Advertisment

ஆன்மிக அறப்பணியும் கலை இலக்கியத் தொண்டும்!

nalli
த்மபூஷன் நல்லி குப்புசாமி செட்டியாரின் 86-ஆவது பிறந்தநாள் விழா ஆன்மிகப் பயிர் செழிக்கும் பண்ணையாகவும், இலக்கியக்கலை வளரும் பண்டிகையாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
Advertisment
கடந்த 9-11-2025 அன்று காலை 10.00 மணி ஞாயிறன்று ஓய்வு, விடுமுறை, தொலைக்காட்சி என்பதையெல்லாம் மீறி நாரதகான சபா சிற்றரங்கம் நிறைந்திருந்தது.
Advertisment
மூத்த பத்திரிகையாளர் ஆர். நடராஜன் வரவேற்புரை நிகழ்த்த, புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ் பேராசிரியர் சாகித்ய அகாடமி ஒருங்கிணைப்புக்குழு மற்றும் ஆலோசன
த்மபூஷன் நல்லி குப்புசாமி செட்டியாரின் 86-ஆவது பிறந்தநாள் விழா ஆன்மிகப் பயிர் செழிக்கும் பண்ணையாகவும், இலக்கியக்கலை வளரும் பண்டிகையாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
Advertisment
கடந்த 9-11-2025 அன்று காலை 10.00 மணி ஞாயிறன்று ஓய்வு, விடுமுறை, தொலைக்காட்சி என்பதையெல்லாம் மீறி நாரதகான சபா சிற்றரங்கம் நிறைந்திருந்தது.
Advertisment
மூத்த பத்திரிகையாளர் ஆர். நடராஜன் வரவேற்புரை நிகழ்த்த, புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ் பேராசிரியர் சாகித்ய அகாடமி ஒருங்கிணைப்புக்குழு மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் ஆர். அறவேந்தன் தலைமை உரையாற்றினார். 
டாக்டர் வி. ஜமுனா, தேவேந்திர பூபதி, ஜெ. பாலசுப்பிர மணியன், கே.வி.எஸ். கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர் வே. குமரவேல் ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டு சிறப்புரை யாற்றினார்கள்.
நல்லிலி திசையெட்டும் மொழிபெயர்ப்பு விருதுபெறும் எழுத்தாளர்களை மூத்த மொழியாக்க எழுத்தாளர் குறிஞ்சிவேலன் அறிமுகப்படுத்தினார். கடந்த 23 ஆண்டுகளாக நடைபெற்றுவரும்  திசையெட்டும் மொழியாக்கக் காலாண்டிதல் இதுவரை நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்பு பணிகளுக்கு விருது வழங்கி சிறப்பித்திருப்பதாக சிறப்புரையாற்றி, "பரிசுக்கு வந்திருக்கும் நூல்களை மூன்று நடுவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அந்த மூன்று தேர்வுக்குழுவினர் யார் என்று யாருக் கும் தெரியாது. எனக்கு மட்டும்தான் தெரியும். அந்த மூவர் குழு அளிக்கும் மதிப்பெண்களின் அடிப் படையில்தான் விருதுக்கு நூல்களைத் தேர்ந்தெடுக் கிறோம். ஆண்டு தோறும் இந்த விழாவுக்காக மூன்று லட்ச ரூபாய்வரை நல்லி செட்டியார் அவர்கள்  கொடையுள்ளத்தோடும் தொண்டறத் தோடும் வழங்கி வருகிறார்கள்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்க்கவேண்டும். நம்நாட்டு இலக்கியச் செல்வம் வேறு, அயல் மொழிகளுக்கு செல்லவேண்டும் என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் நல்லி செட்டியார் அவர்கள் இந்த உயரிய பணிகளை ஆற்றிவருகிறார்'' என்று குறிஞ்சி வேலன் அவர்கள் குறிப்பிட்டார்.
ப் வணக்கம் வாரணாசி.
ப் புதிய பார்வையில் திருவிளையாடல் புராணம்.
ப் மூன்றெழுத்து மந்திரம் 
ப் சேஷாத்திரி சுவாமிகள் (ஆங்கில மொழியாக்கம்)
ப் பாடக்சேரி ராமலிங்க சுவாமிகள் (ஆங்கில மொழியாக்கம்)
ப் தியாகராய நகர் அன்றும்- இன்றும்  (ஆங்கில மொழியாக்கம்)
ப் வால்மீகி அறம் (தெலுங்கு மொழியாக்கம்)
ப் வந்தே வாரணாசி (ஹிந்தி மொழியாக்கம்)
ப் நல்லிதய நல்லி  (ஹிந்தி மொழியாக்கம்)
ப் நல்லியின் வணிக அறம் (ஆர். நடராஜன்)
ஆகிய பத்து நூல்கள் விழா அரங்கில் வெளியிடப்பெற்றன. வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைபாடு இருப்பினும் ஆன்மிகத்திலும், கலை இலக்கியப் பணிகளிலும் தீராத ஆர்வ மிருந்த காரணத்தால் நல்லி அவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு மூன்று மணிநேரம் அமர்ந்து அறிஞர்களின் உரைகளைக் கேட்டதோடு மட்டுமல்லாமல் கடைசியாக அரைமணி நேரம் விழாப் பேருரையும் நிகழ்த்தியது இன்றைய இளம் தலைமுறைக்கு அனுபவப் பாடமாகவும் அமைந்தது.
ப்

om011225
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe