Advertisment

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026-27

TNBudget

2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். காலை 9.30 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய அவர் 11.52 மணிக்கு நிறைவு செய்தார். 2 மணி நேரம் 22 நிமிடங்கள் இடைக்கால பட்ஜெட் உரையை நிதியமைச்சர் வாசித்தார்.

Advertisment

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: இத்திட்டத்தின் கீழ் 1.31 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர். சமீபத்தில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான உரிமைத் தொகை ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ. 5,000 ஒரே தவணையாக மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

விடியல் பயணம்: அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் மூலம் மகளிர் இதுவரை 881 கோடி முறை பயணித்துள்ளனர். இதன் மூலம் ஒரு பெண்ணுக்கு மாதம் சராசரியாக ரூ. 888 வரை சேமிப்பு கிடைக்கிறது.

மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு ரூ.1722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சொத்து வரிச் சலுகை: பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ரூ. 10 லட்சம் வரையிலான அசையாச் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1% குறைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 3,71,705 நபர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறை: இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ரூ. 48,534 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. 

உயர்கல்வித் துறை: உயர்கல்வித் துறைக்கு ரூ. 8,505 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டம் : நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 48 லட்சத்திற்கும் அதிகமான திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு, மாணவர்கள் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்குச் சென்று சர்வதேசப் பயிற்சிகளைப் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் & தமிழ்ப் புதல்வன்: அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் 6.95 லட்சம் பேரும், மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ திட்ட

2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். காலை 9.30 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய அவர் 11.52 மணிக்கு நிறைவு செய்தார். 2 மணி நேரம் 22 நிமிடங்கள் இடைக்கால பட்ஜெட் உரையை நிதியமைச்சர் வாசித்தார்.

Advertisment

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: இத்திட்டத்தின் கீழ் 1.31 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர். சமீபத்தில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான உரிமைத் தொகை ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ. 5,000 ஒரே தவணையாக மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

விடியல் பயணம்: அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் மூலம் மகளிர் இதுவரை 881 கோடி முறை பயணித்துள்ளனர். இதன் மூலம் ஒரு பெண்ணுக்கு மாதம் சராசரியாக ரூ. 888 வரை சேமிப்பு கிடைக்கிறது.

மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு ரூ.1722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சொத்து வரிச் சலுகை: பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ரூ. 10 லட்சம் வரையிலான அசையாச் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1% குறைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 3,71,705 நபர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறை: இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ரூ. 48,534 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. 

உயர்கல்வித் துறை: உயர்கல்வித் துறைக்கு ரூ. 8,505 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டம் : நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 48 லட்சத்திற்கும் அதிகமான திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு, மாணவர்கள் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்குச் சென்று சர்வதேசப் பயிற்சிகளைப் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் & தமிழ்ப் புதல்வன்: அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் 6.95 லட்சம் பேரும், மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் 5.40 லட்சம் பேரும் மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை பெற்று வருகின்றனர்.

மடிக்கணினித் திட்டம்: 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ரூ. 2,172 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

காலை உணவுத் திட்டம்: 19.34 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் இத்திட்டத் திற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 1,284 கோடி செலவிடப்பட்டுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் : 2030-க்குள் 'குடிசைகள் இல்லாத தமிழ்நாடு' என்ற இலக்கை அடைய ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 1 லட்சத்து 71 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், 2030-ஆம் ஆண்டிற்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டைடல் பூங்காக்கள்: தொழில்நுட்ப வளர்ச்சியை மாநிலம் முழுவதும் பரவலாக்க மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனுடன் தஞ்சாவூர், வேலூர், கடலூர் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் ‘மினி டைடல் பூங்காக்கள்’ அமைப்பதன் மூலம் உள்ளூர் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 புதிய பாடங்கள் உருவாக்கம்: 11 அரசுப் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, அதி நவீன உற்பத்தி திறன் உள்ளிட்ட 8 புதிய பாடப்பிரிவுகள் கடந்த கல்வி ஆண்டில் உருவாக்கப் பட்டுள்ளன.

ஓய்வூதியத் திட்டம்: தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு : 6 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், ரூ. 1,237 லட்சம் கோடி உறுதி அளிக்கப்பட்ட முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

கிராம சாலைகள் திட்டத்துக்கு ரூ.8,911 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ளனர். 

25 இடங்களில் அன்புச் சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 17 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 

மின்னணு துறை உற்பத்தியில் 41 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. செமி கண்டக்டர் திட்டத்துக்கு 5 ஆண்டு செயல் திட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் 30 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் தமிழகத்தில் உள்ள 1048 கோயில்களுக்கு சொந்தமான ரூ. 8,363 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரூ.8,100 கோடி செலவில் திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

சுற்றுலாவுக்காக 30.79 கோடி பேர் தமிழ்நாடு வந்துள்ளனர். 2024-ஆம் ஆண்டில் 30.79 கோடி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையுடன் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சுற்றுலாத் துறைக்கு ரூ.1394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் வீடுகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ரூ.755 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்துதல், குடிநீர் வழங்கல், கடற்கரைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் ரூ.6,045 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும். 

தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக  அலைக்கற்றை வழங்கும் திட்டப் பணிகள், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் (பஆசஎஒசஊப) மூலம், தற்போது 11,953 கிராம ஊராட்சிகளில் 95% முடிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் மூலம், நெய்தல் மீட்சி இயக்கம் மற்றும் தொடர்புடைய திட்டங்களின் கீழ் 3,733 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் மீள்உருவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் மூன்று வழித்தடங்களில், 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தூரத்திற்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

14.6 கி.மீ. நீளமுள்ள 11 மெட்ரோ நிலையங்களைக் கொண்ட பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

திறமையான மாணவர்கள் உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க தொடங்கப்பட்ட, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 385 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

அண்ணல் அம்பேத்கர் தொழில்கள் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 4,948 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கு 420 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ரூ. 16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல் களின் புனரமைப்பிற்காக ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு புறப்போக்கும் நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்பு மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன் 

மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு ரூ. 1,471 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

அவர்களின் மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ. 1,500 லிருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தப்பட்டதன் மூலம் 8.52 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.

ஓய்வூதியத் திட்டங்கள்: முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ. 5,463 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  பண்பாடு மற்றும் அகழ்வாய்வு அருங்காட்சியகங்கள்: கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்களைத் தொடர்ந்து, சோழர் அருங்காட்சியகம் (தஞ்சாவூர்), சிந்துவெளி நாகரிக அருங்காட்சியகம் (சென்னை) உட்பட மொத்தம் 285 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அருங்காட்சி யகங்கள் அமைக்கப்பட உள்ளன.

இலங்கைத் தமிழர் மற்றும் அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாம்கள்: முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 புதிய வீடுகள் கட்ட ரூ. 630 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அயலகத் தமிழர்: ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 8 பிற மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் 42 நாடுகளில் 202தொடர்பு மையங்கள் மூலம் இணைய வழித் தமிழ் கல்வி வழங்கப்படுகிறது.

இது தவிர தொழில் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில், ஒசூர், திண்டிவனம் உட்பட 12 இடங்களில் புதிய சிப்காட் வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், கோவைமற்றும் மதுரை மெட்ரோ திட்டங் களுக்கான விரிவான அறிக்கை தயார் நிலையில் உள்ளது.

மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ‘நெய்தல் மீட்சி இயக்கம்’ மூலம் 3,733 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகளை உருவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு

இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு

ரூ.374 கோடியில் நதிக்கரை மேம்பாடுத் திட்டம்

மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு

உயர்கல்வித் துறைக்கு ரூ. 8,505 கோடி ஒதுக்கீடு 

தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு என ரூ. 17,088 கோடி ஒதுக்கீடு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு  ரூ. 219 கோடி ஒதுக்கீடு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு 2026-27-ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2026-27-ஆம் ஆண்டில் மாநில அரசு 178,308.05 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. 60,418,42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வரி வசூலை மேம்படுத்துதல், வரி வசூல் நிர்வாகத்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு, வருவாய்ப் பற்றாக்குறை 2027-28-ஆம் ஆண்டில் 42964.61 கோடி ரூபாயாக குறையும் எனவும், அதன் தொடர்ச்சியாக 2028-29-ஆம் ஆண்டில் 35,115.33 கோடி ரூபாயாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதல் மூலதனச் செலவினத்திற்கு வழிவகை செய்யும்.

மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப் பட்டுள்ளன. 2026-27-ஆம் ஆண்டில் மாநில அரசு 178,308.05 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், 60,418,42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும்..

இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

gk010326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe