Advertisment

வாழ்வில் வெற்றிபெற உதவும் எளிய சுலோகங்கள்! - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

solangal

பிறவிப் பெருங்கடலை கடந்து பிறவா நிலையை அடைய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். மனித வாழ்க்கை என்பது புதுமையான அனுபவங்கள் நிறைந்த அழகான பயணமாகும். நல்ல ஆரோக்கியமான உடல், அழகான குடும்பம், போதுமென்ற மனம், வாழ்வை நடத்த தேவையான வசதி, இருக்க இடம், உடுத்த உடைகள், நல்ல உணவு, நல்ல நண்பர்கள், துரோகம் நினைக்காத நட்புகள் இவை ஒரு மனிதனுக்கு கிடைத்தாலே அது ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையாகும்.

Advertisment

வாழ்க்கை என்ற பயணத்தில் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் ஏராளம். பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்ற சராசரி வாழ்க்கை வாழாமல் நாம் பிறந்ததற்கான, பூமியில் வாழ்ந்ததற்கான ஏதாவது ஒரு சாதனையை தடயத்தை விட்டுச் செல்ல வேண்டும். இந்தப் பயணத்தில் பல பல மாற்றங்களையும் சவால்களையும் சந்திக்க நேரிடும். அந்த நேரத்தில் தடைகள் மற்றும் வலிகளைக் கண்டு புறமுதுகு காட்டாமல் சாதிக்க நினைக்கும் இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும். இன்பம் மற்றும் சந்தோஷங்களை வரவேற்கும் மனம் துக்கத்தையும் துயரத்தையும் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.

Advertisment

வாழ்க்கையில் எவ்விதமான தடைகள், சோதனைகள் வேதனைகள், அவமானங்கள் வந்தாலும் அதை எதிர்த்து போராடி வெற்றி பெற பிரபஞ்சத்தின் உதவிவேண்டும்.

வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனும் தானும் துன்பப்படாமல் பிறரையும் துன்பப்படுத்தாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கையாகும். தானும் துன்பப்பட்டுக்கொண்டு பிறரையும் துன்பப்படுத்துவது மனித வாழ்வே அல்ல. நாம் செய்யும் காரியங்களில் வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை அனைவருக்கும் உண்டு. ஆனால் அனைவருக்கும் நினைக்கும் அனைத்தும் நடந்துவிடுவது இல்லை. அதேசமயம், நாள் முழுவதும் அனைத்து காரியங்களும் சுறுசுறுப்பாக நடைபெறவும், திட்டமிட்டபடி அனைத்தையும் சரியாக செய்துமுடிக்க நமது முன்னோர்கள் சில ஆன்மிக முறைகளை பின்பற்றி வந்தனர்.

ஒருவன் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்போது மட்டுமே  அறிவுத் திறன் சிறப

ஒருவன் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்போது மட்டுமே  அறிவுத் திறன் சிறப்பாக செயல்படும் என்று மருத்துவம் கூறுகிறது. ஆனந்த நிலையில் வாழ முயற்சித்தால் அவனின் புத்திசாலித் தனம் இரட்டிப்பாகும்.

ஆனந்த நிலையை போதிப்பதே ஆன்மிகமாகும். மனிதர்களை மீறிய ஒரு சக்தி உலகத்தை ஆட்சி செய்கிறது. அந்த சக்திக்கு நாம் வைத்த பெயர்தான் கடவுள். அந்தக் கடவுளை நாம் எளிய சில சுலோகங்கள் கூறி வழிபாடு செய்யும்போது வாழ்க்கைப் பயணம் சுமூகமாகும். அதேபோல் எல்லாராலும் சுலோகங்கள் கூற முடியாது. புதன் வலிமை பெற்றவர்களுக்கு  மட்டுமே சுலோகங்கள் கூற முடியும். குரு புதன் சம்பந்தம் இருப்பவர்களுக்கு சாஸ்திர ஞானம் மிக அதிகமாக இருக்கும்.

சுலோகம் படிக்கத் தெரியாதவர்கள், படிக்க முடியாதவர்கள் தற்போது ஹ்ர்ன்ற்ன்க்ஷங் -ல் கேட்டுக் கொள்ளக்கூடிய வசதி இருப்பதால் அதை பயன்படுத்தலாம். அதற்கும் முடியாதவர்கள் எந்த தெய்வத்தின் அருளைப்பெற விரும்புகிறீர்களோ அந்த கடவுளின் பெயரை பலமுறை உச்சரித்தாலே விரும்பிய பலனை அடைய முடியும். இதற்குமேல் பெற்ற தாய்- தந்தையரின் நல்லாசியை பெற்றவர்களுக்கு எந்த கோள்களாலும் தீங்கு வராது. 

தினமும் பெற்றோர்களை நமஸ்கரிப் பவர்களுக்கு நவகிரகங்களும் வசப்படும். தனது மனதால்கூட பிறருக்கு தீங்கு நினைக்காமல் வாழ்பவர்களையும் நவகிரகங்கள் கட்டுப்படுத்த முடியாது. இதைத்தான் காஞ்சி மகாபெரியவர், "நீ செய்த பாவத்தின் பலனை குறைக்க இறைவனுக்கு உரிமை உண்டு. ஆனால் நீ செய்த புண்ணியத்தின் பலனை குறைக்க இறவனாலும் முடியாது' என்று கூறியுள்ளார்.

இங்கே நான் கொடுத்துள்ள சில சுலோகங்கள் அன்றாட வாழ்க்கையிலுள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தினமும் அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். காலையில் கண் விழித்தவுடன் அன்றைய நாள் நல்லபடியாக அமைய வேண்டும் என குலதெய்வம், இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவேண்டும்.

அன்றைய நாளை பரிசாக தந்த இறைவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு, அன்றைய நாளை துவங்குவதால் அந்த நாள் நல்ல நாளாக அமையும். எதிர்மறை ஆற்றலை குறைத்து தெய்வ சிந்தனை, நல்ல எண்ணங்கள் ஆகியவற்றுடன் துவங்கும்போது அந்த நாளில் நாம் நினைத்த அனைத்தும் நினைத்தபடி நடந்து, அன்றைய நாள் வெற்றிகரமாக முடியும். முடிந்தவரை இரவு அதிக நேரம் கண் விழிப்பது, டிவி, போன் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்வது நல்லது. ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய முக்கிய கடமை களையும் பணிகளையும் திட்டமிட்டு குறிப் பெடுத்துக் கொள்வதால் அன்றைய நாளை மன அழுத்தம் இல்லாமல் கடக்கமுடியும்.

எந்த ஒரு மந்திரம் என்றாலும், மற்ற சமயங்களில் சொல்வதை விட அதிகாலை வேளை அல்லது பிரம்ம முகூர்த்த வேளையில் சொல்லிவந்தால் அதற்கு கூடுதல் பலன் உண்டு. தினமும் காலையில் நாம் தூங்கி எழுந்ததும், தரையில் கால்படுவதற்குமுன், நம்மை தாங்கும் பூமாதேவியை வணங்கி, அவரின் அனுமதியையும், ஆசியையும் பெறவேண்டும். அதற்குபிறகு துவங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். காலையில் எழுந்ததும் நம்மை தாங்கும் பூமியை தொட்டு வணங்கிவிட்டு, பிறகு நிலத்தில் காலை வைத்து நமது அன்றாட பணிகளை துவங்க வேண்டும்.

நமது உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். தினமும் காலையில் கண்விழித்தவுடன் இரண்டு கரங்களையும் நன்றாக  தேய்த்து கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு கைகளின் உள்ளங்கைகளையும் பார்த்து சுதர்சன மந்திரத்தை சொல்லி வணங்கவேண்டும். 

அதன்பிறகு நிலத்தை தொட்டு பூமாதேவியை வணங்க வேண்டும்.

கரதர்சன மந்திரம்:

"கராக்ரே வஸதே லக்ஷ்மீ:
கரமத்யே ஸரஸ்வதி!
கரமூலே து கோவிந்த:
ப்ரபாதே கரதர்சனம்!!''

இந்த மந்திரங்களை சொல்லி, வணங்கி தினமும் அன்றைய நாளை துவங்கினால் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நடக்கும். அதன்பிறகு மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களான பணம், வாசனை பூக்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் போன்றவற்றையும் காலை எழுந்து கண் விழித்ததும் முதலில் பார்ப்பது ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும். 

எடுத்த காரியங்களில் வெற்றிபெற கணபதி வழிபாடு மிக முக்கியம். விநாயகரை வழிபடுவதால் தடை தாமதங்கள் சங்கடங்கள் அகலும்.

"சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே''

நவகிரக நல்லாசிகளை பெற-

"ஓம்! ஆதித்யாய ச சோமாய
மங்களாய புதாய ச!
குரு சுக்ர சனிப்யச்ச;
ராஹவே கேதவே நம''.

கோட்சார கிரகங்களின் பாதிப்பிலிருந்து விடுபட, சாதகமற்ற தசா புக்திகளின் தாக்கத்தை குறைக்க வேயுறு தோளிபங்கன் எனத் துவங்கும் கோளறு திருப்பதிகம் தினமும் குறைந்தது மூன்று முறை படிக்கலாம்.

புகழ், அந்தஸ்து, கவுரவம் உயர, தொழில், உத்தியோகரீதியான மேன்மையை அடைய ஆதித்ய ஹிருதயம் கேட்கலாம் அல்லது படிக்கலாம்.

பணப்புழக்கம் அதிகரிக்க- வறுமை 

அகல-

"ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ'' - 108 முறை

குடும்ப குழப்பங்கள் விலகி நிம்மதி அதிகரிக்க

"ஓம் ஸ்ரீ புவன மாத்ரே நமஹ'' - 108 முறை

சொத்துகள் அமைய சொத்துகளிலுள்ள வாஸ்து குற்றம் அகல சுய ஜாதகரீதியான 4-ஆம் அதிபதியை வழிபடலாம்.

"ஸ்யோனா ப்ருதிவி பவாந்ருஷரா
நிவேசனீ
யச்சான சர்ம சப்ரத''.

எனும் ரிக் வேத மாந்திரத்தை  திட சிந்தனையுடன் படிக்க வேண்டும். பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபடுவது மேலும் சிறப்பாகும். குழந்தைகளால் ஏற்படக்கூடிய மனக்கவலைகள் அகல புத்திர பிராப்தம் உண்டாக குலதெய்வ வழிபாடு மிக மிக அவசியம்.

தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டம் அரவணைக்க

"ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம் உனபதுமாம் தேவஸக கீர்த்திஸ்ச மணினா ஸக: ப்ராதுர் பூதேஸ்மி ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் வருத்திம் ததாதுமே 
ஓம் குபேராய ஐஸ்வர்யாய தனதான்யாதிபதயே தன விருத்திம் குருகுரு ஸ்வாஹா''

பேராபத்து, பெருநட்டம், கொடிய நோய், தீராத வழக்குகள், வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் அனைத்து பிரச்சினைகளிலும்  இருந்து விடுபட-

சரபேஸ்வரர் தியானம்

"ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண: 
பக்ஷீ சதுர் பாஹுக: 
பாதா கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர: 
காலாக்னி கோடித்யுதி: 
விச்வ க்ஷோப நிருஸிம்ஹ தர்ப்ப சமன: 
பிரும்மேந்திர முக்யைஸ்துத: 
கங்கா சந்தரதர: புரஸ்த சாப: 
ஸத் யோரிபுக் னோஸ்துந''
திருமணத் தடை அகல

"ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம வாசம் ஆகர்ஷ ஆகர்ஷய ஸ்வாஹா''

தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாக
"ஸர்வ மங்கள மாங்கல்யே ஷிவே ஸர்வார்த்த ஸாதிகே
ஷரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே.''
பாக்கிய பலன்கள் அதிகரிக்க

"பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாச்சலம் மகாதேவ மகாலிங்க மத்திய சுணாஸே''

என்பது சிவபெருமானை போற்றும் ஒரு சக்திவாய்ந்த மந்திரம். இந்த மந்திரத்தை பிரதோஷ நேரங்களில் ஆறு முறை உச்சரிப்பதன்மூலம் 2,000 முறை சிவ நாமம் கூறிய புண்ணிய பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த மந்திரத்தை தினமும் மாலையில் பிரதோஷ வேளையில் உச்சரிப்பதால் அனைத்து விதமான பாக்கிய பலன்களையும் அடைய முடியும். சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.

பல தொழில் செய்து வெற்றிபெற குபேர சம்பத்துகளை அடைய "அர்த்தோ நர்த்தோ மகாகோசோ மகாபோகோ மகாதந:''

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 46-ஆவது சுதோத்திரமான இதை தினமும் நம்பிக்கை யுடன் பாராயணம் செய்வதால் அழியாச் செல்வம் உண்டாகும்.

முத்தி மோட்சம் அடைய விரும்புபவர்கள்ஸ்ரீ ராம நாமம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

தீரா வினை தீர்க்கும் திருச்செந்தூரானே  சரணம் என்ற தாரக மந்திரத்தை சதா சர்வ காலமும் உச்சரித்து திருச்செந்தூர் முருகனை சரணாகதி அடைந்து வழிபடுபவர்களை ஊழ்வினைகள் அண்டாது.

சக மனிதர்களிடம் அன்பு, கருணை மற்றும் மரியாதை காட்டுவது மனித வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும்.

உண்மையான மகிழ்ச்சி என்பது சமூகத் திற்குத் தொண்டு செய்வதிலும், பிறருக்கு உதவுவதிலும் உள்ளது. மனித வாழ்க்கை என்பது ஒரு அரிய வரம்.

சக உயிர்களுக்கு கெடுதல் நினைக்காத வர்கள் எந்த மந்திரமும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அதனை உணர்ந்தால் எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் இன்பமாகும்.

bala310126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe