Advertisment

அதிர்ஷ்டத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் அங்காரகன்! -எஸ். விஜயநரசிம்மன்

angaran

செவ்வாயைக்கண்டு அஞ்சுதல் ஆகாது. திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது செவ்வாய் தோஷம் என்று கூறி பல திருமணங்கள் நின்று போவதை கண்கூடாக பார்க்கலாம். ஆனால், மங்களன், அங்காரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாய் எவ்விதம் போற்றப்பட வேண்டியவன், புகழப்பட வேண்டியவன் என்பதைக் காண்போம்.

Advertisment

வராஹிமிகிரரின் "பிருகத் ஜாதக'த்தில் செவ்வாய் "வக்ரா' என்றும். ஒரு இளமையான, கொடூர கண்களுடைய நிலையற்ற மனம் உடையவர் என்றும் குறிப்பிடுகிறார். செவ்வாய்மீதான இத்தகைய அபிப்ராயங்கள் ஒருவரை, இந்த சக்தி மிக்க கிரகம் மட்டு மின்றி, துன்பத்தை மட்டுமே தருகின்ற கிரகம் என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது. ஆனால், ஒரு வெளிப்படையான எதையும் நேருக்கு நேராக சொல்-விடும் குணமுள்ள செவ்வாயை, நாம் அவ்வாறு  எண்ணலாகாது. அவரது சுறுசுறுப்பு மற்றும் திறமை வியக்கத்தக்கதாகும்.

Advertisment

கோள்களுக்குள் முதன்மை படைத் தளபதியாக போற்றப்படும் செவ்வாய், பகவான் மகாவிஷ்ணுவின் மூலம் தனக்கு அளிக்கப்பட்ட அடிப்படை குணங்கள் மற்றும் கடமைகள் ஆகியவை சந்தேகமற ஜோதிட உலகில், பிரபலமான இடத்தில் இருக்கிறார். .அவரது தாக்கம் இவ்வுலக வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், செயல்பாடுகளிலும்,இல்லாமல் இருப்பதில்லை. உண்மையைக்  கூற வேண்டுமா னால், நவீன உலகின் பிரதிநிதியாக செவ்வாய், ஒருவன் மட்டுமே திகழ்கிறான். அப்பேர்பட்ட செவ்வாய், தீய கோள் என சித்தரிக்கப்படுவது வருத்தப்பட வேண்டிய ஒன்று. இன்னும், செவ்வாய் சிலரால் இராசி மண்டலத்தின் சேட்டைக்கார  பையன் என அழைக்கப்படும் அளவுக்கு போய்விடுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. அவன் பலமிழந்த நிலையில் இருந்தாலொழிய, துஷ்டத்தனங்கள் செய்ய மாட்டான். ஏன், தேவர்களுக்கு குரு, வல்லவன், நல்லவன், குலக்கொழுந்து என்றெல்லாம் போற்றப்பட்ட, தேவ குருவான, குருவேகூட பலமிழந்த நிலையில் துஷ்டத்தனம் செய்யத்தான் செய்கிறார் என்பதை நாம் மறக்கலாகாது.

ஜோதிட மேதை  டாக்டர் பீ.வி ராமன் செவ்வாயை பூமியின் மைந்தன் எனப்படும் "பூமிபுத்ரா' என்றும், இரத்தத்தைக் கட்டுப் படுத்து பவன் "ருத்ர'னென்றும், எரியும் நிலக்கரி யென்ற "அங்காரக' னென்றும், மூர்க்கமான முகத்தோற்றம் உடையவன் எனப் பொருள்படும் "லோகிடங்கா' என்றும்  குறிப்பிடுகிறார். மேலும் செவ்வாய் திருமண விஷயத்தில், அவன் தரும் அனுகூலமற்ற தாக்கத்தால் ஏற்படும் செவ்வாய் தோஷத்தால் அனைவராலும் அறியப்பட்டவன் ஆவான்.

இயற்கையில் அசுபராகிய செவ்வாய், தைரியம், வீரம், பொது அறிவு, உணர்ச்சி, மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தனம், பலம், சுய தைரியம், சகிப்புத்தன்மை, "துணிந்து செல், நிமிர்ந்து நில்' என்ற உத்வேகம், விவாத   குணமுள்ள ஆசிரியத்  தன்மை, அதிரடியான நகைச்சுவை  உணர்வு, கஷ்டம் எதையும் திட்டமிட்டு நிறைவேற்றும் தன்மை, நிகழ்ச்சிகள், விழாக்கள் ஆகியவற்றை திறன்பட ஏற்பாடு செய்கிற திறமை, சுதந்திரமான செயல்பாடுகள், தலைமைக்கான தகுதிகள், வெற்றிபெற நினைக்கின்ற உழைப்பு மற்றும் முனைப்பு, இயங்குதல், தீ, வெப்பம், உந்துதல், ஊக்குவித்தல் கட்டுமானம், சுய கட்டுப்பாடு, பயமின்மை, உயர்ந்த எண்ணம் மற்றும் தியாக குணம் போன்றவற்றை  பலம் மிக்க, நல்ல நிலையில் உள்ள, அனுகூலமிக்க நிலையில், அமர்ந்து அந்த அதிர்ஷ்டம் உள்ள ஜாதகரை, வாழ்வில்  கஷ்டங்களில் இருந்தும், நஷ்டங்களிலிருந்தும், இறுக்க மான நிலைகளிலிருந்தும் விடுவித்து விடுகிறார். 

அதன் காரணமாக அந்த ஜாதகரை அதிர்ஷ்டத்தின் உச்சிக்கே, அழைத்துச்சென்று விடுகிறார். பெருந்தன்மை மிக்க பேராளன் செவ்வாய், ஒருவரை தைரியமிக்கவராகவும், வீர மிக்கவராகவும், எவராலும் வெல்ல முடியதாவராகவும், பயத்தாலும், ஆபத்துக்களாலும் பாதிப்படையாதவராகவும், தடைகளைத் தைரியத்தோடு எதிர்கொள் பவராகவும், எதிலும்  எச்சரிக்கை  உடையவராகவும் இருக்கச் செய்கிறது என டாக்டர் பீ.வி.ராமன், மேலும் கூறுகிறார்.நமது செவ்வாயைப் பற்றிய கூற்றையும் நியாயப் படுத்துகிறார்.

ஒரு இயற்கை பாபராக, அனுகூலமற்ற நிலையில் செவ்வாய் என்ன செய்கிறாரெனப் பார்ப்போம்.  எச்சரிக்கை உணர்வில்லாத  சிந்தித்து  செயல்படாதவராகவும், பிறர்க்கு அடங்கி நடப்பதையும், பிறரால் கட்டுப்படுத்துவதை விரும்பாதவராகவும், தன் நடவடிக்கைகளில் பிறரின் தலையீட்டை வெறுப்பவராகவும், துரதிர்ஷ்டம், விவகாரம், வழக்குகள், எதையும் துணிவுடன் எதிர்க்கும் தன்மை, தவறான தகுதியற்ற தலைமை, விபத்துக்கள், நேர்மையற்ற காம உறவு, வெட்டுகாயம், புண்கள், அறுவை சிகிச்சை, இரத்தம் வீணாகுதல், உடல்வ-, சட்டப்படி தண்டனையடைதல், அடாவடித்தனம், சண்டையிடுதல், தரக்குறைவான பேச்சு, வெட்கங்கெட்ட தன்மை, கொடுமையான, மூர்க்கத்தனமான, போர்க்குணமுள்ளவர், ஓய்வற்ற, பொறாமையுள்ள, அடிபணியாத, சட்டத்தை மதிக்காத, சுயகட்டுப்பாடற்ற, கர்வமிக்க, கோபமுள்ள, நிலையற்ற மனமுடைய, கடினமான மனமுடையவராகவும், போராட்டம் மற்றும் குழப்பவாதியாகவும் ஆக்கிவிடுகிறார். மேலும் மேற்கண்ட துர்குணங்களை ஜாதகருக்குத் தந்து, தேவையற்ற வீண் விவகாரங்களில் தலையிட வைத்துத் துன்பங்களுக்கு ஆளாக்கி  துரதிர்ஷ்டசா-யாக்குகிறார் என்றால், அது செவ்வாய் வலுவிழந்த நிலையில் மட்டுமே.

மேஷம், விருச்சிகம் இரு ராசிகளுக்கும் அதிபதியான,செவ்வாய்,  இளைய சகோதரர் மற்றும் பூமி காரகன் ஆவார். இந்த இரு  ராசிகளில் செவ்வாய், நமது வாழ்க்கையின் தொடக்கத்தோடும்,  முடிவோடும், அதாவது ஆரோக்கியம், சக்தி மற்றும் ஆயுளோடும், தொடர்புடையவர் ஆகிறார். எனவே,  ஒருவரின் ஆயுள், ஆரோக்கியத்தை ஜாதகத்தில் ஆராயும் போது ஆயுளுக்கு காரணியான 1-ஆம் பாவம், 8-ஆம் பாவம்,  சூரிய, சந்திரர்கள் மற்றும் செவ்வாய் கிரகங்களை கருத்தில் கொள்ள வேண்டும். நல்ல நிலையில் உள்ள செவ்வாய் ஒருவரின் நல்லாரோக்கியம் மற்றும்  நீண்ட ஆயுள் காலத்தை  உறுதி செய்கிறது என்றால் மிகையாகாது.

இவ்விடத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது யாதெனில், மேஷ ராசியானது, செவ்வாயின் நேரிடையான அல்லது சாதகமான, அனுகூலமான பலன்களை ஆள்கிறது. மேலும் இந்த ராசியில் தான், எதிர்ப்பு குணமுள்ள கிரக சக்திகளான, சூரியன் உச்சமும் சனி நீசமும் அடைகிறார்  என்பதை நமது ஜோதிட பார்வையில் இருந்து விலக்கிவிடக்கூடாது. ஏனெனில், இக்கோள்களும் ஆயுள், ஆரோக்கியதை கையாள்பவர்கள்தானே. எனவே, மேஷம் ஒரு சக்திமிக்க ராசியாக திகழ்கிறது. இங்கு பலம் மிக்க  பல கிரகங்கள் கூடியிருக்க, அந்த ஜாதகர் எல்லோராலும் மதிக்கப்படுபவராகவும், உயர்ந்த நிலையை உடையவராகவும்  இருப்பார்,  மேலும்,  மேஷம் லக்னமாகி, அதில் சந்திரனும், புதனும் இடம்பெற மிகப்பெரிய அளவில் அதன் விசேஷ குணங்கள் அனைத்தையும் ஜாதகருக்கு அளித்து விடுகிறது.

விருச்சிக ராசியானது, ஸ்திர ராசி, நீர்ப்பிடிப்பான இது செவ்வாயின் எதிர்மறையான விளைவுகளை கையாள்கிறது. மேற்சொன்ன, சந்திரன் நீசம், புதன் இணைவு விருச்சிக ராசியில்  ஏற்பட ஜாதகரை, அவர்  தவறுகள், செய்திருந்தால்கூட எளிதில் எவரும், ஒன்றும்  செய்துவிடமுடியாது. மேலும், விருச்சிக ராசியில்  எந்த ஒருகோளும். அது நற்கோளாக இருந்தாலும்கூட தனது இயற்கை நற்குணங்களை இழந்து, தனது தசா காலங்களில், ஜாதகருக்கு கஷ்டங்களைக் கொடுத்துவிடுகிறது.

ஒவ்வொரு கிரகமும், தனது தகுதிக்குத் தக்கவாறு, தனித்தனி வழிகளில், நம் பாவங்களுக்கு தக்க தண்டனை அளிக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். உதாரணமாக, சனி தனது தடை தாமத குணத்தால், மனதளவில் இன்னலுறச் செய்து, தண்டித்து விடுகிறான். ஆனால், செவ்வாய், மற்றவர்களுடன் சண்டைபோடச் செய்து  வழக்கு விவகாரங்களில் ஈடுபடவைத்து, பல சிக்கல்களை கொடுத்து தண்டிக்கிறார். இது உடலளவிலானது. இதன் காரணமாக  நாம், பொறுமையிழந்து, உணர்ச்சி வசப்பட்டு கோபமும் கொள்ள செய்து துன்பமளிக்கி றான்.

ஆனால், கோள்கள், பரிசுகளும்  தந்து  மகிழ்வதுண்டு. சனி   நமக்குப் பொறுமையையும், கட்டுப்பாட்டையும், ஒருமுகத்தன்மை யையும் அளித்து மகிழ்விக்கிறது. மேலும், அவன் மனித குலத்துக்கும், கடவுளுக்கும்   நாம் ஆற்ற வேண்டிய  கடமைகளை உணர்த்துகின்றன.

எனவே, செவ்வாய் தனது பகைவன் சனியின்  ஆட்சி வீடான மகரத்தில் உச்சமடைவதால் ஆச்சரியமில்லை. மேலும் செவ்வாய்க்கு சமநிலையில் உள்ளவர் சனி ஆவார். யூகித்தறிதல், முயற்சி மற்றும் தொழிற்சாலைக்கு இடமான மகர ராசியில், உச்சம் பெற்ற செவ்வாய் இடம்பெற ஜாதகரை மிகப் பெரிய அளவில் உயர்நிலைக்கு கொண்டு சென்று விடுகிறார்.

செவ்வாயின் நண்பரான சந்திரன் ஆதிபத்தியம் பெற்ற கடக ராசியின் 28-ல் அவர் நீசமானாலும், தனது குளிர்ச்சியால், வெப்பச் செவ்வாயை குளிர்வித்து விடுவதால், திருமண வாழ்க்கையின் காலங்கள் முழுவதும், உயர்நிலை அடைந்து, மகிழ்வுற்று ஆசிர்வதிக்கப்பட்டவரே ஜாதகர். சிறப்பாக திகழ்கிறார். இக்காரணங்களால், நமது வாழ்க்கையின் பெரும் பகுதியோடு தொடர்புடைய செவ்வாய்க்கு விம்சோத்திரி திசையில் 7 ஆண்டுகள்  மட்டுமே  ஒதுக்கி இருப்பது உண்மையில் விசித்திரமான ஒன்று. அவருக்கு 20 ஆண்டுகள் ஒதுக்கி இருந்தால் நன்று.

மேலும், பலமான செவ்வாயின்  பார்வை யைப்  பெறும் கிரகங்கள், மற்றும் 4 , 7 , 8 -ஆம்  பாவங்கள் நன்மை அடைகின்றன ஏனெனில்  செவ்வாயின் சக்தியைப்பெற்று மேலும் ஒளிர்கின்றன. நன்மை அளிக்கின்றன. அவைகளின் பலம் மேலும் அதிகரித்து விடுகிறது.

எனவே, நண்பர்களே பலமிழந்த மற்ற கிரகங்கள் தரும் துன்பம்போலவே, பலமிழந்த செவ்வாயும் இன்னல்களைத் தருகிறது. இல்லையேல் நல்லதையே நல்குகிறது என்பதை நாம் உணரவேண்டும்.

 செல்: 97891 01742.

bala040725
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe