திடீரென விஷ்ணு கோவில்களில் நகரமுடியாத அளவிற்குக் கூட்டம். சனிக்கிழமையும் அல்ல... புரட்டாசியும் அல்ல... ஏகாதசியும் அல்ல... ஏன் இந்தக் கூட்டம்?பரவலாக அறியப்படாத விஷ்ணுபதி புண்ணியகாலம் பற்றி இப்போதுதான் மக்களுக்குத் தெரியவந்துள்ளது.
அனைத்து தமிழ் மாதத்திலும் முதல் நாள் புண்ணியகாலம் ஆகும். இதன் அடிப்படையில் விஷு புண்ணிய காலம், விஷ்ணுபதி புண்ணியகாலம் மற்றும் ஷடசீதி புண்ணியகாலம் என மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது.
அந்தந்த புண்ணிய காலத்திற்கு ஏற்ப வழிபாடுகள் மேற்கொள்வது சிறந்த பலன்தரும். சிறந்த பரிகாரத்திற்கான வழிபாடாக அமையும்.
ஜோதிடம் என்பது வேதத்தின் கண்ணாகப் பாவிக்கப்படுகிறது. இதில் கேந்திர கோண பாவங்கள் எனப்படுவது மிக உயரிய பாவகங்களாகப் பார்க்கப்படுகிறது. இதில் கேந்திர பாவம் என்பது 1, 4, 7. 10-ஆவது ராசிகளைக் குறிப்பது. காலபுருஷத் தத்துவப்படி, மேஷ ராசி என்பது முதல் பாவகமாக எடுத்துக்கொண்டால், மேஷம், கடகம்,
திடீரென விஷ்ணு கோவில்களில் நகரமுடியாத அளவிற்குக் கூட்டம். சனிக்கிழமையும் அல்ல... புரட்டாசியும் அல்ல... ஏகாதசியும் அல்ல... ஏன் இந்தக் கூட்டம்?பரவலாக அறியப்படாத விஷ்ணுபதி புண்ணியகாலம் பற்றி இப்போதுதான் மக்களுக்குத் தெரியவந்துள்ளது.
அனைத்து தமிழ் மாதத்திலும் முதல் நாள் புண்ணியகாலம் ஆகும். இதன் அடிப்படையில் விஷு புண்ணிய காலம், விஷ்ணுபதி புண்ணியகாலம் மற்றும் ஷடசீதி புண்ணியகாலம் என மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது.
அந்தந்த புண்ணிய காலத்திற்கு ஏற்ப வழிபாடுகள் மேற்கொள்வது சிறந்த பலன்தரும். சிறந்த பரிகாரத்திற்கான வழிபாடாக அமையும்.
ஜோதிடம் என்பது வேதத்தின் கண்ணாகப் பாவிக்கப்படுகிறது. இதில் கேந்திர கோண பாவங்கள் எனப்படுவது மிக உயரிய பாவகங்களாகப் பார்க்கப்படுகிறது. இதில் கேந்திர பாவம் என்பது 1, 4, 7. 10-ஆவது ராசிகளைக் குறிப்பது. காலபுருஷத் தத்துவப்படி, மேஷ ராசி என்பது முதல் பாவகமாக எடுத்துக்கொண்டால், மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம் ராசிகள் காலபுருஷனுக்குறிய கேந்திர ராசிகள் ஆகும். அதாவது கால புருஷ தத்துவப்படி இந்த உலகம் என்ற வீடு இயங்குவதற்கு நான்கு தூண்களாக இருப்பவர்கள் இந்த ராசியினர். இந்த நான்கு ராசிகளில் சூரியன் அமரும்போது ஏற்படுவது. விஷு புண்ணியகாலம். இவை பிரம்மாவுக்கும் சூரியனுக்கும் உகந்தது.
இதற்கு அடுத்தபடியாக உள்ள ராசிகள் பணபர ராசிகள் என்று விவரிக்கப்படுகிறது. அதாவது செல்வசெழிப்புக்கு உண்டான அடுத்த நான்கு தூண்கள் இவை 2, 5, 8, 11 என கேந்திர பாவகத்திற்கான அடுத்த பாவகங்கள். இவை ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பமாகும். இவற்றில் சூரியன் வந்து அமர்வதனால் ஏற்படுவது விஷ்ணுபதி புண்ணிய காலமாகும். எனவே, வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதங்களில் முதல் நாள் ஏற்படுவது. விஷ்ணுபதி புண்ணிய காலம். எனவே கால புருஷனுக்குண்டான பணபர ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கும் முதல் நாள் விஷ்ணுபதி புண்ணியகாலம். இவை விஷ்ணுவிற்கு உகந்தது.
இதற்கு அடுத்தாற்போல் வருவது, ஷடசீதி புண்ணியகாலம். இவை காலபுருஷனுக்கு ஆபோக்-மம் ராசிகளாக விளங்கும். கேந்திர ஸ்தானங்கள். 3, 6, 9, 12. இவை மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளாகும். இவை சூட்சும ராசிகள் என்றும் வழங்கப்படுகிறது. இந்த ராசிகளில் சூரியன் வந்து அமரும் மாதங்கள் முறையே ஆவி, புரட்டாசி மார்கழி மற்றும் பங்குனி. இவை சிவபெருமானுக்குரிய மாதங்களாகும்.
வரவுள்ள விஷ்ணுபதி புண்ணிய காலம்
வரும் கார்த்திகை 1-ஆம் நாள் நடக்கவிருக்கும் விஷ்ணுபதி புண்ணியகாலம் அஷ்டம ராசிக்கான புண்ணிய காலமாகும். காலபுருஷனுக்கு எட்டாவது ராசியான விருச்சிகத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது ஏற்படும் புண்ணியகாலம். இந்த விசுவாவசு ஆண்டில் ஏற்படும் மூன்றாவது விஷ்ணுபதி புண்ணிய காலமாகும்.
இந்த நாளில் விஷ்ணு கோவில்களில் வழிபாடு மேற்கொண்டு அடிப் பிரதட்சணம் செய்தால் சிறப்பளிக்கும். இதனால், ஆயுள் கண்டத்திற்கான சிறந்த பரிகாரமாகும். ஆயுஷ்ய ஹோமம் செய்ததற்கான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். இதன்மூலம் பின்வரும் பொதுப்படையான பலன் கள் கிடைக்கும்.
* நீண்டகால வம்பு, வழக்கு வில்லங்கங்கள் நமக்குச் சாதகமாக முடியும்.
* பிரிந்த குடும்ப உறுப்பி னர்கள் மீண்டும் இணைவர்.
* சகோதர- சகோதரிகளுக்குள்ள நோய் நொடிகள் கடன்கள் விரைவில் சரியாகும்.
* பெற்ற தாய்க்கு நற்பெயர் கிடைக்கும்.
* குழந்தைகளுக்கு சுகமேன்மை கிடைக்கும்.
* கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.
* மாமனார் வீடுகளில் ஏற்பட்ட பிணக்குகள் தீரும்.
* தந்தையாருக்கு சயனத்தில் குறையிருப்பின் சரியாகும்.
* தொழில் லாபம் மேலோங்கும். அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு ஊதிய உயர்வும், வேலையில் பணி உயர்வும் கிடைக்கும்.
இந்த புண்ணியகால பரிகார வழிபாட்டின்மூலம் ஒவ்வொரு ராசியினருக்கும் கிடைக்கும் பலன்கள்.
மேஷம்: ஆயுள் கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.
ரிஷபம்: திருமணத்தடைகள் நீங்கும். நண்பர்கள்மூலம் நன்மை அடைவர்.
மிதுனம்: நோய்நொடிகள் சரியாகும். கடன் விரைவில் குறையும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
கடகம்: பிள்ளைகளால் நற்பேறு கிடைக்கும். புத்திரர்கள் வாழ்க்கை சிறப்படையும்.
சிம்மம்: வாகன யோகம் சித்திக்கும். சுக மேன்மை ஏற்படும். மாத்ரு தோஷம் விலகும்.
கன்னி: முயற்சிகள் கைகூடும். இளைய சகோதரர் வழியுள்ள பிணக்குகள் சரியாகும்.
துலாம்: குடும்பத்தில் குதூகலம் கூடும். தனம் சேரும். பேச்சுக்கு மரியாதை கிடைக்கும்.
விருச்சிகம்: அதிகாரம் கைக்கு வரும். அரசுவழி ஆதாயம் உண்டு. சுய ஒழுக்கம் மேம்படும்.
தனுசு: நல்ல உறக்கம், நற்பேர் தரும் பயணங்கள் கூடிவரும்.
மகரம்: லாபம் உண்டு. அரசுவழி ஆதாயம் ஏற்படும்.
கும்பம்: தொழில் வாய்ப்புகள் கூடிவரும். கூடும் முயற்சிகள் கைமேல் பலன்தரும்.
மீனம்: தந்தைவழி நற்பெயர் கிடைக்கும். சொத்துகள் சேரும். குலதெய்வ வழிபாடு சிறப்பளிக்கும்.
இந்த விசுவாவசு ஆண்டில் ஏற்படவிருக்கும் நான்காவது விஷ்ணுபதி புண்ணியகாலம் என்பது மாசி மாதம் முதல் நாள் ஏற்படவுள்ளது.
தொலைபேசி: +91 90251 61336
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us