"களையுடை மனத்தனாகும் கருமங்கள் அறிந்து செய்யும் 
வனவியன் பேர் விருப்பால் வரும் வினை பார்த்து வாழும் 
வினை பயிர் மிகவுண்டாகும் மிக்கதோர் தானம் 
செய்யும் 
கிளை பல உடையனாகும் கேட்டை நாள் தோன்றினானே.'' 
பொருள்: கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர், செய்யும் வேலைகளை திருத்தமாக செய்வார். ஆனாலும், மனதில் குற்ற உணர்வு உடையவர். தான- தர்மம் செய்வதில் சிறந்து விளங்குவார்.
Advertisment
பட்டுப்புழு, தானே தன்னைச் சுற்றிக் கூட்டை அமைத்து, அதனுள் அகப்பட்டுக் கொள்ளும். மனிதன், மனமெனும் மாய வலையைப் பின்னி, தன்னுள்ளே தன்னையே சிறைப்படுத்திக் கொள்கிறான். தனக்குத்தானே பகையாகிறான். அந்த மாயவலையை அறிந்து, அவனை மீட்கும் கலையே ஜோதிடம். ஜனன காலத்து நட்சத்திரத்தையும், மாறும், தசாபுக்திகளையும் கணக்கில்கொண்டு, வாழ்க்கை பாதையை சீரமைத்துக் கொள்வதே பரிகாரம்.                                                   
Advertisment

18. கேட்டை 

ப் பொதுவான குணம்: கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர், அறிவாளி, கண்ணியமான நடத்தைகொண்டவர். கடின உழைப்பாளி மற்றும் தன்னடக்கமுடையவர்கள்.                                                                                              

star1

கேட்டை நட்சத்திரம் (ஆண்)

ப் குணம்: மற்றவர்களுக்கு உதவ தயாராக இருப்பார். எப்போதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் காணப்படுவார்கள். அமைதியான மற்றும் அடக்கமான இயல்புடையவர்களாக இருப்பார்கள். இயற்கையான சூழல்களை ரசிப்பதில் ஆர்வம் காட்டுவார்.
Advertisment
ப் குடும்பம்: கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள், மனைவி சொல்லே மந்திரம் என்ற விதிப்படி வாழ்வார்கள். எந்த முடிவை எடுக்க வேண்டுமானாலும் துணையிடம் கலந்தாலோசித்த பின்னர்தான் செய்வார்கள்.
ப் கல்வி: தேவையற்ற நட்புகளால் கல்வி யில் தடையும், பிரச்சினைகளும் உண்டாகும்.                                                                                          
ப் தொழில்: சிறு வயதில் கஷ்டப் பட்டாலும் மத்திய வயதிலிருந்து வசதி வாய்ப்புகள் பெருகும். இவர்கள் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர், தொல்லியல் துறையில் சிறந்து விளங்குவார். 33 வயதிற்குள் நல்ல வளர்ச்சியும், செல்வாக்கும் பெறுவார்.
ப் திருமணப் பொருத்தம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம், பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம்,  திருவோணம், திருவாதிரை, சதயம், சுவாதி ஆகியவை நன்றாக பொருந்தும். 
ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலை யிலிருக்கும். ஆனால், சுக்கிர தசை நடக்கும் காலத்தில், உடலில் கெட்ட நீர் சேரக்கூடிய சூழ்நிலை போன்றவற்றால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரம் (பெண்)

ப் குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், சுறுசுறுப்பும், பிறரை மகிழ்விக்கும் வகையிலும், நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர்கள். 
ப் குடும்பம்: இவர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.
ப் திருமணப் பொருத்தம்: அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம், ரேவதி, திருவாதிரை, சித்திரை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி நீங்கலாக, மற்ற நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம்.
ப் ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் சுக்கிர தசை- சந்திர புக்தியில், கருப்பை தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்படுவார்.

star2

நட்சத்திர பலன்கள்

கேட்டை நட்சத்திரக்காரர்கள், அன்றைய தினத்தின் நட்சத்திரத் தைக் கொண்டு தின பலனறி யும் குறிப்பு.
(கேட்டை நட்சத்திரப் பலன்கள் தொடரும்)
செல்: 63819 58636