"கொண்டல் நாட்டு கொண்டல்' என்று சுந்தரரால் கொண்டாடப்பட்ட கோவிலாகத் திகழ்கிறது கொண்டல். திருநாவுக்கரசராலும் இத்தலம் நினைவுகூர்ந்து பாடப் பெற்றுள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் அருளப்பட்ட ஆலயமாகவும் அறியப்படுகின்றது. அப்படி என்னப் பெருமை இந்த கொண்டல் திருத்தலத்திற்கு? பார்ப்போம்.

Advertisment

அயனும் - மாலும் அறியவொன்னாப் பொருளாய் விளங்கினார் அம்மையப்பர். அயன் அறியா பொருளாய் விளங்கியது பிரணவம். பிரணவத்தின் வடிவாய் திகழ்ந்த கந்தன், அதன் உட்பொருள் கேட்டு வாதிட் டான். ஒருசமயம் பிரம்மனிடம்....

Advertisment

சதுர்வேதங் களையும் சரளமாகக் கற்றுணர்ந்த சதுர்முகனுக்கே ஓங்காரத் தின் உட்பொருள் தெரியவில்லை. விழித்தார் வேல வனிடம். தலைகுனிந்து நின்றார். ஓங்கித் தலையில் குட்டினார் குமரன். அர்த்தம் அறியாத அயனை சிறையில் அடைத்தார். வருந்திய பிரம்மன் திருமாலையும், திகம்பரேசரையும் வேண்டி னார்.

உடன் மகேஸ்வர னும், மகாவிஷ்ணுவும் வந்து சேர்ந்தனர். 

எங்கு கீழ்ப்பழனி என்று போற்றப்பட்ட இந்த கொண்டல் மாநகருக்கு....முன்னர் வந்த ஈசனோ முறைப் படி ஏரகத்தில் (சுவாமிமலையில்) பிரணவத் தின் உட்பொருள் அறிந்தார் குருகுகனிடம். பின்னர் வந்த பெருமாளோ கந்தனை வேண்டி மகனான பிரம்மனை விடுவிக்க வணங்கி நின்றார். இத்தலமே கொண்டல் வண்ணனான கோவிந்தர் வழிபட்ட காரணத்தால் கொண்டல்வண்ணன் குடி என்றிருந்து நாளடைவில் கொண்டல் என்றானது. கரிவரதன் பூஜித்ததனால் கரியவன்நகர் என்றும்கூட இப்பதியை போற்றினர் பக்தர்கள்.

Advertisment

பின்னொரு சமயம் புற்றினால் மூடி இருந்தது இப்பகுதி. அப்போது பழனிக்கு பாதயாத்திரையாக சில பக்தர்கள் இவ்வழியே சென்றபொழுது ஒரு பக்தர்மீது முருகன் பிரசன்னமாகி, தான் இங்கு இருப்பதாகவும், தன்னை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் அருள் மொழிந்தார். அதன்பின்னர் கடப்பாரையால் புற்றின்மீது குத்தியபோது முருகனது கைவிரலிலும், தெய்வானை யின் மூக்கிலும், மயில் தோகையிலும் சிறு சிறு பின்னங்கள் ஏற்பட்டது. அதை இன்றும் நாம் கண்கூடாகக் காணப்பெறலாம். பழனிக்கு யாத்திரை செல்லமுடியாத பக்தர்கள் இந்த கொண்டலிலேயே நேர்த்திக்கடனை செலுத்தலாம் என்பது இங்கு தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும்.

ஊரின் தென் புறம் அழகிய திருக் குளத்துடனும், மூன்று நிலை இராஜகோபுரத்துடனும் திகழ்கிறது ஆலயம். உள்ளே நேராக நீண்ட முன்மண்டபம். மண்டபத்தின் தென்புறம் கணபதி காட்சி தருகின்றார். 

மத்தியில் பலிபீடமும், மயில்வாகனமும் உள்ளன. பின் இடைமண்டபம். இங்கே வடபாகத்தில் கந்தனது தந்தையாம் ஸ்ரீ தாரகாபரமேஸ்வரர் சிறிய லிங்க வடிவில் வீற்றருள்கின்றார். அருகே சண்டேசரும், எதிரில் நந்தியம் பெருமானும் உள்ளனர். 

ஸ்ரீ மகாவிஷ்ணு இங்கு தென்முகமாக திருக்காட்சி அளிக்கின்றார்.

singaravelan1

அடுத்ததாக அர்த்த மண்டபம் மற்றும் மூல ஸ்தானம். கருவறையுள் மேலிரு கரங்களில் வஜ்ர- சக்தி அஸ்தங்களைத் தாங்கியபடி, கீழிரு கரங்களை அபய- வரதம் காட்டியபடி, வள்ளி மற்றும் தெய்வானையுடன் தெய்வீக அருள் பரப்புகின்றார் ஸ்ரீ குமார சுப்பிரமணியசுவாமி. கருணை ததும்பும் திருமுகத்தால் பக்தர்களின் கவலைகளை களைந்து, மகிழ்ச்சி அளிக்கின்றார்.

மாலோன்மருகனை மனமுருகி வணங்கிய பின், ஆலய வலம் வருகின்றோம். இங்கு தென்வாயில் ஒன்றும் காணப்படுகின்றது. தென்மேற்கில் நிருர்தி கணபதி திருவருள் புரிகின்றார். இடும்பனுக்கு இங்கே தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. வடமேற்கில் ஐயப்பன் சன்னதி கொண்டுள்ளார். சன்னதிக்கு வெளியே பூர்ண - புஷ்கலாவுடன் ஸ்ரீ அய்யனாரப்ப ஸ்வாமி காட்சி தருகின்றார். வட திசையில் கிணறு ஒன்று உள்ளது. ஈசான பாகத்தில் ஸ்ரீ பைரவர் ஸ்தாபிக்கப் பட்டுள்ளார். அமைதியான சிறிய ஆலயம். மனம் அமைதி கொள்கிறது.

இவ்வாலயத்தின் முக்கிய விசேடமாக தைப்பூசம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறன்து. தைப்பூசத்தன்று காலை எட்டு ஊர்களில் இருந்துவரும் காவடி சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து தேனூர் என்னுமிடத்தில் உப்பனாற்றில் தீர்த்தவாரியும் நடக்கும். பின் காவடி அபிஷேகமும் அதைத் தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெறும். மறுநாள் திருக்கல்யாண உற்சவமும், திருவீதியுலாவும் சிறப்புற நடந்திடும். சித்ரா பௌர்ணமியன்று முருகனும், இடும்பனும் திருவீதி உலா வருவர்.

பிரதி செவ்வாய் தோறும் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனையும், பிரதி கிருத்திகையில் சிறப்பு யாகத்துடன் அபிஷேக அலங்காரங்கள் என பரவசமாக இருக்கும். தாரகா பரமேஸ்வரருக்கு பிரதோஷங் கள், அன்னாபிஷேகம் மற்றும் சிவராத்திரி ஆகியன விசேட மாக நடக்கின்றது. ஸ்ரீ மகாவிஷ்ணு வுக்கு வைகுண்ட ஏகாதசி யன்று சிறப்பு அபிஷேக - அலங்கார - ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தினமும் இரண்டுகால பூஜைகள் நடைபெறுகின்றது. தினமும் காலை 8.00 மணிமுதல் 11:30 மணிவரையும்; மாலை 5.00 மணி முதல் 8.00 மணிவரையும் ஆலயம் திறந்திருக்கும். திருமணத்தடை மற்றும் குழந்தை பேறு தரும் ஆலயமாகத் திகழ்கிறது. அதோடு, சிறை வழக்குகளில் இருந்து மீட்சி தருகின்றார் ஸ்ரீ குமார சுப்பிரமணியசுவாமி.

வழி:- மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியிலிருந்து பனங்காட்டாங்குடி செல்லும்வழியில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொண்டல்.

ஆலயத் தொடர்புக்கு 

சந்தோஷ் குருக்கள்:- செல்: 96595 49450.