சிம்ம லக்ன 3-ஆம் அதிபதி சுக்கிரன். இவர் உங்கள் 10-ஆம் அதிபதியும் ஆவதால், உங்கள் தொழி-ல் நேரிடை வருமானத்துடன் கூட உபரி வருமானமும், தன்னிச்சையாக கிடைக்கும். இந்த 3-ஆம் அதிபதி சுக்கிரன், 8-ஆமிடத்தில் உச்சமடைவதால், அனேக உபரி வருமானங்கள் சற்று எதிர்மறையாகவே கிடைக்கும். அல்லது குறுக்குவழியில், கணக்கு காட்ட முடியாதவகையில் உபரி வருமானம் வரும்.
சிம்ம லக்ன 3-ஆம் அதிபதி சுக்கிரன்+சூரியனுடன்
இந்த இணைவு சுபத்தன்மையுடன் இருப்பின், லக்னாதிபதி +3-ஆம் அதிபதி சேர்ந்துள்ளது எனக் கொள்ளவேண்டும். பெரும்பாலும் அரசு சாதனைகளை, செய்தி படமாக எடுத்து வெளியிடும் துறையில் இருப்பர். அரசு சார்ந்த புகைப்பட கலைஞராக இருப்பர்.
அரசு சுற்றுலா துறையில் வழிகாட்டி, சுற்றுலா வாகனம் ஓட்டுவது, சுற்றுலா சார்ந்த ஓட்டல்களில் பணி என இவை சார்ந்த நேரிடை அல்லது உபரி வருமானம் கிடைக்கும். அரசு வழங்கும் பெண்களுக்கான, தையல் பயிற்சி, அழகு பயிற்சி, கணினி பயிற்சி என இவைபோன்று இனங்களில் ஈடுபடலாம். அரசு சார்ந்த பெண்கள் பள்ளி, கல்லூரிகளில், மன தைரியம் சார்ந்த வகுப்புகள் எடுப்பீர்கள்.
சிம்ம லக்ன 3-ஆம் அதிபதி சுக்கிரன்+சந்திரன்
இந்த இணைவு சுபத்தன்மை பெற்றிருந்தால் கண்டிப்பாக, போக்குவரத்து துறையில் பணிபுரிவீர்கள். விமானம் ஓட்டலா
சிம்ம லக்ன 3-ஆம் அதிபதி சுக்கிரன். இவர் உங்கள் 10-ஆம் அதிபதியும் ஆவதால், உங்கள் தொழி-ல் நேரிடை வருமானத்துடன் கூட உபரி வருமானமும், தன்னிச்சையாக கிடைக்கும். இந்த 3-ஆம் அதிபதி சுக்கிரன், 8-ஆமிடத்தில் உச்சமடைவதால், அனேக உபரி வருமானங்கள் சற்று எதிர்மறையாகவே கிடைக்கும். அல்லது குறுக்குவழியில், கணக்கு காட்ட முடியாதவகையில் உபரி வருமானம் வரும்.
சிம்ம லக்ன 3-ஆம் அதிபதி சுக்கிரன்+சூரியனுடன்
இந்த இணைவு சுபத்தன்மையுடன் இருப்பின், லக்னாதிபதி +3-ஆம் அதிபதி சேர்ந்துள்ளது எனக் கொள்ளவேண்டும். பெரும்பாலும் அரசு சாதனைகளை, செய்தி படமாக எடுத்து வெளியிடும் துறையில் இருப்பர். அரசு சார்ந்த புகைப்பட கலைஞராக இருப்பர்.
அரசு சுற்றுலா துறையில் வழிகாட்டி, சுற்றுலா வாகனம் ஓட்டுவது, சுற்றுலா சார்ந்த ஓட்டல்களில் பணி என இவை சார்ந்த நேரிடை அல்லது உபரி வருமானம் கிடைக்கும். அரசு வழங்கும் பெண்களுக்கான, தையல் பயிற்சி, அழகு பயிற்சி, கணினி பயிற்சி என இவைபோன்று இனங்களில் ஈடுபடலாம். அரசு சார்ந்த பெண்கள் பள்ளி, கல்லூரிகளில், மன தைரியம் சார்ந்த வகுப்புகள் எடுப்பீர்கள்.
சிம்ம லக்ன 3-ஆம் அதிபதி சுக்கிரன்+சந்திரன்
இந்த இணைவு சுபத்தன்மை பெற்றிருந்தால் கண்டிப்பாக, போக்குவரத்து துறையில் பணிபுரிவீர்கள். விமானம் ஓட்டலாம். கப்பல் ஓட்டுனராக இருக்கலாம். விவசாய சம்பந்தமான வண்டி, டிராக்டர் ஓட்டலாம். படகு, ஓடம் பரிசல் ஓட்டலாம். கார், பஸ், ஆட்டோ, எண்ணெய், பெட்ரோல், பால் லாரிகள், ரயில் ஓட்டுனர்கள், பள்ளி குழந்தைகளின் பயண ஓட்டுனர், மகளிர் பஸ் ஓட்டுனர், நவீன ஏ.சி. பஸ் ஓட்டுனர் என இவை சார்ந்த பயண ஓட்டுனர்களாக பணிபுரிவீர்கள். மேலும் மேற்கண்ட வாகனங்களை ஓட்டக் கற்றுக்கொடுக்கும் பயிற்சி கல்லூரி, நிறுவனம், சிறிய கடை போன்றவற்றையும் கையாள்வீர்கள். சிலர் பெரிய மால்கள் அல்லது பிரம்மாண்ட கடைகளின் -ப்ட் இயக்கும் பணியும் செய்வீர்கள்.
சிம்ம லக்ன 3-ஆம் அதிபதி சுக்கிரன்+செவ்வாய்
இந்த இணைவு சுபத்தன்மையுடன் இருப்பின் மனைகளை வாங்கி, அதில் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் ரியல் எஸ்டேட் சொந்தக்காரர் அல்லது புரோக்கர் அல்லது அதன் கட்டுமான காண்ட்ராக்ட்டராக இருப் பார்கள். இதன்மூலம் நேரிடை அல்லது உபரி வருமானம் பெறுவர். வாகன டீலர்களாக இருப்பர். விவசாய நிலம், தோட்டம் வாங்கி விற்கும் தரகர்களாக இருப்பர். விவசாய வேளாண் உணவு பொருட்களை மொத்தமாக வாங்கி, சில்லறை விற்பனை செய்பவராக இருப்பர். திருமண ஏற்பாட்டாளராக பணிபுரியலாம். கோவில் சார்ந்த தேர், சுவாமி வாகனங் களை செய்பவராக, சுமப்பவராக இருப்பர். கல்யாண சடங்குகள் செய்பவராக வேலை செய்வர்.
சிம்ம லக்ன 3-ஆம் அதிபதி சுக்கிரன்+புதனுடன்
இந்த இணைவு சுபத்தன்மையுடன் இருப்பின், அனேகமாக அரசியல் பேச்சாளராக இருப்பர். அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் சேர்க்கும் ஏஜெண்ட் வேலை செய்வார். அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக, பணம் வாங்கிக்கொண்டு, கைபேசியில் தகவல் பரப்பாளராக இருப்பார். அரசியல் கட்சிக்கு நோட்டீஸ் அடித்து ஓட்டுவார். அரசியல் தலைவர்களுக்கு ப்ளக்ஸ் போர்டு செய்து பெரிய உயரங்களில் மாட்டுவார். கொடிக்கம்பம் செய்து கொடுப்பார். அரசியல் தலைவர்கள் பேசுவதற்கு, கண்டென்ட் எழுதிக் கொடுப்பார்.
அரசியல்வாதிகள் எங்கு செல்லவேண்டும், எந்த இடத்தில் நின்று பேச வேண்டும் என வாகன போக்குவரத்து பட்டியல் அமைத்துக் கொடுப்பார். அரசியல்வாதி களின், வெற்றி வியூகம் அமைத்துக் கொடுக்கும். அரசியல் அமைப்பாளராக இருப்பார். அரசியல்வாதிகள், பெரிய சமையல் கலைஞர்களின் கணக்கு வழக்கை சரிபார்க்கும் கணக்கு தணிக்கையாளராக இருப்பார். இதன்மூலம் நேரடி அல்லது உபரி வருமானம் தேற்றிவிடுவார்.
சிம்ம லக்ன 3-ஆம் அதிபதி சுக்கிரன்+குருவுடன்
இந்த அமைப்பு சுபத்தன்மையுடன் இருப்பின் பெண்களின் உடல்நலம் குறித்த, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பரப்புரையாளர்களாக இருப்பர். பெண்களின் குற்றங்களை மட்டும் விசாரிக்கும் சிறப்பு நீதிபதிகளாக இருப்பர். உடல்நலம் முக்கியமாக கொழுப்பு சார்ந்த உடற்பயிற்சியாளராக இருப்பர். இன்ஷியூரன்ஸ் ஏஜெண்டுகளாக பணிபுரிவர். பெண்களுக்கான வாழ்வு பாதுகாப்பு சார்ந்த வகையில் பணியாற்றுவர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் தடைப்பட்ட கல்வியைத் தொடர உதவும் அமைப்பில் இருப்பர். இதில் முக்கியமாக பூர்வக்குடிகளை சார்ந்த மக்களின் வாழ்வு முன்னேற மிக உழைப்பர். கொடுமையான உடல்நலக் குறைபாடு உடையர். பிரசவம் சமயத்தில் உதவி தேவைப்படும் பெண்கள் என மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் செவி-யராக இருப்பர். இந்த அமைப்பு சற்று கரடுமுரடான செயல்களை நல்லவிதமாக மாற்றும் தன்மையுடையது.
சிம்ம லக்ன 3-ஆம் அதிபதி சுக்கிரன்+சனியுடன்
சிம்ம லக்ன 3-ஆம் அதிபதி சுக்கிரனும், சனியும் சுபத்தன்மையுடன் இணைந்தால், உங்கள் வேலையில் சிறுதூர அலைச்சல் அதிகம் இருக்கும். சிலர் திருமண புரோக்கராக இருப்பர். திருமண மண்டபத்தில் ஓடியாடி வேலை செய்யக்கூடியவர். திருமணம் சார்ந்து, மணமக்கள் ஏற்பாட்டாளராக இருப்பார். வியாபாரத்தில், பங்குதாரர்களை இணைக்கும் நபராக இருப்பர். அல்லது தொழில் செய்யும் இடத்தில் வேலைக்கு ஆட்களை சேர்த்துவிடும் வேலையில் இருப்பார். வட்டி வசூ-ப்பராக அல்லது மருத்துவமனையில் உதவியாளராக அல்லது சிறையில் பணிபுரிபவராக, சேவை செய்பவர்களை, ஒருங்கிணைக்கும் பணிபுரிபவராக தகவல்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சுமந்து செல்பவராக, சினிமா துறையில் கடன் வாங்க உதவி செய்யும் மனிதராக, வாடகை வீடு சார்ந்த புரோக்கராக, நேர் வருமானம் அல்லது உபரி வருமானம் பெறுவர். சில வழக்கறிஞர்களுக்கு, வழக்கு சம்பந்த தஸ்தாவேஜிக்களை ஒழுங்குபடுத்தி தரும் பணியில் இருப்பார்.
சிம்ம லக்ன 3-ஆம் அதிபதி சுக்கிரன்+ராகுவுடன்
இந்த சேர்க்கை சுபத்தன்மையுடன் இருந்தால், பெண்கள் சார்ந்த பணிகளே இருக்கும். அழகு சுமாரான பெண்களை, நிறைய மேக்கப் போட்டு அழகான பெண்ணாக மாற்றிவிடுவர். மற்றைய பெண்கள், அமைதியாக இருக்க, இந்த அமைப்பு பெண்கள், வீர, தீர, சாகசத்தில் ஈடுபட்டு புகழும் பொருளும் சேர்ப்பர். அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வர். இவ்வமைப்பு பெறும் பெண்கள், ஏர் ஹோஸ்டஸ் எனும் விமான பணிப்பெண் வேலையில் அதிக ஈடுபாடுகொண்டு நல்ல வருமானம் பெறுவர்.
சிம்ம லக்ன 3-ஆம் அதிபதி சுக்கிரன்+கேது
சுக்கிரனும், கேதுவும், சேர்க்கை பெற்றால், இவர்களில் பெரும்பாலோர், பெண்களின் சிகை அலங்கார நிபுணர்களாக பணிபுரிவர். சிலர் சினிமா நடிகைகளைப் பற்றி கிசுகிசு செய்தி எழுதுவார்கள். கோவில்களில் மொட்டை போடும் பணியில் இருப்பார். சிலர் பெண்களுக்கான விக் எனப்படும் பொய்முடி என்னு சவுளி வியாபாரம் செய்வார். முடியை ஏலத்தில் எடுப்பார். அல்லது முடியை சேகரிக்கும் குத்தகை பெறுவார்.
செல்: 94449 61845
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us