ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிக்கும் சனி பகவான் நம் வாழ்வில் தரும் மாற்றங்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்குரியது. அந்த வகையில் சனிப்பெயர்ச்சி என்பது மக்கüடம் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது அனைவரும் அறிந்த செய்தி.சனி பகவான் என்றாலே மக்கüடம் ஒருவித அச்ச உணர்வும் உண்டுதான்.
தற்போது மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் 2025 ஜூலை 12 ஆம் தேதி முதல் வக்ர கதி அடைந்து நவம்பர் 27 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இப்போதுதான் சனிப்பெயர்ச்சி ஆனது என நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், மீண்டும் சனி பகவான் வக்ர கதியில் சஞ்சாரம் செய்யப் போகிறார் என்பது நமக்குள் மேலும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒவ்வொரு ராசிக்காரர்கüன் வாழ்வில் சனி பகவான் நிகழ்த்தப் போகும் இந்த வக்ர காலப் பலன்கள் சாதகமா? பாதகமா?
வக்ரம் என்றால் என்ன?
நேராக இராமல், கோணலாக இருப்பது என்று அர்த்தம். கிரகம் நேராக செல்லாமல் பின்னோக்கி நகர்வதை, அதன் வக்ரகாலம் என்பர். பின்னோக்கி நகர்வதன் அர்த்தம் என்ன. பூமியும், கிரகங்களும் சூரியனைச் சுற்றி வரும்போது, அதன் வேகங்களின் மாறுபாடு, அந்த கிரகங்கள் பின்னோக்கி நகர்வதாக அமையும்.
சூரியனிலிருந்து 120 டிகிரி- 240 டிகிரிவரை கிரகங்கள் சஞ்சரிக்கும் காலம் வக்ரகாலம் எனப்படும். இது செவ்வாய், சனி, குரு என இந்த மூன்று கிரகங்கள் மட்டுமே வக்ரகதியில் சஞ்சரிக்கும். புதன், சுக்கிரன் எப்போதும் சூரியன் கூடவே நகரும். அதனால் வக்ரம் கிடையாது. அதாவது சூரியனிலிருந்து 6, 7, 8-ஆவது ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிக்க இயலாது.
ராகு- கேதுக்கள் எப்போதும் எதிர் சுற்றில் வலம்வருவதால், தனியாக வக்ரம் என்று கிடையாது. ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எந்தக்கிரகமும் உச்சமாகி, வக்ரமானால், அது நீசம் ஆகிவிடும்.
எந்தக் கிரகமும், நீசமாகி, வக்ரம் அடைந்தால், அது உச்சமாகிவிடும்.
எனவே வக்ரமடைந்த கிரகங்கள் தாங்கள் கொடுக்கவேண்டிய பலன்களை எதிர்மறையாக கொடுக்க ஆரம்பிக்கும். வக்ரநிவர்த்தி ஆனவுடன், மீண்டும் தங்களின் இயல்பான பலனை கொடுக்க ஆரம்பித்துவிடும்.
வக்ர கிரகங்களின் காலங்களில் கோளிலிநாதரையும், வக்ரகாளியையும் வணங்குவது சிறப்பு.
சனியின் வக்ரகாலம் 2025 ஜூலை 12 முதல் நவம்பர் 27 வரை உள்ளது.
இது திருக்கணிதப்படியான கணக்கு ஆகும்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் இவருக்குரிய தெய்வம் பழனி முருகன். இந்த மேஷ ராசியில் சூரியன் உச்சமடை வார். சூரியன் மலையைக் குறிப்பார்.
எனவே மலைமேலுள்ள முருகரை, மேஷ ராசியார் வணங்க, வாழ்வில் அடுத்தடுத்த உயர்வையும் முன்னேற்றத்தையும் பெறுவர்.
திருக்கணிதப்படி, உங்கள் மேஷ ராசிக்கு 12-ல், சனிபகவான், மெதுவாக தனது திருப்பாதத்தை எடுத்துவைத்து, ஏழரைச்சனியில் விரயச்சனியாக வந்து அமர்ந்துள்ளார். 2025, மார்ச் 29-ஆம் தேதி வந்துள்ளார்.
