காரிய சித்தி தரும் உச்ச நட்சத்திர வழிபாடுகள் பிரசன்ன ஜோதிடர் ஐ அனந்தி

stars


குரு

நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் கால புருஷ ஒன்பதாம் வீடான தனுசு ராசிக்கும் 12-ம் வீடான மீன ராசிக்கும் அதிபதியாவார். இவர் கால புருஷன் நான்காம் இடமான  கடக ராசியில் 5வது டிகிரியில் பூசம் நட்சத்திரத்தில் உச்சம் ஆகிறார். 

மனிதர்களின் பாவங்களை களையும் சக்தி படைத்தவர் குரு பகவான். சந்திரன் நீர் கிரகம்.

நீரினால் சுத்தம் செய்ய முடியாத பொருட்களை கிடையாது. நீருக்கு எந்தவிதமான தோஷமும் கிடையாது. புனிதமான நீருக்கு அதிபதியான குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்கு  காரக கிரகமான  சந்திரனின் வீட்டிற்கு சென்று தன்னை புனிதப் படுத்திக் கொள்கிறார். பூசம் குருவின் கர்ம பதிவினை கொண்ட நட்சத்திர மாகும். சந்திரன் உடல் காரகன் மற்றும் மனோகாரகன். 

பூசம் எனப்படும் சனியின் நட்சத்திரம் மனிதர்களின் பாவ புண்ணியங் களை கணக்கிடுபவர் சனிபகவான்.குரு பகவான் உச்சமடையும் பூசம் நட்சத்திரத்தில் தீராத தீர்க்க முடியாத வியாதிகளுக்கு மருந்து உண்ணலாம்.

தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த நட்சத்திரமாகும்.

பூசம் நட்சத்திர நாளில் காரிய சித்தி தரும் மாந்திரீக தகடுகளை எழுதினால் தகடுகளில் ஜீவ ஓட்டம் அதிகமாகும். பிள்ளைகளால் மன சஞ்சலம் அதிகம் அனுபவிப்பவர்கள் பூ


குரு

நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் கால புருஷ ஒன்பதாம் வீடான தனுசு ராசிக்கும் 12-ம் வீடான மீன ராசிக்கும் அதிபதியாவார். இவர் கால புருஷன் நான்காம் இடமான  கடக ராசியில் 5வது டிகிரியில் பூசம் நட்சத்திரத்தில் உச்சம் ஆகிறார். 

மனிதர்களின் பாவங்களை களையும் சக்தி படைத்தவர் குரு பகவான். சந்திரன் நீர் கிரகம்.

நீரினால் சுத்தம் செய்ய முடியாத பொருட்களை கிடையாது. நீருக்கு எந்தவிதமான தோஷமும் கிடையாது. புனிதமான நீருக்கு அதிபதியான குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்கு  காரக கிரகமான  சந்திரனின் வீட்டிற்கு சென்று தன்னை புனிதப் படுத்திக் கொள்கிறார். பூசம் குருவின் கர்ம பதிவினை கொண்ட நட்சத்திர மாகும். சந்திரன் உடல் காரகன் மற்றும் மனோகாரகன். 

பூசம் எனப்படும் சனியின் நட்சத்திரம் மனிதர்களின் பாவ புண்ணியங் களை கணக்கிடுபவர் சனிபகவான்.குரு பகவான் உச்சமடையும் பூசம் நட்சத்திரத்தில் தீராத தீர்க்க முடியாத வியாதிகளுக்கு மருந்து உண்ணலாம்.

தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த நட்சத்திரமாகும்.

பூசம் நட்சத்திர நாளில் காரிய சித்தி தரும் மாந்திரீக தகடுகளை எழுதினால் தகடுகளில் ஜீவ ஓட்டம் அதிகமாகும். பிள்ளைகளால் மன சஞ்சலம் அதிகம் அனுபவிப்பவர்கள் பூசம் நட்சத்திர நாளில் தட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்து பிள்ளைகளின் பெயரில் பிரார்த்தனை செய்து வர பிள்ளை களால் நிம்மதி கூடும். வாஸ்து சாந்தி பூஜை பூசம் நட்சத்திரம் நாளில் செய்யும் போது வீடுகளில் நல்ல அதிர்வலைகள் கூடும். சுய ஜாதகத்தில் குரு சாபம் உள்ளவர்கள் பூசம் நட்சத்திர நாளில் ஆன்மீக குருமார்களை சந்தித்து ஆசி பெற வேண்டும். மீள முடியாத கடன், வறுமை, கர்மவினை சார்ந்த பாதிப்பு உள்ளவர்கள் பூசம் நட்சத்திரம் நாளில் புனித நதிகளில் நீராட பாவம் விலகும்.

சுக்ரன்

காதல், காமம், ஆடம்பரம், பணம், பொருள் ஆசையை பற்றிக் குறிக்கும் கிரகம் சுக்ரன். இவர் மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் 27வது டிகிரியில் உச்சம் அடைகிறார்.ரேவதி வித்தைக்கும், புத்திக்கும் அதிபதியான புதனின் நட்சத்திரம். குரு நீதி, நேர்மையைக் குறிக்கும் கிரகம். பணம் பொருள் மீது நாட்டம் உள்ளவர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருக்காது. பணம், பொருள் மீது அதிக நாட்டம் உள்ள வியாபாரிகளுக்கு நீதி நேர்மை இருக்காது. அதிக பொருள் மீது பற்று கொண்டவர்கள் நீதி, நேர்மை பற்றி கவலைப்பட மாட்டார்கள். 

புதன் வலிமை படைத்தவர்கள் நேர்மை நியாயத்தை விட புத்திக்கும் பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். நேர்மை நாணயத்துடன் பணம் சம்பாதித் தால் வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் என்ற தத்துவத்தை உணர்த்தவே சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் உச்சம் ஆகிறார். 

ரேவதி நட்சத்திர நாளில் புதிதாக வங்கிக் கணக்கு துவங்கினால் வங்கியில் சேமிப்பு, பணப்புழக்கம் அதிகமாகும். இந்த நட்சத்திரநாளில் மகாலட்சுமியை வழிபட பணப்புழக்கம் தாராளமாகும். 

வியாபாரத்தில் வெற்றி அடைய  மகாவிஷ்ணுவின் பாதத்தை தொடும் மகாலட்சுமி படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் தம்பதிகள் ரேவதி நட்சத்திர நாளில் மதுரை சென்று மீனாட்சி அம்மனை வழிபட, தம்பதிகளிடம் அந்நியோனியம் கூடும். காதலிப்பவர்கள் தங்களது விருப்பங்களை தெரிவிக்க உகந்த நாளாகும்.

சனி 

சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றுவதும் ஆணவம் அகம்பாவம் கொண்டவர்களை வீழ்த்துவதும் சனிபகவான்.  அதனால்  தான் நமது முன்னோர்கள் "சனியை போல் கொடுப்பவருமில்லை கெடுப்பவரும் இல்லை' என்று சொல்லி வைத்தார்கள். ஒருவருக்கு நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் உள்ளது என்றால் அவர் ஜாதகத்தில் சனி பகவான் நல்ல வளமான நிலையில் உள்ளார் என்று பொருள். அடிப்படை தேவைக்கு கூட கஷ்டப்படுபவர்கள் அடிமட்ட தொழில் செய்பவர்களுக்கு சனி பகவான் பலவீனமாக உள்ளார் என்று பொருள்.

ஒரு ஜாதகத்தில் சனி பகவான் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். அது அவரவர்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தே அமையும். இந்த ஜென்மத்தில்  ஜாதகர் என்ன அனுபவிக்க பிறந்திருக்கிறாரோ  அதை விதிப்படி நடத்துபவர் சனி பகவான். ஒருவர் எந்த மனத்தாங்கலும் இன்றி நன்றாக இருக்கிறார் என்றால் அவருடைய சுய ஜாதகத்திலும்  சனி கிரகத்தின் பங்களிப்பு சாதகமாக உள்ளது என்று பொருள். 

யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் சிறு சிறு மனவேதனைப் படக்கூடிய சம்பவங்கள் நடந்ƒத தீரும்.இத்தகைய சிறப்பு பெற்ற சனிபகவான் துலாம் ராசியில் 20 டிகிரியில் சுவாதி நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகு பகவான். பிரம்மாண்டத்தையும் திடீர் அதிர்ஷ்டத்தையும் வழங்குபவர் ராகு பகவான். சுக்கிரன் செல்வ செழிப்பை குறிக்கும் கிரகம். ஏழையாக இருந்த ஒருவன் பணக்காரனாக மாறும்போது தனது பழைய நிலையை மறந்து விடுவான். அதை மறக் காமல் நினைவில் நிறுத்தி வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே சனி பகவான் துலாம் ராசியில் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் உச்சம் ஆகிறார்.

எப்பொழுதும் எளிமையாக நிதானமாக நடந்து கொள்பவர்களை சனி பகவான் உயர்த்திக்கொண்டே செல்வார். அவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதை இருக்கும். சனிபகவான் உச்சம் தொடும்போது சுவாதி நட்சத்திரத்தில் புதிய தொழில் தொடங்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்கலாம் தொழில் உத்தியோகம் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுக்கலாம். இந்த நட்சத்திர நாளில் அரசு, அரசாங்கம் சம்பந்தப்பட்ட எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. குழந்தை பாக்கியத்தில் குறை இருப்பவர்கள், திருமணமாகி பல வருடமாக குழந்தை இல்லாத தம்பதிகள் சுவாதி நட்சத்திர நாளில் பழகினால் கரு உண்டாகும்.

திருமணம், புத்திர பாக்கிய தடை இருப்பவர்கள் இந்த நட்சத்திரநாளில் சிவபெருமானை வழிபட்டால் களத்திர தோஷம் புத்திர தோஷம் நீங்கும்.

ராகு - கேதுக்களின் உச்ச நீச வீடு பற்றிய மாற்றுக்கருத்து இருப்பதால் அவர்களுக்கு உச்சம் பற்றிய விவரங்களும் அதற்கான பரிகாரங்களும் எழுதவில்லை. கிரகங்களின் உச்ச நட்சத்திர நாட்களில் செய்யப்படும் பரிகாரங்கள் பல மடங்கு பலன்தரக் கூடியவை என்பதால் அந்த நட்சத்திர நாட்களை உரிய வழிபாட்டு முறைகளுக்கு பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகள்.

செல்: 98652 20406

bala190725
இதையும் படியுங்கள்
Subscribe