சனி பகவான் சற்றே அச்சப்பட வைக்கும் பெயர்தான் என்றாலும், நீதி நியாயம், ஒழுக்கத்திற்கு சொந்தமான இவர் ஒரு மனிதனின் வாழ்வில் பல அனுபவங்களையும், பாடங்களையும், கொஞ்சம் வ-க்கும்படி அüக்கும் கண்டிப்பு மிகுந்த ஆசான் தான்.
காரிருள் மேனியன், காக வாகனத்தான், மந்தன், சௌரி, ரவி நந்தனன், எமப்ராதா, நீலன், சாயா புத்திரன், என்றெல்லாம் போற்றப்படும் கருமகாரகன் துணை இன்றி ஒரு அணுவும் இந்த பிரபஞ்சத்திலும், மானுட வாழ்விலும், நிச்சயமாக அசையாது என்பது உண்மையிலும் உண்மையாகும்.
ராசி சக்கரத்தை சற்று ஆழ்ந்து பார்க்கும் பொழுது ஒரு பெரும் உண்மை நமக்கு விளங்குகின்றது.
மாபெரும் சுப கிரகமான குருவின் மீனத்திற்கு அடுத்தபடியாக தனுசு பத்தாவது வீடாக அமைகின்றது.
ஆளுமை கொண்ட செவ்வாய்க்கோ மேஷத்திற்கு அடுத்ததாக அமைகின்ற தனது வீடு விருச்சிகம் எட்டாவது வீடாக அமைகின்றது, சுகத்தை வாரி வழங்கும் சுக்கிரனுக்கு, ரிஷபத்திற்கு அடுத்தபடியான தனது வீடு ஆறாம் பாவகமாக அமைகின் றது.
வித்தை காரகன் என்று போற்றப் படும் புதனுக்கோ மிதுனத்திற்கு அடுத்தபடியான தனது வீடு கன்னி நான்காம் வீடாக அமை கின்றது.
சூரிய சந்திரருக்கு, ஆளுக்கு ஒரு வீடாகவும் அமையப் பெற்றிருக்கின்றது.
ஆனால் கர்ம காரகன் என்றும், கர்மா காரகன் என்றும், போற்றப்படும் இந்த மாபெரும் சக்தியான சனி பகவானுக்கு மட்டுமே அடுத்தடுத்ததாக 60 பாகைகள் ஜோதிடத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து இந்த மாபெரும் சக்தியின் வல்லமையும், அசாதாரணமான தன்மையும், நமக்கு மிக எüதில் விளங்கிவிடும். ஐயனின் பெயரை உச்சரிக்கும் பொழுதே உள்ளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியா பயம் ஏற்பட்டாலும், இவரின் தன்மையை மற்றவர்கள் கொஞ்சம் பெரிது படுத்தி விட்டார்களோ என்கின்ற எண்ணமே மேலோங்குகின்றது.
சனி கொடுக்க எவர் தடுப்பார்.
தாமதப்படுத்துவார் ஒழிய தடுப்பார் இல்லையே அவர் என்கின்ற பழமொழிகளும், மனதிற்கு சற்று இதமாகத் தான் இருக்கிறது.
சரி நமக்கு எப்பொழுதுமே ஆதாரம் வேண்டும் அல்லவா? அந்த ஆதாரத்தை பு-ப்பாணி முனிவர் தனது ஜோதிட முன்னூறு என்கின்ற புத்தகத்தில் 51 ஆவது பாடலாக நம் ஐயனை பற்றி கூறியுள்ளார்.
பெருமைக்குரிய 9,6,11,3, ஆகிய இடங்கüல் சூரிய மைந்தன் மந்தன், அமர்ந்திருக்க அந்த ஜாதகனுக்கு ஆயுள் தீர்க்கம் ,நிறைந்த தனம் உடையவர், அதேபோல் பித்ரு தோஷமும் உடையவர், அந்த ஜாதகன் சத்ருபங்கனாகவும், அதாவது எதிரிகள் அற்றவனாகவும், எதிரிகளை வெல்லக்கூடியவனாகவும், பூமியில் அவனது புகழ் விளங்கி காணும். அரச லாபம் பெறுவான் என்றும், பத்தில் நிற்க அந்த ஜாதகன் நன்மையான பலன்களை அடைவான், வாகன யோகம் உடையவனாக இருப்பான். செய்தொழில் கீர்த்தி உடைய வனாகவும் விளங்குவான். இதையெல்லாம் உணராது உணர்ந்தார் உள்ள சபையில் பிணம் போல் பேசாமல் இருக்காதே. நான் க
சனி பகவான் சற்றே அச்சப்பட வைக்கும் பெயர்தான் என்றாலும், நீதி நியாயம், ஒழுக்கத்திற்கு சொந்தமான இவர் ஒரு மனிதனின் வாழ்வில் பல அனுபவங்களையும், பாடங்களையும், கொஞ்சம் வ-க்கும்படி அüக்கும் கண்டிப்பு மிகுந்த ஆசான் தான்.
காரிருள் மேனியன், காக வாகனத்தான், மந்தன், சௌரி, ரவி நந்தனன், எமப்ராதா, நீலன், சாயா புத்திரன், என்றெல்லாம் போற்றப்படும் கருமகாரகன் துணை இன்றி ஒரு அணுவும் இந்த பிரபஞ்சத்திலும், மானுட வாழ்விலும், நிச்சயமாக அசையாது என்பது உண்மையிலும் உண்மையாகும்.
ராசி சக்கரத்தை சற்று ஆழ்ந்து பார்க்கும் பொழுது ஒரு பெரும் உண்மை நமக்கு விளங்குகின்றது.
மாபெரும் சுப கிரகமான குருவின் மீனத்திற்கு அடுத்தபடியாக தனுசு பத்தாவது வீடாக அமைகின்றது.
ஆளுமை கொண்ட செவ்வாய்க்கோ மேஷத்திற்கு அடுத்ததாக அமைகின்ற தனது வீடு விருச்சிகம் எட்டாவது வீடாக அமைகின்றது, சுகத்தை வாரி வழங்கும் சுக்கிரனுக்கு, ரிஷபத்திற்கு அடுத்தபடியான தனது வீடு ஆறாம் பாவகமாக அமைகின் றது.
வித்தை காரகன் என்று போற்றப் படும் புதனுக்கோ மிதுனத்திற்கு அடுத்தபடியான தனது வீடு கன்னி நான்காம் வீடாக அமை கின்றது.
சூரிய சந்திரருக்கு, ஆளுக்கு ஒரு வீடாகவும் அமையப் பெற்றிருக்கின்றது.
ஆனால் கர்ம காரகன் என்றும், கர்மா காரகன் என்றும், போற்றப்படும் இந்த மாபெரும் சக்தியான சனி பகவானுக்கு மட்டுமே அடுத்தடுத்ததாக 60 பாகைகள் ஜோதிடத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து இந்த மாபெரும் சக்தியின் வல்லமையும், அசாதாரணமான தன்மையும், நமக்கு மிக எüதில் விளங்கிவிடும். ஐயனின் பெயரை உச்சரிக்கும் பொழுதே உள்ளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியா பயம் ஏற்பட்டாலும், இவரின் தன்மையை மற்றவர்கள் கொஞ்சம் பெரிது படுத்தி விட்டார்களோ என்கின்ற எண்ணமே மேலோங்குகின்றது.
சனி கொடுக்க எவர் தடுப்பார்.
தாமதப்படுத்துவார் ஒழிய தடுப்பார் இல்லையே அவர் என்கின்ற பழமொழிகளும், மனதிற்கு சற்று இதமாகத் தான் இருக்கிறது.
சரி நமக்கு எப்பொழுதுமே ஆதாரம் வேண்டும் அல்லவா? அந்த ஆதாரத்தை பு-ப்பாணி முனிவர் தனது ஜோதிட முன்னூறு என்கின்ற புத்தகத்தில் 51 ஆவது பாடலாக நம் ஐயனை பற்றி கூறியுள்ளார்.
