துலாம்

துலா லக்னத்திற்கு சனிபகவான் 4, 5-ஆம் அதிபதியாகும். செவ்வாய் 2, 7-ஆம் அதிபதி. இந்த கிரகச் சேர்க்கை துலா லக்னத்திற்கு அளப்பறிய வாழ்வியல் மாற்றத்தை தரக்கூடிய கிரக இணைவாகும். இந்த இணைவு இருப்பவர்கள் காதல் திருமணம் செய்கிறார்கள். பள்ளி பருவத்தில் துவங்கும் காதல் வாழ்நாள் முழுவதும் தொடரும். திருமணத்திற்கு பிறகும் தம்பதிகள் காதலர்களாகவே வாழ்கிறார்கள். முதல் குழந்தை பிறந்தபிறகு வாழ்வாதாரம் உயரும். இரண்டாம் குழந்தை பிறந்தபிறகு வெற்றியின் உச்சத்தை தொடுகிறார்கள். நண்பர்கள், தொழில் கூட்டாளி கள், வாடிக்கையாளர்கள், வாழ்க்கை துணையால் நன்மை நடக்கும். தம்பதிகள் இருவருக்கும் நிலையான- நிரந்தரமான தொழில் உத்தியோக வாய்ப்புகள் உண்டு. வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துகள் மிகுதியாக இருக்கும். பூர்வீகச் சொத்தால் ஆதாயம் உண்டு.தம்பதிகள் இணைந்து கூட்டுத்தொழில் நடத்துவார்கள். பேங்கிங், ஆடிட்டிங், டீச்சிங், மார்க்கெட்டிங், விவசாயம், கால்நடை வளர்த்தல், பண்ணை தொழில், ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறை, சுரங்கத் தொழில் போன்றவற்றில் தனித்தன்மையுடன் மிளிர்கிறார்கள். தங்களது துடுக்கான பேச்சால் மற்றவர்களைக் காயப்படுத்தும் குணமுண்டு. அசைவ உணவு சாப்பிடுவதில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். குல கௌரவத்தை காப்பாற்றுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். பூர்வீகத்தில் பிறந்த பூர்வீகத்திலேயே வாழ்வார்கள்.இவர்கள் அய்யனார், கருப்பசாமி போன்ற காவல் தெய்வங்கள் குலதெய்வமாக இருக்கும். அதிர்ஷ்டத்தை தேடி இவர்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதிர்ஷ்டம் இவர்களைத் தேடி வரும். அரசியல் ஆதாயம் கௌரவப் பதவிகள் உண்டு.

பரிகாரம்

இவர்கள் வீரபத்திரரை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கைகூடும்..

விருச்சிகம்

Advertisment

விருச்சிக லக்னத்திற்கு சனிபகவான் 3, 4-ஆம்  அதிபதி. செவ்வாய் ராசியாதிபதி மற்றும் 6-ஆம் அதிபதி. ஒரு நல்லது நடந்தாலும் அதற்கு ஜாதகர் காரணம். ஒரு கெட்டது நடந்தாலும் அதற்கு ஜாதகரை காரணமாக இருப்பார். தகவல் தொடர்பு சாதனங்களான பேஸ்புக், யூடுப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின்மூலம் வருமானம் சம்பாதிப்பார்கள்.உடன்பிறந்த சகோதரர்களின் வாழ்க்கைக்கு இவர்கள் பொறுப்பு ஏற்கவேண்டிய சூழ்நிலை இருக்கும். சகோதரர் கடனாளியாக  இருப்பார். ஜாமீன் சார்ந்த பிரச்சினைகளால் அவதி உண்டு. ஞாபக சக்தி குறைவு இருக்கும். கண், காது, மூக்கு போன்ற உறுப்புகள் தொடர்பான பிரச்சினைகள்  இருக்கும். பிரிக்கமுடியாத சொத்துகள் இருக்கும். பாகப் பிரிவினையால் மன உளைச்சல் உண்டாகும். கடன்பட்டு சொத்து வாங்குவார்கள். வாழ்வில் ஒரு நாளாவது கடனுக்காக ஒரு சொத்தை இழப்பார்கள். தாய்க்கு ஆரோக்கிய குறைபாடு மிகுதியாக இருக்கும்.எதிலும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளமாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சந்திக்கும் மனப் போராட்டத்தால் துக்கம் சோகம் நிரம்பியவர்களாக இருப்பார்கள். வெளியில் சொல்லமுடியாத நோய்கள், பிரச்சினைகள் அதிகமிருக்கும். வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் எளிதில் முன்னுக்கு வரமுடியாது. திருமணத்தடை மிகுதியாக இருக்கும்.நிலையான- நிரந்தரமான தொழில், உத்தியோகம் அமையாது. பிறரைச் சார்ந்து வாழவேண்டிய சூழ்நிலை இருக்கும். பரம்பரை நோய் தாக்கம் கை, கால் மூட்டுவலி சார்ந்த பாதிப்பு மிகுதியாக இருக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமை ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபடவேண்டும்.

தனுசு

தனுசு லக்னத்திற்கு சனிபகவான் 2, 3-ஆம் அதிபதி செவ்வாய் 5, 12-ஆம் அதிபதி பூர்வீகத்தில் வசிக்கும் வாய்ப்பு குறைவு. வெளியூர், வெளிநாட்டில் வாழ்ந்தால் வாழ்க்கைத் தரம் உயரும். பேங்கிங் ஆடிட்டிங், டீச்சிங், தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற துறைகளில்மூலம் வருமானம் உண்டு. ஐந்து ரூபாய் சம்பாதிக்க 50 ரூபாய் இழப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவு செய்ய அதிக சிரமத்தை சந்திப்பார்கள். ஜாமின் சார்ந்த பிரச்சினை இருக்கும். பங்குச்சந்தையில் அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். அடிக்கடி தொழில், உத்தியோகத்தை, வசிக்கும் வீட்டையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட முடியாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற தெரியாதவர்கள். ஜாமீன் சார்ந்த பிரச்சினைகள் உண்டு. முறையான திட்டமிடுதல் இருக்காது. உடன்பிறந்தவர்களால் பூர்வீக சொத்தால் மன உளைச்சல் இருக்கும். கஞ்சத்தனம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். பங்கு பத்திரங்கள், சொத்துகள், நகைகள் இவற்றை அடமானம் வைத்து வாழ்வாதாரம் நடத்துவார்கள். குலதெய்வ வழிபாட்டில் குற்றம் குறை இருக்கும் அல்லது குலதெய்வம் தெரியாது. அறிவுக்கூர்மை, சமயோகித புத்தி குறைவுபடும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். வைத்தியச் செலவு அதிகரிகமாக இருக்கும்..தகாத பேச்சுக்களால் எதிரிகளை உருவாக்குவார்கள். குடும்ப உறவுகளை இவருக்கு எதிரியாக இருப்பார்கள். உணவு கட்டுப்பாடு இருக்காது.

பரிகாரம்

சனிக்கிழமை காவல் தெய்வங்களை வழிபட இன்னல்கள் நீங்கும்.

மகரம்

மகர லக்னத்திற்கு செவ்வாய் 4, 11-ஆம் அதிபதி. சனிபகவான் லக்னாதிபதி மற்றும் தன ஸ்தானாதிபதி. இவர்களுக்கு லக்னத்  திலேயே செவ்வாய் உச்சம் பெறுவதால் ஆரோக்கியத்துடன் திடகாத்திரமான உடல்வாகு பெற்றவர்களாக இருப்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள்.எப்பொழுதும் புத்துணருடன் இருப்பார்கள். நல்ல தோற்றம் நிறைந்தவர்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். தற்பெருமை அதிகம் உண்டு. சொத்துகளின் சேர்க்கை மிகுதியாக இருக்கும். மனம் புத்தி அறிவை ஒருநிலைப்படுத்துவார்கள். கற்ற கல்வி பயன் தரும். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் தாய்வழிச்  சொத்தும் இருக்கும். பல தொழில் வல்லுனராக இருப்பார்கள். கல்குவாரி, ரியல் எஸ்டேட், கால்நடை வளர்ப்பு, பண்ணை தொழில், பேச்சை மூலமாகக்கொண்ட தொழில் என பல வழிகளில் வருமானம் இருக்கும். குறைந்தபட்சம் பத்து பேருக்கு அது சம்பளம் கொடுக்கக்கூடிய நிலையில் இவர்களுடைய வாழ்க்கை இருக்கும்.வீட்டு விலங்குகள் வளர்ப்பதில் அதிக ஆர்வமிருக்கும். இவர்கள் வீட்டில் செடி வளர்ப்பார்கள். எல்லா விசயத்திலும் அனுபவம் உடையவர்கள். பெரிய மனிதர்களின் நட்பை விரும்புபவர்கள். தங்களை பிரபலங்களாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள். ஆதாயம் இல்லாத செயலில் ஈடுபட மாட்டார்கள். அடிக்கடி வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றம் வந்துகொண்டே இருக்கும். மற்றவர்களுக்கு கெடுதல் நினைக்க மாட்டார்கள். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் நடக்கும். முதல் திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்து மறு விவாகம் செய்தபிறகு வாழ்க்கை வளர்ச்சியை நோக்கி செல்லும்.

பரிகாரம்

சனிக்கிழமை ஸ்ரீ ஆஞ்சனேயரை வழிபடவும்

கும்பம்

Advertisment

கும்ப லக்னத்திற்கு சனிபகவான் லக்னாதிபதி மற்றும் விரயாதிபதி.செவ்வாய்  3, 10-ஆம் அதிபதி. இந்த கிரகங்களின் சேர்க்கை கும்ப ராசிக்கு நன்மை- தீமைகளை சம விகிதத்தில் கலந்து வழங்கும். நல்ல பண்பு சகிப்புத்தன்மை நிறைந்தவர்களாக இருப்பார்கள். மூன்றாம் இடம் என்பது தகவல் தொடர்பை குறிக்கிறது. தகவல் தொடர்பு சாதனங்கள்மூலம் வைரல் வீடியோக்களை போட்டு சம்பாதிக்கும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம். எங்கேயோ நடக்கும் சம்பவங்களை உடனே படமாக்கி வைரல் வீடியோக்கள் வெளியிடுவதில் வல்லவர்கள். கமிஷன் அடிப்படையான தொழில்களில் தமக்கென்று தனி முத்திரை பதிக்கிறார்கள். அதேபோல இவர்கள் வாழ்நாள் முழுவதும் மாமனார்- மாமியாரின் அடிமையாக வாழ வேண்டி உள்ளது அல்லது அவர்களை வெறுப்பை சம்பாதிக்கிறார்கள். சிலர் உடன்பிறந்தவர்கள் அல்லது மாமனார்- மாமியாருடன் இணைந்து கூட்டு தொழில் செய்கிறார்கள். இவர்களுக்கு வரவேண்டிய முறையான பாகப்பிரிவினை சொத்து மாமனார்- மாமியாரால் தடைப்படுகிறது. சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மாமனார்- மாமியாரை வைத்து பராமரிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. ஜாமீன் சார்ந்த பிரச்சினை அதிகம் உண்டு. அடமான சொத்துகள் நகைகளை மீட்க முடியாமல் அவதியை அனுபவிக்கிறார்கள். வலுவான தார தோஷ அமைப்பாகும். தொழில் அல்லது வேலை மூலமாக எதிர்பாலின நட்பு ஏற்பட்டு பதிவு திருமணம் செய்கிறார்கள். இவர்களின் காதலில்  காமமே முன்னிலை வகிக்கிறது. வெளிநாட்டு வாழ்க்கை நல்ல அனுகூலமான பலன்களை ஏற்படுத்தித் தருகிறது.

பரிகாரம்

ஸ்ரீ காலபைரவர் வழிபாட்டால் நன்மைகளை அதிகரிக்க முடியும்.

மீனம்

மீன லக்னத்திற்கு சனிபகவான் லாபாதிபதி மற்றும் விரயாதிபதி. செவ்வாய் இரண்டு ஒன்பதாம் அதிபதி. குலத்தொழில் அரசியல் பதவி, அரசாங்க உத்தியோகம், ஆசிரியர் தொழில் புரோகிதம், ஜோதிடம், மார்க்கெட்டிங் போன்றவற்றில் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில், வேலையில் சிறப்பான லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிகப்படியாக குடும்ப உறுப்பினர்களை சார்ந்தே வாழ்வார்கள். எதிர்பார்த்த நேரத்தில் விரும்பிய உதவிகள் கிடைக்கப்பெறும். கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைப்பார்கள். அண்டை, அயலாறுடன் எல்லை தகராறு, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் உருவாகும்.பள்ளி, கல்லூரி காலத்தில் நன்றாக புரிந்து படிப்பார்கள். போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றிபெறுவார்கள். கற்ற கல்வி பயன்தரும். பூர்வீகத்தில் வாழ விரும்பாதவர்கள். தலைநகரங்களில் வாழ விருப்பப்படுபவர்கள். எதிலும் இரட்டை தன்மை அதிகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சுயநலமும் தற்பெருமையும் அதிகம் நிறைந்தவர்கள். தான் மட்டுமே அறிவாளி தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் அதிகமுண்டு.நல்ல சுகம் நிறைந்தவர்கள். பேச்சால் பிறரை வதைப்பார்கள். மனஅமைதி குறைவு எப்பொழுதும் உண்டு. பலருக்கு இரண்டு தொழில், இரண்டு குடும்பம் உண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதற்குத் தகுந்த விரயமும் உண்டு. சனி தசை செவ்வாய் புக்தி அல்லது செவ்வாய் தசை சனி புக்தி காலங்களில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கிறது. பலரின் வாழ்க்கைக்கு வழி சொல்லும் இவர்கள் தமது சொந்த பிரச்சினைக்கு முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவார்கள். தந்தைமூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவார்கள். எதிரிகளை உறவாடி வெல்வார்கள். பரம்பரை நோய்களால் அதிகமான மருத்துவச் செலவு உண்டு.

பரிகாரம்

துர்க்கை, காளி போன்ற உக்கிர தெய்வ வழிபாட்டால் நினைத்ததை அடைய முடியும். இரு ஆதிபத்திய கொண்ட கிரகங்கள் ஒரு ஆதிபத்தியரீதியாக சுபப் பலனை தந்தாலும் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக அசுபப் பலனை தந்தே தீரும். சனி, செவ்வாய் சேர்க்கை உள்ள பலர் உயர்ந்த அந்தஸ்துடனே வாழ்கிறார்கள். இவர்கள் எப்பொழுதும் விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம் போன்றவற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள உரிய வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

செல்: 98652 20406