2025 ஜூலை 12 முதல், நவம்பர் 27 வரை, சனி வக்ரமாகி நகர்வார். அதாவது உத்திரட்டாதி 2-ஆம் பாதத்தில் இருந்து, உத்திராட்டாதி 3-ஆம் பாதம் போகாமல், அதன் 1-ஆம் பாதத்திற்கு பின்னோக்கி நகர்வார். பின் பூரட்டாதி 4-ஆம் பாதத்திற்கு வந்து நவம்பர் 27-ஆம் தேதி வக்ரநிவர்த்தி ஆகிவிடுவார்.
சனிபகவான், மேஷத்திற்கு 12-ல் இருந்து, விரயச் சனியா

சனிபகவான், மேஷத்திற்கு 12-ல் இருந்து, விரயச் சனியாக சென்று கொண்டுள்ளார்.
இவர் அங்கு வக்ரமாகி பலன் கொடுப்பார்.
2025 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை
இப்போதைய காலத்தில், சனி உத்திரட்டாதி 2-ஆம் பாதத்தில், வக்ரநிலையை ஆரம்பித்துவிடுவார். உத்திரட் டாதி என்பது சனி சார நட்சத்திரம். பின் வக்ரகதியில், பின்னோக்கி நகர்ந்து உத்திரட்டாதி 1-ஆம் பாதத்திற்கு சென்றுவிடுவார். மேஷ ராசியினருக்கு, 12-ல் அமர்ந்த சனிபகவான் நிறைய அலைச்சல், விரயங்களை கொடுத்துக் கொண்டிருப்பார். இந்த விரயங்கள் எனும்போது, அது தொழில் முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சியின் பொருட்டு அமைந்திருக்கும். ஏனெனில் சனி, மேஷ ராசிக்கு 10, 11-ஆம் அதிபதி ஆதலால், தொழில் பற்றிய செயல்களை பிரதானமாக கொண்டு மேஷ ராசியி னரை ஓட வைத்துக்கொண்டிருப்பார். எனினும் சனி தனது வக்ர காலத்துக்குள் நுழைந்தவுடன் தனது வேகத்தை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழில் முதலீட்டை ரொம்ப செய்கிறோமோ எனும் எண்ணம் தலைதூக்கும். கொஞ்சம் சுருக்கலாம் என முடிவு வரும். தொழிலுக்கு ரொம்ப அலைகிறோம். ஆனால் அலைச்சலுக்கு ஏற்ற வருமானம் இல்லையே எனத் தோன்றி, அலைச்சல் குறையும். அரசு அதிகாரிகளுக்கு, இனிமேல் லஞ்சப் பணத்தை குறைத்துக் கொடுக்கலாம். அதுவே போதும் என்ற சிந்தனை சிறகடிக்கும். இந்த நேரத்துக்குள், கட்சி மாறிய அரசியல்வாதிகள், இப்போது வந்து சேர்ந்த கட்சியிலேயே இருக்கலாம். அவசரம் வேண்டாம். இன்னொரு மாறுதலை பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனும் முடிவுக்கு வந்துவிடுவர்.
நம்ம கூடபிறந்த அண்ணன் என பாசமாக நிறைய செலவு செய்தவர்களுக்கு, ரொம்பத்தான் செய்கிறோமோ என்று பீலிங் வந்து, செலவுக்கு நோ போர்டு வைத்துவிடுவர்.
சமையல் கலைஞர்கள். இதுவரையில் பரபரப்பாக செயல்பட்டவர்களுக்கு ஓவரா வேலை பார்க்கிறோம். கொஞ்சம் -மிட் பண்ணிக் கொள்ளலாம் எனத் தோன்றும்.
உங்களில் சிலர் நோய் தாக்கத்தால் மருத்துவமனையில் இருந்தால், இந்த வக்ர காலத்தில், நோய் குணமாகி வீடு திரும்புவீர்கள். ரொம்ப அலைந்து கொண்டிருந்தவர்கள் ஒரு பொது மருத்துவ பரிசோதனை செய்துகொள்வீர்கள்.
வெளிநாட்டு பயணத்தை, தவிர்த்துவிட்டு, இருந்த இடத்திலிருந்தே, அந்த வேலைகளை தொடர்புகள்மூலம் முடித்துக்கொள்வீர்கள்.
உங்களில் சிலர், உங்கள் மைத்துனரோடு சேர்ந்து, ஒரு தொழில் தொடங்க திட்டம் தீட்டியிருப்பீர்கள். இந்த வக்ர சனி, அந்த திட்டத்தை முடக்கிவிடுவார்.
உங்களை தேடிவந்த ஒரு, தலைவர் மேலாளர், பகுதியின் கண்காணிப்பாளர் போன்ற பதவிகள், எவ்வளவு அலைச்சலையும் அசதியையும் தருகிறது. ஆளைவிடுங்க என, பதவியிலிருந்து, வக்ர சனி கழட்டி விட்டுவிடுவார்.
அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை
இந்த நாட்களில் சனிபகவான் வக்ரகதியில், உத்திரட்டாதி நட்சத்திரத்தைவிட்டு, இறங்கி, பின்னோக்கி சென்று, பூரட்டாதி நட்சத்திரம் வந்து அமர்ந்துகொள்வார். பூரட்டாதி என்பது ஒரு குரு சார நட்சத்திரம்.
மேஷ ராசியின் 12-ல் சனி நுழைந்தவுடன் உங்கள் தொழில் இடத்தை மாற்றி இருப்பீர்கள். இந்த வக்ர சனி, அட பழைய இடமே பரவாயில்லை. மறுபடியும் அங்கு செல்ல லாமா எனும் யோசனை தருவார்.
உயர்கல்வி அல்லது வேலையின் பொருட்டு வெளிநாடு சென்றவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் தாய்நாடு திரும்ப நேரிடும்.
மந்திரி பதவி வகித்துவந்த, அரசியல்வாதிகள், தங்கள் பதவியைவிட்டு நீங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஆன்மிக யாத்திரை மற்றும் உங்கள் வீட்டில் நடக்க இருந்த ஒரு சுப நிகழ்ச்சி தேதி தள்ளி வைக்கப்படும்.
ஒரு மிருகம், யானை அல்லது குதிரை அல்லது எருமை இவை போன்ற மிருகங்கள் உங்களை ஓட ஓட விரட்டக்கூடும். குருவின் சாரத்தில், வக்ர சனி செல்லும்போது இவ்விதம் நிகழும்.
அந்தணர்கள், தங்கள் தொழிலான யாகம், வேள்வி, வேத சடங்குகள் செய்யும்போது, முக்கியமான மந்திரம் மறந்து, மிகவும் தவிக்க நேரிடும். யாருக்காவது தர்மம் செய்யும்போது, வாங்குபவர்கள் திட்டும் வாய்ப்பு உண்டு.
நீங்கள் கப்பலில், படகில் பயணம் செய்யும்போது, கப்பல் மக்கராகிவிட்டது, பின்னால் இருந்து தள்ளுங்கள் என்பர். 12-ல் சனி வக்ரம் ஆகும்போது, இதுவும் நடக்கும், இதற்கு மேலும் நடக்கும். உங்கள் பேரன்- பேத்தி விஷயங்களும் சற்று மாறுபாடாகும்.
உங்கள் தந்தை, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ளட்டுமா எனக் கேட்டு உங்களை திகிலடையச் செய்வார்.
இப்போது வரும் அதிர்ஷ்டம், குறைபாடு உடையதாக இருக்கும்.
மேஷ ராசிக்கு 12-ல் அமர்ந்த சனி வக்ரமாகி, பின்னோக்கி செல்லும் நேரத்தில் அவர், கொடுக்கவேண்டிய பலன்களை எதிர்மறையாகக் கொடுப்பார்.
ஒன்றை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சனி இருக்குமிட பலன்களை அதன் தன்மைபடி கொடுப்பார். பார்க்கும் இடத்தை பஸ்பமாக்கிவிடுவார். இதில் சனி வக்ரம் ஆகும் பொழுதுதான், இருக்குமிட பலன்கள் தகராறு தரும்.
மேஷ ராசியின் 12-ல், சனி, ஏழரைச்சனியில், முதல் பாகத்தில் விரயச்சனியாகி, வக்ரமும் அடைவதால் குச்சனூர் சென்று வணங்கவும். காகத்திற்கு எள் சாதம் வைக்கவும். சனீஸ்வர சன்னதி அர்ச்சகரின் தேவையறிந்து, அவருக்கு நல்ல கால் செருப்பு அல்லது பயணச் சீட்டு என இவற்றை வாங்கிக் கொடுங்கள்.
வக்ர கிரகத்துக்கு கோளி-நாதர் வணங்கவும். பழனி சென்று வணங்குவதும் வக்ர காளியை வணங்குவதும் நல்லது.
ரிஷப ராசியின் அதிபர் சுக்கிரன், ரிஷபத்தில் சந்திரன் உச்சமடைவார். எனவே எப்போதும் பெண் தெய்வங்களை வணங்குவது சிறப்பு.
ரிஷப ராசிக்கு 11-ஆமிடத்தில் லாப சனியாக அமர்ந்துள்ளார். சனி, ரிஷப ராசிக்கு 9 மற்றும் 10-ஆம் அதிபதி. எனவே ரிஷப ராசியை பொறுத்துவரை, சனி தர்மகர்மாதிபதியாக உள்ளார். இவர் உங்கள் ராசியின் 11-ல் அமர்வது மிக விசேஷம். நல்ல, லாபமான, வளமான பலன்களை வாரி வழங்கி கொண்டிருக்கிறார்.
2025 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் பெறுகிறார். வக்ரகாலத்தில், எதிர்மறை பலன்களையே கொடுக்க இயலும். மேற்கண்ட கால கட்டத்தில், சனி தனது சுய சாரம் பெற்று வக்ரமாகிறார்.
இதுவரையில் உங்கள் தொழில் மிக எளிதாக நேர்த்தியாக நடந்துகொண்டு இருந்தது. இப்போதோ, தொழி-ன் ஒவ்வொரு நிலையும் சற்று தேங்கினாற்போல் தோன்றும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், தொழில் என்னவோ, நான் மெதுவாகத்தான் நகர்வேன் என சண்டித்தனம் செய்யும். வரவேண்டிய வருமானமும், இதோ தருகிறேன் என்பார்கள். ஆனால் லாபம் கைக்கு கிடைக்க உம்பாடு எம்பாடு என்றாகிவிடும்.
அரசியல்வாதிகள் பாடுதான் ரொம்ப கேள்விக்குறியாகிவிடும். அதிர்ஷ்டம், கௌரவம், லாபம் சார்ந்து பல விஷயங்களை செய்துகொண்டி ருப்பார்கள். ஆனால் வக்ரசனி, அனைத்தையும் இவர்களுக்கு எதிராக திருப்பி விடுவார். எனவே இவர்களின் மறைமுக செயல்களின் தாக்கம், இவர்களுக்கு எதிராக திரும்பும்போது விக்கித்து நின்றுவிடுவர்.
சில வழக்குகள் இவர்களுக்கு வெற்றி தந்துவிடும் என்ற நிலையில், அது ஏனோ, மறுபரிசீலினைக்கு உள்ளாகும்.
நன்றாக ஓடிக்கொண்டிருந்த, 2-ஆம் திருமணம் பெரும் தொல்லை தரும். மறுமண விஷயங்களின் முடிவு, அப்புறம் சொல்கிறோம் என்று பின்வாங்கி விடுவர்.
உயர்கல்வியின் ஆராய்ச்சி முடிவுகள், டட்க் தீஸிஸ் இவை மறுமதிப்பிற்கு உள்ளாகும். வெளிநாட்டு கல்வி பற்றிய இடமும், டிக்கெட்டும் கையில் கிடைத்தப்பிறகு, அப்புறமாக தகவல் அனுப்புகிறோம் என்று கூறிவிடுவர்.
எனவே ரிஷப ராசி மேல்நாட்டு கல்வி பற்றி, அங்கு போய் சேரும்வரை எவரிடமும் கூறவேண்டாம்.
இந்த வக்ரசனி, சுயசாரத்தில் செல்லும்போது, எந்தச் செயலிலும் மிக நம்பிக்கையும், உறுதி தன்மை, முன் முடிவும் எடுக்கவேண்டாம். நடந்தாலும் நடக்கும். நடக்காமல் போகவும் வாய்ப்புள்ளது எனும் மன திண்மையை வளர்த்துக்கொள்ளவும்.
அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை
மேற்கண்ட நாட்களில், சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பின்னோக்கி சென்றுகொண்டிருந்தவர், பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சென்று அமர்வார். பூரட்டாதி என்பது ஒரு குரு சார நட்சத்திரம்.
அக்காலம் குறுக்குவழி அரசியல் காலமாகும். இதில் சனி வக்ரம் இன்றி செல்லும்போது, அரசியலின் அத்தனை குறுக்கு வழிகளும் உங்களுக்கு வெகு நன்மை தரும். நீங்களும் அரசியலில் சும்மா ஜொலித்துக்கொண்டு இருப்பீர்கள்.
ஆனால் சனி வக்ரமானவுடன், உங்களுக்கு குறுக்குவழி உதவி செய்தவர்கள், இடத்தைவிட்டு அகன்றுவிடுவர். எனவே உங்களால் எதிர்மறை அரசியல் செய்யாமல் போய்விடும். சிலருக்கு, இவர்கள் செய்த தில்லுமுல்லு வேலைகள் வெளியே தெரிந்து, சற்று விலகி இருக்க நேரிடும். இவர்கள் லஞ்சம் பெற்றது, அநியாயமாக புதையல்போல் சொத்து சேர்த்தது என எல்லாம் வெளிவந்துவிடும். காரணம் எதுவாக இருந்தாலும், அரசியல்வாதிகள் சற்று சைலண்ட் மோடுக்கு போயே தீரவேண்டும். வக்ரசனி, நிவர்த்தியானவுடன், "பழைய குருடி கதவை திறடி' என ஆரம்பித்து விடுவார்கள்.
இதுபோல் சமையல் கலைஞர்கள், தங்க நகை செய்பவர்கள், ஓவியர்கள் என இவர்களின் ஏதோ ஒரு கபட தனத்தால் சற்று ஒதுங்கி இருக்கவேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த வக்ரசனி காலத்தில், சற்று அடக்க ஒடுக்கமாக இருக்க முயற்சி செய்யவும். சனிபகவான். வக்ரகாலத்தில், கோவில் பணியாளர்களின் அனச்சாரங்களை வெளிபடுத்துவார். உங்கள் மூத்த சகோதரனுடன் சற்று பிணக்கு வரும். நீண்ட தூரப் பயணங்கள் செல்லமுடியாது. அவ்வாறு சென்றாலும் பலிதமாகாது.
ஏற்றுமதி- இறக்குமதி தொழில், சுரங்கத் தொழிலில் குற்றம் குறை கண்டு பிடிக்கப்பட்டு சற்று தாமதம் ஏற்படும்.
உங்களின் வட்டி வியாபாரம் உங்களுக்கு தண்டனை வாங்கித் தரலாமா என யோசிக்கும்.
நவம்பர் 27-க்குபிறகு, சனி வக்ர நிவர்த்தியானவுடன் அனைத்தும் சரியாகும்.
வக்ர காலத்தில் கோளி-நாதர் மற்றும் வக்ரகாளியை வணங்கவேண்டும்.
கஜலட்சுமியை வணங்கவும். நதி அல்லது கடல் அருகிலுள்ள மகாலட்சுமி தாயாரை தரிசிப்பது நல்லது.
சனீஸ்வர சன்னிதி அர்ச்சகரிடம் எள் மிட்டாய் வாங்கிக் கொடுத்து, வருபவர்களுக்கு விநியோகம் செய்ய சொல்லவும்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபர் புதன். இந்த புதன் தனது ஆட்சி வீட்டில் உச்சம் பெறுவார். எனவே மிதுன ராசியார் எப்போதும் பெருமாளை வழிபடுவது சிறப்பு.
மிதுன ராசியின் 10-ஆம் வீட்டில் சனி அமர்வு. மிதுன ராசிக்கு, சனி 8 மற்றும் 9-ஆம் அதிபதி. இவரின் வக்ரம் என் செய்யும்.
2025 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை
மேற்கண்ட காலகட்டத்தில், மிதுன ராசியின் 10-ல் அமர்ந்துள்ள சனி, வக்ரமாகி உத்திரட்டாதி 2-ஆம் பாவம், 1-ஆம் பாவம் என பின்னோக்கிச் செல்வார். உத்திரட்டாதி என்பது சனியின் சார நட்சத்திரம்.
இதுவரையில், தொழில் மேன்மை சார்ந்து நிறைய யோசனைகளை நடைமுறைபடுத்தி இருப்பீர்கள். அத்தனை யோசனைகளும் குறுக்குவழி சார்ந்ததாகவே அமைந்திருக்கும். அதில் ஒன்றைக்கூட நடைமுறை தெரியாமல் திண்டாடு வீர்கள். ஆனால், இந்த வக்ர காலத்தில், சனி 8-ஆம் பாவகத்தின் அதிபதியுமாகி இருப்பதால், வக்ர தன்மை ரொம்ப வேலை செய்யாது. இதனால் தொழில் சார்ந்த திட்டங்கள் சரிப்பட்டு வரும். தொழிலில் அதிர்ஷ்டம் எட்டிப் பார்க்கும்.
தொழிலாளர்களின், சில சிடுமுஞ்சி முதலாளிகள் மாறுவர். உங்கள் தொழிலை நீங்களே, முயன்று சீர்படுத்துவதால், உங்களின் கௌரவம் கூடும். அட, உங்கள் மாமியார்கூட உங்களை மதிக்க ஆரம்பித்து விடுவார்.
சில பெண்களின் மாங்கல்யம் காப்பாற் றப்படும். உங்கள் கணவரின் உடல்நிலை நன்றாக இருக்கும். இது சனி, 8-ஆம் அதிபதியாகி வக்ரம் பெற்றாலும் ஆயுள், மாங்கல்ய விஷயம் நன்மையாகவே அமையும்.
சில வட்டி, வழக்குகள் தீர்ந்துவிடும். உங்களில் சிலருக்கு, ரொம்ப நாளாக இழுத்தடித்த சொத்து விஷயம், இப்போது முடிவுக்கு வந்து, எதிர்பாராத செல்வம் தரும். ஏற்றுமதி- இறக்குமதி சுரங்கம் விலங்கிடும் சூழல், நிதி மோசடி என இந்த விஷயங்களிலிருந்து தடை விலக வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை
மிதுன ராசியின் 10-ஆமிடத்தில் அமர்ந்த சனி, மேற்கண்ட நாட்களில், பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பின்னோக்கி வந்து அமர்வார். பூரட்டாதி என்பது ஒரு குரு சார நட்சத்திரம்.
சனி 10-ஆமிடம் எனும் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால், உங்கள் எண்ணம், செயல் என அனைத்தும் தொழில், அதனின் கிடைக்கும் அதிர்ஷ்டம், வருமானம், வாய்க்கும் கௌரவம் என இதனைப்பற்றியே இருக்கும். இந்த வக்ரசனி, உங்களின் சிந்தனையை செயலாக்கும் ஒரு பங்குதாரரை அழைத்துவருவார். அந்த பங்குதாரர் கேடிகளில் கில்லாடியாக இருப்பார். ஆக நீங்களும் உங்கள் பங்குதாரரும் சேர்ந்து, தொழிலை அதகளம் பண்ணி விடுவீர்கள். தொழில் அனைத்தும் குறுக்கு வழியில்தான் நடக்கும்.
வேறு சிலர், நாம் ஏன் ஒத்தையாக தொழில் தொடங்கி நஷ்டமடையனும் நிறைய மனிதர்களை, பங்குதாரராக சேர்த்து, தொழிலை வெகு மேன்மை யாக நடத்துவர். அதில் நல்ல வருமானமும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். இது சனி வக்ரகாலத்தில் மட்டும் ஓஹோ என்றிருக்கும்.
வக்ரம் நிவர்த்தியானவுடன், இவர்கள் சாயம் வெளுத்துவிடும்.
இதுபோல் ரகசியமாக திருமணம் செய்யும் வாய்ப்பும் வரும். உயர் கல்வியில், வேறு யாரையாவது, கட்டுரை தயாரிக்கச் சொல்லும் அதித யோசனை அப்ளை ஆகும். வெளிநாட்டுக்கு கள்ளத்தோணியில் போய், தங்கம் கடத்தல் வேலையும் நடக்கும். இவ்விதம் வக்ரசனி, பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்லும்போது சட்டத்திற்கு புறம்பான வேலைகள் செய்து வெற்றியும் பெறுவர்.
சனி வக்ர நிவர்த்தியானவுடன், எல்லாம் நேர் சீராகிவிடும்.
குருவாயூரப்பனை வணங்கவும். வக்ரகாளி, கோளி-நாதர் என தீபமேற்றி வணங்கவும். பள்ளி குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் வாங்கிக் கொடுங்கள்.
-சனி வக்ரகாலப் பலன்கள் வரும் இதழில் தொடரும்!