சிந்தூர் ஆபரேஷன் குறித்து வெüயிட்ட செய்திக்காக, 'தி வயர்' பத்திரிகையின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், கரண் தாப்பர் இருவர் மீதும் அஸ்ஸாம் காவல்துறை தேசத்துரோக வழக்குப் பதிவுசெய்தது. இதற்கெதிராக சைதை பனகல் மாüகை அருகில் செப்டம்பர் 8-ஆம் தேதி, பத்திரிகையாளர்களை ஒடுக்கும் பா.ஜ.க.வைக் கண்டித்து, கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி பத்திரிகையாளர்கüன் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து நாடுமுழுவதும் இதைக் கண்டித்து கண்டனக் குரல்கள் எழுந்தன. தமிழகத்திலும் தமிழ்நாடு டிஜிட்டல் ஜர்னலிசம் யூனியன் சார்பில் சென்னையில் பத்திரிகையாளர்களைக் காப்போம்! ஜனநாயகம் காப்போம்! என்ற தலைப்பில் பத்திரிகையாளர்கüன் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்திரகுமார் தேரடி இந்நிகழ்வின் தலைமை ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றினார். தி இந்து குழுமத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம், நக்கீரன் ஆசிரியர், தமிழ்க்கேள்வி செந்தில்வேல், ஜீவா டுடே ஜீவசகாப்தன், சென்னை பிரஸ்கிளப் தலைவர் சுரேஷ் வேதநாயகம், செயலாளர் ஆசிப் உள்üட்ட பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கண்டனக் குரலைப் பதிவுசெய்தனர்.
நிகழ்வில் தனது கண்டன உரையின்போது இந்து என். ராம், “தமிழ்நாடு டிஜிட்டல் ஜர்னலிஸ்ட் யூனியன் என்ற ஒரு புதிய அமைப்பைத் தொடங்கக்கூடிய இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விவகாரம் நம் முன்னால் வந்திருக்கு. கரண்தாப்பர் இந்தியாவின் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர், சிறந்த நேர்காணல் மேற்கொள்பவர். என்னுடைய நீண்டகால நண்பர். சிறந்த பத்திரிகையாளர். அந்த மாதிரி ஒரு ஜர்னலிஸ்ட இன்னிக்கு குறிவச்சிருக்காங்க. சித்தார்த் வரதராஜன். சிறந்த பத்திரிகையாளர், "இந்து' பத்திரிகையின் எடிட்டரா கூட கொஞ்ச காலம் இருந்தாரு. சிறந்த முறையில "தி வயர்'ங்கிற பத்திரிகைய நடத்திக்கிட்டிருக்கார்.
அவர்கள்மேல் தேசத்துரோக வழக்குப் பதிவுசெய்வதன் நோக்கம் என்ன? எல்லாருக்கும் ஒரு மேஸெஜ். இவங்களை குறிவைத்துத் தாக்கினால் மற்றவர்கள் பயப்படுவார்கள் என்ற நோக்கத்துடன் செய்யக்கூடிய ஒரு தாக்குதல்.
மோசமான வழக்கு என்பதற்கு இது ஒரு எக்ஸாம்பிள். உச்சநீதிமன்றத்து மேல எனக்கு ஒரு அதிருப்தி இருக்கு. கைது பண்ணக்கூடாதுன்னு சொன்னது நல்லது. ஆனா பொய் கேஸ்ல வந்து கோஆப்பரேட் பண்ணணும்னு சொல்றது சரியா? பத்திரிகை சுதந்திரத்திற்கும், பேச்சு சுதந்திரத்திற்கும் போதுமான பாதுகாப்பு தரக்கூடிய ஒரு தீர்ப்பு இதுவென்று நான் நம்பவில்லை. உச்ச நீதிமன்றத்துல சிறந்த நீதிபதிகள் பலபேர் இருக்காங்க, உயர்நீதிமன்றத்துலயும் இருக்காங்க. பலமுறை ஜர்னலிஸ்ட் அவங்ககிட்ட போகும்போது பாதுகாப்பு குடுக்குறாங்க, ஆதரவும் கிடைக்குது.
நண்பர் நக்கீரன் கோபால். அவரைவிட வழக்குகளை அதிகமா எதிர்கொண்டது யாரும் இல்லன்னு சொல்லியிருக்காங்க. அது உண்மை. தைரியமான, சுதந்திரமான ஒரு எடிட்டர், பப்üஷர். அவர் ஒரு வடிவமைப்பாளர்... அதுலதான் ஆரம்பிச்சாரு. தைரியமாகச் செயல்படுவார். இந்தியாவுல மகாத்மா காந்திக்குப் பிறகு, அவர்மேல போட்ட கேஸ் மாதிரி எனக்குத் தெரிஞ்சு யார்மேலயும் போடலை. எதையும் எதிர்கொள்ளக்கூடிய, தமிழ்நாட்டிலுள்ள சிறந்த பத்திரிகையாளர். சிலநேரம் அவருக்குக்கூட நல்ல தீர்ப்பு கிடைச்சிருக்கு. எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. கோபால் மேல ஒரு கேஸ் போட்டாங்க அப்ப இருந்த அதிகாரிகள்.. உயர்நீதிமன்றத்துக்கு எடுத்துட்டுப் போகும்போது அந்த வழக்குல பாதுகாப்பு கிடைச்சது.
நான் தொடர்ச்சியா கவர்னரோட பேச்சுவார்த்தை நடத்தி, அவரு என்னை பிரேக்பாஸ்ட்டுக்கு கூப்புடுவாரு. அவர் கடைசியில ஒரு சமரசம் பண்ணிரலாம், ஒரு செட்டில்மெண்ட் செய்துரலாம்.... எப்படியாவது நக்கீரன் கோபால கூட்டிட்டு ராஜ்பவனுக்கு டீ சாப்பிட வரணும்னார். அப்பதான் தமாஷ் ஆரம்பிச்சது. “அவர மீட்பண்ண ஆர்வமா இருக்கு' அப்படீன்னு கவர்னர் என்கிட்டயே சொன்னாரு.
ஆனா கோபால் தலைமறைவாயிட்டார். பத்து நாள் நானே தொடர்புகொள்ள முடியலை. போன் பண்ணுனா டூர் போயிருக்கார், ஃபேமிலி பங்ஷன்ல இருக்காருன்னு சொல்லுவாங்க. கிடைக்கவே இல்ல. இது போலீஸுக்குப் பயந்து தலைமறைவு இல்ல, கோர்ட் சம்மனுக்குப் பயந்துக்கிட்டு இல்ல. ராஜ்பவனுடைய "டீ'க்கு பயந்து தலைமறைவு. கடைசியில அந்த விஷயத்தைத் தீர்த்துட்டோம். இன்னொருத்தரை கூட்டிட்டுப் போய், டீ குடிச்சு அந்த கேஸ்ல ஃபைனல் செட்டில்மெண்ட் முடிஞ்சது. ஆனா அவரு வரவே இல்ல.
இன்னிக்கு இந்த தாக்குதல் நடக்கிறது. இவங்க மட்டுமல்ல, அதுக்கு முன்னால "நியூஸ் கிüக்' என்ற ஒரு டிஜிட்டல் மீடியா மேல ஒரு பயங்கரமான வழக்கு. புர்காயஸ்தாவை ஜெயில்ல வச்சு, அப்புறம் வழக்கு நடைமுறைகளை மடத்தனமா பண்ணுனதால அவரு ரிலீஸ் ஆயிட்டாரு, பெயில்ல இருக்காரு. அந்த கேஸ் ஒண்ணும் புராக்ரஸ் ஆனதா தெரியல. அது ஒரு பொய் வழக்கு.
இதைவிட மோசமால்லாம் நடந்திருக்கு. நான் எமர்ஜென்சிய சந்திச்சிருக்கேன். அன்னிக்கு அநியாயம் நடந்தது. ஆனா இன்னிக்கு ஒரு கம்யூனல் வெறி, அத வச்சு நடக்கக்கூடிய அடக்குமுறை. பல்வேறு தந்திரங்களைச் செய்றாங்க. இன்னிக்கு போதுமான அளவுக்கு எதிர்ப்பு இல்லை. எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, பல பிரஸ் க்ளப்ஸ், குறிப்பா நம்ம பிரஸ் க்ளப் இதுல ஒரு முக்கியப் பங்கு எடுத்ததை நான் பாராட்டுறேன். இது ஒரு நல்ல டெவலப்மெண்ட்.
உச்ச நீதிமன்றம். உயர்நீதிமன்றத்துல சில சலுகைகள் கிடைச்சாலும், போதுமான அளவு கிடைக்கவில்லை என்பது உலகமறிந்த உண்மை. இந்திய ஊடகத்துறை குறித்து பல சர்வதேச அறிக்கை வந்திருக்கு. ஊடக சுதந்திரம் குறித்த பட்டியல்ல இந்தியா ரொம்பக் கீழிறங்கியிருக்கு. பல பத்திரிகையாளர்கள் இந்தியாவுல இன்றைக்குக் கொல்லப்படுகிறார்கள். இந்த அரசாங்கம் செஞ்சதா நான் சொல்லலை. ஆனா வழக்குகள் முடியவில்லை. அந்தக் குற்றவாüகள், கொலைக்காரங்களைப் பிடிக்கமுடியலை. பல பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
கமிட்டி டூ புரொட்டக்ட் ஜர்னலிஸ்ட், ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் அமைப்புகள் கவனமா இவற்றை ஆவணமா மாற்றி கேர்புல்லா டாகுமெண்ட் பண்ணிக் குடுக்குறாங்க. பல விஷயங்கள் வெüய வந்திருக்கு. ஆனா போதுமான அளவுக்கு எதிர்ப்பு இருக்கா, ஒரு அமைப்பா பத்திரிகையாளர்கள் ஒன்றுதிரளவேண்டும். பேர் முக்கியமில்ல. ஆனா ஒருங்கிணைந்த செயல் முக்கியம்.
இன்னொரு விஷயத்தைச் சொல்லி முடிக்கலாம்னு பார்க்கிறேன். இப்ப மெயின்ஸ்ட்ரீம் மீடியா அல்லது லெகஸி மீடியா. குறிப்பாக ஆங்கிலத்தில் வரக்கூடிய டெலிவிஷன் சேனல்ஸ், இந்தியில வரக்கூடிய டெலிவிஷன் சேனல்ஸ்லாம் இருக்கு. ஆனா, எல்லா டெலிவிஷனையும் நீங்க கண்டனம் பண்ணமுடியாது. பல மேஜர் டெலிவிஷன் சேனல்கள் உண்மைய கொடுக்குறாங்க.
நமக்கு போதுமான தகவல் கிடைக்கல. இந்தியாவுல பல குரல்கள் இருக்கு. அத நாம குறைத்துப் பார்க்கமுடியாது. ஆசிப் சொன்னது மாதிரி பல குரல்கள் கிளம்புறதுனாலதான் அவங்க குழப்பத்துல இருக்காங்க.
இன்னிக்கு இண்டஸ்ட்ரியில பெரிய பிரிவு டிஜிட்டல் மீடியாதான். 2024-ல டி.வி.ய அது ஓவர்டேக் பண்ணிடுச்சுன்னு தகவல் வந்தது. நம்ம எல்லாருமே டிஜிட்டல் ஜர்னலிறஸம்தான், ஆனா குறிப்பாக வரையறை செய்றது முக்கியமான விஷயம். டிஜிட்டல் மீடியா ஜர்னலிஸ்ட் என்பதை ஆழமாக பரிசீலனை செய்து, அந்த புரொபறஸனல் விஷயங்களை முன்னால் கொண்டுவந்து செய்யவேண்டியது புதிய ஆர்கனைசேஷனுடைய கடமை!
ஒரு பெரிய அபாயம் நம்ம முன்னால இருக்கு. ஒüபரப்புச் சேவைகள் ஒழுங்குமுறை மசோதா இன்னிக்கு கமிட்டிக்குப் போயிருக்கலாம். இந்த டிஜிட்டல் மீடியாவின் எல்லா குரல்களையும் அந்த வரன்முறைப்படுத்தல் என்பதற்குக்கீழ் கொண்டுவர்றது, அபராதம் அதிகமா விதிக்கிறதுன்னு பெரிய முயற்சி நடக்கு. அதுக்கு பெரிய எதிர்ப்பு வந்ததுனால ஒரு நிலைக்குழுக்கு இந்த மசோதாவை பரிந்துரை பண்ணியிருக்காங்க. ஆனால் அந்த அபாயம் இன்னும் போகவில்லை. அதை நாம் பரிசீலனை பண்ணவேண்டும்.
இன்னிக்கு பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் ரொம்ப முக்கியமான பிரச்சினைகளாக நம் முன்னால் நிற்கிறது. ஊடக சுதந்திரத்தில் இந்தியவின் இடம் ரொம்பக் கீழ என்று சொல்விவிட்டேன். பி.ஜே.பி. இல்லாத மாநிலங்கள்ல கொஞ்சம் பரவாயில்லாம இருக்கலாம். ஆனா வேறு சில மாநிலங்களும் அடக்குமுறைய எடுத்துக்கிறாங்க. மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள்ல பிரச்சினை இருக்கு. அதனால பா.ஜ.க. மட்டுமல்ல, எங்கே நடந்தாலும் ஊடக சுதந்திரத்தை, குறிப்பாக டிஜிட்டல் மீடியா சுதந்திரத்தை நாம சீரியஸாக எடுத்துக்கொண்டு ஆதரிக்கவேண்டும். நீதிமன்றங்களுக்குப் போவதால் மட்டும் தீர்வு கிடைக்காது” என்று அரசின் போக்கையும், அதற்கெதிராக ஊடகங்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
-கீரன்