பெருமைக்குரிய 9,6,11,3, ஆகிய இடங்கüல் சூரிய மைந்தன் மந்தன், அமர்ந்திருக்க அந்த ஜாதகனுக்கு ஆயுள் தீர்க்கம் ,நிறைந்த தனம் உடையவர், அதேபோல் பித்ரு தோஷமும் உடையவர், அந்த ஜாதகன் சத்ருபங்கனாகவும், அதாவது எதிரிகள் அற்றவனாகவும், எதிரிகளை வெல்லக்கூடியவனாகவும், பூமியில் அவனது புகழ் விளங்கி காணும். அரச லாபம் பெறுவான் என்றும், பத்தில் நிற்க அந்த ஜாதகன் நன்மையான பலன்களை அடைவான், வாகன யோகம் உடையவனாக இருப்பான். செய்தொழில் கீர்த்தி உடைய வனாகவும் விளங்குவான். இதையெல்லாம் உணராது உணர்ந்தார் உள்ள சபையில் பிணம் போல் பேசாமல் இருக்காதே. நான் கூறும் வார்த்தைகளை கேட்டு பலன் உரை என்கின்றார் பு-ப்பாணி.
இதில் முக்கிய குறிப்பு லக்னத்திற்கு 9, 6, 11, 3, 10-ஆம் பாவங்கள் என்பது முக்கிய மாகும்.
ஒரு ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் என்பது அதிரடி செல்வம், நிலையான வருமானம், சொத்து, அதிகாரம், நீண்ட கால பொருளாதார பாதுகாப்பு கிடைக்க செய்யும் யோகம்தான் கோடீஸ்வர யோகம்.
இந்த யோகத்தை அüப்பதில் சனி பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார்.
மற்ற கிரகங்கüன் திசையில் வரும் செல்வத்தை விட, சனி திசையில் உழைப்பால் வரும் செல்வம் தலைமுறை, தலைமுறையாக நிலைக்கும் என்பது உறுதி.
மந்தன் 2,10,11-ஆம் வீடுகüல் அமரும் பொழுது வாழ்க்கையில் பெரும் செல்வத்தை யும், உயர்வையும், அüத்து அரசு நிறுவன ஆதரவையும் வழங்குகின்றார்.
கோட்சாரத்தை தழுவி சென்றாலும் ஜென்மத்திலும், அஷ்டமத்திலும், அமரும் பொழுது, போதும் போதும் என்கின்ற அளவிற்கு வலிகளை தருகின்றார். ஜென்மம் என்பது சொந்த ராசி எதையும் தள்üப் போடும் தன்மையும், நேர நிர்வாகத்தை மேற்கொள்ளாத தன்மையும், வழங்கி தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்ளும் சூழலை உருவாக்கி கொடுக்கும்.
மறைவு மற்றும் ஆயுள் ஸ்தானம் என்று போற்றப்படும் அஷ்டமத்தில் இருக்கும் பொழுது இதுவரை செய்த தவறுகளுக்கு தண்டனையை ஏற்க வைக்கும் சூழலை அüத்து விடும்.
இதனால்தான் கோட்சார சனிப் பெயர்ச்சியை கண்டு மக்கள் சற்று கலக்கமுற்று இருக்கின்றார்கள்.
குறிப்பாக வானியல் ரீதியாக சனி கிரகத்தின் உள்ளமைப்பு மேலோட்டமாக வாயுத்தன்மையில் இருந்தாலும், அதாவது நைட்ரஜன் மற்றும் ஹீ-யம் மழையாக பொழிந்தாலும், சனி கிரகத்தின் உள் கட்டமைப்பு கடினத் தன்மை வாய்ந்த இரும்பு, நிக்கல், கருங்கல், போன்றவையின் அழுத்தத்தால் நிறைந்து மனித வாழ்வின் சூட்சமத்தை உரைக்கின்றது.
மிக முக்கிய குறிப்பு: எந்தெந்த நட்சத்திரங்களுக்கு எந்த வயதில் சனியின் திசை வரும் என்பதை முத-ல் பார்த்துவிடலாம்.
கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கüல் பிறந்தவர்களுக்கு 80 வயதுக்கு மேல் தான் சனியின் திசை அமையும். 80 வயது என்பது அனுபவத்தின் உச்சம் என்பதனால் இவர்களுக்கு இந்த சனியின் திசை பெரும் பாதிப்பை வழங்குவது கிடையாது.
சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம், ஆகிய நட்சத்திரங்கüல் பிறந்தவர்களுக்கு கிட்டத்தட்ட 60 வயதிற்கு மேற்பட்டே இந்த சனி பகவானின் திசை நடக்கும். இரண்டு சுற்றுகளை ஏற்கனவே கோட்சாரத்தில் கடந்து வந்த இந்த சுக்கிரனின் நட்சத்திரங்கள் 60 வயதில் மிகுந்த அனுபவத்தை கைக்கொண்டு இவர்களையும் பெரிதாக பாதிப்பது கிடையாது.
சூரியனின் நட்சத்திரங்களான கிருத் திகை, உத்திரம், உத்திராடம், ஆகிய நட்சத்திரங்கüல் பிறந்தவர்களுக்கு 55 வயதிலும், சந்திரனின் நட்சத்திரங்களான ரோகினி, ஹஸ்தம், திருவோணம், ஆகிய நட்சத்திரங் கüல் பிறந்தவர்களுக்கு 45 வயதிற்கு மேற்பட்டும், செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், ஆகிய நட்சத்திரங்கüல் பிறந்தவர்களுக்கு 37 வயதிற்கு மேற்பட்டதாகவும், ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சதயம், சுவாதி, ஆகிய நட்சத்திரங்கüல் பிறந்தவர்களுக்கு 30 வயதிற்கு மேற்பட்டும் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆகிய நட்சத்திரங்கüல் பிறந்தவர்களுக்கு 12 வயதிற்கு மேலாகவும், சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆகிய நட்சத்திரங் கüல் பிறந்தவர்களுக்கு பிறந்த நாள் முதலாகவும் இந்த சனியின் தசை நடப்பில் இருக்கும் .
புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர் களுக்கு கிட்டத்தட்ட 99, 100 வயதிற்கு பிறகு தான் இந்த புதனின் திசை வருவதற்கான கணிதம் இருப்பதனால் பெரும்பாலும் இந்த நட்சத்திரக்காரர்கள் சனி திசையை சந்திப்பது கிடையாது.
மேலே கூறிய தகவலை மனதில் வைத்துக் கொண்டு இந்த சனியின் திசை என்ன செய்யும் என்பதைக் காணலாம்.
ஒவ்வொரு ஜாதகத்திலும் லக்னத்திற்கு 3, 6, 10, 11, ஆகிய உப ஜெய ஸ்தானங்கள் என்கின்ற முப்பது பாகைகள் சனி பகவானுக்கு மிக, மிக பிடித்தமான பாவகங்களாக கருதப்படுகின்றது.
குறிப்பாக வக்ரம் இல்லாமல் இருக்க வேண்டும். ஏன்? என்றால் 3-ல் வக்கிரமானால் 2-ல் வந்துவிடும், 6-ஆம் இடத்தில் வக்ரமானால் 5-ஆம் இடத்திற்கு வந்துவிடுவார், 10-ஆம் இடத்தில் வக்கிரமானால் 9 -ஆம் பாவகத்தில் அமரப் பெறுவார். ஆனால் 11-ஆம்பாவகத்திற்கு மட்டும் இந்தக் கணிதம் கிடையாது. ஏனென்றால், 11-ஆம் பாவகத்தில் நின்று வக்கிரமானாலும் 10-ஆம் பாவகமான உப ஜெய ஸ்தானத்திற்கு வருவதனால் 11-ஆம் பாவகம் விளக்கப் படுகின்றது.
குறிப்பாகவே சனி பகவான் சுக்கிரன், புதன், ராகு, போன்ற கிரகங்களோடு இணைந்து தசை நடத்தும் பொழுது சிறப்பான பலனை வழங்குவார்.
அதேபோன்று காற்று ராசிகளான துலாம், மிதுனம், கும்பம், போன்ற பாவகங்கüல் இருந்து தசை நடத்தினாலும் அந்த திசையும் கோடீஸ்வர யோகத்தை வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஜோதிடத்தின் வசம் சற்றே சென்றவர்களுக்கு, அருள் ராசி, பொருள் ராசி என்ற இரு வேறு அணிகள் உள்ளன என்பது தெரியும்.
அருள் ராசிகள்:
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகும்.
பொருள் ராசிகள்
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகும்.
இங்கு அருள் ராசிகளை விட பொருள் ராசிகள் சனிக்கு மிகவும் பிடித்தமானவை என்பதனால் இவர்களுக்கு தன் திசையின் மூலம் வெகுவான சிறப்பையும், கோடீஸ்வர யோகத்தையும், நிச்சயமாக வழங்குவார்.
அருள் அணிகளுக்கு
சனி திசையில் குரு புத்தி,
சனி திசையில் செவ்வாய் புத்தி
சனி திசையில் சூரிய புத்தி
சனி திசையில் சந்திர புத்தியில் பெரும் உத்தமமான சிறந்த பலனை வழங்கி விடுகின் றார். குறிப்பாக இதில் புத்தி நடத்தும் கிரகங் களுக்கு குருவின் பார்வை வேண்டும்.
பொருள் அணி ராசிகளுக்கு சனி திசையில் சுக்கிர புத்தி
சனி திசையில் புதன் புத்தி
சனி திசையில் ராகு புத்தி
சனி திசையில் சந்திர புத்தி
ஆகிய புத்திகüல் உச்சபட்ச ராஜ யோகத்தை வழங்குகின்றார்.
மேஷம்
மேஷ ராசிக்கு 10,11-ஆம் இடங்களுக்கு பொறுப்பேற்று இருக்கும் சனி பகவான், தசை நடத்தும் பொழுது இயல்பாகவே சரராசிக்கு 11-ஆம் பாவகம் பாதகஸ்தானம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த தசையை அணுக வேண்டும். தொழில் சார்ந்த விஷயத்தில் மிகப் பெரிய வெற்றியை இவர்கüன் கரம் சேர்க்கும். இதே சனி திசை சில பாதகங்களையும் சேர்த்து அüக்கும். என்பதை நினைவில் கொண்டு சனி பகவான் உப ஜெய ஸ்தானங்கüல் அதுவும் அவருக்கு பிடித்த சுக்கிரன், புதன், ராகுவின், நட்சத்திரங்கüல் நின்று தசை நடத்தும் பொழுது கோடீஸ்வர யோகத்தை நிச்சயம் வழங்குவார்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 9,10-க்கும் அதிபதியாகி அதாவது ஒரு கேந்திரத்திற்கும் ஒரு திரிகோணத்திற்கும் அதிபதியாகிய ராஜ யோகத்தை வழங்க கூடிய சனி பகவானின் திசை உப ஜெயஸ்தானங்கüல் நின்று சனி பகவானுக்கு நண்பர்களாகிய சுக்கிரன்,புதன், ராகுவின், நட்சத்திரங்கüல் அமர்ந்து நடத்தும் பொழுது வாகனம் மூலம் அதீத லாபத்தையும், தொழி-ன் மூலம் சிறந்த வருமானத்தையும், பெற்று சிறப்பாக இருப்பார்கள் என்பது உறுதி. இயல்பாகவே இது பொருள் ராசி என்பதை கவனத்தில் கொண்டு வருமானத்திலும் தொழி-லும் உயர்வை கொடுத்தாலும் குடும்பத்தில் சில தடைகளை அüக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு 8,9 இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் பாக்யாதிபதியாக அமர்ந்து தொழில் சார்ந்த விஷயத்தில் யோகங்களை வாரி வழங்குவார், இவரே அஷ்டமத்துக்கும் அதிபதி என்பதனால் சனி திசையில் மத்திக்கு மேல் வேற்று மொழி, வேற்று இன, மற்றவர்களால் சில பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகளையும் இவர்கள் சந்திப்பார்கள். இது காற்று ராசி என்பதை நினைவில் கொண்டு சனிபகவான் இவர்களுக்கு மிக சிறப்பான பலனை வழங்குவார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்கு 7, 8 -ஆம் பாவகத்திற்கு பொறுப்பேற் றுள்ள சனி பகவான் இயல்பாக உபஜெயஸ்தானத்தில் இருந்து திசை நடத்தும் பொழுது பல பிரச்சனைகள் நெருங்காது .மாறாக மேற்கூறிய ஸ்தானங்கüல் அமராமல் வக்கிரமாகி அமர்ந்திருந்தால் திசை நடத்தும் பொழுது குடும்ப உறுப்பினர்களால் பிரச்சனைகளை சந்திப்பார்கள். குறிப்பாக மனைவி வழி உறவுகளால் வஞ்சிக்கப்படுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு 6,7-க்கு உரித்தான சனி பகவான் மிகச் சிறப்பான பலன்களை வழங்குவதில் சற்று தாமதப்படுத்துவார். மேலும் சிம்மம் அருளணியாக வருவதால் சனி பகவான் அள்üக் கொடுக்காமல் கிள்ளி மட்டுமே கொடுப்பார். குறிப்பாக உப ஜெயஸ்தானங்கüல் இருந்து திசை நடத்தும் பொழுது இந்த பயம் தேவை இருக்காது. சிம்ம ராசிக்கு 60 வயதிற்கு மேற்பட்டு இந்த சனி திசை வருவதனால் தொழில் சார்ந்த முடிவுகளை மற்றவர்கüன் கருத்தைக் கேட்டு எடுப்பது சிறப்பு. பெரும்பாலும் யாரும் தன்னோடு ஒத்துப் போக மாட்டார்கள் என்கின்ற எண்ணம் மேலோங்கி காணப்படும்.
கன்னி
கன்னி ராசிக்கு 5, 6-க்கு உரித்தான சனி பகவான் ரிஷபத்திற்கு அடுத்தாற் போல் இந்த கன்னி ராசிக்கு மட்டுமே மிகச்சிறந்த நற்பலனை வழங்குவார். இது பொருளணியில் இடம் பெறுவதனால் மிகுந்த லாபத்தை விரைவில் அடையக்கூடிய ஒரு ராசியாகும்.
துலாம்
துலாம் ராசிக்கு 4, 5-க்குடைய இந்த சனி பகவான் ஒரு கேந்திரத்திற்கும், ஒரு கோணத்திற்கும் அதிபதியாகி ரிஷபத்தை விடவும் அதீத ராஜயோகத்தை சனி திசை இந்த துலாம் ராசிக்கு வழங்குவது உறுதி. அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் சனி திசை கொண்டு செல்லும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 3,4-க்கு அதிபதியான இந்த சனி பகவான் திசை நடத்தும் பொழுது பயணத்தின் மூலம் மிகச் சிறந்த பலனை அனுபவிப்பார்கள். மேலும் இளைய சகோதரன் மூலம் சிறு இடர்பாட்டை அüத்து பின்பு நிவர்த்தி செய்வார். சனி பகவான் மேலே கூறியது போல் உப ஜெய ஸ்தானங்கüல் அமர்ந்து தசை நடத்தினால் இந்த தசை சிறப்பான திசையாகவே அமையும்.
தனுசு
தனுசு ராசிக்கு 2,3-க்கு அதிபதியான இந்த சனி பகவான் பொருளாதார உயர்வை மிக அற்புதமாக வழங்குவார். இதுவே சனிபகவானுக்கு ஏற்ற இடங்கள் அல்லாத இடங்கüல் அமர்ந்து திசை நடத்தும் பொழுது பொருளாதாரத்தில் பெரும் அடி விழும் சூழலையும் காண நேரும்.
மகரம்
1, 2-க்கு அதிபதியான சனி பகவான் பொருள் அணியில் அமர்வதனால் இந்த சனி திசை மிக சிறப்பான பலனை ஏற்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. பொருளாதாரத்தில் மிகச்சிறப்பான உயர்வை எட்ட முடியும். மிக பொறுமையாக பொருளாதாரம் அமைந்தாலும் நிலைத்து நிற்கும் சூழலை அடையும்.
கும்பம்
லக்னத்திற்கும் 1. 2-க்கு உரித்தான சனி பகவான் வருமானத்தைத் தரும் அளவிற்கு விரயத்தையும் அüக்க வல்லவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதேபோன்று உப ஜெய ஸ்தானங்களோடு தொடர்பு பெற்று தசை புத்தி நிகழும் காலங்கள் மிக சிறப்பான அனுபவங்களை கொண்டு சேர்க்கும்.
மீனம்
11-க்கும் 12-க்கும் உரித்தான சனி பகவான் சிறந்த லாபங்களை வழங்கி தூரதேசம், வெüநாடு, போன்றவற்றினால் வரும் யோகங்களையும் வழங்குவார். குறிப்பாக மீனம் அருளணி என்பதனால், நிச்சயமாக உப ஜெயஸ்தானங்களான 3, 6, 10, 11-ஆம் பாவகங்கüல் நின்று தசை நடத்தும் பொழுதே இதன் முழு பயனை அடைய முடியும்.
பரிகாரங்கள்
சனி கிரகத்திற்கான காயத்ரி மந்திரத்தை அனுதினமும் உச்சரிப்பதனாலும், சனி திசையில் வருகின்ற புக்தியின் காயத்ரி மந்திரங்களை இணைத்து ஜெபம் செய்வதாலும் சிறப்பான ஒரு தன்மையை கையாள முடியும் என்பது உறுதி.
செல்: 80563 79988
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us