சனி தசையில் சனி புக்தி 3 வருடம் 2 மாதம் 6 நாட்கள்

சனி தசையில் முதல் புத்தியாக வரும் அந்த காலகட்டம் பெரும் பொறுப்புகள், அனுபவங்கள் மற்றும் சோதனைகள் வரக்கூடிய நேரமாகும். சனி ஒரு கர்ம கிரகம் என்பதனால் கடந்த கால செயல்பாடுகளை அதன் விளைவுகளை வெளிப்படுத்தக் கூடிய காலகட்டமாக அமையும். இந்த கால கட்டத்தில் வெகு கால முயற்சிகள் பலனளிக்கும். ஒழுக்கம், பொறுப்புணர்வு, தன்னம்பிக்கை அதிகரிக்கும், வாழ்க்கை நிலைத்தன்மை அடையும், நீதிமன்றம், அரசு அல்லது நிலம் தொடர்பான பிரச்சினைகள் அணுக வாய்ப்புகள் உண்டு.

Advertisment

சனி தசையில் புதன் புக்தி 2 வருடம் 8 மாதம் 9 நாட்கள் 

மனதின் திறனும், ஆளுமையும், அதிகரிக்கும். திட்டமிடல், நடைமுறை அறிவு போன்றவை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபமும் புதிய ஒப்பந்தங்களும் அமையும். கல்வி, ஆராய்ச்சி, எழுத்து, கணக்கு, சட்ட நிர்வாகம் போன்ற துறைகளில் வெற்றியை வழங்கும். பேச்சுத்திறன், திட்டமிடும் திறன், வளர்ச்சி போன்றவை மேலோங்கும். மன அழுத்தமும், சிந்தனை குறைவு போன்றவை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. உறவுகளில் புரிதல் சிக்கல் போன்றவை அமைவதோடு தொழில்முறை இடங்களிலும் சில வாக்குவாதங்கள் நிகழும். 

Advertisment

சனி தசையில் கேது புக்தி ஒரு வருடம் ஒரு மாதம் 9 நாட்கள் 

இந்த காலங்கள் வாழ்வில் ஆழமான ஆன்மிக மாற்றங்களும், மன அமைதியின் தேடல்களும் உண்டாகும். இது பரிசோதனைகளும், விழிப்புணர்வும் கூடிய காலமாக கருதப்படுகின்றது. பழைய கர்மவினைகள் முடிவுக்கு வரும். குறிப்பாக கடன் தீர்வு, உறவு முறிவு, புதிய தொடக்கம் போன்றவற்றை வழங்குவதோடு மனம் பழைய சிக்கலில் இருந்து விடுபட்டு, சீரிய வாழ்க்கையின் வசம் திருப்பி விடப்படும். 

சனி தசையில் சுக்கிரனின் புக்தி  3 வருடம் 2 மாதங்கள் 

சில இன்னல்களுக்கும், இடர்களுக்கும், பின்பு வரும் இதம் அளிக்கக்கூடிய காலமாக இந்த காலம் அமையும். உழைப்பின் இனிமையான பலனை அனுபவிக்கும் ஒரு அற்புதமான காலகட்டம். வீடு, வாகனம், திருமணம், குழந்தை பிறப்பு, படைத்தல், வியாபாரம், நீண்டகால முயற்சிக்கான பலன் போன்றவை நேரும். உடல் சோர்வு, பாலின பிரச்சினைகள், மனதளர்ச்சி, பணமும், ஆசைகளும் போட்டியிடும். சோதனைகளையும் சிலசமயம் வழங்கிவிடும். சனி தசையில் சூரிய புக்தி ஒரு ஆண்டு காலம் மட்டுமே அதிகாரமும், பொறுப்பும், மோதிக் கொள்ளும் காலமாக இந்த காலம் அமைகின்றது. இந்தக் காலகட்டத்தில் பணியிடங்களிலும், குடும்பத்தில், குழந்தைகளிடமும், வாக்குவாதங்களை மேலோங்கச் செய்யும். குறிப்பாக தனக்குக் கீழாக பணிபுரியும் தொழிலாளிகளிடம் இணக்கமற்ற சூழலை வழங்குவதோடு, உடல் சோர்வு, கண் பிரச்சினை, தலை வலி, இரத்த அழுத்தம், போன்றவற்றை வழங்கிவிடும். 

Advertisment

சனி தசையில் சந்திர புக்தி  2 ஆண்டுகள் 10 மாதங்கள் 

மனம் தன்வசம் இல்லாமல் செயல்படும் ஒரு காலகட்டமாக இது அமைந்துள்ளது. குறிப்பாக இந்த காலகட்டம் திருமணத்தடையும், குழந்தை பிறப்பில் தடையும் வழங்க காத்திருக்கின்றது. உயர் சிகிச்சைகளாக கருதப்படும் ஐவிஎப் (ஒயஎ) போன்ற சிகிச்சைகளை இந்த காலகட்டத்தில் நிகழ்த்திக் கொள்ளாமல் இருப்பது சிறப் பைத் தரும். சனி வெளியுலகை கடினமாக்கும், சந்திரன் உள்ளார்ந்த மனதை கலங்க செய்யும், இதனால் மன அமைதியை வளர்க்கும் ஆன்மிகத்திற்கு செல்வதே சிறப்பு. 

சனி தசையில் செவ்வாய் புக்தி  1 ஆண்டு 7 மாதங்கள் 

கட்டுப்பாட்டையும், பொறுமை யும், வழங்கக்கூடிய சனியும், வேகம் மற்றும் துணிவு, சண்டையின் மனப்பான்மையைத் தரும் செவ்வாயும் இணையும் காலம் என்பதால் மனது முரண்பாட்டை சமநிலைப்படுத்த நேரம் எடுத்துக்கொண்டே செல்லும் நேரமாக இருக்கிறது. பெரிய முயற்சிகள் வெற்றியடையும், கட்டடங்கள், நிலம், சொத்து, சம்பந்தமான லாபங்கள் கிடைக்கும். எதிரிகளை வெல்வது கடினமான சூழ்நிலையில் இருந்தாலும், தன் வசமாகும் சூழலை செவ்வாய் அருளும். பயணங்களில் மட்டும் சற்று கவனத்துடன் இருக்கும் காலமாக இந்த காலத்தை எடுத்துக் கொண்டால் சிறப்பை வழங்க காத்திருக்கின்றது. 

சனி தசையில் ராகு புக்தி 2 ஆண்டுகள் 10 மாதங்கள் 

நிஜத்தையும், நிதர்சனத்தையும் அளிக்கும் சனியும், மாயையை வெளிப்படுத்தும் ராகுவும், நேருக்கு நேராக மோதும் காலமாக இது திகழ்கின்றது. வெளிநாட்டு வாய்ப்பு, தொழில் விரிவாக்கம், புகழ், ஆராய்ச்சி, வியாபாரம் போன்ற துறைகளில் சாதனையை அளித்து. மணக்குழப்பம், திடீர் நிகழ்வுகள், நம்பிக்கை இழப்பு, பொய்மைகள், ஏமாற்றங்கள் போன்றவற்றையும் தன்வசம் சேர்த்து செல்லும் காலமாக இந்த காலகட்டம் அமைந்துள்ளது. 

சனி தசையில் குரு புக்தி 2 ஆண்டுகள் 2 மாதங்கள் 

உழைப்பை கற்றுக்கொடுக்கும் சனி அந்த உழைப்பின் பலனை ஆசீர்வாதமாக அளிக்கும் குரு, கர்ம பலன் அதிலும் நன்மையான கர்ம பலன்கள் கிடைக்கும் பொற்காலமாக இந்த காலத்தை கூறலாம். தொழில், கல்வி, குடும்பம், பணம் ஆகியவற்றில் முன்னேற்றத்தையும், ஆன்மிகம், குரு அருள் போன்ற ஆசீர்வாதங்களையும் இந்த காலகட்டம் வழங்கும். சில சமயங்களில் தவறான தீர்மானத்தையும், மந்தமான முன்னேற்றத்தையும் வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆசைகளின் அளவு குறைய குறைய அமைதியை நாடி மனம் செல்லும் ஒரு அற்புதமான காலம் இந்தக் காலம். 

பரிகாரங்கள் 

சனிக்கிழமைகளில் திருநள்ளாறுக்கு சென்றுவருவது மொத்த பிரச்சினையையும் அழித்துவிடும் தன்மையை வழங்கும். அடிமட்ட கூலித்தொழிலாளிகளுக்கு செருப்பு மற்றும் உணவு அதனுடன் தண்ணீர் வழங்குவது சனி தசையில் வலுவை குறைக்கும். நீசமாகவோ, அஸ்தங்கமாகவோ அமைந்த சனி இருந்து தசை நடக்கும்பட்சத்தில் நீல சங்கு பூவை கொதிக்கவைத்து அந்த நீரை அருந்திவருவது பெரும் பலனை அளிக்கும். எழரைச் சனி மற்றும் அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனிகள் நடப்பில் இருப்பவர்கள் நெல்லிக்காய் சாறு அருந்துவது மிகமிக சிறப்பை வழங்கும். வாயு மைந்தன் ஆஞ்சனேயனை வழிபடுவதும் ஆதித்ய ஹிருதயம் இல்லங்களில் ஒலிக்கச் செய்வதும் இடரின் அளவை குறைத்து நம்வசம் சேர்க்கும். 

செல்: 80563 79988