"பொய்யுரை சொல்பவன் கீர்த்திமான் தரித்திரன் நெடியன்
வெய்ய சிலுக்கன் சுத்தவான் குஞ்சி அழகன் திருவிழி சிவப்பன்
துய்ய பலவான் கோபி உறவுடையவன் உயர்ந்திருக்கும் துண்டமுள்ளான்
அய்யம் அற உலகு தொழு ஒரு மணியாய விளங்கிய ஆதிரையாயினானே.''
-ஜாதக அலங்காரம்
பொருள்: திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர், பேச்சாற்றலில் சிறந்து விளங்குவார். ஆனால், பொய் சொல்வார். செல்வத்தில் ஏற்ற, இரக்கம் உடையவர். அழகான விழிகளை உடையவர்.
ஒரு சக்கரத்தின் மேல்பகுதி, கீழ்நோக்கியும், கீழ்பகுதி மேல் எழுந்தும் செல்வதால் மட்டுமே இயக
"பொய்யுரை சொல்பவன் கீர்த்திமான் தரித்திரன் நெடியன்
வெய்ய சிலுக்கன் சுத்தவான் குஞ்சி அழகன் திருவிழி சிவப்பன்
துய்ய பலவான் கோபி உறவுடையவன் உயர்ந்திருக்கும் துண்டமுள்ளான்
அய்யம் அற உலகு தொழு ஒரு மணியாய விளங்கிய ஆதிரையாயினானே.''
-ஜாதக அலங்காரம்
பொருள்: திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர், பேச்சாற்றலில் சிறந்து விளங்குவார். ஆனால், பொய் சொல்வார். செல்வத்தில் ஏற்ற, இரக்கம் உடையவர். அழகான விழிகளை உடையவர்.
ஒரு சக்கரத்தின் மேல்பகுதி, கீழ்நோக்கியும், கீழ்பகுதி மேல் எழுந்தும் செல்வதால் மட்டுமே இயக்கம் உண்டாகிறது. அதுபோலவே, காலசக்கரமும் சுழல்கிறது. கீழ்நிலையில் உள்ளோர் முயற்சியால் மேலான நிலைக்கு செல்வதாலும் மேல்நிலையிலுள்ளோர், ஆணவத்தால் கீழான நிலையை அடைவதாலுமே, தர்மசக்கரம் சுழலுவதை உணரமுடிகிறது. ஏற்ற தாழ்வால் வருவதே வாழ்க்கை. நட்சத்திரத்தின் தசாபுக்தி நகர்வே, வாழ்க்கையைத் தீர்மாணிக்கிறது.
திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தின் சிறப்பு
செவ்வாய் ஹோரையும், திருவாதிரை நட்சத்திரமும், ரிஷப லக்னமும், கூடும் நேரத்தில் பிறந்தவர்கள் சாதனை படைப்பார்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தின் வலிமை
* திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சிறந்த அறிவாற்றலும் பகைவர் களை வெற்றிகொள்ளும் தந்திரமும், எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் உறுதியும் நிரம்பியவர்கள்.
* தங்கள் திறமைமீது அதிக நம்பிக்கைக் கொண்டிருப்பார்கள்.
* சிறு வயதிலிருந்தே கஷ்டங்களை அனுபவித்ததால், உறுதியான மனதுடன் இருப்பார்கள்.
* இவர்களின் பேச்சாற்றல் நன்றாக இருக்கும்
* மேலதிகாரியின் மனதைப் புரிந்து கொண்டு அவர்கள் விருப்பம் போல் நடந்துகொள்வதால் பாராட்டப்படுவார்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தின் பலவீனம்
* வாக்குவாதத்தால் நல்ல நண்பர்களை இழப்பார்கள்..
* ஆரம்ப கல்வியில் சில தடைகள் உண்டாகும்.
கூட்டு கிரகப் பலன்
(திருவாதிரை நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும்போது உண்டாகும் பலன்களையும் ஆராய வேண்டியது முதன்மையானது.)
* திருவாதிரை நட்சத்திரத்தில், சூரியனிருக்க, சிறந்த அறிவாளியாக இருப்பார்கள்.
* செவ்வாய் அமர்ந்திருக்க, பிறந்த ஊரில் பெருமை இல்லை.வெளிநாட்டில் புகழ் உண்டாகும்.
* புதன் அமர்ந்திருக்க பல பெண்களிடம் நட்பு உடையவர்.
* சுக்கிரன் அமர்ந்திருக்க அதிக காம எண்ணம் உடையவர்.
* சனி அமர்ந்திருக்க அதிக கடன் வாங்குவதால் தொல்லை உண்டாகும்.
* குரு அமர்ந்திருக்க ஆராய்ச்சி துறையில் வெற்றி அடைவார்.
* ராகு அமர்ந்திருக்க தீய நட்பினால் தொல்லை.
* கேது அமர்ந்திருக்க தாயாருக்கு கண்டம்.
திருவாதிரை நட்சத்திர பாதப் பலன்
* திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதம், தனுசு நவாம்சம். குருவால் ஆளப்படுகிறது. போராட்ட குணம் அதிகமிருக்கும்.
* திருவாதிரை நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம் மகர நவாம்சம். சனிபகவானால் ஆளப்படுகிறது. இசையில் ஆர்வம் மிகுந்தவராக இருப்பீர்கள். பொறியியல் துறையில் வெற்றி உண்டு.
* திருவாதிரை நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் கும்ப நவாம்சம். சனிபகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் செல்வம், செல்வாக்கு பெற்றவர்.
* திருவாதிரை நட்சத்திரத்தின் நான்காவது பாதம் மீன நவாம்சம். குரு பகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், அதிக செலவாளி. ஆடம்பர வாழ்க்கையை விரும்புவார். கணவன்- மனைவி நட்பு பாதிக்கப்படும்.
திருவாதிரை நட்சத்திரநாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்
* சனிக்கிழமையும், திருவாதிரை நட்சத்திரமும் கூடினால், அணை கட்டலாம், சேமிப்பைத் தொடங்கலாம்.
திருவாதிரை நட்சத்திரநாளில் செய்யக் கூடாதவை
* வியாழக்கிழமையும், திருவாதிரை நட்சத்திரமும் கூடினால், சுப காரியங்கள் செய்யக் கூடாது.
திருவாதிரை பரிகாரம்
* திருவாதிரை நட்சத்திர தினத்தன்று, ஸ்ரீ காளஹஸ்தி சென்று ராகு- கேது பரிகார பூஜை செய்து, வழிபடுவது சிறப்பு.
செல்: 63819 58636