ஒரு ஜாதகத்தில் ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், வாழ்க்கை துணை மற்றும் சமுதாய அங்கீகாரம், சமுதாய அந்தஸ்து பற்றிக் கூறுமிடம்.
ஏழாமிடம் அதிக பரல் பெற்றிருக்க வேண்டும். இளம் வயதில் திருமணம் நடக்கும். சமுதாய அங்கீகாரம், அந்தஸ்து நிறைந்த மண வாழ்க்கையாக இருக்கும். வாழ்க்கைத்துணை ஜாதகருக்கு கட்டுப்படுவார்.
மணவாழ்க்கை சிறப்பாக அமையும் கூட்டுத் தொழி-ல் கொடி கட்டி பறப்பார்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அரசியலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று தனித்தன்மையுடன் ஜொலிப்பார்கள். இரண்டாவது குழந்தை பிறந்தபிறகு வாழ்வாதாரம் உயரும்.
ஏழாமிடம் மிகக் குறைந்த பரல்கள் பெற்றிருந்தால் காலதாமதத் திருமணம் நடக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை குறையும். சில தம்பதிகள் மிகுதியான ஈகோவால் தம்பதிகள் பிரிந்து வாழ்வார்கள். பல திருமணங்கள் முறிகின்றன. சமுதாய அங்கீகாரம் இருக்காது.
லக்னத்திற்கு எட்டாம் இடமான அஷ்டமஸ்தானம் லக்னாதிபதியைவிட அதிக பலம் பெற்றிருப்பது சுபத்துவம் அல்ல. லக்னாதிபதியைவிட அதிக பரல் வித்தியாசம் இருந்தால் எதிர்பாராத பண வரவு, அதிர்ஷ்ட சொத்து, ஆயுள் பலம் மற்றும் மறைமுக லாபங்களைத் தரும்.
அஷ்டம சனி காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறையும். பெரிய ஆபத்துகள் நீங்கி, திடீர் திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் ஏற்படும். குறைந்த உழ
ஒரு ஜாதகத்தில் ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், வாழ்க்கை துணை மற்றும் சமுதாய அங்கீகாரம், சமுதாய அந்தஸ்து பற்றிக் கூறுமிடம்.
ஏழாமிடம் அதிக பரல் பெற்றிருக்க வேண்டும். இளம் வயதில் திருமணம் நடக்கும். சமுதாய அங்கீகாரம், அந்தஸ்து நிறைந்த மண வாழ்க்கையாக இருக்கும். வாழ்க்கைத்துணை ஜாதகருக்கு கட்டுப்படுவார்.
மணவாழ்க்கை சிறப்பாக அமையும் கூட்டுத் தொழி-ல் கொடி கட்டி பறப்பார்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அரசியலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று தனித்தன்மையுடன் ஜொலிப்பார்கள். இரண்டாவது குழந்தை பிறந்தபிறகு வாழ்வாதாரம் உயரும்.
ஏழாமிடம் மிகக் குறைந்த பரல்கள் பெற்றிருந்தால் காலதாமதத் திருமணம் நடக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை குறையும். சில தம்பதிகள் மிகுதியான ஈகோவால் தம்பதிகள் பிரிந்து வாழ்வார்கள். பல திருமணங்கள் முறிகின்றன. சமுதாய அங்கீகாரம் இருக்காது.
லக்னத்திற்கு எட்டாம் இடமான அஷ்டமஸ்தானம் லக்னாதிபதியைவிட அதிக பலம் பெற்றிருப்பது சுபத்துவம் அல்ல. லக்னாதிபதியைவிட அதிக பரல் வித்தியாசம் இருந்தால் எதிர்பாராத பண வரவு, அதிர்ஷ்ட சொத்து, ஆயுள் பலம் மற்றும் மறைமுக லாபங்களைத் தரும்.
அஷ்டம சனி காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறையும். பெரிய ஆபத்துகள் நீங்கி, திடீர் திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பில் அதிக லாபம் கிடைக்கும். நிறைந்த ஆயுள் இருக்கும். ஆனால் எதிர்பாராத நேரத்தில் ஜாதகரால் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு விபரீத பிரச்சினைகளையும் கொடுக்கும்.
