லட்சியங்கள் பலருக்கு
நடந்துவிடுகிறது..
சிலருக்கு
அலட்சியமாய்
போவதும் உண்டு..
சொர்க்கத்தில் நான் சென்று
வாழாவிட்டாலும்..
சொந்த வீட்டில்
ஒரு நாளாவது வாழவேண்டும்..
உன் பரிகாரம்
பலன் அளிக்கிறது என
பல பேர் சொல்றாங்க...
நான் வீடு கட்டி வாழ
ஒரு பரிகாரம் சொல்லு சித்தரே!..
"சொந்த வீடு இருப்பவனுக்கு
ஒரு வீடுதான் சொந்தம்..
இல்லாதவனுக்கு
இந்த உலகெங்கும் வீடு உண்டு"
என்கிற தத்துவத்தை சொல்லி
உன்னை வெறுப்பேற்ற விரும்பவில்லை..
கொடுப்பினை
என்பது கட்டாயம் வேண்டும்
அதிலும் உன் சுய
ஜாதகக் கட்டத்தில் வேண்டும்
நீ கட்டிடம் கட்ட..
வீடு கட்ட ஜாதகத்தில்
நான்காமிடம் முக்கியமப்பா..
நான்காமிடத்தில் பாவிகள்
நின்றால் தாமதமாகுமப்பா..
சூரியன் இருந்தால் தந்தைவழி..
சந்திரன் இருந்தால் தாய்வழி..
செவ்வாய் இருந்தால்
சகோதர வழி..
ராகு- கேதுக்கள் பாட்டன் வழி
குரு இருந்தால்
நெருங்கியவர் வழி
சனி இருந்தால் தொழில் வழி
புதன் இருந்தால் மாமன் வழி
சுக்கிரன் கணவன்- மனைவி வழி என
உறவுகளால் கிடைக்கும்
உறவுகளால் கெடுக்கும்..
நான்காமிடம் கெட்டவனுக்கு
சொந்த வீடும் தொல்லையப்பா...
நான்காமதிபதி
லக்னத்தில் நின்றால்
சொந்த ஊரில் வீடு கட்டலாம்..
இரண்டில் சுய வருமானத்தில்
மூன்றில் சகோதர உதவி
நான்கில் ஆட்சி பெற்றால் தாயார்
ஐந்தில் பிள்ளைகள்
ஆறில் தொழில் கடனால்
ஏழில் கணவன்- மனைவி
எட்டில் வட்டிக்கு கடன்
ஒன்பதில் தந்தை
பத்தில் தொழில்
பதினொன்றில் இளைய மனைவி, சகோதரம்
பன்னிரண்டில் வெளிநாட்டு வருமானம்
சுபகிரகம், சுப பலமானால்
இதன் வழியில் வீடு
அமையும்..
பாவி சேர்ந்தாலும்
பார்த்தாலும்
இதன் வழியில் இழப்பு வரும்..
உயிர்காரகத்தை இழந்தவருக்கு
எளிதில் வீடு அமையும்...
பெரும்பாலும்
ஆறு, எட்டு, பன்னிரண்டில்
நான்காமதிபதி நின்றால்
வாடகை வீட்டில்
குடியிருந்து
வாடகைக்கு வீடு விடும்
கோடீஸ்வர யோகம்
பணத்தை கொட்டிக்
கொடுத்துவிடுகிறது..
நான்காமிடத்தை சுபகிரகங்கள்
பார்த்தாலும்
சொகுசான வீடு கிடைத்துவிடுறது..
குரு பார்த்தால்
கஷ்டப்பட்டு
இஷ்டபட்ட வீட்டைக் கட்டுவான்..
சுக்கிரன் வலுத்துப் பார்த்தால்
பங்களாவில் பணியாளராக வேலைக்கு சேர்ந்து
அந்த பங்களாவையே விலைக்கு
வாங்கி விடுகிறார்கள்..
ராகுவோடு சுபகிரகம் சேர்ந்தவனுக்கு
பிரம்மாண்ட வீடு கிடைக்கிறது..
வாடகை வீட்டில் குடியிருந்தாலும்
வசதியான வீட்டில் வசிப்பான்..
பௌர்ணமி சந்திரனில்
பிறந்தவனுக்கு எப்படியும்
சொகுசு பங்களா கிடைத்தே தீரும்...
சுப தசாபுக்தியில்
கிடைக்கும் வீட்டைவிட
அசுப தசைகளில்
அம்சமான வீடு அமையும்..
அத்தனை சுகமும் தரும்
அதே வீடு அம்போன்னு
அடிச்சும் விரட்டும்..
அதிரடியாய்
அடுத்த நாளே
கைவிட்டு போகும்..
எப்போதும் ஒன்றை ஞாபகம்
வைத்துக்கொள்
நான்காமதிபதி கெட்டவனுக்கு
கிடைக்கும் கெட்ட வீடு
கெடுபலனையே தரும்..
கொடுத்து கெடுக்கும்
அதிசயமெல்லாம்
மாயாவி சாயா தசையான
ராகு- கேதுகளின் தசையில்தான்...
சுபகிரக தசையான
குரு தசையில்
இல்லத்தை இழந்து
இல்லறத்தையும்
இழந்தவர்களும் உண்டு..
பாதகாதிபதி, மாரகாதிபதி
சுக்கிரன் வந்து தசை நடந்தாலும்
சுபிட்சம் கெட்டுப் போனதும் உண்டு..
ஆறாம் எட்டாம் தசைகளில்
வீடு கட்டி
வட்டிகட்ட முடியமால்
வந்தவரை லாபம் என
விற்றுப் போனவர்களும் உண்டு..
எது எப்படியாகிணும்
நான்காமிடம் நன்றாக
அமைந்தால்தான்
நல்ல வீடு கிடைக்குமப்பா..
நானூறு சதுர அடியில் சாதித்தவன்
நாலாயிரம் சதுரடியில்
வசிப்பவனைவிட சந்தோஷமாக இருப்பான்..
இருப்பிடம்
இளமையை இனிப்பாக்கும்
சுகம் தரும் நாலாமிடம்
நன்றாக அமைந்துவிட்டால்
குட்டி வீட்டிலும்
கும்மாளமாயிருக்கலாம்...
எங்கிருந்தாலும் வாழலாம்
எட்டாமதிபதி தசையில்
எட்டுக்கெட்டு வீட்டில்
வாழ்க்கையை தொடங்கி
எட்டாத உயரத்தில்
வாழும் வாழ்க்கை கொடுப்பது
கெட்டவன் கெட்டுப்போய்
தசை நடக்கும்போதே...
நான்காமிடம்
கெட்டுப்போனவன்
முதல் வீடு கட்ட மூச்சு முட்டுவான்..
நாலுக்கு நாலு சதுரடியில்
ஈசான்யத்தில் குடிசை போட்டால்
தொடங்கிய வீடு நிற்காமல்
நான்கே மாதத்தில் கட்டி முடிப்பாய்..
கண் திருஷ்டிபோல்
தோஷம் வேறில்லையப்பா..
அதனை கலைக்க வீட்டின்முன்பு
கண்ணாடி பதித்துவிடு..
கண் திருஷ்டி, பில்லி, சூன்யம்
பலிக்காதப்பா..
நாளும் கோளும்
நலிந்தோருக்கு இல்லையப்பா..
நாடு போற்ற வாழ வேண்டுமானால்
நான்காமிடம் நன்றாக இருக்க
வேண்டுமப்பா..
சொந்தவீடு கட்டுவது
அத்தனை சாதாரண விஷயம்
இல்லையப்பா..
நான்காமிட கொடுப்பினை
நன்றாய் அமைந்திருக்க வேண்டும்..
வீடு கட்டி நிம்மதியாய் வாழ
நிச்சயம் பரிகாரம் உண்டு..
களிமண்ணில்
சிவ லிங்கம் செய்து
48 நாள் பிடிவாதமாய்
பிரம்ம முகூர்த்த பூஜைசெய்து..
செவ்வாய்க்கிழமை
செந்தூர்முருகன்
கடல் சென்று
செங்கதிரோன் விழிக்கும் நேரத்தில்
கடலில் கரைக்க..
கரையாத செல்வமாய் சொந்த வீடு கட்டி
சொர்க்கத்தில் வாழ்வதுபோல் வாழ்வாய்..
செவ்வாய்க்கிழமை பிரதோஷம்
நான்கு முறை சென்று
வழிபட்டு வந்தால்..
தோஷங்கள் அழிந்து
மண் மனை பிரச்சினை தீர்ந்து
பூர்வீக வீட்டில்
புண்ணிய ஆத்மாக்களுடன்
புகழுடன் வாழ்வாய்...
செல்: 96003 63748