Advertisment

எட்டில் சனி தரும் ஆயுளும், அதிர்ஷ்டமும்... 12 ராசிக்காரர்களுக்கும்... -கடுக்கரை மா. ஆறுமுக பெருமாள்

12rasi-saturn

ஜோதிடத்தில் காரகோ பாவநாஸ்தி என்றொரு விதிமுறையுண்டு. அதாவது குரு ஐந்தில் நின்றால் புத்திர தோஷம் என்றும், சந்திரன் 4-ல் நின்றால் மாதுர் தோஷம் எனவும், சுக்கிரன் 7-ல் நின்றால் களத்திர தோஷம் என்றும், சூரியன் 9-ல் நின்றால் பிதுர் தோஷம் என்றும் காரகோ பாவ நாஸ்தியில் கூறப்பட்டுள்ளது. 

Advertisment

ஆனால் சனி 8-ல் நின்றால் ஆயுள் விருத்தி என்று சொல்லப்பட்டுள்ளது. எட்டாம் வீட்டிற்கு காரகம் சனி 8-ல் நின்றால் ஆயுள் விருத்தி உண்டாகிறது. 

Advertisment

அதாவது கர்மா தொடர்கிறது என்று அர்த்தமாகும். 

மேஷம்

8-ல் சனி, 2-ல் குரு நின்றால் நற்பலனே வரும். பாதகாதிபதி 8-ல் மறைவது நல்லது. எனினும் சில கஷ்டங்கள் அப்போதைக்கப்போது உருவாகும். 

ரிஷபம்

8-ல் சனி ஆயுளை விருத்தி செய்வார். ஆனால் தொழில் லாபம் தராது. சுக்கிரமேடு உச்சமானால், ஆட

ஜோதிடத்தில் காரகோ பாவநாஸ்தி என்றொரு விதிமுறையுண்டு. அதாவது குரு ஐந்தில் நின்றால் புத்திர தோஷம் என்றும், சந்திரன் 4-ல் நின்றால் மாதுர் தோஷம் எனவும், சுக்கிரன் 7-ல் நின்றால் களத்திர தோஷம் என்றும், சூரியன் 9-ல் நின்றால் பிதுர் தோஷம் என்றும் காரகோ பாவ நாஸ்தியில் கூறப்பட்டுள்ளது. 

Advertisment

ஆனால் சனி 8-ல் நின்றால் ஆயுள் விருத்தி என்று சொல்லப்பட்டுள்ளது. எட்டாம் வீட்டிற்கு காரகம் சனி 8-ல் நின்றால் ஆயுள் விருத்தி உண்டாகிறது. 

Advertisment

அதாவது கர்மா தொடர்கிறது என்று அர்த்தமாகும். 

மேஷம்

8-ல் சனி, 2-ல் குரு நின்றால் நற்பலனே வரும். பாதகாதிபதி 8-ல் மறைவது நல்லது. எனினும் சில கஷ்டங்கள் அப்போதைக்கப்போது உருவாகும். 

ரிஷபம்

8-ல் சனி ஆயுளை விருத்தி செய்வார். ஆனால் தொழில் லாபம் தராது. சுக்கிரமேடு உச்சமானால், ஆடம்பர பொருளால் லாபம் வரும்.

மிதுனம்

8-ல் சனி மிகுந்த நன்மைகளை எதிர்பார்க்கலாம். 2-ல் குரு நின்றால் யோகமும் பிதுர் பாக்கியமும் கேள்விக் குறியாகும்.

கடகம்

8-ல் சனி நின்றால் தீர்க்காயுள் யோகத்தைத் தரும். களத்திரத்திற்கு பாதிப்பு வரும். சங்கட காலங்களில் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நன்று.

சிம்மம்

8-ல் சனி தீர்க்க ஆயுளைத் தந்தாலும், யோகத்தையும் தருவார். மனைவிக்கு அசையா சொத்து இருந்தால், வழக்காடி பெறும் சூழ்நிலை வரும். கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ரேகை சனிமேட்டை அடைந்தால் சக்சஸ்! வெற்றி!!

கன்னி

8-ல் சனி நீசபங்கம் பெற்றால் தீர்க்காயுள் உண்டு. புத்திர தோஷம் உண்டு. விபரீத ராஜயோகம் தர தயங்க மாட்டார். இதயக் கோளாறு வரலாம்.

துலாம்

8-ல் சனி இருந்தால் தீர்க்காயுள்தான். 90 வயதை கடத்தலாம். ஆனால் மாதுர் தோஷம், புத்திர தோஷமும் உண்டாகும். ஆரோக்கிய பின்னடைவு வரும். குலதெய்வ வழிபாடு நற்பலன் தரும்.

விருச்சிகம்

8-ல் சனி நின்றால் தீர்க்காயுள் யோகமும் உண்டு. ஆனால் உடன்பிறப் புக்கு தோஷம். இதய சார்ந்த ஆரோக்கிய பின்னடைவு வரும். இதய ரேகையில் தீவு குறி தென்படும்.

மகரம்

தீர்க்காயுள் உண்டு. ஆனால் வறுமை, கண்டங்களும் உண்டாகும். உடல் குறைபாடு வரலாம். (டர்க்கயஸ்) மோதிரம் அணியவும்.

கும்பம்

தீர்க்காயுளும், அவப்பெயரும் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை தொடர் கதையாகும்.

மீனம்

8-ல் சனி உச்சம். தீர்க்காயுள் யோகம். விபரீத ராஜயோகம் தருவார். தாரதோஷம் உண்டாகும். ரகசிய உறுப்பில் கோளாறு ஏற்படும். சனியன்று ரகசிய உறுப்பை தயிரால் தண்ணீர் கலந்து சுத்தம் செய்தல் நன்று.

பொதுவாக சனி 8-ல் தனியாக நின்றால் மேலே தரப்பட்ட யோகங்கள் பொருந்தும். 8-ல் உள்ள சனியை குரு, சுக்கிரன், புதன் பார்த்தால், கப பலம் கூடும். 8-ல் உள்ள சனியை ராகு- கேது சூரியன், செவ்வாய் கூடினாலோ- பார்த்தாலோ சனிக்கு அசுப பலன் அதிகரிக்கும். 8-ல் உள்ள சனிக்கு நீசாம்சம் (அம்சத்தில் நீசம்) கிடைத்தால் சுபபலம் போய்விடும்.

8-ல் சனி, சூரியன், செவ்வாய் நின்றால் அது தீர்க்காயுளை தராது. 8-ல் சனி, ராகு, செவ்வாய் நின்றால் அதுவும் தீர்க்காயுளைத் தராது.

8-ல் சந்திரன், சனி ஜலகண்டத்தை ஏற்படுத்தும். உள்ளங்கையில் சந்திர மேட்டில் கரும்புள்ளி உருவாகும். 8-ல் சனி, ராகு, சந்திரன் மனம் விபரீத தாக்கத்தை உருவாக்குவார். உஷார். 8-ல் சனி, செவ்வாய், கேது நெருப்பு பயத்தைத் தருவார்.

ஆயுளைத் தாங்கி நிற்கும் சரீரத்திற்கு காரணமான லக்னாதிபதியும் வலிமை பெறவேண்டும். லக்னமும் சுப பலம் பெறவேண்டும். கர்மஸ்தானமும் வலிமை பெறவேண்டும். சந்திரனும், சூரியனும் சுபபலம் பெறவேண்டும். இவ்வாறு இருந்தால் ஆயுள் நூறு. சனி 8-ல் பாவிகளோடு கூடிநின்றால் திருநள்ளாறு போகலாம், மாரக தசாபுக்தி நடப்பில் ஸ்ரீ வாஞ்சியமும், திருக்கடையூரும் போகலாம். 

அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் சூரிய புத்திரனுக்கு தீர்க்காயுளை தருவதற்கே உரிமையுண்டு. ஆனால் சில துரதிஷ்டங்களும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். வயோதிகர்களுக்கு கருப்பு நிற குடை தானம் செய்யலாம். நலிந்த மாணவர்க்கு கருப்பு ஷூ வாங்கி தருதல், பார்வையற்றோருக்கு தான, தர்மம், அண்டங்காக்கைக்கு உணவு கொடுப்பது, கருப்பு நிற நாலுகால் பிராணிக்கு உணவு. இவையும் சிறந்த பரிகாரம். சனிக்கிழமை, சனி ஹோரையில் எவர்சில்வர் பிளேட்டில் நல்லெண்ணையை ஊற்றி அதில் உங்கள் முகபிம்பத்தை சற்று நேரம் உற்றுப் பார்த்து அதனை வாஷ் பேசினில் ஊற்றுவதும் நன்று.

bala181025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe