"அகமுடை செல்வனாகும் ஆயுதம் பிடிக்க வல்லான் 
சுகமுக வசியனாகும் சுற்றத்தார் தமக்கு நல்லான்                                                           
மிகவுயர் கல்வி கற்றும் வேந்ர்க்கும் இனியனாகும்                                             
முகமதும் அழகனாகும் மூலத்தான் தோன்றினானே.''
-மரண கண்டிகை 

Advertisment

பொருள்: மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், நிறைய தனம் தேடி வைத்துக்கொள்வார். உயர் கல்வியில் தேர்ச்சி பெறுவார்     பாம்பு கடியின் விஷத்தால், இறப்பவர்களைவிட, பயத்தால் இறப்பவர்களே அதிகம். பயத்தை வெளிக் காட்டுவதே, அபாயத்தை எதிர்கொண்டு அழைப்பதாகும். மனிதர்களுக்கு, எதிர்காலத்தைப் பற்றிய அச்சமே வாழ்க்கை முழுவதையும் ஆட்சி செய்கிறது. அஞ்சுவதைத்தவிர மிஞ்சுவது எதுவுமில்லை. எதிர்கால அச்சத்தைப் போக்கும் கலையே ஜோதிடமாகும்.

Advertisment

16. மூலம்               

பொதுவான குணம்:  மூல நட்சத்திரத்தில் பிறந்த வர், பெரியோர்களை மதித்து நடப்பார்கள். பொறுமையின் சிகரமாகத் திகழ் வார். ஆனால், அநியாயம் செய் பவர்களைக் கண்டால் பொங்கி எழு வார். நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார். அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்று மகிழ்ச்சியாக இருப்பார். எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புவார். எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் எதிர் கொண்டு வெற்றிபெறுவார்.

 விசாக நட்சத்திரம் (ஆண்)                                                                                                   

 குணம்: தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளமாட்டார். ஆன்மிக சம்பிரதாயங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார். கல்வியறிவும் சிறந்த பேச்சாற்றலும் பெற்றிருப்பார்..      

Advertisment

குடும்பம்: மூல நட்சத்திரத்தை சேர்ந்தவர், வாழ்க்கைத் துணை யும், குழந்தைகளும் மிகுந்த பாசத்துடன் இருப்பார். பிள்ளை களின் படிப்பு விஷயத்திலும், அவர்களுக்குச் சிறப் பான எதிர்காலம் அமைத்துத் தரவேண்டும் என்பதிலும் மிகுந்த கவனத்துடன் இருப்பார். 

கல்வி: இளம் பருவத்திலேயே சுக்கிர தசை வந்துவிடுவதால், கலைத்துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

star1

தொழில்: அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்று மகிழ்ச்சியாக இருப்பார். வீடு, வாகனம் போன்ற அனைத்து வசதிகளையும் பெற்று வாழ்வார். பணியிடத்தில் நிர்வாகத்துக்கு விசுவாசமாக நடந்துகொள்வார்.

திருமணப் பொருத்தம்: பரணி, பூரம், பூராடம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசிரீடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை நன்றாக பொருந்தும். 

ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையிலிருக்கும். 

ஆனால், சூரிய தசை நடக்கும் காலத்தில், ஜீரண உறுப்பு பாதிப்புகள்  உண்டாகும்.

மூலம் நட்சத்திரம் (பெண்) 

குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், இல்லறம் மற்றும் ஆன்மிகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள். கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சினைகளையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள். 

குடும்பம்:  இந்த நட்சத்திரப் பெண்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். 

திருமணப் பொருத்தம்: அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை,    உத்திராடம், ரேவதி நீங்கலாக, மற்ற நட்சத்திரக்காரர் களைத் திருமணம் செய்துகொள்ளலாம்.

ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் சூரிய தசையில், அதிக உஷ்ணத்தால், நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமிருக்கும் நட்சத்திரப் பலன்கள் மூல நட்சத்திரக்காரர்கள், அன்றைய தினத்தின் நட்சத்திரத்தைக் கொண்டு தின பலனறியும் குறிப்பு.

(மூல நட்சத்திரப் பலன்கள் தொடரும்)
செல்: 63819 58636