"கண்ட சிறு திண்டி தின்ன பிரியவான் லோபி
கண்ட சிறுக சிவந்திருக்கும் கல்வி மானாம்
மீண்டுகளே செய்திடுவான் உறவினரை சேரான்
முன் கோபி கொடியனாகும் மூலத்தானே.''
-ஜாதக அலங்காரம்
பொருள்: தூக்கத்தில் அதிக விருப்ப முள்ளவன். உறவுடன் பகை உள்ளவன். சுவை மிகுந்த பொருட்களை உண்பதில் பிரியமுள்ளவன்.
கோடைகாலத்து மழையை நம்பி, விதைத்தவன், விதை நெல் வீணாவதுபோல், கனியும்வரை காத்திருக்காமல் துவர்க்கும் காயை உண்டு வருந்துவதுபோல், காலம் கனியும்வரை காத்திருக்காதவன் செய்யும் முயற்சி, கடலில் பொழிந்தபோல் வீணாகும். தகுதியான தசா புக்தி வரும்வரை காத்திருக்காதவன், தோல்வி அடைவான். தசா புக்தி மாற்றங்களை, ஜனன காலத்து நட்சத்திரமே முடிவு செய்யும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/13/star1-2026-01-13-18-56-57.jpg)
மூலம்
மூல நட்சத்திரத்தின் சிறப்பு
ப் ஆழ்ந்த சிந்தனையும், ரகசியமான மனம் கொண்டவர்கள்.
மூல நட்சத்திரத்தின் வலிமை
ப் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுத் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
ப் உயர்ந்த உண்மைகளைத் தேடும் ஆர்வம் கொண்டவர்கள்.
ப் இலக்குகளை அடைய கடினமாக உழைப்பார்கள்.
ப் சுதந்திரமாக வாழ விரும்புவார்கள்.
மூல நட்சத்திரத்தின் பலவீனம்
ப் வரவுக்குமேல் செலவு செய்வதால், பல பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.
கூட்டு கிரக பலன்
(மூல நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும்போது உண்டாகும் பலன்களையும் ஆராய வேண்டியது முதன்மையானது.)
ப் மூல நட்சத்திரத்தில், சூரியனிருக்க, புதனும் கூடினால், ஜாதகனின் தந்தை அறிஞர்.
ப் செவ்வாய் அமர்ந்திருக்க, எதிரி களை வெற்றிகொள்வார். ஆனாலும் திருமண வாழ்வில் அமைதி குறையும்.
ப் புதன் அமர்ந்திருக்க, ராஜ யோகமுடையவர்.
ப் சுக்கிரன் அமர்ந்திருக்க, குருவும், சூரியனும் இனைந்திருக்க அறிஞன்.
ப் சனி அமர்ந்திருக்க, செல்வமும், செல்வாக்கும் உண்டாகும்.
ப் குரு அமர்ந்திருக்க, கல்வித்துறையில் கால் பதிப்பார்.
ப் ராகு அமர்ந்திருக்க, புத்திரரால் தொல்லை.
ப் கேது அமர்ந்திருக்க, தன் முப்பத்தி யோராம் வயதில் இழந்ததை மீட்பான்.
மூல நட்சத்திர பாத பலன்
ப் மூல நட்சத்திரத்தின் முதல் பாதம், மேஷ நவாம்சம். இந்த பாதத்துக்கு அதிபதி செவ்வாய். எப்போதும் பிறரை விமர்சனம் செய்பவர்.
ப் மூல நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம், ரிஷப நவாம்சம். இதற்கு அதிபதி சுக்கிரன். ஆன்மிக சிந்தனையுடையவர். உயர் கல்வியால், புகழ் பெறுவார். குடும்பத்தை அதிகம் நேசிப்பவர்.
ப் மூல நட்சத்திரம் மூன்றாம் பாதம், மிதுன நவாம்சம். இதற்கு அதிபதி புதன் பகவான்.. மூல நட்சத்திரத்திற்கு உரியவர்களுக் கான எல்லா குணங் களும் இவர்களிடமும் இருக்கும். மனதில் ரகசியம் அதிகமுடைய வர்.
ப் மூல நட்சத்திரம் நான்காம் பாதம், கடக நவாம்சம், அதிபதி சந்திரன். நல்ல உடற்கட்டும், பரந்த மனப்பான்மையும் உடையவர்.
மூல நட்சத்திர நாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்
ப் திருமணம், சீமந்தம், மந்திர பிரயோகம், பயணம் போன்ற காரியங் களுக்கு உகந்தது.
மூல நட்சத்திர நாளில் செய்யக் கூடாதவை
ப் தேய் பிறையில், சுபமான காரியங் களுக்கு மூல நட்சத்திரம் உகந்ததல்ல.
மூல நட்சத்திரப் பரிகாரம்
ப் வில்வ மரத்தின் வேர்ப்பகுதியில் இருக்கும் மண் ஒரு கைப்பிடி, யானை கால் பட்ட மண் ஒரு கைப்பிடி, பசுமாட்டின் கால் பட்ட மண் ஒரு கைப்பிடி, புற்று மண் ஒரு கைப்பிடி, நண்டு வளை மண் ஒரு கைப்பிடி, ஊருணியில் இருக்கும் மண் ஒரு கைப்பிடி, ஆற்று மண் ஒரு கைப்பிடி என எடுத்து, பூஜையறையில் வைத்தால், மூல நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் வாழ்க்கை சிறப்பாகும்.
(மூல நட்சத்திரப் பலன் நிறைவுற்றது)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/13/star-2026-01-13-18-56-30.jpg)