மிழக திட்டக்குழு வாயிலாக மாநில பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Advertisment

பொருளாதார ஆய்வறிக்கையில் மாநிலத்தின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புள்ளி விவரங் களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisment


அதில் இடம்பெற்றுளள முக்கிய அம்சங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது இரட்டை இலக்கில் வளர்ந்து 11.3 விழுக்காட்டில் வளர்ந்திருக்கிறது மற்ற எல்லா மாநிலங்களை விட மிக அதிகமான ஒரு வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. அந்த மாதிரி இருக்கும் பொழுது, உலகமெல்லாம் மூன்று விழுக்காடு வளர்ந்திருக்கிறது. இந்தியா ஏழு விழுக்காடு வளர்ந்தபோது, தமிழ்நாடு கிட்டத்தட்ட 11.3 விழுக்காடு. இந்த 11.3% வளர்ச்சி என்பது, எது பெருமளவில் கான்ட்ரிபியூட் செய்திருக்கிறது.

இந்த ஐந்து ஆண்டுகளில் நமதுதமிழ்நாட்டினுடைய பொருளாதாரத் தில் விலைவாசி எப்படி வந்திருக்கிறது? அதை எப்படி எல்லாம் அது மேனேஜ்செய்திருக்கிறோம். ஃபுல் பிரைஸ் மேனேஜ்மென்ட் நம்முடைய கண்ட்ரோலில் இல்லாவிட்டாலும் கூட, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாநிலம் இது போன்று விலைவாசிகள் ஏற்றத்தாழ்வுகள் நிகழ்கிறது என்பது நமக்கு தெரியும். அதற்கு அரசின் என்னென்ன வேலைகள் செய்கிறதோ, அதை பொறுத்து அது மாற்றம் அடைகிறது. 

Advertisment

எடுத்துக்காட்டாக, நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் அனைவருக்குமான பொது விநியோகம் ஒன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் உணவு பொருட்களில் ஏற்படக்கூடிய விலை தாக்கம் அந்த அளவுக்கு உக்கிரமாக தமிழ்நாட்டில் இருக்காது. அது கொஞ்சம் குறைவாக இருக்கும். இதற்கு காரணம் என்னவென்றால், பொது விநியோகம் -அனைவருக்குமானது என்பது ஒன்று. மற்றொன்று ஸ்பெஷல் பிடிஎஸ் என்று (நல்ங்ஸ்ரீண்ஹப் டஉந) என்று ஒன்று வைத்திருக்கிறோம் இல்லையா? அதில் எக்ஸ்ட்ராவா நமக்கு என்ன கொடுக்கிறது? அதுபோல, அந்த விலைவாசி மற்றும் இதில் என்ன நடந்திருக்கிறது என்பது குறித்து இந்த இரண்டாவது பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது. 

தமிழ்நாட்டில் மக்கள்தொகை என்பது ரீப்ளேஸ்மென்ட் லெவலுக்கு கீழே போயிருக்கிறது. அப்போது, புதியவர் களுடைய எண்ணிக்கை அதிகமாகவும், இளைஞருடைய எண்ணிக்கை குறைவாகவும் ஆகிக்கொண்டே வரும் இரண்டாவதாக, உயர்கல்வி படிப்பவர் களுடைய எண்ணிக்கை தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அந்த வயதில் 100 பேர் இருக்கிறார்கள் என்றால், 50 பேர் உயர்கல்வி பெறுகிறார்கள் என்றால், அதன் விளைவாக மக்கள்தொகை யினுடைய பெருக்கம் குறைந்தது.

ஞாயிற்றுக்கிழமைகளில், வேலை செய்வதற்கு, சாதாரண வேலைகள் செய்வதற்கு ஆட்கள் வரத்து குறைவு, தட்டுப்பாடு ஏற்படும். அதன் விளைவாக எப்படி வட மாநிலத்தவர்கள் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்போது கூலி மட்டம் என்ன ஆகியிருக்கிறது? மூன்றாவதாக, பெரும்பான்மையான மாநிலங்களை எடுத்துக் கொண்டால், என்ன மாதிரி வேலைவாய்ப்புகள் இருக்கிறது என்றால், சுய வேலைவாய்ப்பு செய்கிறார்கள். சுயமாக வேலை செய்பவர்களின் என்ன பொருள் என்னவென்றால், எல்லாரும் வந்து ரொம்ப பெரிய தொழில் முயற்சியோடு இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. வேலை செய்வதற்கு ஒன்றும் இல்லாமல், தேவையில்லாமல் ஏதாவது செய்து கொண்டிருப்பது.

அவையெல்லாம் சுய வேலைவாய்ப்பில் வருகின்றது. அப்போது ப்ராக்ஸி என்னவென்றால், வேலையின்மை தான் அது. அதுமாதிரி இல்லாமல், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும் எப்படி இருக்கும் என்று கேட்டால், கூலி வேலை (ஜ்ஹஞ்ங் ப்ஹக்ஷர்ன்ழ்) அதாவது வேலைக்கு சேரும்போது அதன் வழியாக கூலி பெறுவது என்பது அதிக அளவில் இருக்கிறது. அப்போது இதுதான் மற்ற மாநிலங்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு. 

தொழில் துறை மிக வேகமாக வளர்வது என்பது, பொருளாதாரத்தில் மொத்தமாகவே வேளாண் துறை யினுடைய பங்களிப்பு குறைந்து கொண்டே போகும். தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும், வேளாண் துறையினுடைய பங்களிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இரண்டு விதமாக உள்ளது - ஒன்று பொருளாதாரத்துக்கு அதனுடைய பங்களிப்பு. அதாவது, எவ்வளவு மதிப்பு அங்கே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும், மொத்தமாக பொருளாதாரத்தில் எவ்வளவு பங்களிப்பு இருக்கிறது என்பதையும், வருடா வருடம் வரிசையாக குறைந்து கொண்டே வரும். அது ஒரு புறம். 

இரண்டாவது, எவ்வளவு பேர் அதை சார்ந்து இருக்கிறார்கள்? பொதுவாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், வேளாண் துறைக்கு 25 விழுக்காடு  மக்கள் தான் இருக்கிறார்கள். அதில்நிலவுடைமையாளர்கள் அல்லது வேலை செய்பவர் களாகவோ 25 விழுக்காடு இருப்பார்கள். 75 விழுக்காட்டில் வேளாண் அல்லாதபிற தொழில்கள் செய்வோர் இருக்கிறார்கள். தொடர்ந்து அதன் பங்களிப்பு ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது. அது வளர்ந்த நாடுகளை எடுத்துக் கொண்டால், அது இன்னும் அதிகமாக சிங்கிள் டிஜிட்டுக்கு போய்விடும். பெரிய வளர்ந்த நாடுகளில் எல்லாம், 4 விழுக்காடு, 3 விழுக்காடு ஆட்கள் தான் வேளாண் தொழிலில் இருப்பார்கள். அவர்களே வேளாண் தொழிலை விட்டுவிட்டு போய்விடுவார்கள். தமிழ்நாட்டில் எப்படி எனக் கேட்டால், ஒரு காலத்தில், நம்முடைய பிரதான தொழில் வேளாண் தொழில் என்பது சென்று, இப்போது 25 விழுக்காடு மக்கள் தான் அதில் இருக்கிறார்கள் வேளாண்மையைப் பொறுத்தவரைக்கும், அந்த காலநிலை மாற்றங்கள் பெரும் அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மழை பெய்யாத நேரத்தில் பெய்கிறது - வெயில் அடிக்காத நேரத்தில் அடிக்கின்றது. அதன் விளைவு ரொம்ப ஃப்ளக்சுவேஷன்ஸ். ஒரு பக்கம் இந்த வருஷம் முழுவதும் தண்ணீர் இருந்தாலும் கூட, கிட்டத்தட்ட 11 மாதம் தண்ணி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், என்ன பிரச்சனை என்றால், நடவு எல்லாம் நட்ட பிறகு கதிர் அறுக்கும்போது மழை பெய்கிறது. அது போன்று ஆகின்றபடியால், கிராப் லாசஸ் ஆகிறது. இதெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. வேளாண் துறையை பொறுத்தவரைக்கும், உற்பத்தி எல்லாம் நடந்தாலும் கூட, உற்பத்தி திறன் எல்லாம் அதிகமாக இருந்தாலும் கூட அதனுடைய வளர்ச்சி என்பது கிட்டத்தட்ட ஒரு தேக்க நிலையை அடைந்திருக்கிறது.

தமிழ்நாடு எப்பொழுதுமே தன்னுடைய வளர்ச்சியில் சோசியல் செக்டார்க்கு மிகப்பெரிய முக்கியத்துவம் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கிறது. அது என்ன நினைக்கிறது என்றால்,மக்கள் ஒரு வாக்கு வங்கி மட்டுமல்ல,மக்களுடைய திறனை எவ்வளவுக் கெவ்வளவு நீங்கள் வளர்க்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு நம்முடைய பொருளாதாரம், நம்முடைய சமுதாயமும் பெரிய அளவில் மாற்றத்தை வளரக்கூடும் என்பது அசையாத ஒரு நம்பிக்கை. அது தமிழ்நாட்டுக்கென்று ஒரு சிறப்பு அம்சமாக இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பெண்களுடைய பங்கு என்பது மிக முக்கியமான ஒன்று. இந்தியாவில் தொழில் துறையில் வேலை செய்யக்கூடிய பெண்கள் மிகப்பெரும்பாலான கிட்டத்தட்ட 45 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள்என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அப்போது வெறும் தொழிற்சாலையில் மட்டும் வேலை செய்வது என்பது ஒரு புறம். நகர்ப்புறங்களில் வேலைக்கு செய்யக்கூடிய பெண்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவான அளவில் இருக்கிறது என்பது ஒரு புறம். மேலும் அதற்குண்டானண்ய்ச்ழ்ஹள்ற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங் ஏன் வரவில்லை என்பது ஆதரவான அமைப்புகள் எதும் பெரிய அளவில் செய்யவில்லை என்பதை எல்லாம் சுட்டிகாட்டி, அதையெல்லாம் நாம் இன்னும் செய்தோம் என்று சொன்னால்,இன்னும் பெண்களுடைய பங்களிப்பு என்பது பெருமளவில் இருக்கும். 

2024-25-ஆம் நிதியாண்டின் புள்ளிவிவரங்களின்படி, தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு தேசிய அளவில் மூன்றாம் இடம் வகிக்கிறது. 

அதாவது மாநிலத்தில் தனிநபர் வருமானம் 3.62 லட்சம் ரூபாயாக உள்ளது. இரண்டாம் இடத்தில் கர்நாடகா மாநிலமும் (தனிநபர் வருமானம் (3.8 லட்சம்), முதலிடத்தில்தெலுங்கானா மாநிலமும் (3.87 லட்சம்ரூபாய்) உள்ளன என்று பொருளாதாரஆய்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதேசமயம், தமிழ்நாட்டின்தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட 1.76 முறை அதிகம் எனவும், தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலான தேசிய சராசரி 2.05 லட்சம் ரூபாய் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவே, மாநில அளவில் பார்க்கும் போது, 2023-24 புள்ளிவிவரங்களின்படி, 7.47 லட்சம் ரூபாய் என்ற அளவுடன் தனிநபர் வருமானத்தில் செங்கல்பட்டு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. 7.39 லட்சம் ரூபாயுடன் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 5.77 லட்சம் ரூபாயுடன் சென்னை மூன்றாம் இடத்திலும் உள்ளன.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களின் தனிநபர் வருமானம், மாநிலத்தின் தனிநபர் வருமான சராசரியான 3.13 லட்சம் ரூபாயை விட அதிகம் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட அதிகம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், மாநிலத்திலேயே குறைந்ததனிநபர் வருமானம் கொண்ட மாவட்டமாக திருவாரூர் (1.62 லட்சம்) திகழ்கிறது. அதற்கு அடுத்தபடியாக பெரம்பலூர் (1.63 லட்சம்), விழுப்புரம் (1.66 லட்சம் ரூபாய்) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இருப்பினும் இந்த மாவட்டங்களின் தனிநபர் வருமானம், பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் தனிநபர் வருமானத்தை விட அதிகம் என்று தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.