Advertisment

எமதர்மராஜனிடம் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் சாதுர்யம்! - ரேவதி பானு

eman

காரடையான்  நோன்பு 14-3-2026


மிழகத்தில் சுமங்கலிப் பெண்கள் நோற்கும் முக்கியமான நோன்புகளில் ஒன்று "சாவித்திரி நோன்பு எனப்படும் காரடையான்  நோன்பு.' கார் காலத்தில் விளைந்த அரிசியில் அடை செய்து, சாவித்திரி நோன்பு நோற்று கடவுளுக்கு தன் கணவன் உயிரை திரும்ப கொடுத்ததற் காக நன்றி தெரிவித்ததனால் இதற்கு காரடையான் நோன்பு என்னும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 

Advertisment

இந்த சத்தியவான் சாவித்திரி கதை சிவ புராணத்தில் உள்ளது.  இதை பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும்போது மார்க் கண்டேய மகரிஷி திரௌபதிக்கு எடுத்துரைக்கிறார். தன் நாட்டை எதிரிகளிடம் இழந்த சால்வ நாட்டு மன்னர் துயுமத்சேனன், தன் மனைவி மற்றும் மகன் சத்தியவானுடன் காட்டில் வசித்துக் கொண்டிருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவருக்கும் அவர் மனைவிக்கும் கண் பார்வையும் போய் விடுகிறது. அந்த சமயத்தில் மந்திர நாட்டு மன்னன் அசுவபதியின் மகள் சாவித்திரி, தான் மணமுடிக்க ஏற்ற இளவரசனை தேடி சத்தியவான்

காரடையான்  நோன்பு 14-3-2026


மிழகத்தில் சுமங்கலிப் பெண்கள் நோற்கும் முக்கியமான நோன்புகளில் ஒன்று "சாவித்திரி நோன்பு எனப்படும் காரடையான்  நோன்பு.' கார் காலத்தில் விளைந்த அரிசியில் அடை செய்து, சாவித்திரி நோன்பு நோற்று கடவுளுக்கு தன் கணவன் உயிரை திரும்ப கொடுத்ததற் காக நன்றி தெரிவித்ததனால் இதற்கு காரடையான் நோன்பு என்னும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 

Advertisment

இந்த சத்தியவான் சாவித்திரி கதை சிவ புராணத்தில் உள்ளது.  இதை பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும்போது மார்க் கண்டேய மகரிஷி திரௌபதிக்கு எடுத்துரைக்கிறார். தன் நாட்டை எதிரிகளிடம் இழந்த சால்வ நாட்டு மன்னர் துயுமத்சேனன், தன் மனைவி மற்றும் மகன் சத்தியவானுடன் காட்டில் வசித்துக் கொண்டிருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவருக்கும் அவர் மனைவிக்கும் கண் பார்வையும் போய் விடுகிறது. அந்த சமயத்தில் மந்திர நாட்டு மன்னன் அசுவபதியின் மகள் சாவித்திரி, தான் மணமுடிக்க ஏற்ற இளவரசனை தேடி சத்தியவான் தங்கியிருந்த காட்டுப் பகுதிக்கு வந்தாள். சத்தியவானைக் கண்டதும் தன் இதயத்தை அவனிடம் பறிகொடுத்து அவனையே தான் மணாளனாக வரித்து, தன் தந்தையிடமும் தெரிவிக்கிறாள். அந்த நேரத்தில் அங்குவரும் நாரதர், "இன்றிலிருந்து பன்னிரெண்டு மாதங்களுக்குள் சத்தியவான் இறந்துவிடுவான்' என்று கூறுகிறார். 

Advertisment

சாவித்திரியின் தந்தை இதைக் கேட்டு தயங்க, சாவித்திரி திடமான மனதுடன் சத்திய வானையே மணந்துகொண்டு காட்டிலேயே அவன் குடும்பத்துடன்  வசிக்க ஆரம்பிக்கி றாள்.

சத்தியவானுக்கு தன் இறப்பு பற்றிய ரகசியம் தெரியாது. திருமணமாகி ஒரு வருடம் ஆகப்போகிறது. சாவித்திரிக்கு அவன் இறக்கும் நாள் நெருங்கிவிட்டது என்பது தெரிந்ததால், அவன் எங்கு சென்றா லும் அவனுடனேயே  செல்கிறாள். அவன், தன் கண் பார்வையிலேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டு, அதே சமயத்தில் அவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி இறைவனை இடைவிடாது பிரார்த்தித்துக்கொண்டும் இருக்கிறாள். 

அன்று விறகு வெட்ட காட்டுக்கு சென்ற சத்தியவான் சாவித்திரியின் மடியில் தலைவைத்து உயிர் துறந்தான். சத்தியவானின் உயிரை எடுத்துசெல்ல வந்த எமதூதர்களால் பதிவிரதையான சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தை நெருங்க முடியவில்லை.  அதனால் எமதர்மராஜாவே சத்தியவானின் உயிரை எடுத்துசெல்ல வர வேண்டியதாயிற்று. 

தன் கணவனின் உயிரை எடுத்துக்கொண்டு சென்ற எமதர்மராஜனை ஓட்டமும் நடையுமாக பின்தொடர்ந்த சாவித்திரி தான், தன் கணவன்மேல் உயிரையே வைத்திருப்பதும், பதிவிரதையும் என்பது உண்மையானால் சத்தியவான் உயிரை திரும்பிக்கொடுத்து விடுமாறு கண்ணீருடன் மன்றாடுகிறாள். 

ஆனால் எமதர்மராஜா "உயிர் போவதென்பது விதி முடிந்த செயல். ஆகவே, அந்த காரியத்தை செய்வதே எனது தர்மம், கடமை. ஆகையால் தான் அதிலிருந்து பின் வாங்க முடியாது' என்று பதிலுரைக்கிறார்.

ஆனால் சாவித்திரி விடாமல் திட சித்தத்துடன் அவரைப் பின் தொடரவே எம தர்மராஜாவிற்கு அவள்மேல் இரக்கம் பிறக்கிறது. 

"நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன். ஆனால் ஒரேயொரு நிபந்தனை! இறந்தவனின் உயிரைத் தவிர வேறு எது வேண்டுமானா லும் கேள்' என்கிறார்.

உடனே சாவித்திரி, "எனக்கு நூறு பிள்ளைகள் பிறந்து அவர்கள் என் மாமனாரின் தேசத்தை ஆள்வதை என் கணவனின் பெற்றோர் தன் கண்களால் காண்பதை நான் நேரில் கண்டுகளிக்க வேண்டும்' என்கிறாள். 

தன் கணவனின் உயிர் போன அப்பேர்ப்பட்ட இக்கட்டான நேரத்திலும் சாவித்திரி என்னும் பெண்மணி, தன் புத்தி சாலித்தனம், சமயோஜித புத்தி ஆகியவற்றால் எப்படி அந்த நெருக்கடி நிலைமையை சாமர்த்தியமாக எதிர் கொண்டாள் என்பது பிரமிக்க வைக்கிறது. அவளின் விடாமுயற்சியும், தன் கணவன்மேல் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பும், பதிவிரதத்தன்மையும் எமதர்மராஜனின் மனதை இளகச்செய்ய அவ்வாறே வரம் கொடுத்து சத்தியவானின் உயிரை திரும்ப கொடுக்கிறார்.

இறைவனின் கருணையை எண்ணி மனம் நெகிழ்ந்த சாவித்திரி, இறைவனுக்கும் நன்றி தெரிவித்து ஒரு நோன்பு நோற்கிறாள்.  இந்த நிகழ்வு ஏற்பட்டது சரியாக மாசி மாதம் முடிந்து பங்குனி ஆரம்பிக்கும் வேளையில். அதாவது மாசியும் பங்குனியும் கூடும் வேளையில்.  அதனால் இந்த நோன்பையே மாசியும் பங்குனியும் கூடும் நோன்பு என்று கூறுவார்கள்.

இந்த காரடையான்  நோன்பு தினத் தன்று,"உருக்காத வெண்ணையும் ஒரடையும் நான் நோற்றேன்.  ஒருக்காலும் என் கணவர் பிரியாமல் இருக்கணும்'

என்று வேண்டிக்கொண்டு ஒரு இலையில் ஒரு அடையும் வெண்ணையும் வைத்து, தாம்பாளத்தில் உடைத்த தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் வைத்து அதில் நடுவில் பூக்கட்டிய மஞ்சள் சரடையும் வைத்து காமாட்சி அம்மனை வேண்டிக்கொண்டு இந்த நோன்பை நோற்று  

"தோரம் கிருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம்
தாராம்யஹம் பர்துஹூ: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்
சுப்ரீதா பவ ஸர்வதா''

என்னும் சரடு காட்டிக்கொள்ளும் மந்திரத்தை சொல்லி இந்த வருடம் மாசியும் பங்குனியும் கூடும் நேரம் 14-3-2026 (சனிக்கிழமை) அன்றிரவு 7.30 மணிமுதல் 8.30 மணிவரை உள்ள தால், அந்த நேரத்தில் இந்த நோன்பை நோற்று சரடு காட்டிக் கொள்ளவேண்டும்.

சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய நேன்பு இது. 

om010326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe