Advertisment

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

stalin

ரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் எனும் திட்டத்தை, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

Advertisment


இந்த திட்ட முகாம், எந்தெந்த பகுதிகளில் என்று நடைபெறுகிறது என்பதை அறிந்துகொள்ள வசதியாக https://ungaludanstalin.tn.gov.in/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மாவட்டம் வாரியாக நாள்தோறும் எங்கெல்லாம் முகாம் நடைபெறும் என்பதை

ரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் எனும் திட்டத்தை, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

Advertisment


இந்த திட்ட முகாம், எந்தெந்த பகுதிகளில் என்று நடைபெறுகிறது என்பதை அறிந்துகொள்ள வசதியாக https://ungaludanstalin.tn.gov.in/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மாவட்டம் வாரியாக நாள்தோறும் எங்கெல்லாம் முகாம் நடைபெறும் என்பதை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

முதற்கட்டமாக, ஒவ்வொரு நாளும், அந்தந்த தேதிகளில் நடைபெறும் முகாம்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

இந்த முகாமில், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதால், பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாகவும் மாறியிருக்கிறது.

நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீர்வு அளிக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட துறைகள்மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்புகைச் சான்றும் வழங்கப்படுகிறது என்பதுதான் கூடுதல் அம்சமாகும்.

இதுவரை கிடைத்த விண்ணப்பங்களில், பாதிக்கும் மேல் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களே உள்ளன. முதல்கட்டமாக, ஜூலை 15-இல் தொடங்கி ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை முகாம்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

gk010825
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe