தமிழக அரசின் 2026-27-ஆம் ஆண்டுக்கான இடைக்கால வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவை யில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. 21 லட்சம் பழச்செடிச் தொகுப்புகள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் 900 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு 70,000 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
நெல் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் ரூ.5.482 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு 19.51 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
2021-22 முதல் 2024-25-ஆம் ஆண்டு வரை, இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் மூலம் 456 பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ஊக்குவிக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.4.56 கோடி மானியம் வழங்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 2023-24-ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், இதுவரை 12.84 லட்சம் விவசாயிகள் ரூ. 178 கோடி நிதியில் பயனடைந்துள்ளனர். 20 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியப் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப் பட்டது.
தேசிய அளவில், தமிழ்நாடு கேழ்வரகு உற்பத்தித் திறனில் முதல் இடம், கேழ்வரகு உற்பத்தியில் இரண்டாம் இடம், குறுதானியங்கள் உற்பத்தியில் ஐந்தாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
கம்பு சாகுபடிப் பரப்பு 113 லட்சம் ஏக்கரிலிருந்து 133 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 77,499 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டன. 1,320 வேளாண் இயந்திர வாடகை மையங்களும் நிறுவப்பட்டன. இதற்கென மானியமாக மொத்தம் ரூ.783 கோடி வழங்கப்பட்டது.
4,150 சூரிய சக்தி பம்புசெட்டுகள் நிறுவப்பட்டு ரூ.83 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5,954 புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகளும் ரூ.7.67 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இதுவரை சுமார் 2 லட்சம் புதிய இலவச மின்சார இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில், தோட்டக்கலைத் துறை மூலம் 68 லட்சம் பனை விதைகள், 1 லட்சத்து 28 ஆயிரம் பனங்கன்றுகள் விநியோகம், 354 பனை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடங்கள் ஆகியவை செயல்படுத்தப்பட்டன.
சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.156/-ம், சாதாரண ரகங்களுக்கு ரூ.131/-ம் ஊக்கத்தொகையாக வழங்கி அவற்றின் கொள்முதல் விலை முறையே ரூ.2,545 மற்றும் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் இதுவரை 186 லட்சம்மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.2,118 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது..
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 5 ஆண்டுகளில் 184 லட்சம் ஏக்கர் பரப்பு, சுமார் 80 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தில்,மகசூல் இழப்பிற்கு 38 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.6,063 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில், இயற்கைப் பேரிடர்களால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 16.20 லட்சம் ஹெக்டரில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.2.045 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டது.
இதனால் 25.36 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம். சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் மூன்று அரசு வேளாண்கல்லூரிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு தோட்டக்கலைக் கல்லூரி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில், 101 புதிய பயிர் ரகங்கள், 21 வேளாண் நுட்பங்கள், 16 புதிய பண்ணைக் கருவிகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு 2021-ஆம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இளங்கலை மொத்த மாணவர் சேர்க்கை 2025-ஆம் ஆண்டில் 97 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 83 இலட்சத்து 64 ஆயிரம் விவசாயிகளுக்கு 69.457 கோடி ரூபாய் பயிர்க்கடனும், 16 இலட்சத்து 9 ஆயிரம் நபர்களுக்கு 8,938 கோடி ரூபாய் கால்நடை வளர்ப்பு. மீன் வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான கடனும் வழங்கப்பட்டுள்ளன.
உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் இதுவரை, 6.47 இலட்சம் பயனாளிகளுக்கு கல்வி, திருமணம், விபத்து நிவாரணம், மரணம் போன்றவற்றிற்கு உதவித்தொகையாக ரூ. 819 கோடி வழங்கப்பட்டுள்ளது.
சோழவந்தான் வெற்றிலை உள்பட 9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் 32 பொருள்களுக்கு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வேளாண்இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2011-12 -ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-25 -ஆம் ஆண்டில் வேளாண்மையில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 9.97 சதவீதம் உயர்ந் துள்ளது.
2011-12ஆம் ஆண்டில், 53,75,639 லட்சம் ரூபாயாக இருந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 2024-25 -ஆம்ஆண்டில், 59,11,708 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
2021-22-ஆம் ஆண்டில், வரவு செலவுத்திட்டத்தில் ரூ.34,220 கோடியாக இருந்தநிதி ஒதுக்கீடு, 2025-26 ஆம் ஆண்டில்,ரூ.45,661 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
2026-27-ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், வேளாண்மைஉழவர்நலத் துறைக்கு 47,248.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/03/tnagri-2026-03-03-17-36-35.jpg)