அஷ்டம ஸ்தானத்திலுள்ள கிரகங்களின் நிலை அஷ்டமாதிபதியின் வலிமை ஆகியவற்றையும் சேர்த்து கணிப்பது துல்லியமான பலனைத் தரும். லக்னத்தைவிட அஷ்டமஸ்தானம் சிறிது பரல் குறைவாக இருந்தால் சிறு சிறு பாதிப்பு நிகழ்ந்தாலும் மீண்டு வரக்கூடிய சந்தர்ப்பம் தானே உருவாகும்.
ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானம் அதிக பரல் பெற்று இருந்தால் பாக்கிய பலன்கள் மிகுதியாக நடக்கும். லௌகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் உண்டாகும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உள்ளவராக இருப்பார். தந்தைவழி யோகத்தை முழுமையாக அனுபவிப்பார்கள். தான் வசிக்கும் ஊரில் மதிப்பும், மரியாதையும் மிக்கவராகவும் குலத் தொழில்புரிபவர்களாக இருப்பார்கள். சிறிய உழைப்பில் பெரிய வருமானம் உண்டு. குரு தீட்சை பெற்றவர்கள். தந்தை, தந்தை வழி முன்னோர்கள் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார்கள் கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்தவர்கள், செய்பவர்கள். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். உயர்கல்வி வெளியூர் அல்லது வெளிநாட்டில் படிப்பார்கள்.
பாக்கிய ஸ்தானம் பரல் குறைவாக இருந்தால் ஜாதகருக்கு தான தர்ம குணங்கள் இருக்காது. ஜாதகர் தந்தை மற்றும் தந்தை வழி தந்தை சம்பாதித்த சொத்துகளை விரயம் செய்வார். சேமிப்பும் சிக்கனமும் இருக்காது. கடினமாக உழைத்தாலும் வாழ்வில் பெரிய வெற்றி, முன்னேற்றம் இருக்காது. ஜாதகருக்கு தந்தையின் அன்பு கிடைக்காது. பெற்றோர்களுக்கு அவப்பெயரை தேடி வைப்பவர்.
பத்தாமிடமான தொழில் ஸ்தானம் அதிக பரல் பெற்றிருந்தால் தொழில்மூலம் உண்டாகக் கூடிய கௌரவம் , அந்தஸ்தான் தொழில் அமையும். பல விதமான தொழில் சம்மந்தப்பட்ட நுணுக்கங்கள், நுட்பங்கள் ஜாதகருக்கு உண்டாகும்.
தன் கையே தனக்கு உதவி என பிறரை நம்பாமல் சுய முயற்சியால் முன்னேறுவார்கள். அரசாளும் யோகம், அரசு உத்தியோகம் உண்டு. பிறரை வழிநடத்தும் அதிகார நிலையில்தான் தனித்து இயங்கி பலருக்கு வேலை தரும் இயல்பில் இருப்பார்கள். ஜாதகருக்கு நிச்சயமாக வாரிசு உண்டு.
பத்தாம் இடம் குறைந்த பரல் பெற்றிருந்தால் உழைப்பு முதலீட்டிற்கு ஏற்ற வருமானத்தை பெற்றுத்தராது. மாமியாரால் மன உளைச்சல் உண்டு. கர்மம் செய்ய புத்திரன் பிறக்க மாட்டான் அல்லது நோய் உள்ள குழந்தை பிறக்கும். அல்லது ஜாதகர் வாரிசுகளுக்கு கர்மம் செய்வார்.
பதினொன்றாமிடம் அதிக பரல் பெற்றிருந்தால் பல்வேறு வகையில் தனபிராப்தி, சொத்து சேருதல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பலவகையில் வருவாய், லாபம் போன்றவை வந்து சேரும். ஜாதகர் அதிர்ஷ்டப்பிறவி கோடீஸ்வர யோகம், சமுதாய அந்தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கௌரவம் உண்டு. கூட்டுத் தொழிலில் வெற்றி தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிகமான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். சிலருக்கு இரண்டாவது குடும்பம் அமைந்தபிறகு பண வரவு அதிகமாகும். கோட்சார கிரகங்கள் 11-ஆமிடத்திற்கு வரும்போது எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் அடைந்துவிடும். அதீத பொருளாதார வளர்ச்சி உண்டு.
