப்பில்லை.குருவுடன் பாம்பு கிரகங்கள் சேரும்போது, அங்கு சண்டாள யோகம் வந்துவிடும். குருவுடன் ராகு அல்லது கேது என ஏதோ ஒன்றின் சம்பந்தம் மட்டும்தான் ஏற்படும். மற்ற பாம்பு கிரகம், எதிரில் 180 டிகிரியில் அமர்ந்திருக்கும்.
மேஷத்தாருக்கு, இவ்வமைப்பு இருப்பின் தெய்வ நம்பிக்கை அற்றவராக- நாத்திகராக இருப்பார். தந்தையின் நிலை சரியாக இராது. வெளியூர், வெளிநாடு சென்றாலும் அங்கும் நிம்மதியாக இருக்க இயலாது. அங்கேயும் சும்மா இருக்காமல், ஏதேனும் வௌங்காத வேண்டாத வேலை பண்ணிவிடுவர். இவர்களுடைய அதிர்ஷ்டம், எதிர்மறை தன்மையுடன், கள்ளத்தனமாகவே அமையும். எனவே ஒருவித பதட்டத்தில் சுற்றித் திரிவர். கோவில்களுக்கு இவர்கள் சென்றால், ஐயர் தட்சிணைத் தட்டை ஒளித்து வைத்துவிடுவார்.
இவ்விதம் மேஷ ராசி, லக்ன குழந்தைகளுக்கு, மேற்கண்ட அமைப்பு, குரு+ராகு அல்லது கேது இருப்பின், சிறு வயதுமுதலே கண்டிப்புடன் வளர்க்கவேண்டும். எப்போதும் ஏதோ ஒரு வேலை, விளையாட்டு திறமை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பரிகாரம்: சிவனுக்கு விளக்கேற்றி வணங்கவும். நந்திகேஸ்வரர் அல்லது கருடனுக்கு விளக்கேற்றி வணங்கவும்.
ரிஷப லக்னம், ரிஷப ராசி
சூரியன்+சந்திரன்: சுபத்தன்மை பெற்றிருந்தால், உங்கள் பெற்றோரும் உங்கள் இளைய சகோதரியும் நல்ல புரிதலுடன், இணக்கமாக நன்மை செய்வர். சிறு தூரப் பயணங்கள் மிக நன்மை அளிக்கும். வீடு விற்பனை, மனைகள் பற்றிய ரியல் எஸ்டேட் தொழில் நன்கு ஆகி வரும். வாகன விற்பனை டீலர்கள், பால் பொருட்களின் விற்பனை என நன்கு வெற்றி தரும். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
ரிஷபத்துக்கு சூரியன்+சந்திரன்: அசுபத்தன்மையுடன் இருந்தால் இளைய சகோதரியால் எப்போதும் இம்சை உண்டு. சிறு வேலைக்கும், சிறு தூர அலைச்சலுக்குமே மலைத்து போய் சுணங்கி விடுவீர்கள். இதனால் நட்பு வட்டம் வெகு குறைவாக இருக்கும். இதனால் வேறு வேலை தேடுவது. வீடு மாற்றுவது, அட ஒரு சின்ன தகவல்கூட சேகரிக்க இயலாமல் தத்தளித்து விடுவீர்கள்.
பரிகாரம்: பணியாளர்களுக்கு, குடிக்க் தண்ணீர் வசதி செய்து கொடுக்கலாம். திங்கட்கிழமைதோறும் சிவனுக்கு கரும்புச் சாறு வாங்கி அபிஷேகத்திற்கு கொடுக்கவும்.
செவ்வாய்+புதன்: சுபத்தன்மையுடன் அமைந்தால், உங்கள் திருமணம் மிகுந்த பொருட்செலவில் பூர்வீக இடத்தில் நடக்கும்.
உங்கள் சொற்களின் காத்ரமும், குயுக்தியும் மந்திரி அளவில் ஆக்கிவிடும். வணிக விஷயமாக, சொந்த ஊரில், பூர்வீகத்தில் இருந்து கொண்டே, வெளிநாடுவரை வர்த்தகம் செய்வீர்கள். சிந்தனையின் வேகம் தீர்மானங்களில் மிளிரும்.
செவ்வாய்+புதன்: அசுபத்தன்மையுடன் ரிஷபத்தாருக்கு அமைந்தால், காதல் கல்யாணம் செய்து, ஓடிபோய்விடும். பின் காவல்துறையில் மாட்டி, மாவு கட்டு போடும் நிலை ஏற்படும். யோசனை ஒண்ணாம் நம்பர் முட்டாள்தனமாக இருக்கும். வருமானம் சம்பந்தமாக, எந்த முடிவு எடுத்தாலும் வௌங்காமல் போய்விடும். யாரிடம் என்ன, எப்படி பேசுவது என புரியாமல் சொதப்பி விடுவீர்கள்.
பரிகாரம்: நரசிம்மருக்கு பானகம் வைத்து வழிபடவும். திருமணம் விஷயமாக உதவி செய்யவும்.
சுக்கிரன்+சனி: ரிஷபத்தாருக்கு இவ்விணைவு, சுபத்தன்மையுடன் இருந்தால் வேலை, தொழில் சம்பந்தமான உயர்கல்வி நன்கு கூடிவரும். இந்த கல்வியின் மேன்மை, நல்ல வேலை அல்லது சொந்தத் தொழில் செய்ய உதவியாக இருக்கும். இந்த தொழில் சம்பந்த முன்னெடுப்புகள், மற்றவர்களைவிட உங்களுக்கு எளிதாக நடக்கும். நிறைய ஆட்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு முன்னேற்றம் இருக்கும்.
சுக்கிரன்+சனி: ரிஷபத்தாருக்கு அசுபத் தன்மை பெற்றிருந்தால், படிப்பில் தடை ஏற்படும். அல்லது உயர் பரீட்சை எழுதும்போது, உடம்புக்கு ஜுரம் வந்து டாக்டரிடம் போக வேண்டியிருக்கும். தொழில் ஆரம்பித்தால் விரயமாகிவிடும். வேலையிலும் தொடர்ந்து இருக்க முடியாத நிலை ஏற்படும். தந்தையின் அனுசரணை கிடைக்காது.
பரிகாரம்: பெருமாளும், தாயாரும் சேர்ந்த ஸ்தலங்களில் நிறைய இனிப்பான பழங்களுடன் வழிபடுங்கள், வயதான பெண்கள், பெண் தொழிலாளர்களின் கால் வ-க்கு தேவைக் கேட்டு உதவவும்.
குரு+ராகு அல்லது கேது: ரிஷபத் தாருக்கு இவ்வமைப்பு இருப்பின் இவர்களின் எண்ணங்கள், யோசனைகள், செயலாக்கம் பெறும்போது, அனைத்திலும் கள்ளத்தனம், திருட்டுத்தனம் நிறைந்திருக்கும். இவர்களுக்கு அரசியல் நன்கு ஆகிவரும். இவர்களுக்கு கோவில் சிலைகளை கடத்துவது என்பது ரொம்ப பிடிக்கும். அபூர்வ பொருட்கள், தங்கம் கடத்துவதில் டானாகவே பதவிவகிப்பர். இந்த அமைப்பு மனிதர்கள், மருமகனாக- மருமகளாக போகும் வீடுகளில், அந்த வீட்டின் முழு அதிகாரத்தையும் தன் கையில் கொண்டுவந்துவிடுவர்.
பரிகாரம்: சிவன் அபிஷேகத்திற்கு, மஞ்சள் வாங்கிக் கொடுக்கவும். நந்திகேஸ்வரருக்கு மஞ்சள் பூ மாலை அணிவிக்கவும்.
மிதுன லக்னம், மிதுன ராசிசூரியன்+சந்திரன்: மிதுனத்திற்கு, சுபத்தன்மையுடன் தந்தை நீர் ஆதாரங்களின் குத்தகைமூலம் நல்ல பணம் சம்பாதிப்பார். உங்கள் பெற்றோர் உணவுவகையில் சிறப்பாக திகழ்வர். இளைய சகோதரர் ஆதரவு இருக்கும். கைபேசிமூலம் பணம் சம்பாதிப்பீர்கள். உங்கள் சொற்களில் தைரியம், தன்னம்பிக்கை நிறைந்திருக்கும்.
சூரியன்+சந்திரன்: மிதுனத்தாருக்கு அசுபத் தன்மையுடன் இருந்தால், சொற்கள் குளறுபடியாக அமையும். தைரியம் சிறிதும் இருக்காது. பெற்றோர், பணத்திற்காக சிறு தூரப் பயணத்திலேயே இருப்பர். இளைய சகோதரன் உடல்நிலை சரியாக இருக்காது.
சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வழிபடவும்.
மனநலம் குன்றிய சிறுவர்களுக்கு தேவைக் கேட்டறிந்து உதவவும்.
செவ்வாய்+புதன்: மிதுனத்தாருக்கு இந்த சுபத்தன்மையுடன் அமைந்தால் இணைவு உங்கள் பிறந்த ஊரில், அரசியல் சேவை புரிவீர்கள். உங்கள் மூத்த சகோதரர் மற்றும் தாய்மாமனின் அனுசரணை கிடைக்கும். சமையல் சார்ந்த தொழில் வேலை நிறைக்கும். சிலர் வீடு வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் அல்லது புரோக்கர் தொழில் செய்து பிரபலமாவார்கள். கல்வி ஆசிரியர் அல்லது பேராசிரியர் வேலையில் இருப்பார்கள்.
செவ்வாய்+புதன்: மிதுனத்தாருக்கு, அசுப தன்மையுடன் இருந்தால், எப்போதும் ஏதோஒரு உடல்நலக் குறைவு இருந்து கொண்டேயிருக்கும். வீட்டு பிரச்சினை அதுவும் வாடகை வீடு, நினைத்தபடி, அமையாது. உங்களுடன், உங்கள் மூத்த சகோதரன் எப்போதும் சண்டை இடுவார். உங்கள் தாயாரும், தாய்மாமனும் அவனுக்கே அனுசரணையாக இருப்பர்.
பரிகாரம்: நரசிம்மருக்கு, துளசிமாலை சாற்றி வழிபடவும். உங்களைவிட வயதில் மூத்தவர்களின் நோய் சார்ந்த தேவைக் கேட்டு உதவவும்.
சுக்கிரன்+சனி: மிதுனத்தாருக்கு, இவ்வினைவு சுபத்தன்மை பெற்றிருந்தால், உங்கள் வாரிசுகளின் உயர்கல்வி, வெளிநாட்டு பயணம்மூலம் பெருமை அடைவீர்கள். பேரன்- பேத்திகள்மூலம் பெரு மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் வீட்டு பெண்கள் அரசிய-ல், மந்திரி பதவி வரை வர வாய்ப்பு ஏற்படும். உங்கள் பூர்வீக தயாரிப்புகளை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய இயலும்.
ஆன்மிகம் சார்ந்தும் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு உண்டு.
சுக்கிரன்+சனி: மிதுனத்தாருக்கு அசுபத்தன்மையுடன் இருந்தால், முறையற்ற காதல் ஊரைவிட்டு ஓடச் செய்யும். முட்டாள்தனத்தால், அவ்வப்போது அடி வாங்கக்கூடும்.
வாரிசுகள் விஷயத்தில் அவமானம் உண்டாகும். குலதெய்வக் கோவி-ல் பிரச்சினை ஏற்பட்டு, அங்கு போகவே முடியாதபடியான நிலை ஏற்படும். உங்களுக்கு ஊரிலுள்ள எல்லா கெட்ட பழக்கங்களும் தொற்றிக்கொள்ளும்.
பரிகாரம்: பெருமாளும், தாயாரும் சேர்ந்த கோவில்களில், துளசி மாலையும், நெய் விளக்கும் ஏற்றி வழிபடவும். வயதான பெண்களின், தெய்வ வழிபாட்டுக்கு முடிந்த உதவிச் செய்யவும்.
குரு+ராகு அல்லது கேது: மிதுனத் தாருக்கு இவ்வமைப்பு காதல் கலப்பு மணம் தரும். வியாபாரத்தில் நிறைய கலப்படம் செய்யும் அறிவை தூண்டும். தொழி-ல் கள்ள கணக்கு எழுத செய்யும். வேறு மத பங்குதாரரை, வணிகத்துக்கு சேர்த்து வைக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையின் தாயாரை, நன்கு நம்பவைத்து ஏமாற்றச் செய்யும். அவ்வப்போது, வாழ்க்கைத்துணை அல்லது பங்குதாரரை ஏமாற்றும் வழக்குகள் நடந்தால், குறுக்குவழியில் வெற்றிபெறும் வகைகளை தேடி கண்டுபிடிக்கும்.
பரிகாரம்: சிவனுக்கு வில்வ மாலை மற்றும் நந்திகேஸ்வரருக்கு அருகம்புல் மாலை சாற்றவும். கோவி-ன் தர்ம கணக்கு களில் கை வைக்காமல் இருப்பது உத்தமம்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 94449 61845
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/31/planets-2025-10-31-16-00-56.jpg)