சனி வக்ரகாலப் பலன்கள் 2026 ஜூலை 12 முதல் நவம்பர் 27 வரை  ஆர். மகாலட்சுமி

anturn

 

கடகம்  

கடக ராசியின் அதிபர் சந்திரன். வெகுவேக சஞ்சாரம் கொண்டவர். சந்திரன் தாயை குறிக்கும் தெய்வம். ஆதலால் நீங்கள் அமைதியான அம்பாளை வணங்குவது தகும்.

கடக ராசிக்கு 9-ஆம் வீட்டில் சனி அமர்வு. கடக ராசிக்கு சனி, 7 மற்றும் 8-ன் அதிபதி.

2025 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை

மேற்கண்ட மாதங்களில், சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமாக செல்வார். உத்திரட்டாதி என்பது ஒரு சனி சார நட்சத்திரம். கடக ராசியின் 9-ஆமிடம் எனும் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சனி வக்ரம் பெறுவது சுமாரான பலனை கொடுக்கும். சுமாரான பலன் என ஏன் கூறப்பட்டது எனில், அவர் 8-ஆம் அதிபதியாகவும் இருப்பதால், அங்கு வக்ரம் அடையும்போது முழுக்கெடுதலும் இல்லை; முழு நன்மையும் இல்லை.
உங்கள் தர்ம சிந்தனை, தராசில் வைத்து அளக்கப்படும். யாருக்கு உதவி செய்தால், நமக்கு லாபம் என மனதில் அளந்து பார்த்து உதவி செய்யும் எண்ணம் ஏற்படும். வெளிநாட்டு கல்வியிலும் தற்காலிக தடை வரும். வெளிநாட்டு சம்பந்த இனங்கள் தடுமாறும்.

எல்லாவற்றையும்விட மனைவியிடம் எவ்வளவு பொய் சொல்லி, எப்படி சமாளிக்கலாம் என்று நன்கு கற்றுக் கொள்வீர்கள்.

பூர்வீக சொத்தை பங்கு பிரிக்கும்போது, ஏற்படும் பின்னடைவால், அந்த விஷயத்தை கொஞ்ச மாசத்துக்கு தள்ளி வைத்து விடுவீர்கள்.

வழக்கு போடும் எண்ணத்தை, ஒத்தி போடுவீர்கள். திருமண விஷயங்களை பற்றி பேசும்போது, உங்கள்மீது ஒரு குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு அது அப்படியே அந்தரத்தில் நிற்கும். இதற்கு உங்களின் முந்தைய செயல்பாடுகளும் ஒரு காரணமாக அமையும். 

அரசியலில் உங்களால் அப்புறப்படுத்தப்பட்டவர்கள், இப்போது உங்களை நிற்கவைத்து கேள்வி கேட்பார்கள்.

உங்கள் வர்த்தகத்தில், நீங்கள் மேற்கொண்ட தகிடுதத்தங்கள், சில வெளியே வந்து உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும். 

அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை

இந்த நாட்களில், கடக ராசியின் 9-ஆமிடத்தில் அமர்ந்த சனி, பூரட்டாதி நட்சத்திரம் நோக்கி, பின்னோக்கி வக்ரமாக திரும்பி நிற்பார்.

வேலையில் சேர எடுத்த குறுக்குவழிகள் வெளியே தெரியும். இது உங்களுக்கு சற்று பதட்டம் கொடுக்கும். 

கடன் வாங்க, கொடுத்த போலி பத்திரம் பற்றி வெளியில் தெரிந்து விடுமோ என கவலை உண்டாகும்.

திருமணத்தின் போது சொன்ன பொய் விஷயத்தை, வாழ்க்கைத் துணை கண்டுபிடித்து விடுவாரோ எனும் நடுக்கம் வரும்.

உங்கள் தாய்மாமன், தந்தையிடம் சொத்து பாக பிரிவினை பற்றிய பில்டப் வெளியே வந்துவிடுமோ எனும் யோசனை வரும்.

உங்கள் வணிக பங்குதாரரை, மறுபடியும் சேர்த்துக் கொள்ளலாமா எனும் யோசனை பிராண்டும். ஏனெனில் உங்கள் வர்த்தகம் பின்னடைவு அடைவதுபோல் உணர்வீர்கள்.

உங்கள்மீது போடப்பட்ட வழக்கு, மறுபடியும் விசாரணைக்கு வரும் நிலையுண்டு. இது 6-ஆம் அதிபதியான குருவின் சாரத்தில், சனி வக்ரமாக செல்வதால் உண்டாகும் பலனாகும்.

மாத சம்பளம் வாங்குபவர்கள் உங்கள் முதலாளிகள், மேனேஜர்களிடம் எந்தவித வம்பு தும்பும் வைத்துக் கொள்ளவேண்டாம். சில திருட்டுகள் நடக்கும்.

முன்பு ஏதாவது போட்டி, பந்தயத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த நாட்களில் அந்த வெற்றி செல்லாது செல்லாது எனக் கூறி உங்களை கலங்கடிப்பார்கள்.

சில தம்பதிகளுக்கு, விவாகரத்து எனும் பிரிவு சார்ந்த முடிவு எடுக்கலாமா என்ற எண்ணம் தலைதூக்கும்.

ஒரு அதிர்ஷ்ட ஸ்தானத்தில், செல்லும் சனி, வக்ரம் எனும் பின்னோக்கி நகரும்போது, கடக ராசிக்காரர்கள் நம்பிக்கை இழக்கும் நிலையில் வாழ்வியல் அமையும். நீர்நிலை அருகிலுள்ள அம்பாளையும், வக்ரகாளியையும், கோளிலிநாதரையும் வணங்கவும். வயதான பெண்களின் தேவை கேட்டு உதவவும். 

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபர் சூரியன். இது காலபுருசனின் 5-ஆம் வீடு. எனவே பூர்வபுண்ணியத்தையும், பித்ருக்களையும் குறிக்கும் ராசியாகும். சிவனையும், பித்ருக்களையும் வணங்குவது நல்லது.

சிம்ம ராசிக்கு 8-ல் சனி அமர்வு. இவர் சிம்ம ராசிக்கு 6 மற்றும் 7-ஆம் அதிபதி.

2025 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை

சிம்ம ராசிக்கு அஷ்டம சனியாக அமர்ந்துள்ளார். எப்போதும், எல்லா ராசிக்கும் அஷ்டம சனி என்பது ரொம்ப துன்பம் தரும் ஒரு கோட்சார நிலை ஆகும். அதிலும் சிம்ம ராசிக்கு டபுள் கஷ்டம் தரும். ஏனெனில் சிம்ம சூரியனுக்கும், சனிக்கும் மிக அதீத எதிரித்தன்மை உண்டு.

சரி, இந்நிலையில், சனி வக்ரம் அடையும் போது, துன்பத்தின் நிலை என்ன? துன்பங்களின் அளவு குறையும் என்றே சொல்லலாம். ஏனெனில் 8-ஆமிடத்தில் சனி நேர்கதியாக செல்லும்போது, முழு பலத்துடன் ஜாதகரை சோதிப்பார். ஆனால் வக்ரம்

 

கடகம்  

கடக ராசியின் அதிபர் சந்திரன். வெகுவேக சஞ்சாரம் கொண்டவர். சந்திரன் தாயை குறிக்கும் தெய்வம். ஆதலால் நீங்கள் அமைதியான அம்பாளை வணங்குவது தகும்.

கடக ராசிக்கு 9-ஆம் வீட்டில் சனி அமர்வு. கடக ராசிக்கு சனி, 7 மற்றும் 8-ன் அதிபதி.

2025 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை

மேற்கண்ட மாதங்களில், சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமாக செல்வார். உத்திரட்டாதி என்பது ஒரு சனி சார நட்சத்திரம். கடக ராசியின் 9-ஆமிடம் எனும் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சனி வக்ரம் பெறுவது சுமாரான பலனை கொடுக்கும். சுமாரான பலன் என ஏன் கூறப்பட்டது எனில், அவர் 8-ஆம் அதிபதியாகவும் இருப்பதால், அங்கு வக்ரம் அடையும்போது முழுக்கெடுதலும் இல்லை; முழு நன்மையும் இல்லை.
உங்கள் தர்ம சிந்தனை, தராசில் வைத்து அளக்கப்படும். யாருக்கு உதவி செய்தால், நமக்கு லாபம் என மனதில் அளந்து பார்த்து உதவி செய்யும் எண்ணம் ஏற்படும். வெளிநாட்டு கல்வியிலும் தற்காலிக தடை வரும். வெளிநாட்டு சம்பந்த இனங்கள் தடுமாறும்.

எல்லாவற்றையும்விட மனைவியிடம் எவ்வளவு பொய் சொல்லி, எப்படி சமாளிக்கலாம் என்று நன்கு கற்றுக் கொள்வீர்கள்.

பூர்வீக சொத்தை பங்கு பிரிக்கும்போது, ஏற்படும் பின்னடைவால், அந்த விஷயத்தை கொஞ்ச மாசத்துக்கு தள்ளி வைத்து விடுவீர்கள்.

வழக்கு போடும் எண்ணத்தை, ஒத்தி போடுவீர்கள். திருமண விஷயங்களை பற்றி பேசும்போது, உங்கள்மீது ஒரு குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு அது அப்படியே அந்தரத்தில் நிற்கும். இதற்கு உங்களின் முந்தைய செயல்பாடுகளும் ஒரு காரணமாக அமையும். 

அரசியலில் உங்களால் அப்புறப்படுத்தப்பட்டவர்கள், இப்போது உங்களை நிற்கவைத்து கேள்வி கேட்பார்கள்.

உங்கள் வர்த்தகத்தில், நீங்கள் மேற்கொண்ட தகிடுதத்தங்கள், சில வெளியே வந்து உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும். 

அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை

இந்த நாட்களில், கடக ராசியின் 9-ஆமிடத்தில் அமர்ந்த சனி, பூரட்டாதி நட்சத்திரம் நோக்கி, பின்னோக்கி வக்ரமாக திரும்பி நிற்பார்.

வேலையில் சேர எடுத்த குறுக்குவழிகள் வெளியே தெரியும். இது உங்களுக்கு சற்று பதட்டம் கொடுக்கும். 

கடன் வாங்க, கொடுத்த போலி பத்திரம் பற்றி வெளியில் தெரிந்து விடுமோ என கவலை உண்டாகும்.

திருமணத்தின் போது சொன்ன பொய் விஷயத்தை, வாழ்க்கைத் துணை கண்டுபிடித்து விடுவாரோ எனும் நடுக்கம் வரும்.

உங்கள் தாய்மாமன், தந்தையிடம் சொத்து பாக பிரிவினை பற்றிய பில்டப் வெளியே வந்துவிடுமோ எனும் யோசனை வரும்.

உங்கள் வணிக பங்குதாரரை, மறுபடியும் சேர்த்துக் கொள்ளலாமா எனும் யோசனை பிராண்டும். ஏனெனில் உங்கள் வர்த்தகம் பின்னடைவு அடைவதுபோல் உணர்வீர்கள்.

உங்கள்மீது போடப்பட்ட வழக்கு, மறுபடியும் விசாரணைக்கு வரும் நிலையுண்டு. இது 6-ஆம் அதிபதியான குருவின் சாரத்தில், சனி வக்ரமாக செல்வதால் உண்டாகும் பலனாகும்.

மாத சம்பளம் வாங்குபவர்கள் உங்கள் முதலாளிகள், மேனேஜர்களிடம் எந்தவித வம்பு தும்பும் வைத்துக் கொள்ளவேண்டாம். சில திருட்டுகள் நடக்கும்.

முன்பு ஏதாவது போட்டி, பந்தயத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த நாட்களில் அந்த வெற்றி செல்லாது செல்லாது எனக் கூறி உங்களை கலங்கடிப்பார்கள்.

சில தம்பதிகளுக்கு, விவாகரத்து எனும் பிரிவு சார்ந்த முடிவு எடுக்கலாமா என்ற எண்ணம் தலைதூக்கும்.

ஒரு அதிர்ஷ்ட ஸ்தானத்தில், செல்லும் சனி, வக்ரம் எனும் பின்னோக்கி நகரும்போது, கடக ராசிக்காரர்கள் நம்பிக்கை இழக்கும் நிலையில் வாழ்வியல் அமையும். நீர்நிலை அருகிலுள்ள அம்பாளையும், வக்ரகாளியையும், கோளிலிநாதரையும் வணங்கவும். வயதான பெண்களின் தேவை கேட்டு உதவவும். 

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபர் சூரியன். இது காலபுருசனின் 5-ஆம் வீடு. எனவே பூர்வபுண்ணியத்தையும், பித்ருக்களையும் குறிக்கும் ராசியாகும். சிவனையும், பித்ருக்களையும் வணங்குவது நல்லது.

சிம்ம ராசிக்கு 8-ல் சனி அமர்வு. இவர் சிம்ம ராசிக்கு 6 மற்றும் 7-ஆம் அதிபதி.

2025 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை

சிம்ம ராசிக்கு அஷ்டம சனியாக அமர்ந்துள்ளார். எப்போதும், எல்லா ராசிக்கும் அஷ்டம சனி என்பது ரொம்ப துன்பம் தரும் ஒரு கோட்சார நிலை ஆகும். அதிலும் சிம்ம ராசிக்கு டபுள் கஷ்டம் தரும். ஏனெனில் சிம்ம சூரியனுக்கும், சனிக்கும் மிக அதீத எதிரித்தன்மை உண்டு.

சரி, இந்நிலையில், சனி வக்ரம் அடையும் போது, துன்பத்தின் நிலை என்ன? துன்பங்களின் அளவு குறையும் என்றே சொல்லலாம். ஏனெனில் 8-ஆமிடத்தில் சனி நேர்கதியாக செல்லும்போது, முழு பலத்துடன் ஜாதகரை சோதிப்பார். ஆனால் வக்ரம் அடைந்து பின்னோக்கி செல்லும்போது, அவருடைய தன்மை வேறுபடும்.

இதனால், இவ்வளவு நாளும், சிம்ம ராசி தம்பதிகளுக்குள் நடந்து வந்த சண்டை ஒரு நிதானத்துக்கு கட்டுக்குள் வரும். இதற்கு உங்கள் வாரிசுகள் அல்லது உடல்நிலை காரணமாகும்.

உங்கள் காதல் விஷயத்தை, நீங்கள் ஒதுக்கி வைத்துவிடுவீர்கள். அதனால் காதல் தரும் சங்கடங்கள் நீங்கிவிடும். 

சிலருக்கு வேலையில் இருந்துவந்த ஒரு தடை நீங்கும். கல்யாண பேச்சை தொடரமுடியும். ஆனால் திருமணம் நடக்கும் என உறுதியாகக் கூற இயலாது.

இதுவரையில் உங்களை ஏமாற்றியவர் களை இனம் கண்டுகொள்ள இயலும். எனவே சற்று சூதனமாக இருப்பீர்கள். இதற்கு உங்கள் குடும்ப சண்டை குறைவதால், மூன்றாம் மனிதர்களின் தலையீடு நீங்கும்.

சனிபகவான், 8-ல் முழு பலத்துடன் ஆக்ரோஷமாக செல்லும்போது, ஜாதகர்களை கரும்பு சக்கையாக பிழிந்து எடுப்பார். அதே சனி, வக்ரம் பின்னோக்கி செல்லும்போது, சற்று அமைதியாக விடுவார். இதனால் சிம்ம ராசியார் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிட முடியும். 

கவனியுங்கள். முழுவதும் அல்ல. கொஞ்சம்தான். அதனால் இந்த வக்ரகாலத்தில் வாழ்வின் சில முக்கிய முடிவுகளை முன்னெடுங்கள். குறிப்பாக தம்பதிகள் மனம்விட்டு பேசி, சச்சரவுகளை குறையுங்கள். வீட்டின் நிலையை சீர் செய்ய முற்படுங்கள்.

எனினும் ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். சனி 6-ஆம் அதிபதியாகி 8-ல் மறையும்போது, எதிரி, கடன், நோய் அழியும் என்று அடித்துக் கூறலாம். ஆனால் சனியின் வக்ரகாலத்தில், இந்நிகழ்வில் சற்று வேறுபாடு தோன்றும். கடன் அடைய சற்று சிரமப்பட நேரிடும். சனி வக்ரநிவர்த்தியானவுடன் 6-ஆமிட ருண, ரோக, எதிரி பலன்கள் அடிபட்டுவிடும்.

இந்த வக்ரசனி காலத்தில், இடமாற்றம் பெற்றிருந்த, சில தம்பதிகள், மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். 

அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை

இந்த நாட்களில், சிம்ம ராசியின் 8-ஆம் வீட்டில், சனிபகவான், பூரட்டாதி நட்சத்திரத்திற்கு, மாறி தனது வக்ர சஞ்சாரத்தை தொடர்வார். பூரட்டாதி ஒரு குரு சார நட்சத்திரம்.

இதுவரையில் வாரிசுகள் நன்றாக இருக்க வேண்டுமே என மிக கவலை பட்டுக்கொண்டிருந்த சிம்ம ராசியாருக்கு இப்போது லைட்டா ஒரு சந்தேகம் எட்டிப் பார்க்கும். பயபுள்ளைகள் நம்மை ஏமாற்றுகிறார்களோ எனும் வலிமையான யோசனை தோன்றும். ஆயினும் வாரிசுகளுக்கு உதவாமல் இருக்க மாட்டீர்கள்.

பூர்வீக சொத்து வில்லங்களின் மூலகாரணம் பற்றி யோசித்து, தீர்வு காண்பீர்கள். சினிமா கலைஞர்கள் வெகு கவனமாக இருக்கவேண்டும்.

காதல் விஷயங்களை முன்பே மூட்டை கட்டி வைத்துவிடுவதால் அவை சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஏற்படும் சிக்கலை, அது கடன் அல்லது பழைய காதல், பங்கு வர்த்தக பண இழப்பு, உடல்நிலை கோளாறு இவற்றை கையிலெடுத்து, அந்த பிரச்சினையைத் தீர்த்து விடுவீர்கள். எனவே சிம்ம ராசியார் 8-ஆமிட சனியால் வெகு துயரம் கொண்டு தவித்தால், இந்த வக்ரசனி காலத்தை பயன்படுத்தி, துன்பங்களிலிருந்து வெளிவர முயலுங்கள். மாங்கல்யம் சம்பந்த அடமானத்தை தீர்க்க பாருங்கள்.

8-ஆமிட சனி அவர் வக்ரமோ, நார்மலோ, சிம்ம ராசியார், காதல் பங்கு வர்த்தகம், சினிமா, ஒழுக்கம் என இவ்விஷயங்களில் வெகு கவனமாக இருக்கவேண்டும்.

தட்சிணாமூர்த்தியை வணங்கவும். வக்ரகாளி, திருக்குவளை, ஸ்தல கோளி-நாதர் வழிபாடு நல்லது. (எட்டுக்குடி).

உங்கள் வாழ்வை நேர் சீராக கொண்டு செல்வதே பெரும்பாடாக இருக்கும். இதில் பரிகாரம் எல்லாம் எங்கேயிருந்து செய்வது?

 

கன்னி

கன்னி ராசியின் அதிபதி புதன். இவர் கன்னி ராசியிலேயே உச்சம், ஆட்சிபெறுவது வெகு விசேஷம். எனவே வாழ்வாள் முழுவதும் ஏதோ ஒரு பெருமாளை வணங்க வேண்டும்.

2005 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை

கன்னி ராசியின் 7-ஆமிடத்தில் செல்லும் சனி, மேற்கண்ட நாட்களில் வக்ரசனியாக தொடர்வார். அவர் உத்திரட்டாதி நட்சத் திரத்தில் செல்வார். உத்திரட்டாதி என்பது ஒரு சனி சார நட்சத்திரம் ஆகும். கன்னி ராசிக்கு சனி 5 மற்றும் 6-ஆம் அதிபதி ஆவார்.

இதுவரையில், தம்பதிகளுக்குள் நிலவிவந்த யுத்தம் ஒரு மாதிரி குறைய வாய்ப்புள்ளது. முத-ல் வீடு வாங்கும் விஷயமாக உள்ள கடன் பிரச்சினையை சுமூகமாக பேசி முடிப்பீர்கள். ஒன்று வாடகை வீட்டில் தொடரலாம். அல்லது குறைந்த வட்டியில் எங்காவது கடன் கிடைக்குமா என தேட தொடங்குவீர்கள்.

உங்கள் வாரிசின் வேலை சம்பந்தமான பிரச்சினைக்கு உங்கள் மனைவி அல்லது கணவரின் யோசனை ஏற்றுக்கொள்ளப்படும்.

உங்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாட்டால், உங்கள் தாயாரும் மனைவியும் சண்டையை போஸ்ட் போன் பண்ணி விடுவார்கள்.

உங்களின் வணிக பங்குதாரர் பற்றிய உண்மை தெரிந்து, தெளிந்து, நீங்கள் விலகிவிடுவீர்கள்.

சினிமா சம்பந்த விநியோகம் பற்றி பிறகு யோசிக்கலாம் எனும் முடிவுக்கு வருவீர்கள்.

உங்கள் மந்திரி பதவி பற்றி, அதன் செயலாற்றல் பற்றிய மதிப்பீடுகள் பொதுவெளியில் மட்டமாக விமர்சனம் செய்யப்படுவதால் நீங்கள் சற்று ஒதுங்கியிருப்பீர்கள்.

உங்கள் சிந்தனைகள், ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதை உணர்ந்து யோசனையை குறைத்துவிடுவீர்கள்.

மனுசப்பயல் வாழ்க்கையில் திருமணம் என்பது அவசியத் தேவையா என்று திருமணமான கன்னி ராசியினர் வக்ரசனி காலத்தில் அதிகம் யோசித்து வருத்தப்படுவர்.

அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை

மேற்கண்ட நாட்களில், கன்னி ராசியின் 7-ஆமிடத்திலுள்ள வக்ரசனி, பூரட்டாதி நட்சத்திரம் எடுத்துக்கொள்வார். பூரட்டாதி என்பது ஒரு குரு சார நட்சத்திரம்.

காதல் திருமணம் செய்ய முடி வெடுத்து, அதற்குரிய ஏற்பாடுகளை செய்துகொண்டிருப்பவர்கள், ஏனோ அதனை தள்ளி வைத்துவிடுவர்.

வீடு வாங்க கேட்டிருந்த கடன் கிடைத்து, சரி என்றாலும், பணம் கைக்கு வர தாமதமாகும் என்பர்.

சினிமா கலைஞர்கள், திருமணம் பற்றி அறிவிப்பு வெளியிட்டாலும், பின் அதுபற்றி சத்தம் காட்டாமல் இருப்பர்.

வேலை கிடைத்தாலும், ஜாயினிங் டேட்டை தள்ளிவைத்து விடுவர்.

பங்கு வர்த்தகம் பற்றிய நுண்ணறிவுடைய நண்பர், பிறகு தகவல் சொல்கிறேன் என்று கழன்றுகொள்வார்.

திருமணம் செய்துகொண்டவர்கள் புதுமண தம்பதிகளும், சற்று மன நெருடல் கொள்வர்.

உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலை தொடர்வது பற்றிய மறு சிந்தனை எழும்.

உங்களில் பலருக்கு வாகனம், பசு, ஆடு போன்றவை வாங்க யோசனை உதிக்கும் நேரம், அதனை கட்டி வைக்க இட பிரச் சினையால், அவ்வெண்ணம் உதிர்ந்து போய்விடும்.

நிறைய தொழில் திட்டங்கள், ஆரம்பித்த ஜோரில் நன்றாக நடந்து, இந்த வக்ரசனி காலத்தில் தேக்கமடையும். அதற்கென வாங்கிய கடனையும் திருப்பிகட்ட முடியாத நிலை ஏற்படும்.

ஆனால் சனி வக்ரம் முடிந்தவுடன் உங்கள் தொழில், நிறைய ஆட்களின் சந்திப்புக்களால் விரிவாக்கம் பெறும். எனவே சுணங்கிவிட வேண்டாம்.

சனி இருந்த இடத்தை பாழாக்க மாட்டார். 

7-ல் அமர்ந்த சனி வக்ரம் அடையும்போது பிற மனிதர்கள் சந்திப்பை தடை செய்கிறார். 

எனவே வணிகம், வாழ்வு நிலை எல்லாம் குறுகினாற்போல் நடக்கும். குருவாயூரப்பனை வணங்கவும். வக்ரகாளி, கோளி-நாதர் வழிபாடு நன்று. திருமணமான புதுமண தம்பதிகளுக்கு தேவைக் கேட்டு உதவுங்கள். 

துலாம்

துலா ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த துலா ராசியில் சனி உச்சம் அடைவார். எனவே நீங்கள் எப்போதும் தாயாரும், பெருமாளும் சேர்ந்த நிலையிலுள்ள கோவிலில் வணங்குவது நல்லது.

2025 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை

துலா ராசியின் 6-ஆமிடத்தில் சென்ற சனி, மேற்கண்ட காலகட்டத்தில் வக்ரம் பெற்று செல்வார். நிறைய துலா ராசிக்காரர்கள் வேலை கிடைத்து, அதில் சேர்ந்திருந்தாலும், அதில் ஏனோ ஒரு திருப்தியற்ற நிலை ஏற்படும். இந்த வேலை நமக்கு செட் ஆகுமா அல்லது வேறு வேலை தேட வேண்டியிருக்குமா எனும் மன ஊசலாட்டம் அதிகமாகும்.

6-ஆமிட சனி இயல்பாக கடனை குறுக்குவார். 6-ஆமிட வக்ர சனி, வீடு சம்பந்த கடன் வாங்கச் செய்வார். வாரிசுகளின் பள்ளி கல்வி கட்டணம் பொருட்டு லோன் போட வேண்டியிருக்கும்.

ஆரோக்கியம் சம்பந்தமாக அல்லது உங்கள் தாயார் மருத்துவ செலவு சார்ந்த கடன் உண்டு. சினிமா கலைஞர்களில், தொழில் நுட்ப பிரிவினர், வேலையில் தடை உண்டாவதால், செலவுக்கு கைமாத்து வாங்குவார்கள்.

பங்கு வர்த்தகம் கடன் வாங்கச் செய்யும். உங்கள் வாழ்க்கைத் துணையின், தொழில் ஏனோ உங்களை லோன் போடச் செய்யும்.

பூர்வீக வீடு, செலவுசெய்ய வேண்டி யிருக்கும். கோவிலில் வழக்கமாக உழவாரப் பணி செய்பவர்கள், அதனில் தடை காண்பர்.

வீட்டு வாடகை சம்பந்தமாக ஒரு பிணக்கு வரும். உங்கள் தாய்மாமன் மனபேதம் கொள்வார். சற்றே குறைந்த வட்டி தொல்லை மறுபடியும் தலை தூக்கும். உங்களின் சிலரின் மனைவி, கோபித்துக்கொண்டு, தாய்வீடு செல்ல நேரிடும். சொந்தத் தொழில் நடத்துபவர்கள் தொழிலாளிகளால் இம்சை பெறுவர். வளர்ப்பு பிராணிகளில் சில உங்களை வழக்குகளில் சிக்கச் செய்யும்.

அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை

மேற்கண்ட நாட்களில், துலா ராசியின் 6-ஆமிடத்திலுள்ள சனி பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பின்னோக்கி நகர்ந்து வக்ர சனி காலத்தை தொடர்வார். பூரட்டாதி என்பது ஒரு குரு சார நட்சத்திரமாகும்.

ஏற்கெனவே வேலை சார்ந்த ஒப்பந்தம் செய்தவர்களை பயம் கொள்ளசெய்யும் செய்தி வரும். கட்டட வேலை கட்ட காண்ட்ராக்ட் எடுத்தவர்களுக்கு வேலையை கொஞ்சநாள் கழித்து ஆரம்பிக்க லாம் என்று கூறுவர். பணியாளர்கள் பாடாய்படுத்துவர். அல்லது வேலை செய்துகொண்டிருக்கும் பணியாளர்களை அப்புறமாக வேலை கொடுக்கிறோம் என்று அனுப்ப வேண்டியிருக்கும். செய்தி பிரிவில் வேலை செய்வோர் சஞ்சலம் பெறுவர். கைபேசி தகவல் கடன் வாங்கச் செய்யும்.

ரியல் எஸ்டேட், வீடு மாற்றும் புரோக்கர்கள் சற்று தேக்கநிலை காண்பர். உங்கள் வாரிசுகள், பரீட்சையில் படித்ததை எழுதும்போது, நிறைய மறந்துவிடுவர். உங்கள் இரண்டு சக்கர வாகனம் திருட்டுப் போகும் வாய்ப்புண்டு. தபால் நிலைய ஊழியர்கள், தலை சுற்றிப் போவர். 

பத்திரிகையாளர்கள், குறிப்பாக ஆன்மிக, ஜோதிட பத்திரிகை சார்ந்தோர் கொஞ்சம் ஜெர்க்காகும் வாய்ப்புண்டு. கோவிலில் பணிபுரிவோர், பதனமாக நடந்துகொள்ளவேண்டும். வீடு மாற்றும்போது அல்லது வீடு பழுது பார்க்கும்போது பொருட்கள் காணாமல் போக வாய்ப்புண்டு.

போக்குவரத்து துறையில் பணிபுரிவோர் சற்று கவனமாக இருக்கவேண்டும். முக்கிய மாக பள்ளி மாணவர்களுடன் மோதல் போக்கைத் தவிர்ப்பது நலம். 

சனி வக்ரகாலத்தில் எதிர்மறை வேலையை செய்வார். வக்ரகாளி, கோளி-நாதர் மற்றும் மகாலட்சுமி தாயாரை வணங்குவது நல்லது. பள்ளி கூடத்தில் அல்லது கோவிலில் வேலை செய்யும் கீழ்நிலை பணியாளர்களின் தேவைக் கேட்டு உதவவும். 

விருச்சிகம் 

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசியில் சந்திரன் நீசம் மட்டுமே நடக்கும். எந்த கிரகமும் உச்சமாகாது. எனவே விருச்சிக ராசியார், எப்போதும் துர்க்கையை வணங்குவது சிறப்பு.

2025 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை

விருச்சிக ராசியின் 5-ஆமிடத்தில் அமர்ந்த சனி, மேற்கண்ட காலகட்டத்தில், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பின்னோக்கிச் சென்று, வக்ரகாலத்தை தொடங்குவார். 

சனிபகவான் தனது இயல்புபடி சென்றுகொண்டிருந்த காலத்தில் நிறைய பழமையான விஷயங்களை மறுபடியும் புதுபிக்க முயன்று கொண்டிருப்பீர்கள். சனி வக்ரகாலம் ஆரம்பித்தவுடன், அந்த வேலைகள் சம்பந்த சுணக்கம் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம், உங்களின் திறமையான பணியாளர்கள் விலகிவிடுவது ஆகும். மேலும் இந்த பழமையான தொழிலை தொடங்கிய நிறுவனம் அல்லது ஏற்பட்டாளர்கள், அதனை கொஞ்சநாள் நிறுத்தி வைத்துவிடுவதாகவும் இருக்கும். உங்கள் பூர்வீக வீட்டை புதுப்பிக்க ஆரம்பித்த வேலைகள் சற்று ரெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கும். சினிமா கலைஞர்கள் மிகவும் விருப்பத்துடன் நடித்துக்கொண்டிருந்த, பழமையான நிஜ மனிதர்களின் கதைகள், பணத் தட்டுப்பாட்டால், அப்படியே அந்தரத்தில் நிற்கும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் சற்றே அயர்ச்சி உணர்வர். சில மந்திரிகள் தங்கள் பதவி பறிபோய் விட்டால் என் செய்வது என ஊசலாட்டம் கொள்வர். பழைய சமையல் குறிப்புகள், பாத்திரங்களை மறு பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது, சில நடைமுறைச் சிக்கல் ஏற்படும். உங்கள் குல தெய்வக் கோவிலுக்கு, சில கட்டட வேலைகளை கட்டித்தருவதாக, கொடுக்கப்பட்ட உறுதி இப்போது சற்று தாமதமாகும். கர்ப்ப ஸ்திரிகள், கொஞ்சம் வித்தியாசமாக உணர்வார்கள். ஏனோ அடிக்கடி மறதி ஏற்பட்டு எரிச்சல் ஏற்படும். நீங்கள் மேற்கொள்ளும் விரதம் சற்று பங்கப்படும். தயவுசெய்து, இந்த வக்ரகாலத்தில் எதையும் யூகமாக செய்யவேண்டாம். தப்பு தப்பாக மாறும். எனவே பங்கு வர்த்தகத்தை இந்த நேரத்தில் தள்ளிவைக்கவும். 

அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை

மேற்கண்ட நாட்களில், சனிபகவான், பூரட்டாதி நட்சத்திரத்திற்கு, பின்னோக்கி சென்று வக்ரமாகி அமர்வார். பூரட்டாதி என்பது ஒரு குரு சார நட்சத்திரமாகும்.

இந்த நேரங்களில், உங்கள் வாக்கில் தடுமாற்றம் ஏற்படும். நாக்கு பிரளும். ஏனெனில், சனியின் வக்ரத் தன்மை, ஜாதகரை இவ்விதம் அலைக்கழிக்கும். சில மந்திரிகளின் பேச்சு, பெரும் பிரளயத்தை உண்டாக்கி, பதவி விலகவும் காரணமாகிவிடும். விருச்சிக ராசியார், இந்த நேரத்தில், சிறு குழந்தைகள் அருகில் போகக்கூடாது. காதல் விஷயங்களை சற்று தள்ளி போடவும். உங்கள் பேச்சுமூலம் வருமானம் கிடைப்பவர்கள் சற்று சிக்கலை சந்திப்பார்கள். உங்கள் வாரிசு விஷயத்தில் கவனம் தேவை. பங்கு பத்திர விஷயங்களில், காசு புழக்கம் மட்டுப்படும். ஒப்பந்தங்களை சற்று நாள் கழித்து, ஆரம்பிக்கும்படி, உங்களுக்கு தகவல் கிடைக்கும். பள்ளி குழந்தைகள் நன்றாக படித்தாலும், பரீட்சை நேரத்தில் சுத்தமாக மறந்து திண்டாடுவர். கலைத்துறை சார்ந்த பண விஷயம் சார்ந்தோர், செய்தி தொடர்பாளர்கள், மானேஜர்கள், செட்டிங் போடுவோர், இவர்கள் தொழிலில் சுறுசுறுப்பின்னை உணர்வர். ஆரோக்கியம், கட்டடம், பணவிஷயம் என இவை சார்ந்த பத்திரிகை துறையினர் சற்று தேக்கம் காண்பர். ரியல் எஸ்டேட் துறையினர், ஏற்படுத்திய ஒப்பந்தம் அக்ரிமெண்டில் இருந்து, பணம் வரக்காணோமே என கவலை கொள்வர். வேள்வி யாகம் செய்யும்போது, சில மந்திரங்கள் தடுமாறும் அல்லது மறந்து போகும் வாய்ப்புண்டு.

பழனி முருகன், வக்ரகாளி, கோளிலிநாதர் என இந்த தெய்வங்களை வணங்கவும். கோவிலில், மடப்பள்ளியில் பிரசாதம் தயாரிக்கும் அந்தணருக்கு, கைபேசி அல்லது பயண சீட்டு சம்பந்தமான தேவைக் கேட்டறிந்து உதவவும். சனி வக்ரம் நிவர்த்தியானவுடன் உங்களின் நல்ல பலன்கள் தொடரும். 

தனுசு

தனுசு ராசியின் அதிபதி குரு ஆவார். இங்கு எந்த கிரகமும் உச்சம், நீசம் கிடையாது. எனவே சிவனை அல்லது கோதண்டராமரை வணங்குவது ஏற்புடையது.

2025 ஜூலை 12 முதல் அக்டோபர் 3 வரை

மேற்கண்ட காலகட்டத்தில் தனுசு ராசியின் 4-ஆமிடத்தில் செல்லும் சனி வக்ரமடைவார். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பின்னோக்கி நகர்ந்து. வக்ர நிலை அடைவார். சனி தனுசு ராசியாரின் 4-ஆமிடத்தில் இயல்பாக சென்றபோது, நிறைய மாற்றங் களை கொடுத்திருப்பார். இப்போது சனி வக்ரம் நிலை பெற்றிருப்பதால், அனைத்தும் ஒருவித தடுப்பான நிலையில் நின்றுவிடும். வீட்டை மாற்றியவர்கள், இது சரியில்லை அது சரியில்லை என அங்கலாய்ப்பர். கூடவே அந்த வீட்டு புரோக்கர் நம்மை நல்லா ஏமாற்றிவிட்டார் என புலம்புவர். வாகனத்தை மாற்றியவர்கள், அட, பழசே பரவாயில்லை என்று முனகுவர். வங்கி அக்கவுண்டை மாற்றியவர்கள் பழைய வங்கியில் நல்ல மரியாதையாக சீக்கிரமாக செய்துகொடுத்தார்கள். இந்த வங்கி அவ்வளவு சரியில்லை என்பர். பசு மாட்டை மாற்றியவர்கள் இது பால் ரொம்ப குறைவாக கொடுக்கிறதே என கவலை கொள்வர். பள்ளியை மாற்றியவர்கள் பழைய பள்ளி கூடத்தில் டீச்சரம்மா நல்லா சொல்லி கொடுத்தார்.  இங்கு அவ்வளவு சரியில்லையே என்பர். கிணற்றை மாற்றி, போர் பம்ப் போட்டவர்கள் தண்ணியே வரலை என்று கத்துவர். கைபேசியை மாற்றியவர்கள், தேவையின்றி செலவு செய்துவிட்டோமோ என வருத்தம் கொள்வர். பணியாளர்களை மாற்றியவர்கள் முன்னாடி இருந்த ஆளே பரவாயில்லை என்பர். கண் கண்ணாடிக்கு பதிலாக கண் லென்ஸ் போட்டவர்கள், இது பெரிய இம்சையாக இருக்கே என எரிச்சல்படுவர். இவ்விதமாக படகு, தோட்டம், வாழ்க்கைத் துணையின் தொழில் என மானாவாரியாக மாற்றியவர்கள் பெரிய தப்பு பண்ணிவிட்டோம் என மனசளவில் நொந்து போவார்கள். ஆனால் சனியின் வக்ரம் நிவர்த்தியானவுடன் அனைத்தும் மறுபடியும் சரியாகிவிடும். 

அக்டோபர் 3 முதல் நவம்பர் 27 வரை

மேற்கண்ட நாட்களில் தனுசு ராசியின் 4-ஆம் வீட்டில், சனிபகவான், இன்னும் பின்னோக்கி நகர்ந்து, பூரட்டாதி நட்சத்திரம் அமர்ந்து, வக்ர நிலையை தொடர்வார். பூரட்டாதி என்பது ஒரு குரு சார நட்சத்திரம்.

முன்பு வீட்டை விற்று, வேறுவீடு வாங்க முனைப்பு காட்டி, செயல்படுத்திக் கொண்டிருப்பீர்கள். அது சம்பந்தமான பணம் கைக்கு வர தாமதமாகும். இதனால் பண தட்டுப்பாடு இருப்பதுபோல் உணர்வீர்கள். உங்கள் தாயார், இளைய சகோதரனிடம் கோபித்துக்கொண்டு, உங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார். நீங்கள் குத்தகைக்கு விட்ட வயல், தோட்டம் இவை பிரச்சினை தரும். உங்கள் இரு சக்கர வாகனம் மக்கர் பண்ணும். உங்கள் எழுத்துப் பணி தடையாகும். 

பத்திரிகை ஏஜெண்ட், ரியல் எஸ்டேட், வாடகை தரர்கள் இவர்கள் சற்றே தேக்கம் காண்பர்.  பேருந்து ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், புகைவண்டி ஓட்டுனர்கள். என நிறையவித வாகன ஓட்டுனர்கள் தங்கள் வருமானம் சார்ந்த போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும். டி.வியில் செய்தி அறிவிப்பாளர்கள். மொழி உச்சரிப்பின் குறைகள் பெரிதாக குற்றம் சுமத்தப்படும்.

நூலகங்களில் வேலை செய்பவர்கள், புத்தக கணக்கை சரியாக பராமரிப்பது அவசியம். கைபேசி வரும் தகவல்களை சரிபார்க்கவும். உங்களுக்கும், உங்கள் தாயாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்படும். நீங்கள் ஆரம்பித்த டிரைவிங் ஸ்கூலில் ஆட்களே வராத தேக்கநிலை வரும். வேளாண்மை செய்வோர், மீன் பிடிப்போர், பள்ளி நடத்துவோர், எண்ணெய் தயாரிப்போர் என இவ்வகையினர் எதுவும் செயல்படாத மந்தத்தன்மையை அனுபவிப்பர். குலதெய்வம், தர்ம சாஸ்தா இவர்களை வணங்கவும். வக்ரகாளி, கோளி-நாதர் இவர்களையும் வழிபடுவது நன்று. 

உங்கள் தோட்டம் அல்லது படகுகளில் வேலை செய்பவர்களுக்கு, தேவையறிந்து முடிந்தளவு பணஉதவி செய்யுங்கள்.

-சனி வக்ரகாலப் பலன்கள்  வரும் இதழில் தொடரும்!

bala190725
இதையும் படியுங்கள்
Subscribe