லாப ஸ்தானம் மிக குறைந்த பரல் பெற்றிருந்தால் வாழ்ககையில் பிரச்சினைகள், ஏமாற்றங்கள் வரும். தீய சகவாசத்தால் பெயர் கெடும். எவ்வளவு சம்பாதித்தாலும் இவர்களால் பணத்தை சேமித்து வைக்கவே முடியாது. பொருளாதாரத்தில் தன் நிறைவற்ற நிலையைத் தரும்.
ஜோதிடரீதியாக ஒரு பாவகத்தின்மூலம் ஏற்படும் பிரச்சினையை அதற்கு பன்னிரண்டாம் இடமே தீர்த்து வைக்கும். லக்ன பாவத்தின் பன்னிரண்டாம் இடமான அயன, சயன விரய மோட்ச ஸ்தானம் அதிக பரல் பெற்றிருந்தால் இந்த பிறவியில் அனுபவிக்கும் துயரங்களுக்கு தீர்வு வழங்க முடியும். இதன்மூலம் முக்தி அல்லது மோட்சம் என்ற பிறவிப்பயனை அடைவாரா?
மறுபிறவி உண்டா? படுத்த வுடன் நிம்மதியான தூக்கம் கிடைக்குமா? வெளிநாட்டு வேலை, தொழில் அமையுமா போன்றவற்றை அறிய முடியும்.
அத்துடன் லக்னாதிபதியைவிட விரய ஸ்தானம் பரல் குறைவது நல்லது.
விரய ஸ்தானம் மிதமான பரலுடன் இருந்தால் ஜாத கருக்கு வெளிநாட்டு யோகம் அமையும். வெளிநாட்டில் தங்கி வேலை, தொழில் செய்யும் நிலை உருவாகும். இரவு நேர வேலை, இரவு நேர தொழில் சிறப்பாகும். இரவில் உறக்கம் கெடுவதால் உண்டாகும் நோய்களும் ஏற்படும். சிலர் வாழ்வின் பெரும் பகுதியை மருத்துவமனையில் கழிப்பார்கள். எந்த நோய் எந்த மருந்தை எடுப்பது என்று தெரியாமல் குழம்புவார்கள்.
இங்கே நாம் உதாரணமாக ஒரு மிதுன லக்னத்தை சேர்ந்த ஒருவரின் சர்வாங்க அஷ்டவர்க்க பரல் அட்டவணை இணைத்துள் ளோம்.
லக்னாதிபதி மிதமான பலத்துடன் 26 பரல்களை பெற்றுள்ளார். ஆனால் ஆறாம் அதிபதி 31 பரல்களை பெற்றிருந்தார். லக்னாதி பதியைவிட ஆறாம் அதிபதி மிக வலிமையாக அதிகப்பரல் பெற்றிருந்தது ஜாதகருக்கு கடன், நோய், எதிரி சார்ந்த பாதிப்புகளை கொடுத்தது. தன ஸ்தானம் மிக மிக வலிமை குறைவாக பரல் பெற்று இருந்தது.
ஆனால் லாப ஸ்தானம் லக்னாதிபதியைவிட ஆறாம் அதிப தியை விட மிக அதிக பரல் பெற்றிருந்ததால் ஜாதகருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை கணித்துக் கொடுத்தோம். இந்த கால கட்டத்தில் உங்களுடைய கடன் தீர்ந்து பழைய நிலைமைக்கு மீண்டு விடுவீர்கள் என்று பலன் கூறப்பட்டது. அதேபோல் கோட்சார கிரகம் அந்த இடத்திற்கு வரும்போது ஜாதகர் அந்த ஜாதகர் இழந்த அனைத்தையும் மீட்டு சந்தோஷமாக வாழ்கிறார். ஒரு ஜீவனிலுள்ள ஆசைகளே தலையெழுத்திற்கு காரணமாக அமைகிறது. லௌகீக மாயையில் ஆன்மா சிக்கி தலையெழுத்தை அதிகப்படுத்தும். விதியின் வலிமையை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கையை இன்பமயமாக வாழ முடியும்.
மிகப்பெரிய சமுத்திரமான ஜோதிட கடலில் மூழ்கி முத்தெடுக்கு அனுபவம் மிக அவசியம்.
செல்: 98652 20406
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us