Advertisment

செப்டம்பர் மாத ராசி பலன்கள் - சி.எஸ். ஞானமூர்த்தி

monthrasi

 

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் மாத முற்பாதிவரை 6-ல் மறைந்தாலும் தன் சுயசாரத்தில் இருப்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. அதேசமயம் 3, 6, 11-ஆமிடம் செவ்வாய்க்கு நல்ல இடம் என்பதால் கன்னி செவ்வாய் கடலும் வற்றும் என்ற பழமொழியைப் பற்றி கவலையும் தேவையில்லை. 5-க்குடைய சூரியன் ஆட்சி பலம் பெறுவதால் எண்ணிய காரியங்களை ஈடேற்றலாம். அரசு சம்பந்தமாக இழுபறியாக இருந்த நிலைமாறி காரிய அனுகூலம் உண்டாகும். அதே சமயம் 5-ஆமிடத்துக் கேது பிள்ளைகள் சம்பந்தபட்ட வகையில் மனக்கிலேசம் மனக்கவலை போன்றவற்றை சந்திக்க நேரும். 12-க்குடைய குரு 3-ல் மறைவது நல்லதுதான். 7-ஆமிடத் தைப் பார்ப்பதால் கணவன் அல்லது மனைவிக்கு உடல்நலம் குறைவு ஏற்படும். வரவு- செலவுகளால் தாராளம் உண்டாகும். 11-ஆமிடத்து சனியை குரு பார்ப்பதால் சனியின் வக்ர தாக்கம் குறையும். மாத பிற்பாதியில சூரியன் 6-ல் மறைகிறார். அக்கால கட்டம் சற்று வேலையில் தாமதம், தகப்பனாருக்கு உடல்நலக்குறைவு, வைத்தியச் செலவு ஏற்படலாம். மாதக் கடைசியில் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி யாகும். 9-ஆமிடத்தைப் பார்க்கும் குரு ஆன்மிக பயணத்தை உண்டாக்குவார். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு முடிவுகள் சாதகமாக எதிர்பார்க்கலாம். உங்களுக்கு தேக ஆரோக்கியம் நன்றாக விளங்கும். சற்று அலைச்சல்கள் மட்டும் அதிகமாகும். ஆதாயமும் உண்டாகும்.

ரிஷபம்

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பாதிவரை கடக ராசியிலும், பிறகு சிம்ம ராசியிலும் சஞ்சாரம். (3-ஆமிடம் மற்றும் 4-ஆமிடம்). தொடக்கத்தில் சனி சாரத்தில் சஞ்சரிக்கிறார். சனி 10-ஆமிடத்தில் வக்ரகதியாக சஞ்சரிக்கிறார். தொழில், உத்தியோகம் சம்பந்தப்பட்ட காரியங்களில் நூ-ழையில் வாய்ப்புகள் கை நழுவிப் போகலாம். அதற்கு உங்களது கவனக்குறைவும் காரணமாக அமையும். என்றால் 2-ல் உள்ள குரு இதைவிட நல்ல வாய்ப்புகள் வருமென்று மனதை பக்குவப்படுத்துவார். 12-க்குடைய செவ்வாய் 12-ஆமிடத்தையே பார்ப்பதால் விரயத்தைக் கட்டுப்படுத்துவது சற்று கடினம். 4-ல் உள்ள கேது தன் சுகத்தில் ஆரோக்கியக் குறைவை உண்டுபண்ணும். சகோதரவழியில் சங்கடம் தீரும். ஒற்றுமையும் ஒத்தாசையும் ஏற்படும். மாத பிற்பாதியில் விரயங்கள் சற்று கட்டுக்குள் வரும். 4-ல் ஆட்சியாக இருக்கும் சூரியன் 4-ஆமிடத்துப் பலனான வீடு, மனை, வாகனவகையில் நன்மைகளைத் தருவார். 2-ல் உள்ள குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் அரசுத் துறையினருக்கு அனுகூலம் உண்டாகும். இடமாற்றமும் ஏற்படும். தனியார் துறையினருக்கு ஏற்பட்ட பின்னடைவு ம

 

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் மாத முற்பாதிவரை 6-ல் மறைந்தாலும் தன் சுயசாரத்தில் இருப்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. அதேசமயம் 3, 6, 11-ஆமிடம் செவ்வாய்க்கு நல்ல இடம் என்பதால் கன்னி செவ்வாய் கடலும் வற்றும் என்ற பழமொழியைப் பற்றி கவலையும் தேவையில்லை. 5-க்குடைய சூரியன் ஆட்சி பலம் பெறுவதால் எண்ணிய காரியங்களை ஈடேற்றலாம். அரசு சம்பந்தமாக இழுபறியாக இருந்த நிலைமாறி காரிய அனுகூலம் உண்டாகும். அதே சமயம் 5-ஆமிடத்துக் கேது பிள்ளைகள் சம்பந்தபட்ட வகையில் மனக்கிலேசம் மனக்கவலை போன்றவற்றை சந்திக்க நேரும். 12-க்குடைய குரு 3-ல் மறைவது நல்லதுதான். 7-ஆமிடத் தைப் பார்ப்பதால் கணவன் அல்லது மனைவிக்கு உடல்நலம் குறைவு ஏற்படும். வரவு- செலவுகளால் தாராளம் உண்டாகும். 11-ஆமிடத்து சனியை குரு பார்ப்பதால் சனியின் வக்ர தாக்கம் குறையும். மாத பிற்பாதியில சூரியன் 6-ல் மறைகிறார். அக்கால கட்டம் சற்று வேலையில் தாமதம், தகப்பனாருக்கு உடல்நலக்குறைவு, வைத்தியச் செலவு ஏற்படலாம். மாதக் கடைசியில் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி யாகும். 9-ஆமிடத்தைப் பார்க்கும் குரு ஆன்மிக பயணத்தை உண்டாக்குவார். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு முடிவுகள் சாதகமாக எதிர்பார்க்கலாம். உங்களுக்கு தேக ஆரோக்கியம் நன்றாக விளங்கும். சற்று அலைச்சல்கள் மட்டும் அதிகமாகும். ஆதாயமும் உண்டாகும்.

ரிஷபம்

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பாதிவரை கடக ராசியிலும், பிறகு சிம்ம ராசியிலும் சஞ்சாரம். (3-ஆமிடம் மற்றும் 4-ஆமிடம்). தொடக்கத்தில் சனி சாரத்தில் சஞ்சரிக்கிறார். சனி 10-ஆமிடத்தில் வக்ரகதியாக சஞ்சரிக்கிறார். தொழில், உத்தியோகம் சம்பந்தப்பட்ட காரியங்களில் நூ-ழையில் வாய்ப்புகள் கை நழுவிப் போகலாம். அதற்கு உங்களது கவனக்குறைவும் காரணமாக அமையும். என்றால் 2-ல் உள்ள குரு இதைவிட நல்ல வாய்ப்புகள் வருமென்று மனதை பக்குவப்படுத்துவார். 12-க்குடைய செவ்வாய் 12-ஆமிடத்தையே பார்ப்பதால் விரயத்தைக் கட்டுப்படுத்துவது சற்று கடினம். 4-ல் உள்ள கேது தன் சுகத்தில் ஆரோக்கியக் குறைவை உண்டுபண்ணும். சகோதரவழியில் சங்கடம் தீரும். ஒற்றுமையும் ஒத்தாசையும் ஏற்படும். மாத பிற்பாதியில் விரயங்கள் சற்று கட்டுக்குள் வரும். 4-ல் ஆட்சியாக இருக்கும் சூரியன் 4-ஆமிடத்துப் பலனான வீடு, மனை, வாகனவகையில் நன்மைகளைத் தருவார். 2-ல் உள்ள குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் அரசுத் துறையினருக்கு அனுகூலம் உண்டாகும். இடமாற்றமும் ஏற்படும். தனியார் துறையினருக்கு ஏற்பட்ட பின்னடைவு மாத பிற்பாதியில் மாறும்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 3-ல் சஞ்சாரம். சூரியனும் அங்கு ஆட்சி என்பதால் புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. ஜென்ம ராசியில் இருக்கும் குருவும் 5, 7, 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். 9-ல் சனி வக்ரம். ராகு சேர்க்கை. இவையெல்லாம் இருந்தாலும் குரு பார்க்கும் 9-ஆமிடம் தகப்பனார்வகையில் சில நன்மைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்து பரிவர்த்தனைகள் நல்லமுறையில் நிகழும். உங்கள் மனதில் எண்ணிய செயல்பாடு கள் பூர்த்தியாகும். வீண் கவலைகள் அகலும். 9-ல் சனி நின்றாலும் 10-க்குடைய குருவின் சாரத்தில் (பூரட்டாதி) சஞ்சரிப்பதால் தர்ம கர்மாதிபதி யோகம் உங்களை வழி நடத்தும். ஒருசிலர் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறொரு வேலைக்கு இடம் மாறலாம். அடிமை வேலையை விட்டு சொந்தத் தொழில் முயற்சியில் இறங்கலாம். அதற்கு கணவன் அல்லது மனைவிவழியில் உதவியும் உண்டாகும். ஒத்தாசையும் கிடைக்கும் 11-ஆம் தேதிக்குப்பிறகு கன்னியில் புதன் உச்சம் பெறுகிறார். வீடு, வாகனம் சம்பந்தமாக நற்பலன்கள் ஏற்படும். சிலர் பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கலாம்.


கடகம்

கடக ராசிக்கு அட்டத்துச்சனி. அவர் வக்ரம், 12-ல் குரு. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் அணைகட்டி ரவுண்டு கட்டி அடிக்கிறது எனலாம். முயற்சிகளில் தாமதம், ஒரே வேலையை இரண்டுமுறை செய்வதனால் நேரவிரயம் பொருள் விரயம் ஆகியவற்றை சந்திக்கும் நிலை! வருமானம் வந்தாலும் செலவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் திணறும் நிலை. 12-ல் நின்ற குரு 4-ஆமிடத்தைப் பார்த்ததால் வீடு மாறும் சூழ்நிலை களையும் சிலர் சந்திக்கலாம். மாத பிற்பாதியில் 10-க்குடைய செவ்வாய் 4-ல் மாறும் சமயம் குரு அவரைப் பார்ப்பதால் சிலர் உத்தியோகம்ரீதியான மாற்றங்களையும் சந்திக்கலாம். 11-ஆம் தேதிமுதல் 3-ஆமிடமான கன்னியில் உச்சம் பெறும் புதன் மனதைரியத்தை அதிகப்படுத்துவார். நண்பர்கள் வகையில் அனுகூலமும் உண்டாகும். நீண்டநாள் விலகிப்போன உறவுகளிடம் இருந்து அழைப்புகள் வரலாம். அல்லது மீண்டும் வந்து உறவாடலாம். 8-ல் சனி வக்ரம் என்பதால் தேவையற்ற கவலைகளை நினைத்துக்கு உடல்நலனைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

சிம்மம்

Advertisment

சிம்ம ராசிநாதன் சூரியன் 17-ஆம் தேதிவரை ஆட்சி, பலம் பெறுகிறார். 11-ல் நிற்கும் குரு 3, 5, 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். எந்தவொரு காரியத் திலும் துணிவும் துணிச்சலும் துணையாக நிற்பதால் முயற்சி செய்யும் காரியங்களில் அனுகூலத்தை எதிர்பார்க்கலாம். 11-ஆம் தேதிமுதல் 11-க்குடைய புதன் 2-ல் உச்சம் பெறுகிறார். எதிர்பாரா தனவரவு, புதிய வேலை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுதல் போன்ற நற்பலன்களை எதிர்பார்க்கலாம். பாக்கியாதிபதி செவ்வாய் 2-ல் சஞ்சாரம். சுயசாரமான சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். பூமி, மனை, கட்டடம் சம்பந்தப்பட்ட தொழில்துறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும். 7-ல் சனி வக்ரம் பெறுவதால் உங்கள் நலம் அல்லது துணையின் நலம் பாதிக்கப்படலாம். வைத்தியச் செலவுகள் உண்டாகலாம். வீண் அலைச்சல், திரிச்சல்கள் ஏற்பட்டாலும் உடனடியான ஆதாயம் கிடைக்காது. அனுகூல பலன் தாமதமாகலாம். திருமண வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்- பெண்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடும். தாமத வாரிசை சந்தித்தவர்களுக்கு வாரிசு யோகமும் உண்டாகும். 

கன்னி 

கன்னி ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 12-ல் நின்றாலும் சூரியன் அங்கு ஆட்சி பெறுவதால் மறைவு தோஷம் புதனுக்கு பாதிக்காது. என்றாலும் உங்கள் முயற்சியில் தாமத நிலைகளை சந்திக்க வேண்டிய அவசியமும் உண்டாகும். குடும்பத்தில் சிற்சில குழப்பங்கள், சங்கடங்கள் உண்டாகும். கணவர்வழி உறவுகளில் மனக்கவலை, அலைச்சல், ஓய்வற்ற நிலை ஆகியவற்றை சந்திக்க நேரும். ஆண்களாக இருந்தால் மனைவிவழி உறவு சங்கடத்தைத் தரும். 6-ல் சனி வக்ரம் பெற்றததால் போட்டி, பொறாமைகள் குறையும். குரு பார்ப்பதால் 6-ஆமிடத்துப் பலனாக கடன் உருவாகும். அதேசமயம் வரவும் பாதிக்காது. ஒருசிலர் வாகனவகையில் வருமானம் ஈட்டலாம். எந்தச் சூழ-லும் உங்கள் மன தைரியத்தை விட்டுக்கொடுக்காமல் எதிர்கொள்வீர்கள். உடன்பிறந்த உடன்பிறப்புகளால் உதவியும் நன்மையும் உண்டாகும். எதிர்காலம் பற்றிய உங்கள் கனவும் கற்பனை எண்ணமும் திட்டமும் செயல்வடிவம் பெறும். 

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் 10-ல் சஞ்சாரம். தொடக்கத்தில் சனியின் சாரத்திலும் (பூரம்) பிறகு புதன் சாரத்திலும் சஞ்சாரம் (ஆயில்யம்) உத்தியோகம், தொழில் இவற்றில் நற்பலன்கள் வரும் என்றாலும் சற்று தாமதமாகும். காரணம் 5-ல் சனி வக்ரகதியில் இருப்பதும் அவர் சாரத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும்தான். என்றாலும் முற்பாதிவரை சூரியன் 11-ல் ஆட்சி என்பதால் காரிய தாமதம் ஆகலாமே தவிர காரியத்தடை ஆகாது. 11-ஆம் தேதிமுதல் 12-ல் புதன் ஆட்சி, உச்சம். வியங்களைத் தவிர்க்க முடியாது. அது தொழில் முதலீட்டு விரயமாகவும் அமையும். 5-ல் உள்ள வக்ரசனியும், ராகுவும் பிள்ளைகள் பற்றிய மனக்கவலைகளை ஏற்படுத்தினாலும் குரு பார்ப்பதால் கவலைகளுக்குத் தீர்வும் உண்டாகும். 2-க்குடைய செவ்வாய் 14-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசியில் நின்று  4, 7, 8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். கட்டட சம்பந்த மான காரியங்களில் திடீர் திருப்பமும் நன்மையும் எதிர்பார்க்கலாம். 3-ஆமிடத்தை 3-க்குடையவரே பார்ப்பதால் நண்பர்களால் சகாயம் கிடைக்கும். வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 14-ஆம் தேதிவரை 11-ஆமிடத்தில் சஞ்சாரம். கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும் என்ற பழமொழிக்கு இங்கு வேலையில்லை. ஏனெனில் அவர் சுயசாரமான சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சாரம். 11-ஆம் தேதிமுதல் புதனும் 11-ல் ஆட்சி, பலம் மற்றும் உச்சம் பெறுகிறார். பொருளாதாரத்தில் குறையில்லை. உத்தியோகம் வேலையிலும் சிக்கல் இல்லை. என்றாலும் மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத கவலை வாட்டிக்கொண்டிருக்கிறது. 4-ல் சனி வக்ரம். ராகு சேர்க்கை. தேகநலத்தில் வைத்தியச் செலவுகளை சந்திக்க நேரும். உடல் நலமாக இருந்தால் மனநலம் பாரமாக அமையும். 5-க்குடையவர் 8-ல் மறைவதால் பிள்ளைகள்வகையில் அந்த  மனக்கவலை ஏற்படலாம். 10-ல் ஆட்சிபெறும் சூரியன் தொழி-ல் நன்மதிப்பை ஏற்படுத்தித் தருவார். பூர்வீக சொத்துப் பரிவர்த்தனை நல்லவிதமாக அமைந்து ஆறுதல் தரும். மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் வந்தபிறகு ஆதாயம் அதிகமாகும்.

தனுசு 

தனுசு ராசிநாதன் குரு 7-ல் நின்று ராசியைப் பார்ப்பது பலம். பொதுவாக குரு ராசியைப் பார்ப்பது பலம். இங்கு ராசிநாதனே குருவாக இருந்து ராசியை பார்ப்பது இரட்டிப்பு பலம். காரிய முயற்சிகள் அனுகூலமாகும். உத்தியோகத்தில் நன்மதிப்பு கூடும். உயரதி காரிகளிடையே பரஸ்பரம் மரியாதை அதிகரிக்கும். 3-ஆமிடத்து சனியும் அங்குள்ள ராகுவும் எதையும் சந்திக்கும் சாதிக்கும் துணிவைத்தரும். 10-ல் புதன் 11-ஆம் தேதிமுதல் ஆட்சி, உச்சம் பெறுகிறார். தனியார்த்துறையினர் இட மாற்றத்தை சந்திக்கலாம். 9-ல் சூரியன் ஆட்சி. தகப்பனார்வகையில் பிதுராஜ்ஜித் சொத்துகளில் எதிர்பார்த்த நன்மைகள் கைகூடும். 3-ஆமிடத்தைப் பார்க்கும் கேது உடன்பிறந்தவர்கள் வகையில் மனவருத்தம் பிரிவினைகளைத் தந்தாலும் குரு பார்ப்பதால் அவை நிரந்தரப் பிரிவாக அமையாது. ஜனன ஜாதகத்தில் சகோதர ஸ்தானம் வலுப்பெற்றிருந்தால் மட்டும் அது சாத்தியம். இல்லையென்றால் தனிமரமாக வாழவேண்டிய கட்டாயமும் ஏற்படும். தனி மரம் தோப்பாகதல்லவா!


மகரம்

மகர ராசிக்கு ஏழரைச் சனியில் கழிவுக்காலம் நடை பெறுகிறது. தொடக்கத்தில் நன்மைகளைச் சந்தித்தவர்கள் இக்காலகட்டம் சிக்கல், சிரமங்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். வேலையில் தொந்தரவு, சிப்பந்திகள் பிரச்சினை, வீண் அவதி மன உளைச்சல், வாழ்வா- சாவா போராட்டத்தையும் சிலர் சந்திப்பீர்கள். இதே நிலையை ஏழரைச்சனியின் ஆரம்பித்தில் சந்தித்தவர்களுக்கு இக்காலகட்டம் மனநிறைவு, மகிழ்ச்சி ஆகியவற்றைச் சந்திக்கலாம். 2-ஆமிடத்தை குரு பார்ப்பதால் ராகு, சனியால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வுகள் அமையும். மாத பிற்பாதியில் 10-க்குடைய சுக்கிரன் 8-ல் மாறுகிறார். தொழில் துறையினருக்கு தேக்கம் உண்டாகும். உடல்நலனிலும் பாதிப்பு ஏற்படலாம். அதாவது வைத்தியச் செலவுகள் உண்டாகும். சந்திர தசையோ, புக்தியோ நடப்பவர்களுக்கும் ராகு தசையோ- கேது தசையோ நடப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை வைத்தியங்களும் உண்டாகும். ஏழரைச்சனியின் முடிவில் விடிவு பிறக்கும். 


கும்பம்

ராசிநாதன் சனி ஆட்சி. 2-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்ப்பது சனி 3, 7, 10-ஆமிடங்களைப் பார்ப்பது இவையெல்லாம் நற்பலனைத் தரும் அறிகுறிகள். என்னதான் ஏழரைச்சனி நடந்தாலும், கும்ப ராசிக் காரர்கள் அனுதாபத்திற்குரியவர்கள் என்றாலும் இருட்டு எப்போதும் இருட்டாகவே இருப்பதில்லையே. இரவு ஒன்று இருந்தால் பகல் ஒன்று வரத்தானே செய்யும். அதுபோல ஜெனன ஜாதகத்தில் சாதகமாக தசாபுக்திகள் நடந்தால் உங்கள் வளர்ச்சியை கோட்சாரம் தடுக்காது. 7-ஆமிடத்தைப் பார்க்கும் சனி கணவர் அல்லது மனைவிவழியில் அனுகூலத்தைத் தருவார். 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சுயமாக தொழில் ஆரம்பிக்கும் அமைப்பைத் தருவார். 9-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தகப்பனாருக்கு ஆரோக்கியம் முன்னேற்றம் ஏற்படுத்துவார். தந்தைவழியில் ஆதாயமும் ஏற்படும். 5-க்குடைய புதன் 8-ல் உச்சம்பெறும் காலம் பிள்ளை களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.


மீனம்

மீன ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச்சனி நடக்கிறது. இதில் சுயவிரயம் வீண் விரயம் என்று உள்ளதல்லவா! வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது அதற்காக வாங்கும் கடன் சுபக்கடன் சுபவிரயம். மருத்துவச் செலவு, தண்டம் தீர்வை கட்டுவது வீண் விரயம். குரு 4-ல் சஞ்சரிப்பதால் பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற அனுகூலங்கள் உண்டாகும். அதற்கு பிள்ளைகள்வகையில் உதவி, ஒத்தாசையும் அமையும். 4-க்குடைய புதன் 7-ல் உச்சம் பெற்று ராசியைப் பார்க்கிறார். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமை உண்டாகும். 6-ல் உள்ள கேது போட்டி, பொறாமைகளை விலக்குவார். 6-ஆமிடத்தைப் பார்க்கும் ராகு கடன் உருவாக்குவார். அது சுபக்கடனாக மாற்றுவது உங்கள் திறனைப் பொருத்தது. 3, 8-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைகிறார். (15-ஆம் தேதிமுதல்). கெட்ட ஸ்தானாதிபதி கெட்டஸ்தானத்தில் மறைவது நன்மையை உண்டு பண்ணும்.

 

om010925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe