சனி வக்ரகாலப் பலன்கள் 2026 ஜூலை 12 முதல் நவம்பர் 27 வரை  ஆர். மகாலட்சுமி சென்ற இதழ் தொடர்ச்சி (26.07.25)...

saturn

 

மகரம்

மகர ராசியின் அதிபதி சனி ஆவார். இங்கு செவ்வாய் உச்சமும் குரு நீசமும் அடைவார்கள். இவர்கள் குலதெய்வம், பைரவர் மற்றும் காளியை வணங்குவது தரும்.

2025 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை

சனி, உங்களின் 3-ஆமிடத்தில் அமர்ந்து, உங்களை வீர தீர திருமகனாக வடிவமைத்து இருப்பார். மேற்கண்ட காலத்தில், சனி வக்ரம் பெற்றவுடன், காற்று போன பலூன் மாதிரி, ரொம்ப ஜொய்ங் என்று ஆகிவிடுவீர்கள். இதற்கு முக்கிய காரணம், காசு பண புழக்கத்தில் ஏற்படும் பெரிய ஓட்டையாக இருக்கும். ஒரு மனிதனுக்கு காசு கையில் குறைந்தாலே, தன்னிச்சையாக சவுண்ட் குறைந்துவிடும். இந்த சனி வக்ரம் ஆரம்பித்தவுடன், மகர ராசியாரின் சுருதி குறைந்து விடும். வீட்டு புரோக்கர் வந்து, வீட்டின் விலையைச் சொல்ல, ஹி ஹி, அப்புறம் யோசித்துச் சொல்கிறேன் என்று சமாளித்துவிடுவீர்கள். உங்களின் சில பணியாளர்கள், அவர்களாகவே விலகி விடுவர். இதுவரையில், உங்கள் கைபேசி செமத்தியாக காசு சம்பாதித்துக்கொடுத்து இருக்கும். இப்போதோ நீங்கள் என்ன விதமான தரவுகள் வெளியிட்டாலும், ஒருத்தரும் எட்டிப்பார்க்க மாட்டார்கள். உங்கள் பணம், சவுண்ட் இவை வால்யூம் குறைய இது மிகப்பெரிய காரணமாகும். உங்கள் இளைய சகோதரருடன் மனபேதம் உண்டாகும். ரியல் எஸ்டேட் துறையினர் அலைச்சல் குறையும். உங்கள் பயண போக்குவரத்து இம்சை தரும். வாகனங்களை ஓட்டி பணம் சம்பாதிப்போர் இக்கட்டான சூழ்நிலை காண்பர். உங்கள் ஒப்பந்தம், ஒப்பேறாமல் போய்விடும். உங்கள் வீட்டை குத்தகைக்கு எடுத்தவர்கள், கொஞ்சம் பண தகராறு அதனால் அப்புறம் தருகிறேன் என்பர். நீங்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும், பணவரவு என்பது ஆட்டம் காட்டி அழச்செய்யும். இதனால் என்னடா வாழ்க்கை என மனம் மறுகும் நிலை ஏற்படும். இதனால் 3-ஆமிட சனி கொடுத்த வீர, வீர்யம், சவுண்ட் எல்லாம் காணாமல் போய்விடும். சனி வக்ர நிவர்த்தி ஆனவுடன் சரியாகிவிடும்.

அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை

மேற்கண்ட காலகட்டத்தில் மகர ராசியின் 3-ஆமிடத்தில் சனிபகவான், தனது பின்னோக்கிய பயணத்தில் பூரட்டாதி சென்று அமர்வார். பூரட்டாதி என்பது, ஒரு குருசார நட்சத்திரம்.

இந்த கோட்சார சனி, உங்களின் 3-ஆமிடத்தில் வந்ததில் இருந்து, அலைச்சல்... அலைச்சல் அவ்வளவு அதிக அலைச்சல் இருந்திருக்கும். உட்கார நேரம் இன்றி,

 

மகரம்

மகர ராசியின் அதிபதி சனி ஆவார். இங்கு செவ்வாய் உச்சமும் குரு நீசமும் அடைவார்கள். இவர்கள் குலதெய்வம், பைரவர் மற்றும் காளியை வணங்குவது தரும்.

2025 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை

சனி, உங்களின் 3-ஆமிடத்தில் அமர்ந்து, உங்களை வீர தீர திருமகனாக வடிவமைத்து இருப்பார். மேற்கண்ட காலத்தில், சனி வக்ரம் பெற்றவுடன், காற்று போன பலூன் மாதிரி, ரொம்ப ஜொய்ங் என்று ஆகிவிடுவீர்கள். இதற்கு முக்கிய காரணம், காசு பண புழக்கத்தில் ஏற்படும் பெரிய ஓட்டையாக இருக்கும். ஒரு மனிதனுக்கு காசு கையில் குறைந்தாலே, தன்னிச்சையாக சவுண்ட் குறைந்துவிடும். இந்த சனி வக்ரம் ஆரம்பித்தவுடன், மகர ராசியாரின் சுருதி குறைந்து விடும். வீட்டு புரோக்கர் வந்து, வீட்டின் விலையைச் சொல்ல, ஹி ஹி, அப்புறம் யோசித்துச் சொல்கிறேன் என்று சமாளித்துவிடுவீர்கள். உங்களின் சில பணியாளர்கள், அவர்களாகவே விலகி விடுவர். இதுவரையில், உங்கள் கைபேசி செமத்தியாக காசு சம்பாதித்துக்கொடுத்து இருக்கும். இப்போதோ நீங்கள் என்ன விதமான தரவுகள் வெளியிட்டாலும், ஒருத்தரும் எட்டிப்பார்க்க மாட்டார்கள். உங்கள் பணம், சவுண்ட் இவை வால்யூம் குறைய இது மிகப்பெரிய காரணமாகும். உங்கள் இளைய சகோதரருடன் மனபேதம் உண்டாகும். ரியல் எஸ்டேட் துறையினர் அலைச்சல் குறையும். உங்கள் பயண போக்குவரத்து இம்சை தரும். வாகனங்களை ஓட்டி பணம் சம்பாதிப்போர் இக்கட்டான சூழ்நிலை காண்பர். உங்கள் ஒப்பந்தம், ஒப்பேறாமல் போய்விடும். உங்கள் வீட்டை குத்தகைக்கு எடுத்தவர்கள், கொஞ்சம் பண தகராறு அதனால் அப்புறம் தருகிறேன் என்பர். நீங்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும், பணவரவு என்பது ஆட்டம் காட்டி அழச்செய்யும். இதனால் என்னடா வாழ்க்கை என மனம் மறுகும் நிலை ஏற்படும். இதனால் 3-ஆமிட சனி கொடுத்த வீர, வீர்யம், சவுண்ட் எல்லாம் காணாமல் போய்விடும். சனி வக்ர நிவர்த்தி ஆனவுடன் சரியாகிவிடும்.

அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை

மேற்கண்ட காலகட்டத்தில் மகர ராசியின் 3-ஆமிடத்தில் சனிபகவான், தனது பின்னோக்கிய பயணத்தில் பூரட்டாதி சென்று அமர்வார். பூரட்டாதி என்பது, ஒரு குருசார நட்சத்திரம்.

இந்த கோட்சார சனி, உங்களின் 3-ஆமிடத்தில் வந்ததில் இருந்து, அலைச்சல்... அலைச்சல் அவ்வளவு அதிக அலைச்சல் இருந்திருக்கும். உட்கார நேரம் இன்றி, உடல் அசதி பெற்றிருக்கும். சனிபகவான் வக்ரம் பெற்றவுடன், அலைச்சல் அப்படியே நின்றுவிடும். உங்களின் ஒப்பந்தங்கள் அனைத்தும், விடுமுறை எடுத்துக்கொள்ளும், ஒன்று கொடுத்த அக்ரிமெண்ட் வேலையை முடித்திருப்பீர்கள். புது ஒப்பந்தம் கிடைக்க இடைவெளி விழுந்துவிடும். அல்லது உங்கள் பணியாளர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக, வேலை செய்ய முடியாத சூழ்நிலையும் உண்டாகும். உணவு தயாரிப்பு வகையறாக்கள், உங்களைத் தவிர பல பேருக்கும் பிரித்து கொடுக்கப்படும். டி.வி.யில் வேலை செய்வோர். மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளவர்கள். அதில் தொய்வு காண்பர். வீடு மாற்றும் தரகர்கள் வேறு வேலை தேடிக்கொள்ளலாமா எனும் அளவிற்கு மனமும், வாய்ப்பும் சுருங்கி விடும். கைபேசி கடை வைத்திருப்போர், கூடவே வேறு பொருளும் விற்கலாமா எனும் சிந்தனை மேலோங்கும். தர்ம விஷயம் சார்ந்து நன்கொடை வசூல் செய்யும் அன்பர்கள். அது சார்ந்த அலைச்சலை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். வெளிநாட்டு, வெளியூர், ஆன்மிக ஸ்தலங்களுக்கு பயணசீட்டு ஏற்பாடு செய்பவர்கள், கொஞ்சநாள் வீட்டில் இருக்கும் நிலை உண்டு. இரண்டாவது தொழில் செய்பவர்கள் கொஞ்ச நாளைக்கு நிறுத்தி விடுவீர்கள். போஸ்ட்மேன், கூரியர் என இவ்வகை மற்றும் உணவு விநியோகம் செய்பவர்கள் அவசியம். ஆக மகர ராசியின் 3-ல் சனி வக்ரம் அடையும்போது, உங்கள் அலைச்சல், முதலீடுகளை நிறுத்தி விடுகிறார். 

வாழ்வின் போக்கை மறுபரிசீலனை செய்யும் நேரமாக அமையும். குலதெய்வம், தர்ம சாஸ்தா, வக்ர காளி, கோளி- நாதர் வழிபாடு சிறப்பு. உணவு பரிமாறும் மனிதர்களின் தேவையறிந்து உதவுங்கள். 

கும்பம்

கும்ப ராசியின் அதிபதி சனி ஆவார். இந்த ராசியில் எந்தக் கிரகமும் உச்சம் நீசம் அடைவதில்லை. எனினும் இந்த ராசியில் ராகுவின் சாரம் பெற்ற சதய நட்சத்திரம் உள்ளதால், கும்ப ராசியார் எப்போதும் காளியை வணங்குவது ஏற்புடையது.

2025 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை

இந்த கோட்சாரப்படி, கும்ப ராசியின் 2-ஆமிடத்தில் சனிபகவான் சென்று கொண்டுள்ளார். மேற்கண்ட கால கட்டத்தில், சனிபகவான், உத்திரட்டாதி நட்சத்திரத்தில், பின்னோக்கி, தனது பயணத்தை தொடர்வதால் வக்ரகதி அடைகிறார். இதுவரை ஒரு திருகாணி வாங்க வேண்டுமென்றாலும், வெளிநாடு சென்று வந்தீர்கள். சனி வக்ரம் ஆனவுடன் இந்த அலைச்சலை சுத்தமாக கட்ட பண்ணிவிடுவார். இதற்கு பல காரணங்களை சனிபகவான் அடுக்குவார். சனிபகவான் கும்ப ராசி அதிபதி. அதனால் ஜாதகருக்கு லேசான சிறு மயக்கம் வருகிற மாதிரியான உணர்வை கொடுப்பார். இதனால் கும்ப ராசியார் வீட்டு படி தாண்ட பயப்படுவர். பண விஷயத்தில் குறுக்கம் காட்டுவார். பணம் இருந்தால்தானே, வெளி வாசல் செல்ல இயலும். இதனால் அலைச்சல், செலவும் கட். சிலருக்கு கண் பார்வையில் கோளாறை கொடுப்பதால், வீட்டுக்குள் இருக்க வேண்டியதாக இருக்கும். நிறைய தனுசு உணவை சாப்பிட்டு, வயிற்று போக்கு ஏற்படுவதால், வீட்டு சாப்பாடு மஸ்ட் எனும் நிலை வந்துவிடும். வெளிநாட்டு பயணம் செல்ல முடியாத நிலை உண்டாகும். உடனே நீங்கள் வயிற்றெரிச்சல் புடிச்ச பயல்கள், கண் போட்டுவிட்டான் என்று அலறுவீர்கள். 2-ல் சனியால் இது உண்மையாகவும் இருக்கும். பக்கத்தில் உள்ள கோவிலில் அன்னதானம் செய்வீர்கள். சனிபகவான், உங்கள் ராசியாதிபதியாகி, வக்ரமாக செல்லும்போது, அனைத்து செயல்களும், பிற்போக்காக நடக்கும். இதனால் உங்கள் வீம்பும், கெத்தும் மட்டும்படும். சுற்றியுள்ளவர்கள், கொஞ்சம் ஆட்டமா ஆடினான். நல்லா வேணும் என்று மகிழ்வர். சனி வக்ரம் நீங்கியவுடன், மறுபடியும் அலைய ஆரம்பித்து விடுவீர்கள்.

அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை

மேற்கண்ட நாட்களில் கும்ப ராசியின் 2-ஆமிடத்தில் அமர்ந்த சனி, பூரட்டாதி நட்சத்திரத்திற்கு, பின்னோக்கி நகர்வார். பூரட்டாதி என்பது ஒரு குரு சார நடசத்திரம்.

ஒரு லாபாதிபதி சாரத்தில், சனி வக்ரம் பெற்று செல்லும்போது, அவர் லாப பண வரவை சுருக்கி விடுவார். யோசியுங்கள் பணவரவு தடைபடும்போது, செலவும் சுருங்கும்தானே! நீங்கள் வரும் என எதிர்பார்த்த பணம் தடைபட்டு விடும். அரசியல்வாதிகள், நன்கு செலவு செய்யலாம். என எடுத்து வைத்த பணம், செலவு செய்ய முடியாத நிலை அடையும். இதற்கு இந்த அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை ஏற்படுவதால் இருக்கலாம். அல்லது இவருக்காக, இன்னொருவர் பணம் தர இருப்பதலால் ஏற்படும் சூழ்நிலையாக இருக்கலாம். எது எப்படியோ, இந்த வக்ர சனி காலத்தில் அரசியல்வாதிகள் செலவு செய்யாமல் தப்பிக்க இயலும். உங்கள் மூத்த சகோதரனுக்கு, பணம் கொடுக்க இயலாத நிலையை உணர்த்தி விடுவீர்கள். உங்கள் பதவி உயர்வின் பொருட்டு, கணிசமான தொகை கொடுக்க இருக்கும் நேரத்தில், அது ஏதோ ஒரு காரணத்தால், நிறுத்தி வைக்கப்படும். நீங்கள் உங்கள் பகுதி, தலைவர் பதவியிலிருந்து விலகிவிட நேர்வதால் வீண் செலவு, அலைச்சல், வாக்குவாதம் தவிர்க்கப்படும். குடும்ப பயணங்களில் நீங்கள் கொஞ்சம் உஷராகி, நாங்க விளையாட்டுக்கே வரலை என பின் வாங்கி விடுவீர்கள். சில குடும்பத்தலைவிகள், நிறைய சமையல் செய்து, சமையலறையிலேயே நின்று கொண்டிருந்தவர்கள், அதிலிருந்து விடுதலை பெறுவர். இது சிலருக்கு மருமகள் வருவதாலும் இருக்கலாம். சிலருக்கு குடும்ப பிரிவாலும் அமையலாம். கும்ப ராசியார், மருமகளிடம் பண விஷயமாக, எவ்வித பிரச்சினையும் பண்ணாதீர்கள். உங்களின் பிறப்பு ஜாதகம் சரியில்லை எனில், ஜெயிலில் களி தின்ன நேரிடும். ஜாக்கிரதை.

பைரவரையும், சிவனையும், வக்ர காளியையும், கோளி-நாதரையும் வணங்கவும். மருமகள் மற்றும் சமையல் கலைஞர்கள் இவர்களிடம் அன்பாகவும், அனுசரணை யாகவும் நடந்துகொள்ளவும். 

மீனம்

மீன ராசியின் அதிபதி குரு ஆவார். இங்கு சுக்கிரன் உச்சமடைவார். எனவே கடலேராம் உள்ள மகாலட்சுமி தாயாரை வணங்குவது நல்லது.

2025 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை

மேற்கண்ட காலத்தில், மீன ராசியில் ஜென்ம சனியாக சென்று கொண்டிருப் பார். அவர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செல்லும்போது, பின்னோக்கி நகர்ந்து வக்ர நிலை அடைவார். இதுவரையில் உங்கள் கௌரவத்தை மேம்படுத்த, நிலை நாட்ட, உறுதி செய்ய அதிகம் செலவு செய்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அது இப்போது தடைபடும். அதற்கு காரணம், செலவு பண்ணி பைசா பிரயோசனம் இல்லை எனும் எண்ணம் தோன்றியதால் இருக்கலாம். பணவரவு அதிக அளவில் விரயமாகி குறையலாம். உங்களுக்கு வெளியூர், வெளிநாடு செல்லமுடியாத அளவில் உடல்நிலை பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு, அரசியல் பதவி விரயமானதால் இருக்கலாம். 

உங்கள் மூத்த சகோதரனுடன் பிரிவு ஏற்படலாம். உங்களில் நிறைய மீன ராசியினர் பாதத்தில் நரம்பு பிடித்து இழுப்பது போல் உணர்வீர்கள். இதனால் ஓரிடத்தில் அமரவேண்டிய நிலை உண்டு. பதவி உயர்வு கிடைக்கும். பார்ட்டி கொடுக்கலாம் என திட்டம் போட்டோர், பதவி உயர்வை கண்ணில் காணாததால், பார்ட்டியை தவிர்க்க நேரிடும். 

இந்த கால கட்டத்தில் உங்களின் எந்த எதிர்பார்ப்பும் நிறைவேறாது. அதனால் நீங்கள் வெகு எரிச்சல் அடைவீர்கள். இவ்வளவு நாளும் அலைந்தவர்கள். இந்த வக்ரசனி காலத்தில் ஏனோ சோம்பி அமர்வீர்கள். இதனால் அலைச்சலும், செலவும் தவிர்க்கப்படும் என்பது வேறு விஷயம். சிலரின் மறுமணம் தள்ளி போடப்படும். வழக்கின் வெற்றி செய்தி தாமதமாகும். உங்கள் ஆதரவாளர்கள்.  உங்களைவிட்டு விலகுவதால், உங்களின் நம்பிக்கை ஊசலாகும். இந்த வக்ர காலத்தில், அரசியல் வாதிகள், எந்தவித முக்கிய முன்முடிவும் எடுக்கவேண்டாம். 

2025 அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை

மேற்கண்ட கால கட்டத்தில், மீன ராசியில் சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு, பின்னோக்கி நகர்ந்து வந்து சேர்வார். இது ஒரு குரு சார நட்சத்திரம்.

அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை

சனி பெயர்ச்சி ஆனதிலிருந்து தொழிலில் சுறுசுறுப்பும் மேன்மையும், நல் மாற்றமும் காணப்பட்டது. ஆனால் சனி வக்ரம் ஆனவுடன், எல்லாம் மெதுவாக  நடக்க ஆரம்பிக்கும். அரசியலில் கட்சி தாவியவர்கள், புதுசா ஒரு பதவியும் கிடைக்கவில்லையே என பரிதவிப்பர். மாறுதலுடன் பதவி உயர்வு கிடைத்தவர்கள், இது தேவை இல்லாத ஒன்றாகிவிட்டதோ என மிக யோசிப்பர். வெளிநாட்டு வர்த்தகம் ஆரம்பித்தவர்கள், அதனை தொடரவும், கண்காணிக்கவும் வெகு சிரமப்படுவர். வெளிநாட்டு சமையல் வேலைக்கு சென்றவர்கள். இது நமக்கு தோதுபட்டு வருமா என திணறுவர். வெளிநாட்டு கோவில்களுக்கு, அர்ச்சகர்களாக சென்றவர்கள், இது என்னது, நம்ம ஊர் மாதிரி இல்லையே மனம் சுணங்குவர். பண்ணிய முதலீட்டுக்கே லாபத்தைக் காணோமே என புத்தி பரிதவிக்கும். போன மாமியார், ரிட்டர்னாகி வந்து நிற்பார். வெளிநாடு சென்ற உங்கள் மூத்த சகோதரன், தாய் நாடு திரும்புவார். மீன ராசியினரில், வெளியூர், வெளிநாடு சென்றவர்கள். ஏதோ ஒரு காரணத்துக்காக தாய்நாடு திரும்ப நேரிடும். சிலருக்கு ஆகாத அலைச்சலாகவும் இருக்கும். இந்த சனி வக்ர காலத்தில் மீன ராசியார் கௌரவம், பெருமை, பட்டம் என எதையும் எதிர்பார்க்க வேண்டாம். கிடைக்கவே கிடைக்காது அவ்வளவுதான். அதுபோல் உங்கள் லட்சியம், ஆசை, எதிர்பார்ப்புகளை மூட்டை கட்டி ஒரு பக்கமாக வைத்து விடவும். சமையல் கலைஞர்கள், நிதானமாக வெகு கவனத்துடன் சமைக்கவும். கோவில் பிரசாதம் தயாரிப்பவர்கள் வெகு கவனமாக இருப்பது அவசியம். சிவன், தர்ம சாஸ்தா, வக்ர காளி, கோளிநாதரை வணங்கவும் கோவில் மடப்பள்ளி ஊழியர்களின் தேவை அறிந்து உதவவும்.

 

bala260725
இதையும் படியுங்கள்
Subscribe