"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என ஔவையார் நமக்கு அறிவுரை கூறியுள்ளார். அதாவது நம் நாட்டைவிட்டு கடல் கடந்து சென்று வாணிபம், செல்வம், கல்வி முதலியன தேட வேண்டும் என்கிற பொருளில் கூறியுள்ளார்.
அந்த வகையில் நம்முடைய தமிழர்கள் கடல் கடந்து சென்று வாணிபம், தொழில், கல்வி என பலவகையில் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இங்ஙனம் வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் தங்களின் தாய் மதமான இந்து சமயத்தைக் காக்கும்வண்ணம் ஆங்காங்கு கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை உருவாக்கிவரத் தொடங்கினார்கள்.
ஐரோப்பியா கண்டத்தில் இருக்கும் லண்டன் மாநகருக்குச் சென்ற தமிழர்கள் மற்றும் இந்துக்கள் ஒன்றுகூடி கோவில்களைக் கட்டத் தொடங்கினார்கள். ஆறாம் திருமுறையில் திருநாவுக்கரசர் "திருக்கோவில் இல்லாத திருவிலூரும்' எனத் தொடங்கும் தேவார பதிகத்தில் கோவில் இல்லாத ஊர் செல்வம் இல்லாத ஊர். மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடம் என்கிற பொருளில் பாடி இருந்ததை மனதில் நிலைநிறுத்திய இந்தியர்கள் லண்டன் மாநகரில் லண்டன் ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவிலை உருவாக்கினார்கள்.
இதனால் மேலை நாடுகளிலும் நம்முடைய பண்பாடும், கலாச்சாரமும், ஒற்றுமை உணர்வும் வளர்ந்துவருகிறது.
சனாதன இந்து மதத்தில் இறைவழிபாடு என்பது முக்கியமானது. அந்த இறைவழிபாட்டில் விக்கிரக வழிபாடு என்பது அதிலும் முக்கியமான உயிர் நாடிகளும் இறைவனின் பல்வேறு வடிவங்களை கற்சிற்பமாகவும், ஐம்பொன் விக்கிரமாகவும், ஓவியமாகவும் உருவாக்கி வழிபடுவது என்பது பல நூற்றாண்டு காலமாக இருந்த ஓர் அம்சமாகும். குறிப்பாக தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய, விஜயநகர உள்ளிட்ட மன்னர்களும், சிற்றரசர்களும், ஜமீன்தாரர்களும் இதற்காகப் பல திருப்பணிகளைச் செய்திருப்பதை வரலாற்று ஆவணங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது.
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பதால் "ஆ' என்கிற ஆன்மா "லயம்' (ஒன்றுபடுதல்) ஆகும் இடம்தான் ஆலயம். எனவேதான் நம்முன்னோர்கள் பக்தி நெறியை வளர்க்க ஆலயத்தைக் (கோவில்) கட்டினார்கள். இதே நல்லெண்ணத்தில்தான் லண்டன் மாநகர் சென்ற நம் மதத்தினர் கோவிலைக் கட்டி வழிபாடு செய்யத் தொடங்கினார்கள். இதனால் நம்முடைய வழிபாட்டு கலாச்சாரத்தை ஐரோப்பியர்கள் அறிய நல்லவாய்ப்பு கிடைத்தது. கோவிலில் நடைபெறும் திருவிழா சமயத்தில் அங்கு வாழும் இந்து மத சொந்தங்கள் அனைவரும் ஒன்று கூடுவதால் சமத்துவமும், சகோதரத்துவமும் வளருகிறது. பிற்கால சந்ததியினருக்கு இந்திய பண்பாடு, கலாச்சார உணர்வை ஊட்டும் வகையிலும் பயன்படுகிறது.
லண்டன் மாநகரில் குடியேற இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அரசின் அனுமதியுடன் ஒரு சிறிய கோவிலை கட்ட வேண்டும் என ஒன்றுகூடி 1980-யிலிருந்து விவாதித்து கட்டினார்கள். 1985-ஆம் ஆண்டு "லெட்சுமி நாராயணா டிரஸ்ட்' எனும் பெயரில் அறக்கட்டளையை பதிவு செய்து லண்டன் நகரில் 241 ஐண்ஞ்ட் நற்ழ்ங்ங்ற் (சர்ழ்ற்ட்)-யில் 1989-ல் புதிய பொலிவுடன் கோவிலை சற்று விலாசமாக கட்டத் தொடங்கி பிப்ரவரி 1990-ல் வைதீக முறைப்படி கும்பாபிஷேகம் செய்தனர். இக்கோவில் தமிழக கோவில்கள் போன்று கலை நுணுக்கத்துடன் ஆகம விதிப்படி ஐரோப்பிய கட்டட கலைக்கு ஏற்ப சிறப்பான முறையில் கட்டப்பட்டுள்ளது.
கோவிலில் மூலவராக பெருமாள் தாயாருடன் வீற்றிருக்கிறார். அதையடுத்து விநாயகர் சன்னதி, சகஸ்ர லிங்க சன்னதி, 18 அடி உயர அனுமார் சன்னதி, காயத்ரி சன்னதி, துர்க்கை சன்னதி, ஆறுமுக முருக பெருமான் சன்னதி, நவகிரக சன்னதி உள்ளிட்ட சன்னதிகள் தனித்தனியாக உள்ளன. சிலைகள் யாவும் கலைநயத்துடன் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்டதக்க விஷயம். காரணம் வெகு தொலைவில் நம் நாட்டில் இருப்பது போன்று உருவாக்குவது சற்று கடினம்.
"லெட்சுமி நாராயணா டிரஸ்ட்மூலம் மிக சிறப்பாகக் கோவில் பராமரிக்கப்பட்டு, பூஜைகள், திருவிழாக்கள் முறைப்படி நடந்து வருவதால் உள்ளூர் ஐரோப்பிய மக்களும் கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள்.
கோவில் நிர்வாக குழுத் தலைவர் முனைவர் வி. ராதாகிருஷ்ணன் அவர்கள் கோவிலைப் பற்றி தெரிவிக்கையில், "இந்து தர்மத்தை காப்பாற்றி, மக்களுக்கு பக்தி உணர்வை ஊட்ட வேண்டும் என்கிற பொது நோக்கில் இக்கோவில் பலருடைய நல்ல எண்ணத்தால் உருவாக்கப்பட்டது.
வைதீக முறைப்படி ஹோமங்கள், பூஜைகள் சிறப்பாக நடத்தி வருகிறோம். கணபதி ஹோமம், காயத்ரி ஹோமம், ஸ்ரீ ருத்ர அபிஷேகம், சத்தியநாராயணா பூஜை போன்ற நிகழ்வுகளை நடத்திவருகிறோம். பண்டிகை காலங்களில் விசேஷ பூஜைகள், அலங்காரங்கள், வீதி உலா போன்றவற்றையும் நடத்திவருகிறோம். கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த அன்னதானத்தில் வழங்கப்படும் பிரசாதத்தை இங்கு வாழும் ஐரோப்பியர்களும் பக்தியுடன் விரும்பி உண்பார்கள். கோவில் சார்பாக ஆன்மிகம், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை பரப்பும்வண்ணம் வகுப்புகளும், ஆன்மிக புத்தங்களை படிக்க வசதியும், இந்திய நாட்டின் கலையான பரதநாட்டியம், கர்நாடக, தமிழ் இசையில் வாய்பாட்டு போன்றவையும் நடத்திவருகிறோம். இங்கு வசிக்கும் இந்தியர்களின் இல்லங்களில் விசேஷங்கள் நடக்கும் (திருமணம், காது குத்தல், வளைகாப்பு) சமயத்தில் தேவைப்படும் ஆன்மிக ஏற்பாடுகளையும் செய்துதருகிறோம். இதனால் இந்துக்களுடையே சகோதர மனப்பான்மை மேலும் வளர உதவுகிறது'' என கூறினார்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!
எந்நாட்டவர்களையும் பக்தி உணர்வை வளர்க்கும் கோவில்களை பேணுவது நம் கடமை. ப்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/28/londontemple-2026-02-28-18-59-25.jpg)