Advertisment

வக்ர நிவர்த்தியாகும் கும்ப சனி! 12 ராசியினருக்கும் சனி தரும் பலன்கள்  -ஜோதிட வித்தகர் திருக்கோவிலூர் பரணிதரன்

vakirasani


கிரகங்களில் கர்ம காரகன், ஆயுள் காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி. இவருடைய சஞ்சார நிலையை முதன்மையாக எடுத்தே நமக்குரிய பலன்களை அறிகிறோம்.தமிழகத்தின் பாரம்பரிய பஞ்சாங்கமான வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 29-3-2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரித்து பலன்களை வழங்கிவரும் சனி, 2-7-2025 முதல் 17-11-2025 வரை வக்ரமாகியுள்ளார். 17-11-2025 அன்று வக்ர நிவர்த்தியாகி ஆட்சியாக சஞ்சரிக்கப் போகிறவர் 6-3-2026 அன்று மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.கும்பத்தில் 17-11-2025 அன்று வக்ர நிவர்த்தியடைந்து ஆட்சியாக சஞ்சரிக்கப் போகும் சனி 6-3-2026 வரை 12 ராசியினருக்கும் எத்தகைய பலன்களை வழங்கப் போகிறார் என்பதைப் பார்ப்போம்...

Advertisment

மேஷம்

மேஷ ராசியினருக்கு ஜீவனாதிபதியும், லாபாதிபதியுமான சனி, லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் இக்காலத் தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். முடங்கிக்கிடந்த தொழில் மீண்டும் லாபத்தில் இயங்க ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி யாகும். வியாபாரம் விருத்தியாகும். வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிம்மதி என்ற நிலையும் பொன், பொருள் சேர்க்கையும் உண்டாகும். நட்பு வட்டத்தால் அனுகூலம் கூடும். ஒருசிலருக்கு தொழில் மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம் என்று வாழ்க்கையில் நன்மையான மாற்றங்கள் ஏற்படும். பணம் பதவி என்று உங்கள் வாழ்க்கை செழிப்பாகும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு  புதிய துணை அமையும். தொட்டதெல்லாம் பொன்னாகும்.இவையெல்லாம் லாப சனியால் உண்டாகும் பலன்களாக இருக்க, அவருடைய 3, 7, 10-ஆம் பார்வைகளில் 3-ஆம் பார்வை உங்கள் ஜென்ம ராசிக்கு உண்டாவதால், வேலைப்பளு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். அதன்காரணமாக உடல்நிலையில் உபாதை ஏற்படும். ஒருசிலர் வேலையின் காரணமாக குடும்பத்தைவிட்டு வெளியில் செல்லும் நிலையும் ஏற்படும். தவறான நண்பர்களின் சேர்க்கையும் அதனால் சட்டப் பிரச்சினைகளை சந்திக்கவும் கூடும். வாகனப் பயணத்தில் எதிர்பாராத அசௌகரியங்கள் ஏற்படும்.சனியின் 7-ஆம் பார்வை உங்கள் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு உண்டாவதால் உறவுகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். புத்திரர்புத்திரிகள் உங்களுக்கு மன சங்கடம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ளலாம். பூர்வீக சொத்தில் வில்லங்கம், சட்டப் பிரச்சினை என்று ஏற்படலாம். குடும்பத்தில் கலகமும் சண்டை, சச்சரவும் தோன்றலாம். ஒருசிலர் காதல் வலையில் சிக்கி மீளமுடியாத அளவிற்கு மனம் மாறலாம். ஒரு நிலையில் இல்லாமல் குழப்பத்தில் சிக்கித் தவிக்கவேண்டிய நிலையும் ஒருசிலருக்கு வரும். நம்பிக்கையுடன் எதிர்பார்த்த குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். வேதனை தரும் நிகழ்ச்சிகளால் அதிர்ச்சி அடையக்கூடிய நிலையும் சிலருக்கு ஏற்படும்.சனியின் 10-ஆம் பார்வை உங்கள் ஆயுள் ஸ்தானத்திற்கு உண்டாவதால் உங்கள் உடல் நிலையில்  அவ்வப்போது ஏதேனும் சங்கடங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். மருத்துவச்செலவு அதிகரிக்கும். மற்றவருக்கு தெரியாது என்று நீங்கள் செய்கிற மறைமுக வேலைகள் வெளிப்பட்டு அதனால் அவமானப்பட வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படும். எதிர்பாராத சங்கடங்களும் தம்பதி யரிடையே கருத்து வேறுபாடும் உண்டாகும்.
இவையெல்லாம் ராசிக்கு பதினொன் றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வைகளால் உண்டாகும் பலன்கள் என்றாலும், 11-ல் சஞ்சரிக்கும் சனியால் பொருளாதாரநிலை மிகவும் சிறப் பாகவே இருக்கும். எல்லாவற்றையும் சமாளித்திடக் கூடிய சக்தியும் உண்டாகும்.

Advertisment

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு பாக்கியாதிபதியும், ஜீவனாதிபதியுமான சனி, ஜீவன ஸ்தானத் தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் இக்காலத்தில், வேலை, வருமானம், உத்தியோகம், தொழில் என்று எல்லாவற்றிலும் அதிகபட்ச நெருக்கடியை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உங்கள் லாப ஸ்தானமான மீனத்திற்கு கும்பம் விரய ஸ்தானம் என்பதால் வரவு- செலவிலும் புதிய முதலீட்டிலும் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொன்னார்கள், அரசியல்வாதிகள் சொன்னார்கள் என்று உங்கள் வரம்பிற்குமீறி செயல்படக்கூடாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு எவருடைய சிபாரிசுகளுக்கும் இடம் கொடுக்காமல் செயல்படுவது மட்டுமே இக்காலத்தில் நன்மையை உண்டாக்கும். இல்லையென்றால் மெமோ, இடமாற்றம், தற்காலிக பணி நீக்கம் என்றும் சிலருக்கு ஏற்படலாம். பொதுவாக ஜீவன காரகனான சனி ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் காலத்தில் செய்துவரும் தொழிலில் பிரச்சினைகளை ஏற்படுத்துவார். அரசியல்வாதிகளுக்கு நெருக்கடிகளை உண்டாக்குவார். லாபத்துடன் இயங்கிவந்த வியாபாரத்திலும் நெருக்கடியை ஏற்படுத்துவார். வேலைத்தேடி வருபவர்களுக்கு பண இழப்பையும் அலைச்சலையும் உண்டாக்குவார். ஆரோக்கியத்திலும் சங்கடங்களை ஏற்படுத்துவார். மார்பு வலி, மனக்குழப்பம், தேவையற்ற பயம், படிப்பில் சிரமம், குடும்பத்தில் பிரச்சினை, அவதி என்ற நிலை ஏற்படும். மதிப்பிற்கும் மரியாதைக்கும் பின்னடைவு உண்டாகும். பணம் தீய வழிகளில் செலவாகும். புதிய முயற்சிகள் இழுபறியாகும். இவையெல்லாம் பத்தாமிட சனியால்


கிரகங்களில் கர்ம காரகன், ஆயுள் காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி. இவருடைய சஞ்சார நிலையை முதன்மையாக எடுத்தே நமக்குரிய பலன்களை அறிகிறோம்.தமிழகத்தின் பாரம்பரிய பஞ்சாங்கமான வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 29-3-2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரித்து பலன்களை வழங்கிவரும் சனி, 2-7-2025 முதல் 17-11-2025 வரை வக்ரமாகியுள்ளார். 17-11-2025 அன்று வக்ர நிவர்த்தியாகி ஆட்சியாக சஞ்சரிக்கப் போகிறவர் 6-3-2026 அன்று மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.கும்பத்தில் 17-11-2025 அன்று வக்ர நிவர்த்தியடைந்து ஆட்சியாக சஞ்சரிக்கப் போகும் சனி 6-3-2026 வரை 12 ராசியினருக்கும் எத்தகைய பலன்களை வழங்கப் போகிறார் என்பதைப் பார்ப்போம்...

Advertisment

மேஷம்

மேஷ ராசியினருக்கு ஜீவனாதிபதியும், லாபாதிபதியுமான சனி, லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் இக்காலத் தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். முடங்கிக்கிடந்த தொழில் மீண்டும் லாபத்தில் இயங்க ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி யாகும். வியாபாரம் விருத்தியாகும். வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிம்மதி என்ற நிலையும் பொன், பொருள் சேர்க்கையும் உண்டாகும். நட்பு வட்டத்தால் அனுகூலம் கூடும். ஒருசிலருக்கு தொழில் மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம் என்று வாழ்க்கையில் நன்மையான மாற்றங்கள் ஏற்படும். பணம் பதவி என்று உங்கள் வாழ்க்கை செழிப்பாகும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு  புதிய துணை அமையும். தொட்டதெல்லாம் பொன்னாகும்.இவையெல்லாம் லாப சனியால் உண்டாகும் பலன்களாக இருக்க, அவருடைய 3, 7, 10-ஆம் பார்வைகளில் 3-ஆம் பார்வை உங்கள் ஜென்ம ராசிக்கு உண்டாவதால், வேலைப்பளு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். அதன்காரணமாக உடல்நிலையில் உபாதை ஏற்படும். ஒருசிலர் வேலையின் காரணமாக குடும்பத்தைவிட்டு வெளியில் செல்லும் நிலையும் ஏற்படும். தவறான நண்பர்களின் சேர்க்கையும் அதனால் சட்டப் பிரச்சினைகளை சந்திக்கவும் கூடும். வாகனப் பயணத்தில் எதிர்பாராத அசௌகரியங்கள் ஏற்படும்.சனியின் 7-ஆம் பார்வை உங்கள் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு உண்டாவதால் உறவுகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். புத்திரர்புத்திரிகள் உங்களுக்கு மன சங்கடம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ளலாம். பூர்வீக சொத்தில் வில்லங்கம், சட்டப் பிரச்சினை என்று ஏற்படலாம். குடும்பத்தில் கலகமும் சண்டை, சச்சரவும் தோன்றலாம். ஒருசிலர் காதல் வலையில் சிக்கி மீளமுடியாத அளவிற்கு மனம் மாறலாம். ஒரு நிலையில் இல்லாமல் குழப்பத்தில் சிக்கித் தவிக்கவேண்டிய நிலையும் ஒருசிலருக்கு வரும். நம்பிக்கையுடன் எதிர்பார்த்த குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். வேதனை தரும் நிகழ்ச்சிகளால் அதிர்ச்சி அடையக்கூடிய நிலையும் சிலருக்கு ஏற்படும்.சனியின் 10-ஆம் பார்வை உங்கள் ஆயுள் ஸ்தானத்திற்கு உண்டாவதால் உங்கள் உடல் நிலையில்  அவ்வப்போது ஏதேனும் சங்கடங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். மருத்துவச்செலவு அதிகரிக்கும். மற்றவருக்கு தெரியாது என்று நீங்கள் செய்கிற மறைமுக வேலைகள் வெளிப்பட்டு அதனால் அவமானப்பட வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படும். எதிர்பாராத சங்கடங்களும் தம்பதி யரிடையே கருத்து வேறுபாடும் உண்டாகும்.
இவையெல்லாம் ராசிக்கு பதினொன் றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வைகளால் உண்டாகும் பலன்கள் என்றாலும், 11-ல் சஞ்சரிக்கும் சனியால் பொருளாதாரநிலை மிகவும் சிறப் பாகவே இருக்கும். எல்லாவற்றையும் சமாளித்திடக் கூடிய சக்தியும் உண்டாகும்.

Advertisment

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு பாக்கியாதிபதியும், ஜீவனாதிபதியுமான சனி, ஜீவன ஸ்தானத் தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் இக்காலத்தில், வேலை, வருமானம், உத்தியோகம், தொழில் என்று எல்லாவற்றிலும் அதிகபட்ச நெருக்கடியை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உங்கள் லாப ஸ்தானமான மீனத்திற்கு கும்பம் விரய ஸ்தானம் என்பதால் வரவு- செலவிலும் புதிய முதலீட்டிலும் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொன்னார்கள், அரசியல்வாதிகள் சொன்னார்கள் என்று உங்கள் வரம்பிற்குமீறி செயல்படக்கூடாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு எவருடைய சிபாரிசுகளுக்கும் இடம் கொடுக்காமல் செயல்படுவது மட்டுமே இக்காலத்தில் நன்மையை உண்டாக்கும். இல்லையென்றால் மெமோ, இடமாற்றம், தற்காலிக பணி நீக்கம் என்றும் சிலருக்கு ஏற்படலாம். பொதுவாக ஜீவன காரகனான சனி ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் காலத்தில் செய்துவரும் தொழிலில் பிரச்சினைகளை ஏற்படுத்துவார். அரசியல்வாதிகளுக்கு நெருக்கடிகளை உண்டாக்குவார். லாபத்துடன் இயங்கிவந்த வியாபாரத்திலும் நெருக்கடியை ஏற்படுத்துவார். வேலைத்தேடி வருபவர்களுக்கு பண இழப்பையும் அலைச்சலையும் உண்டாக்குவார். ஆரோக்கியத்திலும் சங்கடங்களை ஏற்படுத்துவார். மார்பு வலி, மனக்குழப்பம், தேவையற்ற பயம், படிப்பில் சிரமம், குடும்பத்தில் பிரச்சினை, அவதி என்ற நிலை ஏற்படும். மதிப்பிற்கும் மரியாதைக்கும் பின்னடைவு உண்டாகும். பணம் தீய வழிகளில் செலவாகும். புதிய முயற்சிகள் இழுபறியாகும். இவையெல்லாம் பத்தாமிட சனியால் உண்டாகும் பலன்களாக இருக்க, ரிஷப ராசியினரான உங்களுக்கு அவரே பாக்கியாதிபதியாகவும் இருப்பதால் பெருமளவில் சங்கடங்களை ஏற்படுத்த மாட்டார். தக்க சமயத்தில் பெரியவர்களின் ஆதரவையும் உதவியையும் உண்டாக்குவார். தெய்வ பலத்தையும் வழங்குவார். ஜனன ஜாதகத்தில் சனி அமர்ந்த இடத்தின் நிலைக்கேற்பவும் இப்பலன்களில் மாற்றம் ஏற்படும். பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி தரும் பலன்கள் இப்படி இருக்க, அவருடைய 3, 7, 10-ஆம் பார்வைகளில் 3-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமன 12-ஆமிடத்திற்கு உண்டாவதால், வீண் அலைச்சல், காரியம் கை கூடாமை மன உளைச்சல், பொருள் இழப்பு, எதிரிகளால் இடையூறு, தொழிலில் நஷ்டம். உத்தியோகத்தில் சங்கடம், ஒருசிலருக்கு பார்த்துவரும்  வேலையை இழக்க வேண்டிய நிலை, ஓய்வில்லை, உறக்கமில்லை, நிம்மதியில்லை, தேவைக்கேற்ற வருமானமில்லை, வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்று ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருக்கும்.சனியின் 7-ஆம் பார்வை உங்கள் சுக ஸ்தானத்திற்கு உண்டாவதால் இடையூறுகள், அலைக்கழிப்புகள், குடும்பத்தில் வீண்விரோதம், தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு, தாய்வழி உறவுகளுடன் விரோதம், பூர்வீக சொத்துகளில் வில்லங்கம் ஏற்பட்டு கைக்கு வராத நிலை, வாகனத்தால் சங்கடம், வீடு வகையில் பிரச்சனை கல்வியில் தடை உற்றார்- உறவினர்களுடன் பகை வீண் அலைச்சலால் டென்ஷன், சுகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு. நோய்களால் சோதனை என்று ஏற்படும்.சனியின் 10-ஆம் பார்வை உங்கள் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு உண்டாவதால்,  கணவன்- மனைவியரிடையே கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு ஆதனால் ஒருசிலருக்குப் பிரிவு குடும்பத்தில் அந்நியர்கள் தலையீடு அதனால் ஒருசிலருக்கு குடும்பத்தை விட்டு விலக வேண்டிய நிலை வயிறு சம்பந்தமான நோய்கள் கூட்டுத் தொழிலில் நெருக்கடி, நன்றாகப் பழகி வந்தவர்களுடன் விரோதம் வருமானக் குறைவுடன் பணக் கஷ்டமும் கடன் தொல்லையும் ஏற்படும்.இவையெல்லாம் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பலன்கள் என்பதால் இக்காலத்தில் அனைத்திலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நன்மையை ஏற்படுத்தும். பார்த்துவரும் வேலையில் இக்காலத்தில் நெருக்கடி ஏற்படும். எதிர்பார்த்த முன்னேற்றமில்லை. ஊதிய உயர்வில்லை என்பதற்காக வேறு வேலைக்கு முயற்சிக்கவும் செய்வீர்கள் என்றாலும் அதற்குரிய நேரம் இதுவில்லை என்பதை உணர்ந்து பார்த்து வரும் வேலையை இக்காலத்தில் தொடர்வது நன்மையாகும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு அஷ்டமாதிபதி யும், பாக்கியாதிபதியுமான சனி, பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் இக்காலத்தில், செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பார்த்துவரும் வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். புதிய சொத்து சேரும். தோல்வி தொல்லை, வம்பு, வழக்கு  நெருக்கடி என்றிருந்த நிலை மாறும். வருமானம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவிற்கு வரும். அவர்களை எதிர்த்து வெற்றிகொள்ளும் நிலையும் உண்டாகும். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் ஏற்பட்டிருந்த மனக்கசப்பு விலகும். தந்தையின் ஆரோக்கியம் சீராகும். ஒருசிலர் தந்தையின் தொழிலை மேற்கொண்டு ஆதாயம் அடைவீர்கள். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். சமுதாயத்தில் நீங்களும் ஒரு முக்கிய இடத்தை எட்டுவீர்கள். இவையெல்லாம் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பலன்களாக இருக்க, மிதுன ராசியினரான உங்களுக்கு அவரே பாக்கியாதிபதியாகவும் இருப்பதால் இக்காலத்தில் நன்மைகள் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். வாழ்க்கையின் அடிப்படைகள் பூர்த்தியாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். தெய்வ அருள் உண்டாகும். ஆலயங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு வரும் காலமாக இக்காலம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சேமிப்பு உயரும். பொன், பொருள், வாகனம் சேரும்.பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி தரும் பலன்கள் இப்படி இருக்க, அவருடைய 3, 7, 10-ஆம் பார்வைகளில் 3-ஆம் பார்வை உங்கள் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திற்கு  உண்டாவதால், முதலீட்டிற்கேற்ற வருமானமில்லை, போதுமான வேலையாட்கள் இல்லையென்று முடங்கிக்கிடந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும். வியாபாரம் விருத்தியாகும். மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலை வாய்ப்பிற்காக முயற்சித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். தொழிலில் மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவை நிகழும். ஒருசிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். பணம் பல வழிகளில் வந்துகொண்டே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  சனியின் 7-ஆம் பார்வை உங்கள் சகோதர கீர்த்தி ஸ்தானத்திற்கு உண்டாவதால், உங்கள் ஆரோக்கியம் சீரடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிகரிக்கும். தொழில் விரித்தியாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதி களுக்கு இளைய தலைமுறையின் ஆதரவு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வசதியும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். உங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொல்லைகள் கொடுத்து வந்தவர்களை அடையாளம் கண்டு அவர் களை விரட்டி அடிப்பீர்கள்.  எதிர்பாராத பண வரவு இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும் என்றா லும், சகோதர- சகோதரிகளுடன் பகை ஏற்படும்.சனியின் 10-ஆம் பார்வை உங்கள் சத்ரு ஜெய ஸ்தானமான ஆறாம் இடத்திற்கு உண்டாவதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவடையும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வாழ்க்கைக்குரிய பாதை தெரியும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எந்த ஒன்றையும் எதிர்கொண்டு அதில் வெற்றிபெறக்கூடிய நிலை உண்டாகும். எதிரிகள் உங்களைத் தேடிவந்து சமாதானம் பேசக்கூடிய அளவிற்கு உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.இவையெல்லாம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியும் அவருடைய பார்வைகளாலும் உண்டாகும் பொதுப் பலன்களாகும்.பொதுவாக பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் காலம்தான் 12 ராசியினருக்கும் பொற்காலம் என்பதால் இக்காலம் உங்களுக்கு மிகப் பெரும் யோக காலமாக இருக்கும்.


கடகம்

கடக ராசியினருக்கு சப்தமாதிபதியும், அஷ்டமாதிபதியுமான சனி, அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் இக்காலத்தில், உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். வாழ்க்கையில் பல்வேறு இடர்பாடுகள், நெருக்கடிகள் தோன்றும். குடும்பத்தில் கஷ்டம் பிரச்சினை என்ற நிலை ஏற்படும். ஒருசிலருக்கு திடீரென உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பிட்டலுக்கு செல்ல வேண்டியதாக இருக்கும். ஒருசில தம்பதியரிடையே கருத்து வேறுபாடும் பிரிவும் ஏற்படும். கணவரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். அல்லது அவர் அவமானத்திற்கு ஆளாக நேரும். பொதுவாக மனக்கசப்பும் முயற்சியில் தடைகளும் ஊர் விட்டு வேறு ஊருக்கு சென்று வசிக்க வேண்டிய நிலையும் ஏற்படும். வேறு நபர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பெரிய மனிதர்களால் கிடைத்துவந்த நன்மைகளை இக்காலத்தில் எதிர்பார்க்க முடியாமல் போகும். தெய்வம்கூட உதவவில்லையே என்று நினைத்திடும் அளவிற்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் என்பது பொதுவிதி. இதையே, கண்டங்கள் நான்கில் எட்டில் கருதிய சனி வரின் தண்டங்கள் மிக உண்டாகும். திரவியம் நாசமாகும். கொண்டதோர் மனைவி வேறாம். குறித்திடும் செட்டு நஷ்டம். பண்டுள நாடு விட்டு பரதேசம் போவான் பாரே!'' என்று பழம் பாடல் குறிப்பிடுகிறது.இவையெல்லாம் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பலன்களாக இருக்க, கடக ராசியினரான உங்களுக்கு அவரே சப்தமாதிபதியாகவும் இருப்பதால் புதிய நட்புகள் ஏற்படும். அவர்கள் வழியே உங்கள் வேலைகள் நடந்தேறும்.கடக ராசியினரான உங்களுக்கு சனி எதிர்மறையான பலன்களை வழங்கிடக் கூடியவர் என்றாலும், ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் கர்ம வினைக்கேற்ப பலன்களை வழங்கிடும் சனி அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில், அவருடைய 3, 7, 10-ஆம் பார்வைகளில் மூன்றாம் பார்வை உங்கள் ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்திற்கு உண்டாவதால் செய்துவரும் தொழிலில் தடைகள்,  நெருக்கடி உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு திடீர் இடமாற்றம், பதவி உயர்வில் தடை என்று ஏற்படும். வேலைக் காக மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். சுலபமாக நடந்துவந்த வேலைகளிலும் தடைகள் உண்டாகும். வியாபாரத்தில் முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லையென்று ஒருசிலர் வருந்துவீர்கள். எதிர்பார்த்த வரவில் தடைகள் ஏற்படும். உடலில் உபாதைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும். செல்வாக்கு, கௌரவம் போன்றவற்றில் பங்கம் உண்டாகும். ஜீவனவகையில் கஷ்டம் வரும். அரசியலில் சரிவு உண்டாகும். அரசாங்கத்தால் கிடைத்துவந்த நன்மைகளில் இக்காலத்தில் பாதிப்பு உண்டாகும். முழங்காலில் வலி ஏற்படும்.சனியின் 7-ஆம் பார்வை உங்கள் தன குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு உண்டாவதால் துன்பத்திற்குமேல் துன்பம் தோன்றும். பணப்புழக்கம் குறையும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். உங்கள் வார்த்தைகளால் குடும்பத்திற்குள்ளும் வெளிவட்டாரத்திலும் பிரச்சினைகள் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும். குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கும். ஒருசிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்லவும் நேரும். பொருட்கள் களவு போகும். பொருளாதார இழப்பு ஏற்படும். சந்தோஷமும் நிம்மதியும் பறிபோகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தத்தளிக்கும். வரவைவிட செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் ஏமாற்றம் உண்டாகும். வலது கண் பார்வையில் பாதிப்பு ஏற்படும்.சனியின் 10-ஆம் பார்வை உங்கள் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்திற்கு உண்டாவதால், புத்திரபுத்திரர்களால் வேதனை உண்டாகும். பூர்வீக சொத்தில் வம்பு வழக்கு என்று உண்டாகும். உயர்கல்வி முயற்சியில் தடைகள் தோன்றும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தீய எண்ணங்களால் அலைமோதும். ஒருசிலர் காதலில் சிக்க நேரிடும். குடும்பத்தில் கலகமும், சண்டை, சச்சரவும் நிறைந்திருக்கும். உங்களுக்கு வேதனைதரும் நிகழ்ச்சிகள் நடக்கும். அதனால் அதிர்ச்சி அடைவீர்கள். கணவன்- மனைவிக்குள்ளும் விரிசல் தோன்றும். புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு அந்த பாக்கியம் தள்ளிப்போகும்.இவையெல்லாம் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியாலும் அவருடைய பார்வைகளாலும் உண்டாகும் பொதுப் பலன்களாகும்.பொதுவாக ஏழரைச்சனியின் காலத்தில் அந்த ஏழரை ஆண்டுகளும் ஒருவருக்கு கிடைத்திடும் பலன்களை அஷ்டம சனியின் காலத்தில் மொத்தமாக வழங்கிடுவார் சனி என்பதால் இக்காலத்தில் அனைத்திலும் நீங்கள் எச்சரிக்கையாகவும், கவனமாகவும், நிதானமாகவும் இருக்கவேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு சத்ரு ஜெய ஸ்தானாதிபதியும் சப்தமாதிபதியுமான சனி, சப்தம ஸ்தானம், களத்திர ஸ்தானம், நட்பு ஸ்தானம் என்னும் 7-ஆமிடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் இக்காலத்தில், செய்துவரும் தொழில், வியாபாரம்,  குடும்பம், உத்தியோகம் என்று அனைத்திலும் எதிர்பாராத நெருக்கடிகள், பிரச்சினைகள் ஏற்படும். உங்களுடன் நன்றாகப் பழகி வந்தவர்களுடனும் கருத்து வேறுபாடு உண்டாகும். கூட்டுத் தொழிலில் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும். ஒருசில தம்பதியரிடையே அந்நியரால் பிரிவு ஏற்படும். தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் அவப்பெயருக்கு ஆளாக வேண்டிய நிலையும் ஒருசிலருக்கு ஏற்படும். வயிறு சம்பந்தமான பிரச்சினைகள், மூச்சுத்திணறல்,  மர்ம உறுப்புகளில் ரணம் அல்லது நோய், வாழ்க்கைத் துணைக்கு ரோகம், வாழ்க்கைத் துணையிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் தனித்து வாழும் சூழ்நிலை உண்டாவதுடன், இருக்கும் இடத்தைவிட்டு வேறு இடம் சென்று வசிக்கவேண்டிய நிலையும் ஒருசிலருக்கு உருவாகும். உங்களைவிட தகுதிக் குறைவானவர்களால் உங்கள் செயல்களிலும் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படும். அந்நியர் களால் அலைச்சல் பாதிப்பு கண்டங்கள், பணவிரயம் ஏற்படும் என்பது பொதுவிதி.இவையெல்லாம் சப்தம ஸ்தானத் தில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பலன்களாக இருக்க, சிம்ம ராசியினரான உங்களுக்கு அவரே சத்ரு ஜெய ஸ்தானாதிபதியாகவும் இருப்பதால் என்ன நிலை வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் நிலையும், சக்தியும் உங்களுக்கு உண்டாகும்.ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி தரும் பலன்கள் இப்படி இருக்க, அவருடைய 3, 7, 10-ஆம் பார்வைகளில் 3-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கு உண்டாவதால், தந்தையின் உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். தந்தைவழி உறவுகளும் உங்களுக்கு எதிராவார்கள்.  பெரியோரால் கிடைத்துவந்த நன்மைகளில் தடையுண்டாகும். எதிலும் நிம்மதியற்ற நிலை ஏற்பட்டு உங்கள் மனம் சங்கடத்தில் மூழ்கும். எடுக்கும் முயற்சிகளும், வேலைகளும் இழுபறியாகும். 9-ஆமிடம் என்பது உங்கள் ஜீவன ஸ்தானத்திற்கு விரய ஸ்தானம் என்பதால் உத்தியோகத்தில் நெருக்கடி அதிகரிக்கும். மேலதிகாரியின் கோபத்திற்கும் ஆளாக நேரும். செய்துவரும் தொழில் மந்தமாவதுடன் லாபமில்லா நிலையும் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். நினைத்தபடி எந்தவொரு வேலையையும் செய்துமுடிக்க முடியாத நிலை உருவாகும்.சனியின் 7-ஆம் பார்வை உங்கள் ஜென்ம ராசிக்கு உண்டாவதால், உங்கள் கர்ம வினைக்கேற்ற பலன்களை அனுபவிக்க வேண்டியதாக இருக்கும். ஒருசிலரின் அந்தஸ்திற்கும் செல்வாக்கிற்கும் பாதிப்பு வரலாம். கௌரவம் பாதிக்கப்படலாம். உடல்நிலை யில் சங்கடம் தோன்றலாம். தீய நண்பர்களின் சகவாசத்தால் பலவித இன்னல்கள் உருவாகலாம். ஒழுக்கத்தில் பாதகம் ஏற்படலாம். எதையோ இழந்ததுபோல் மனம் தவிக்கலாம். திடீரென்று உண்டாகக்கூடிய பிணிகளால் ஆயுள் பற்றிய அச்சம் வரலாம். இருக்கும் இடத்தைவிட்டு, மனைவி, மக்களைவிட்டு வெளியேறும் நிலையும் ஒருசிலருக்கு உண்டாகலாம். எதிர்பாலினர் சகவாசத்தால் புத்தி மழுங்கி தவறான பாதையில் சென்று வருத்தப்படவும் நேரலாம். ஏன் பிறந்தோம் எதற்காக பிறந்தோம் என்ற கேள்விகள் இக்காலத்தில் எழும். திட்டமிட்டபடி எதையும் செய்ய முடியாமல் போட்டிகளை சமாளிக்க முடியாமல் தடுமாற வேண்டியதாக இருக்கும். நட்பு வட்டத்திலும் பலவிதமான சங்கடங்கள் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும்.சனியின் 10-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கு உண்டாவதால், நேற்றுவரை இருந்த நிம்மதி இன்றைக்கில்லை, நேற்றுவரை கிடைத்த சுகம், சந்தோஷம் இன்றைக்கில்லை என்ற நிலை உண்டாகும். உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். உடலில் அசதி உண்டாகும். தாயாரின் உடல் நிலையில்  ஏதாகிலும் ஒரு பாதிப்பு ஏற்படும். தாய்வழி உறவுகளுடனும் விரோதம், பகை என்று ஏற்படும். வாகனங்களால் செலவும் இழப்பும் ஏற்படும். அல்லது களவு போகும். சிலருக்கு பூமி மற்றும் வாகனங்களை விற்று அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க வேண்டிய நிலையும் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலையும் ஏற்படும். கடன் தொந்தரவு மனதை வாட்டும். உடல்நலன், மனநலன் என்று அனைத்தும் பாதிக்கப்படும்.இவையெல்லாம் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பலன்கள் என்பதால் இக்காலத்தில் அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்குமுன் அதுபற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். புதியவர்களிடம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்கவேண்டும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்பதும் நன்மையை உண்டாக்கும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு பூர்வ புண்ணியாதி பதியும், சத்ரு ஜெய ஸ்தானாதிபதியுமான சனி, சத்ரு ஜெய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் இக்காலம், உங்களுக்கு பிரபல யோக காலமாகும். இக்காலத்தில் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும். உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்களும் உங்களைத் தேடிவருவர். பணப் பழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகி தேர்ச்சி பெறுவீர்கள். ஆரோக்கிய நிலையை அடைவீர்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலமிழப்பர். உங்களுக் குள் ஒரு அபார ஆற்றல் உண்டாகும். உங்களை பயமுறுத்திக் கொண்டிருந்த வழக்கு, விவகாரங்கள் சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கனவு நனவாகும்.இவையெல்லாம் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பலன்களாக இருக்க, கன்னி ராசியினரான உங்களுக்கு அவரே சத்ரு ஜெய ஸ்தானதிபதியாகவும் இருப்பதால் இக்காலத்தில் உங்களுக்கு நன்மைகளுக்குமேல் நன்மைகள் நடக்கும். உங்கள் செல்வாக்கு அந்தஸ்து யாவும் உயரும். பட்டம் பதவி கிடைக்கும். வாழ்க்கைக்குரிய அடிப்படைகள் பூர்த்தியாகும். தொட்டதெல்லாம் பொன்னாகும். எதிரிகள் எப்படி முயற்சி செய்தாலும் அவர்களால் உங்களை எதுவும் செய்ய முடியாமல் போகும். எந்த ஒன்றிலும் உறுதியாகவும் வேகமாகவும் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி தரும் பலன்கள் இப்படி இருக்க, அவருடைய 3, 7, 10-ஆம் பார்வைகளில் 3-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்திற்கு உண்டாவதால் உடலில் இருந்த பாதிப்புகள் அகலும். பெரிய அளவில் காணப்பட்ட நோய்களும் மருந்து மாத்திரை களால் குணமாகும். உங்கள் கௌரவம் சிறப் படையும்.  திடீர் அனுகூலமும் ஆதாயமும் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எட்டிச் சென்றவர்களும் கிட்டே வருவார்கள். சட்ட விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் தக்க சமயத்தில் உதவிகள் கிட்டும். மறைமுகத் தொல்லைகள் விலகும். செல்வாக்கு உயரும் என்றாலும், இக்காலத்தில் யாரையும் நம்பி செயல்படாதீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.சனியின் 7-ஆம் பார்வை உங்கள் விரய ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்திற்கு உண்டாவதால், பொது சேவையில் புகழ் பெறுவதுடன் அதன்மூலமாக ஆதாயமும் காண்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான வசதிகளை உருவாக்கிக்கொள்வீர்கள். அதன்மூலம் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.  துணையின் அக்கறை உங்கள்மீது அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் கிட்டும். சிலர் இக்காலத்தில் தந்தையை பிரிய நேரிடும். இக்காலத்தில் தந்தையின் உடல்நலனில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். இக்காலத்தில் வீட்டில் சுப காரியங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது.சனியின் 10-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு தைரிய, வீரிய, பராக்கிரம  ஸ்தானமான 3-ஆமிடத்திற்கு உண்டாவதால், உங்களிடம் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் காணக்கூடிய நிலை உண்டாகும். சகோதர- சகோதரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் கூடும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். தொழில் நிறுவனம் நடத்திவருபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு ஏற்படும். ஒருசிலருக்கு புதிய இடம் வீடு வாங்கும் நிலை உண்டாகும். உங்கள் தைரியம் கூடும். வாக்கில் தெளிவு இருக்கும். மற்றவர்கள் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கும் நிலை உண்டாகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பூமி வகையில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். உங்கள் அறிவாற்றல் அதிகரிக்கும். உங்கள் பெருமையை ஊரார் பேசக்கூடிய நிலை உண்டாகும்.இவையெல்லாம்  ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகக்கூடிய பொதுப் பலன்களாகும்.இக்காலம் என்பது உங்களுக்கு பொற்காலமாகும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகின்ற நேரம் இந்த நேரம். செல்வாக்கு அந்தஸ்து எல்லாம் உயரும். பட்டம் பதவி என்று கிடைக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

-ராசிபலன் தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 94443 93717

bala151125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe