கன்னி 

கன்னி ராசியின் 3-ஆம் அதிபதி செவ்வாய். 3-ஆம் வீடு என்பதே தைரிய ஸ்தானம் என்பர். அதன் அதிபதியும் வீர, தீரம் தருவார். இந்த அழகில், 3-ஆம் அதிபதி ஆர்ப்பாட்டச் செவ்வாய் என்றால், கேட்பானேன். சும்மா தூள் கிளப்புவர்.

Advertisment

கன்னி ராசியின் 3-ஆம் அதிபதி செவ்வாய் சூரியனுடன் சேர்ந்தால்

இவர்கள் அரசு சார்பான பயணங்கள் மூலம் உபரி பணம் பெறுவர். அரசு செய்திகளை, ஒரு இடத்திலிருந்து பல இடங்களுக்கு மாற்றும், செய்தி நுட்ப பிரிவில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ பணியாற்றி, உபரி வருமானம் பெறுவார். அரசுவகை பயணங்களை, போக்குவரத்து விதிகளை நிர்வகிக்கும் பணியில் இருப்பார். அரசியல்வாதிகளின் பயண நிகழ்வுகளை ஒருங்கிணைப்பார். அரசு சார்ந்த வெளிநாட்டு பயணங்களின் முக்கிய ஆளாக பணியாற்றுவார்.  அரசு வகை வரவு- செலவு எனும் பட்ஜெட் தயாரிக்கும் பிரிவில் பணிபுரிவார். வெளிநாட்டு தூதராக  பிரிவில், தாய்நாடு சார்ந்து தகவல் தொடர்பாளராக இருப்பார்.  

Advertisment

கன்னியின் 3-ஆம் அதிபதி செவ்வாய்+சந்திரனுடன் சேர்க்கை

இது அரசியல் சார்ந்தே இவ்வமைப்பு உபரி வருமானம் தரும். அரசியல் கூட்டங்களுக்கு, வயதான பெண்களை அழைத்து வருவது, அரசியல்வாதிகளின் பாதுகாப்பு, ரகசியமாக அரசு, அரசியல்வாதிகளை கண்காணிப்பது, அரசியல் கூட்டம், விழாக்கள் என இவற்றுக்கு உணவு, குடிதண்ணீர் சப்ளை, கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது, சிலசமயம் கூட்டத்தில் கலகம் மூட்டி, சில பலரை பரலோகம் அனுப்புவது, அரசியல் கூட்ட நாற்காலிகளை அடித்து நொறுக்குவது, பாட்டில் எரிவது என இதுபோன்ற சட்டபுறம்பான வேலைகளை கமுக்கமாக செய்து உபரி வருமானம் பெறுவர்.

கன்னி லக்ன 3-ஆம் அதிபதி செவ்வாய்+புதனுடன் சேர்ந்தால்

இவர்களின் வெளிப்படை அல்லது பகுதி நேர வேலை என்பது ரகசியம் சார்ந்திருக்கும். பெரும்பாலும் போலீஸ் இன்பார்மர்கள் எனும் உளவு வேலை செய்து, உபரி பணம் சம்பாதிப்பர். இந்த உளவு வேலையை, சட்டபுறம்பானவர் களான களவு செய்பவர், கொலை புரிபவர். மற்றும் கள்ளக்கடத்தல் செய்பவருக்கும் தகுந்த நேர துப்பு கொடுப்பவராக வேலை செய்து உபரி பணம் ஈட்டுவர். இவர்கள் எந்த வேலை செய்தாலும், அதில் ஒரு திருட்டுத் தனமான உபரி வருமானத்துக்கு வழி செய்துவிட்டுத்தான் மறுவேலை செய்வர். இவர்களின், இந்த கிரக இணைவு பள்ளி, கல்லூரியின் போலி சர்டிபிகேட்களை அச்சடிக்க வைத்துவிடுகிறது. இவர்கள்தான் சிறைச்சாலைக்குள்ளும் போதை மருந்து, கைபேசி இவற்றை கடத்துபவராக இருப்பர்.

Advertisment

கன்னி ராசியின் 3-ஆம் அதிபதி செவ்வாய்+குரு சேர்க்கை

இந்தமாதிரி மனிதர்கள் ஒருபுறம் வியாபாரம் பார்த்துக்கொண்டே, வீடு வாடகைக்கு பிடித்து கொடுப்பது, மனை விற்பனை, வாகன சேல்ஸ் என மறுபுறம் செய்து உபரி வருமானம் சம்பாதிப்பர். சில தோட்டம், வயல்களை விற்று, கமிஷனாக பணம் சம்பாதிப்பர். என்ன ஒன்று, இவர்கள் விற்க வாடகைக்கு ஏற்பாடு செய்யும் வீட்டில், ஏதாவது குற்றம் குறை தீவினை என எதுவாக இருப்பினும், அதனை மறைத்து விற்று, வாடகைக்கு விடுவர். சிலர் கோவில் சார்ந்த இடங்களை பேசிமுடித்து, கமிஷன் வாங்கி சென்றுவிடுவர். பின்னாடியே, அறநிலையத்துறை ஆட்கள் வந்து பிடுங்கிச் சென்று விடுவர். செத்த ஆட்களையும், உயிரோடு இருப்பதாக கூறுவதில் வல்லவர்கள். இதனால் தேர்தல் நேரத்தில், ரொம்ப டிமாண்ட் உள்ள ஆட்களாக இருப்பர். இவர்களின் கமிஷன் எனும் உபரி வருமானத்தில், மிக கள்ளத்தனம் ஒளிந்திருக்கும்.

கன்னியின் 3-ஆம் அதிபதி செவ்வாய்+சனியுடன்

இவர்கள் கலையுலகில் டைரக்ஷன் பண்ண செய்கிறேன், ஒளிப்பதிவாளராக வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி ஒன்றிரண்டு ஆட்களை கைகாட்டி, உபரி பணம் வாங்கிவிடுவர். நல்ல பங்குகளை வாங்கித் தருகிறேன் என்றோ, வேலை வாங்கித் தருகிறேன் என்றோ, நல்ல மருத்துவமனையில் சீஃப் டாக்டரை தெரியும் என்றோ, விளையாட்டுத் துறை சார்பாக வேலையில் நுழைத்துவிடுகிறேன் எனக் கூறியோ, மருத்துவமனை ஒப்பந்தம் பெற்றுத் தருகிறேன் எனக் கூறியோ பெரும் தொகையை பெற்று விடுவர். இந்த சனி வீட்டில் கன்னியின் 3-ஆம் அதிபதி செவ்வாய் உச்சமடைவதால், இவர்கள் பெரிய அளவில் உதவி செய்வதாக கூறி, அதற்கேற்ற உபரி வருமானம் பெற்றுவிடுவர்.

கன்னியின் 3-ஆம் அதிபதி செவ்வாய்+சுக்கிரன் சேர்க்கை

திருமண தகவல் மையம் வைத்திருப்பார். ஆன்மிகம் சம்பந்தமாக, டிக்கெட் எடுத்துக்கொடுக்கும் பணியை உபரி வருமானத்துக்காக செய்வார். தர்மம், சேவை, உதவி இவற்றுக்கு பணம் வசூலிக்கும் பணியில் இருந்து, வசூலுக்கு தக்க வருமானம் பெறுவார். நீதிமன்றங்களில், வழக்கறிஞர்களுக்கு ஒத்தாசை செய்து, உபரி பணம் புரட்டுவார். அடுக்குமாடி பதிவு செய்யும் அலுவலகத்தில் புரோக்கராக இருப்பார். மேலும் மனை, நிலம், வயல் இவற்றை நல்ல விலைக்கு விற்கும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்தும் பணிபுரிவார். எவ்வளவுதான் தர்மம், உதவி என்ற லேபிளை ஒட்டி செய்தாலும், அதில், நிறைய கள்ளத்தனம், ஒளிந்திருக்கும். இது தவிர்க்க முடியாதது. 

கன்னியின் 3-ஆம் அதிபதி செவ்வாய்+ராகு இணைவு பெற்றால் 

இவர்கள் உறுதியாக கள்ள கடத்தல், போலி வீட்டு நிலப் பத்திரம் அடித்து, அதனை விற்றுவிடுவது, உயிரோடு இருப்பவரை, செத்துப்போய் விட்டதாக கூறி, இன்ஷூயூரன்ஸ் பணம் வாங்குவது, ஏற்றுமதி- இறக்குமதி தொழிலில் பெரிய பித்தலாட்டம் செய்வது, கொலை செய்யும் கூலியாக இருப்பது, கொள்ளை அடிக்கும் போது பங்குதாரராக இருப்பது என அனைத்து எதிர்மறைச் செயலிலும் ஈடுபாடு கொண்டு, நிறைய உபரி வருமானம் பெறுவார்.

கன்னியின் 3-ஆம் அதிபதி செவ்வாய்+கேதுவுடன் இணைவு பெற்றால்

 அமைதியாக இருந்து, அனைத்து கெட்ட வேலைகள் செய்வார். சொத்துகாக சொந்த சகோதரனை போட்டுத் தள்ளும் பெரிய அன்புள்ளம் கொண்டவர்கள் இந்த இணைவுகாரர்கள்.

கன்னியின் 3-ஆம் அதிபதி உச்சமாகி இருப்பினும், பலன்கள் என்னவோ எதிர்மறையாகத்தான் இருக்கும். நிறைய பேரை காதலித்து கைவிடும் நபராகவும் இருப்பர். 

செல்: 94449 61845