ஆன்மிகத் தேடலுக்காகவும், ஓய்வுக் காகவும் இந்தப் பயணத்தை மேற்கொண்டார் ரஜினி. திரைப்படப் பணிகளுக்கு இடையே ஒருவார கால ஓய்வில் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
ரஜினியின் இமயமலை பயணங்கüல் அவருடன் எப்பொழுதும் பயணிக்கும் ஆத்ம நண்பர் ஸ்ரீஹரி. ரஜினியை அவர் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அவர்களுக்கிடையே நட்புரிமை உண்டு. பெங்களூருவில் வசித்து வரும் அவர் ரஜினியின் ஆன்மிகப் பயணங்கüன் அனுபவங்கள் குறித்து விவரித்தார்.
ரஜினியின் மனதிற்கு ரொம்பவும் நெருக்கமான படம் "பாபா'. அந்தப் படத்திற்கு பிறகு தான் தனக்கும் ரஜினிக்குமான நட்பு ஏற்பட்டது என்றவர், இந்த படத்திற்கு பிறகு ரஜினி பாபாவை அதிகம் தெரிஞ்சுக்க விரும்பினார்.
அவரோட நண்பர்கள்கிட்ட சொல்லி பாபாஜியோட ஆசிரமம், குகையெல்லாம் எங்கே இருக்குதுன்னு தேடினார். நான் 1982-ல் இருந்து பாபாவோட குகைக்கு தொடர்ந்து போய் தரிசனம் செய்தேன். ரஜினியோட மன்றத்துல இருந்த நண்பர் சத்தியநாராயணா தான் எனது இந்த பயணங்கள் பத்தி ரஜினியிடம் சொல்லியிருக்கார். அந்த சமயம் எதேச்சையாக ரஜினி யும் பெங்களூருவில் இருந்ததால், தான் அவரை சந்தித்ததாகவும், அப்போதிலிருந்து தனக்கும் ரஜினிக்குமான நட்பு ஆரம்பித்ததாக தெரிவித்தார்.
இமயமலையில் ஒரு காட்டுக்குள்தான் பாபாவின் குகையும், ஆசிரமும் உள்ளது. 2001 வரையிலும் அந்தக் காட்டுக்குள் புலிகள் நடமாட்டம் அதிகம். இப்போதுதான் குறைந்துள்ளது. டெல்லி வரை விமானத்தில் போய் அங்கிருந்து காரில் சென்றோம். காலையில் அவருக்கு தீட்சைக்கான விஷயங்கள் நடந்தது. அதன் பிறகு குகைக்கு கிளம்பினோம். ரஜினியுடன் அவரது மனைவியும் வந்திருந்தார். பாபாஜி குகைக்குள் யார் வந்தாலும் அவர்களுடைய கர்ம விதி மாறிடும். அவர் இங்கே வந்து சென்ற பிறகு தான் அவருக்கு பல வெற்றிகள் அமைந்தது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் பாபாஜியை சந்திக்க வருவதாக நாங்கள் ஒரு தீர்மானம் செய்துகொண்டோம்.
பாபாஜி குகை அருகே தான் பத்ரிநாத்தும் இருக்கிறது. பத்ரிநாத்தும் பாபாஜி குகை மாதிரிதான் இருக்கும். நிர்மாலய தரிசனத்தில் விஷ்ணு பகவானே பாபாஜி மாதிரிதான் பத்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார். அப்படி ஒரு அதிசயமான சிலையை சுயம்பு சிலையாக கருதுகிறார்கள். பத்ரிநாராயணனை பார்த்துட்டு குகைக்கு வருவோம். அதே போலதான் இந்த வருடமும் பத்ரிநாத் போய்விட்டு பாபாஜி குகையையும் தரிசனம் செய்துவிட்டு வந்தோம்.
ரஜினி எப்போது வந்தாலும், தன்னை சூப்பர்ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளாமல், பாபாஜி பக்தரா, ரொம்ப எüமையா இருப்பார். ரோட்டோரக் கடைகüல் கிடைப்பதை வாங்கி சாப்பிடுவார். டெல்லியைத் தாண்டியதும் ரொட்டிதான் கிடைக்கும். ரொட்டி, பருப்பு, தயிர், காய்கறிகள் இதெல்லாம் தான் எடுத்துகொள்வார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/04/rajini1-2025-11-04-18-33-34.jpg)
அங்கே பஸ் ஸ்டாண்ட் பக்கம் உள்ள டீக்கடைகüல் எல்லோருடனும் டீ அருந்துவார்.
இந்தப் பயணத்தின் போது ரஜினி சொல்லி 2014-ல் துவாரகாட்ல ஒரு வீட்டைக் கட்டி வச்சிருக்கோம். அதில் எட்டு பேர் தங்குவதற்கான அறைகள் உள்ளது. அங்கிருந்து 13 கிலோமீட்டர் தூரத்துல தான் பாபா குகை இருக்குது. குகைகிட்ட வீடு கட்டுறது சிரமம். தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். புலிகள் தொந்தரவும் அதிகம் உள்ளதால் வீட்டை இந்த இடத்தில் கட்டி உள்ளோம். பாபா குகைக்கு போகிறவர்களுக்கு தான் அறைகள் கொடுக்கின்றோம். தமிழர்கள் பலரும் அங்கே வந்து தங்கியிருக்காங்க. ரஜினிக்கு அங்கே தனியாக ஒரு அறை உண்டு. அவர் பாபா குகைக்கு வரும்போது இங்கேதான் தங்குவார்.
ரஜினியை அங்கே இருக்கும் பலருக்கும் தெரியாது. ஆனால், அவரை சந்திக்கும் துறவிகள் பலரும் ரஜினியின் நெற்றியில் கைவச்சு ஆசீர்வதிப்பார்கள். இவரும் சந்நியாசிகளை பார்த்தாலே அவங்க கிட்ட நெருக்கமாகிவிடுவார். அதிலும் ரிஷிகேஷ் செல்லும் போது சில சமயங்கüல் மாறு வேடம் போட்டுக் கொண்டு சந்நியாசிகளை போய் பார்த்துப் பேசுவார். அவர்கüடம் நீங்க கடவுளை பார்த்துள்ளீர்களா? அவர் எப்படி இருப்பார்? அவர்கிட்ட நீங்க பேசியிருக்கீங்களா? என ஆர்வமாக கேட்டறிவார்.
இந்த ஆன்மிகப் பயணத்தில், அடுத்த வருடம் எங்களுக்கு 25-ஆவது வருடம். வெள்ü விழா கொண்டாடலாம் என தெரிவித்துள்ளார் ரஜினி என அவரின் நண்பர் ஸ்ரீஹரி தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/04/rajni-2025-11-04-18-33-20.jpg)