மேஷம்

மேஷ லக்னத்திற்கு செவ்வாய்  1, 8-ஆம் அதிபதி. சனிபகவான் 10, 11-ஆம் அதிபதி. லக்னாதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானாதிபதி தொழில்காரகன் சனிபகவானுடன் சேரும்போது ஜாதகருக்கு தொழில் சார்ந்த எண்ணங்கள் மிகைப்படுத்தலாக இருக்கும். ராசி அதிபதி செவ்வாய் தொழில்தானத்தில் உச்சம் பெறுவதால் புதிய தொழில்களை உலகிற்கு அறிமுகப்படுத்துபவர்கள் சனி, செவ்வாய் சம்பந்தமுள்ள மேஷ ராசியினராகவே இருக்கிறார்கள்.காவல்துறை, இராணுவம், சிவில் சர்வீஸ் போன்ற பணிகளில் தனக்கென்று தனி முத்திரை பதிக்கிறார்கள். ரியல் எஸ்டேட், கட்டுமானம், கனரக வாகனத் தொழி-ல் இவர்களுக்கு ஈடுபாடு அதிகமுள்ளது.தொழிலைத் தேடி அவர்கள் செல்லவேண்டிய அவசியம் இல்லை. அவர்களைத் தேடி தொழில் வரும். பலர் தொழில் வித்தகராக இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் உண்டு.குறைந்தது பத்து பேருக்கு அது சம்பளம் கொடுக்கக்கூடிய அளவில் வாழ்வாதாரம் ஜாதகருக்கு இருக்கும். என் அனுபவத்தில் மேஷ லக்னத்தை சேர்ந்த பலர் சனி, செவ்வாய் சம்பந்தம் நல்ல நிலையில் இருப்பவர்கள் பிரபலமான தொழிலதிபர்களாகவே வலம்வருகிறார்கள். சனியும் செவ்வாயும் லக்னத்துடன் தொடர்புகொண்டால் அவர்களுக்கு திருமண வாழ்க்கை சில போராட்டங்களைத் தரலாம். குறிப்பாக செவ்வாய் அஷ்டமாதிபதியாக வருவதால்  பெண்களுக்கு அஷ்டமஸ்தானம் மாங்கல்ய பலம் குறைவால் திருமணத்தடை இருக்கலாம். அல்லது கணவனால் மனவேதனை இருக்கும். கணவனால் மனவேதனை வருவதற்கு பண வேதனை பிரதானமான காரணியாக இருக்கும்.
எந்த குடும்பம் பெண்ணின் வாழ்வாதாரத் தில் இயங்குகிறதோ அந்தப் பெண்ணிற்கு மாங்கல்ய தோஷமுள்ளது என்று பொருள். அதாவது ஒரு பெண்ணிற்கு மாங்கல்ய தோஷமிருந்தால் கணவனால் பிரயோஜனம் இருக்காது. சில பெண்கள் விதிக்கு கட்டுப்பட்டு கணவரை வைத்து சோறு போடுவார்கள். சிலர் பிரச்சினையை பெரிதாக்குவார்கள். சனி, செவ்வாய் இரண்டும் அசுப வலிமை பெற்றிருந்தால் ஏற்ற- இறக்கமான பலன்களை அதிகப்படுத்தும். விபத்து, கண்டம், சர்ஜரி, காலதாமதத் திருமணம், மண வாழ்க்கையில் நிம்மதி இல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

பரிகாரம்

பழனி மலை முருகனை வழிபடவும்.

ரிஷபம்

Advertisment

ரிஷப லக்னத்திற்கு சனிபகவான் 9 10-ஆம் அதிபதியாவார். செவ்வாய் 7, 12-ஆம் அதிபதியாக பலன் தருவார். சனிபகவான் ரிஷப லக்னத்திற்கு பாதகாதிபதியாக வருவார். ஒரு ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் எது என்பது பாக்கிய ஸ்தானம் தந்தை ஸ்தானம், தர்ம ஸ்தானம். பத்தாமிடம் என்பது கர்மஸ்தானம். தொழில் ஸ்தானம். ரிஷப ராசி, லக்னத்திற்கு தந்தையால் அனுகிரகம் இருந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை அடைய முடியாது. சிலர் சித்தப்பா பெரியப்பா என கூட்டு குடும்பத்துடன் இணைந்து பரம்பரை குலத் தொழிலை செய்கிறார்கள்.சனி, செவ்வாய் சம்பந்தமுள்ள ரிஷப லக்னத்திற்கு தந்தையால் நன்மை நடந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது.தந்தையால் ஆதாயம் இல்லாமல் இருந்தால் திருமண வாழ்க்கை ஏதோ பரவாயில்லாமல் இருக்கும். பாக்கிய ஸ்தானமே பாதகஸ்தானமாக செயல்படுகிறது. சனி, செவ்வாய் சம்பந்தமுள்ள  பலர் காதல் திருமணம் செய்துகொண்டு தங்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு வாழ்க்கைத்துணையால், நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் விரயம் மிகுதி யாக இருக்கும். 7, 9, 10, 12 சம்பந்தம் திருமணத் திற்குபிறகு பிரிவினையைத் தருகிறது. அதுவும் இரண்டு குழந்தை பிறந்தபிறகு பிரிந்து வாழ்கிறார்கள். இரண்டு குழந்தை பிறந்தபிறகு விவாகரத்தாகி மறு திருமணம் நோக்கி செல்கிறார்கள். சில தம்பதிகள் ஆளுக்கு ஒரு ஊரிலும் நாட்டிலும் இருக்கிறார்கள். வருடத்தின் சில குறிப்பிட்ட நாட்களில் சந்திக்கிறார்கள். சிலருக்கு யூரின் இன்ஃபெக்ஷன், கல்லடைப்பு, பைல்ஸ் போன்ற உடல் உபாதை களால் பாதிப்பு ஏற்படு கிறது. ஏழாம் இடத்திற்கு சனி, செவ்வாய் சம்பந்தமுள்ள அரசியல் பிரமுகர்கள் மறைமுக எதிரி களால் ஆபத்து ஏற்படுகிறது. நண்பர்கள் இவர்கள்மூலம் கிடைக்கும் ஆதாயத்திற்காக  பழகுகிறார்கள். ஆபத்துக் காலங்களில் உதவுவது இல்லை. 

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை சுக்கிர ஓரையில் விநாயகரை வழிபடவும்.

மிதுனம்

மிதுன லக்னத்திற்கு செவ்வாய் 6, 11-ஆம் அதிபதி. சனி 8, 9-ஆம் அதிபதி. 6, 8, 9, 11-ஆம் பாவகம் சம்பந்தப்படும். சனி, செவ்வாய் சம்பந்தமுள்ள மிதுன லக்னத்தினருக்கு 8, 11 எனும் பணபரஸ்தானங்கள் இயங்குவதால் அவர்களுக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்டம் சார்ந்த அமைப்பு எப்பொழுதுமே இருக்கும். மிதுன ராசிக்கு செவ்வாய் ஆறாம் அதிபதி. அவர் அஷ்டம ஸ்தானத்துடன் செயல்படுவதால் கடன் என்ற பாதிப்பு வந்தாலும் நோய் என்ற பிரச்சினைகள் வந்தாலும் லாப ஸ்தானத்துடன் சம்பந்தப்படுவதால் அவர்கள் மீண்டு வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு உருவாகும். மிதுனம் உபய லக்னம் என்பதால் நன்மை வந்தாலும் தீமை வந்தாலும் 50 சதவிகிதம் மட்டுமே அதனுடைய விளைவு கள் ஜாதகரை தாக்கும். எந்த பிரச்சினையை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள். சனி, செவ்வாய் இரண்டும் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் இவர்களுக்கு அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் மிகச் சாதகமாக இருக்கும். சனி, செவ்வாய் நல்ல நிலைமையில் இருந்தாலே எதிர்பாராத யோகங்களை ஏற்படுத்தும். இந்த யோகம் சிலருக்கு தொழில், அதிகாரம், செல்வம் ஆகியவற்றில் மிகப்பெரிய முன்னேற்றத்தைத் தரும். சாதாரண நிலையிலுள்ள ஒருவரை, தொழில் அதிபராகவோ அல்லது மிகப்பெரிய பணக்காரராகவோ மாற்றும் சக்திகொண்டது இந்த கிரகச் சேர்க்கை. வாழ்க்கை திடீரென்று உயரத்திற்கு  செல்லும். எதிர்பாராத பணவரவு, தொழிலில் பெரிய வெற்றியை பெற்று சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவார்கள். இந்த அமைப்புள்ள மிதுன ராசி லக்னத்தினர் பலர் செல்வாக்கு, புகழ், அந்தஸ்து மிகுந்த ஜோதிடராக உள்ளார்கள்.கெட்ட கிரகங்கள் நல்ல பலனையும் தரும் என்பதற்கு இதுவே உதாரணமாகும். தந்தையால் பெரிய பலன் கிடைப்பதில்லை. பலர் இரண்டு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஊருக்காக ஒரு வாழ்க்கையும் தனக்காக ஒரு வாழ்க்கை யையும் வாழ்கிறார்கள்.

பரிகாரம்

புதன்கிழமைகளில் கருட வழிபாடு செய்வது நல்லது.

கடகம்

கடக லக்னத்திற்கு சனிபகவான் 7, 8-ஆம் அதிபதி. செவ்வாய் பகவான் 5, 10-ஆம் அதிபதி. பெரும்பான்மையான கடக லக்னத்திற்கு திருமணத்திற்குபிறகு அரசு உத்தியோகம் கிடைக்கிறது. அல்லது முதல் குழந்தை பிறந்ததற்குபிறகு வாழ்வாதாரம் உயர்கிறது. இரண்டாவது குழந்தை பிறந்தபிறகு சமுதாயத்தில் ஒரு உயர்ந்த அந்தஸ்தை நோக்கி செல்கிறார்கள்.வாழ்க்கைத் துணைமூலமாக வருமானம் உண்டு. வாழ்க்கைத் துணை பெரிய பொருளாதாரத்துடன் இருப்பார். திருமணத்தின் போது அதிக வரதட்சனை கிடைக்கும்.தம்பதிகள் ஓர்யிரும் ஈருடலுமாக வாழ்வார்கள். சுய உழைப்பில் சொத்து சேர்க்கை மிகுதியாக இருக்கும். உப தொழில்மூலமாக வருமானம் உண்டு. உத்தியோகத்தில் இருந்துகொண்டே தொழில் செய்வார்கள். அல்லது தொழில் செய்துகொண்டே பார்ட் டைம் வேலை பார்ப்பார்கள். கமிஷன் அடிப்படையான தொழிலில் தமக்கென்று ஒரு தனி முத்திரையை பதிப்பார்கள். கற்ற கல்வி பலன் தரும்.அரசின் டெண்டர் காண்ட்ராக்ட், ஆலோசனை சொல்லி சம்பாதிப்பது, டீச்சிங், பங்குச் சந்தை, ரேஸ் சீட்டு போன்ற அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை அடைகிறார்கள். அறிவுக்கூர்மை, புத்தி சாதுரியம் மிகுதியாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.காதல் விவகாரங்களில் அவமானத்தை சந்திப்பார்கள். அல்லது காதல் திருமணம் செய்துகொண்டபிறகு வழக்கால் பிரிவினை வரும். பரம்பரை நோய் தாக்கம் இவர்களுக்கு இருக்கும். பூர்வீக சொத்துமூலமாக வம்பு, வழக்கு வரலாம். குலதெய்வத்தின்மீது தீராத பற்றுகொண்டவராக இருப்பார்கள். பெரிய பண வளர்ச்சி, பொருளாதாரம் இருந்தால்கூட இவர்களின் வாழ்க்கைக்கு எதிரியாக இருப்பது மாமியாராகும். தம்பதிகளுக்குள் பெரிதாக கருத்து வேறுபாடு இல்லாமல் இருந்தால்கூட மாமியாரின் கொடுமையால் பல குடும்பங்கள் பிரிந்துள்ளது. பெற்ற தாயை விட்டுக்கொடுக்க முடியாமல்  வாழ்க்கையைத் துணையை இழந்தவர்கள் பலர் உள்ளார்கள். சிலர் சட்டபூர்வமில்லாத வாழ்க்கைத் துணையால் நரக வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

பரிகாரம்

திங்கட்கிழமை அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

சிம்மம்

Advertisment

சிம்ம ராசிக்கு சனிபகவான் 6, 7-ஆம் அதிபதி. செவ்வாய் 4, 9-ஆம் அதிபதி. சிம்ம ராசிக்கு சனி, செவ்வாய் சம்மந்தம் இருந்தால் கல்வியில் சிறுவயதில் தடை இருக்கும். அதிகமாக அரியர்ஸ் இருக்கும். பல வருடம் கழித்து  பாஸ் செய்வார்கள். உயர்கல்வி வாய்ப்பு குறைவாக இருக்கும். தாய்- தந்தை அல்லது வாழ்க்கைத்துணை நோயாளியாக இருப்பார்கள் அல்லது கடனாளியாக இருப்பார்கள். அல்லது இவர்களுக்கு வைத்தியம் செய்து ஜாதகர் கடனாளியாவார். ஒரு சொத்தை கடனுக்காக இழப்பார்கள். தாய்- தந்தையின் அனுகிரகம் இருக்காது. வாழ்க்கைத்துணை ஜாதகரை எதிரியாக நினைப்பார். பூர்வீகச் சொத்து இருந்தாலும் ஜாதகர் அதை பயன்படுத்த முடியாமல் தாய்- தந்தை தடையாக இருப்பார்கள். இந்த அமைப்புள்ள விவசாயிகள் பலர் பெரிய லாபம் ஈட்ட முடியாமல் உள்ளார்கள். சொத்துகளுக்கு நல்ல வாடகைதாரர்கள் கிடைக்கமாட்டார்கள். கால்நடைகள் அடிக்கடி நோய்வாய்ப்படும். அவற்றின்மூலம் வருமானம் கிடைக்காது. சிலர் அதிகமாக கடன் வாங்கி திருமணம் செய்து கடனாளியாகவே இருப்பார்கள். கௌரவத்திற்காக கடன்படுவார்கள். இந்த அமைப்புள்ளவர்கள் வெளிநாடு சென்றால் வெளிநாட்டு கலாச்சாரத்திற்கு தகுந்த வருமானம் இருக்காது. அங்கேயும் கடன் வாங்கி கஷ்டப்படுவார்கள். நிலையான- நிரந்தரமான தொழில், உத்தியோகங்கள் அமையாது.இந்த அமைப்புள்ளவர்களின் வாழ்க்கையில் வெளியில் சொல்ல முடியாத பல ரகசியங்கள் இருக்கும். அந்திம காலத்தில் நல்ல உயர்வான வாழ்க்கை கிடைக்கும். வாழ்க்கையை வாழவேண்டிய காலத்தில் வாழாமல் காலம் தாழ்ந்து வாழ்வதில் ஏதேனும் பயன் உண்டா?

பரிகாரம்

சிம்ம லக்னத்தினர் அடிக்கடி ரத்தம் தானம் செய்வது நல்லது அல்லது வாரம் ஒருமுறை பீட்ரூட் சாப்பிடவேண்டும்.

கன்னி

கன்யா லக்னத்திற்கு சனிபகவான் 5, 6-ஆம் அதிபதி. செவ்வாய் 3, 8-ஆம் அதிபதி. இவர்களுக்கு சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பது சிறப்பான அமைப்பு அல்ல. குடும்ப உறவுகள் எதிரிகளாக இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டு. குழந்தை பிறப்பில் காலதாமதம் ஏற்படலாம். அவர்களின் முன்னேற்றத்திற்காக அதிகம் கடன்படலாம். பூர்வீகச் சொத்துகளை விற்றுப் பிள்ளைகளை கரை சேர்ப்பார்கள். பிள்ளைகளிடம் ஒற்றுமை குறைவு அதிகமாக இருக்கும். சிலர் குழந்தை பாக்கியத்திற்காக அதிகம் செலவுசெய்து கடன்படுவார்கள். பூர்வீகச் சொத்துகளால் வம்பு, வழக்கு, கடன் சார்ந்த பாதிப்புகள் இருக்கும். சொத்தின் மதிப்பைவிட கடனின் மதிப்பு அதிகமாகும். கௌரவத்திற்காக அதிகம் கடன்படுபவர்கள். ஆழ்மனத்தில் இனம் புரியாத பயம், சோகம் இருக்கும். ஞாபக சக்தி குறைவு அதிகமாக இருக்கும். தீராத- தீர்க்கமுடியாத இனம்புரியாத நோய் தாக்கம் இருக்கும். கை- கால், மூட்டுவலி சார்ந்த பாதிப்புகள் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஆயுள் தீர்க்கமாக இருக்கும். சொத்திற்கு முறையான ஆவணங்கள் இருக்காது.ஆவணங்கள் சார்ந்த பிரச்சினைகள் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். முக்கிய சான்றிதழ்கள், ஆவணங்களை கைமாற்றி வைத்துவிடுவார்கள். வாழ்நாளில் ஒருமுறையாவது அறுவை சிகிச்சை நடக்கும். வாழ்க்கையில் அவமானம் தொடர்கதையாக இருக்கும். நிலையான தொழில், உத்தியோகம் அமையாது. சிலர் வாழ்நாள் முழுவதும் அடிமையாக பிறரிடம் இருந்து கஷ்ட ஜீவனம் அனுபவிப்பார்கள். உயர் அதிகாரிகள் முதலாளியிடம் நற்பெயர் பெறுவது மிக கஷ்டமாக இருக்கும். சுய திறமையால் முன்னேறக்கூடிய வாய்ப்பு குறையும். சிலருக்கு இந்த அமைப்பு விபரீத ராஜயோகத்தையும் தந்துள்ளது.

பரிகாரம்

ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு மிகச்சிறந்த தீர்வைத் தரும்.

தொடரும்

செல்: 98652 20406