Advertisment

சனாதனக்  கட்டுடைப்பு ! வள்ளுவரும் வைரமுத்தும்!

vairamuthu

 

வைரமுத்து, தமிழுக்குக் கிடைத்த வைரப் புதையல். கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழின் அழகியலைப் புரந்து வருகிறவர். 

Advertisment

அவருடைய திரைப்பாடல்கள் மட்டுமல்லாது, அவர் படைத்தளிக்கும் கவிதைகளும் கட்டுரைகளும் புதினங்களும் இன்னபிற படைப்புகளும் தனித்தன்மையோடு, தமிழைச் செம்மாப்போடு புதிய புதிய உயரங்களை நோக்கி உயர்த்தி வருகின்றன.

எத்தகைய விமர்சங்கள் அவரைக் குறித்து எய்யப்பட்டாலும், அவற்றால் சிறு கீறலைக் கூட தன் மேல் வாங்காத திராவிடப் பெரும் புலவராகவே வைரமுத்து திகழ்ந்து வருகிறார்.


இத்தகு தகுதியை மிகுதியாகக் கொண்ட அவர்,பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும் அனுசரணை யான திசையில் இருந்தபடி,திருக்குறளுக்கு எழுதியிருக்கும் உரை, தமிழன்னையின் தலையில் ஒளி மகுடமாக மலர்ந்திருக்கிறது.

Advertisment

'இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான்' என்பார், அந்த அனுபவத்தில் மூழ்கித் திளைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவரை மறவாத வைரமுத்து,அவரைப் போலவே வள்ளுவத்துக்கு புலரி நிகர்த்த பொன்னாடையை நெய்திருக்கிறார்.

வள்ளுவத்தில் பயணித்த நம் முன்னோர்களின் சுவடுகளை  நழுவவிடாமல், அவற்றை அங்குலம் அங்குலமாக அளந்த பிறகே, நம் கவிஞர் அங்கே தன் சுவடுகளைப் பதித்திருப்பது, பரிணாமம் சார்ந்த அறிவுப் பாய்ச்சலின் அடையாளமாகும். 

வள்ளுவத்தில் இன்னும் காலடிபடாத அழகிய குகைகளும், சென்றறியாத சிகரங்களும், நுழைந்தறியாத வசீகர வனங்களும்,  நிழல் படாத நீர் வனக் கடல்களும் இருக்கின்றன. இவற்றை உணர்ந்தே தன் பயணத்தை, குறளினுள் கவிஞர் நிகழ்த்தியிருக்கிறார்.

10ஆம் நூற்றாண்டு மணக்குடவர் தொடங்கி, இந்நூற்றாண்டின்  உரையாசிரியர்கள் வரை, குறளெனும் கடலின் தரையைக் காண முயன்றிருக்கிறார்கள். அவர்களில் மு.வ.வின் உரையே  எளிமை போர்த்தி.  மக்களிடம் முதலில் வந்தது. அதன்பின்னர் கலைஞரின் உரை, பகுத்தறிவு சார்ந்து, பல்வேறு பரிமாணங்களுடன், கற்றாரும் பாமரரும் பாராட்டும் வகையில் பெருமளவில் பரவிநிற்கிறது. 

கலைஞரின் பகுத்தறிவு  மாணாக்கரான வைரமுத்து, அவருடைய உரைக்கு அருகே திராவிடக் குடையை விரித்தபடி கம்பீரமாக நடைபோடுகிறார். இது வள்ளுவருக்கு மாறானது அல்ல; அறிவுலக வளர்ச்சிக்கு  நேரானது; நேர்மையானது.  

திராவிடம் என்ற சொல்,  பழைமைவாதத்தைக் கட்டுடைக்கும் கோட்பாடு என்ற பொருளில் இங்கே எடுத்தாளப்படுகிறது. 

வள்ளுவர் எவ்வகையில் எல்லாம் தன் காலத்திலேயே சனாதனத்தை  உடைத்திருக்கிறார் என்பதை, தன் முன்னுரையில்  நிமிர்வோடு நிறுவியிருக்கிறார் கவிஞர்.

மேலும், சனாதனக் கோட்டையைத் தான் உடைத்தெறிந்தி ருப்பதை, வைரமுத்தின் உரை வாயிலாக வள்ளுவரே நிறுவி யிருக்கிறார் என்றும் சொல்லத் தோன்றுகிறது.

திருக்குறள் ஒரு கலகக்குரல் என்று, தன் 13 பக்க முன்னுரையைத் தொடங்கியிருக்கும் கவிஞர், வள்ளுவரின் ஆளுமைப் பண்புகளையும், அவருக்கே உரிய சொல்லாட்சி மா

 

வைரமுத்து, தமிழுக்குக் கிடைத்த வைரப் புதையல். கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழின் அழகியலைப் புரந்து வருகிறவர். 

Advertisment

அவருடைய திரைப்பாடல்கள் மட்டுமல்லாது, அவர் படைத்தளிக்கும் கவிதைகளும் கட்டுரைகளும் புதினங்களும் இன்னபிற படைப்புகளும் தனித்தன்மையோடு, தமிழைச் செம்மாப்போடு புதிய புதிய உயரங்களை நோக்கி உயர்த்தி வருகின்றன.

எத்தகைய விமர்சங்கள் அவரைக் குறித்து எய்யப்பட்டாலும், அவற்றால் சிறு கீறலைக் கூட தன் மேல் வாங்காத திராவிடப் பெரும் புலவராகவே வைரமுத்து திகழ்ந்து வருகிறார்.


இத்தகு தகுதியை மிகுதியாகக் கொண்ட அவர்,பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும் அனுசரணை யான திசையில் இருந்தபடி,திருக்குறளுக்கு எழுதியிருக்கும் உரை, தமிழன்னையின் தலையில் ஒளி மகுடமாக மலர்ந்திருக்கிறது.

Advertisment

'இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான்' என்பார், அந்த அனுபவத்தில் மூழ்கித் திளைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவரை மறவாத வைரமுத்து,அவரைப் போலவே வள்ளுவத்துக்கு புலரி நிகர்த்த பொன்னாடையை நெய்திருக்கிறார்.

வள்ளுவத்தில் பயணித்த நம் முன்னோர்களின் சுவடுகளை  நழுவவிடாமல், அவற்றை அங்குலம் அங்குலமாக அளந்த பிறகே, நம் கவிஞர் அங்கே தன் சுவடுகளைப் பதித்திருப்பது, பரிணாமம் சார்ந்த அறிவுப் பாய்ச்சலின் அடையாளமாகும். 

வள்ளுவத்தில் இன்னும் காலடிபடாத அழகிய குகைகளும், சென்றறியாத சிகரங்களும், நுழைந்தறியாத வசீகர வனங்களும்,  நிழல் படாத நீர் வனக் கடல்களும் இருக்கின்றன. இவற்றை உணர்ந்தே தன் பயணத்தை, குறளினுள் கவிஞர் நிகழ்த்தியிருக்கிறார்.

10ஆம் நூற்றாண்டு மணக்குடவர் தொடங்கி, இந்நூற்றாண்டின்  உரையாசிரியர்கள் வரை, குறளெனும் கடலின் தரையைக் காண முயன்றிருக்கிறார்கள். அவர்களில் மு.வ.வின் உரையே  எளிமை போர்த்தி.  மக்களிடம் முதலில் வந்தது. அதன்பின்னர் கலைஞரின் உரை, பகுத்தறிவு சார்ந்து, பல்வேறு பரிமாணங்களுடன், கற்றாரும் பாமரரும் பாராட்டும் வகையில் பெருமளவில் பரவிநிற்கிறது. 

கலைஞரின் பகுத்தறிவு  மாணாக்கரான வைரமுத்து, அவருடைய உரைக்கு அருகே திராவிடக் குடையை விரித்தபடி கம்பீரமாக நடைபோடுகிறார். இது வள்ளுவருக்கு மாறானது அல்ல; அறிவுலக வளர்ச்சிக்கு  நேரானது; நேர்மையானது.  

திராவிடம் என்ற சொல்,  பழைமைவாதத்தைக் கட்டுடைக்கும் கோட்பாடு என்ற பொருளில் இங்கே எடுத்தாளப்படுகிறது. 

வள்ளுவர் எவ்வகையில் எல்லாம் தன் காலத்திலேயே சனாதனத்தை  உடைத்திருக்கிறார் என்பதை, தன் முன்னுரையில்  நிமிர்வோடு நிறுவியிருக்கிறார் கவிஞர்.

மேலும், சனாதனக் கோட்டையைத் தான் உடைத்தெறிந்தி ருப்பதை, வைரமுத்தின் உரை வாயிலாக வள்ளுவரே நிறுவி யிருக்கிறார் என்றும் சொல்லத் தோன்றுகிறது.

திருக்குறள் ஒரு கலகக்குரல் என்று, தன் 13 பக்க முன்னுரையைத் தொடங்கியிருக்கும் கவிஞர், வள்ளுவரின் ஆளுமைப் பண்புகளையும், அவருக்கே உரிய சொல்லாட்சி மாண்பையும் நயம்பட எடுத்துக்காட்டி இருக்கிறார். 

தான் தீட்டியிருக்கும் உரை எவ்வளவு கவனத்தோடு நிகழ்த்தப் பட்டிருக்கிறது என்பதை, இந்த முன்னுரையில் தமிழ்கூறு நல்லுலகம் உணரும் வகையில் உணர்த்தியிருக்கிறார் கவிஞர்.

இந்த முன்னுரையே, உரை நூலின் தகுதியைக் காட்டும் உரை கல்லாக இருப்பதால், இதைக் கூர்ந்து கவனிப்பது பெரும் பயன் நல்குவதாக அமையும்.

குறிப்பாக, வள்ளுவர் பயன்படுத்திய உடுக்கை, கருவி என்பன போன்ற சொற்கள், இடைக்காலங்களில் பயன்பாட்டின் அடிப்படையில் முளைத்த தொழில் நுட்பச் சொற்களை எல்லாம் எதிர்கொண்டு நீந்தி வருவதை, நம்  கவிஞர் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறார்.  

எத்தனையோ சொற்கள் வள்ளுவர் காலத்தில் புழங்கிய போதும், வாழ்வாங்கு வாழும் சொற்களையே அவர், இனங் கண்டு அதிகம் பயன்படுத்தி இருப்பது வியப்பிற்குரியது. இதைத்தான் காலத்தின் துரு திருக்குறளில் ஏறவில்லை என்கிறார் கவிஞர். 

இதே முன்னுரையில் ’திராவிடப் பண்பாட்டை ஆரியப் பண்பாடு, நகர்த்தவோ, தகர்க்கவோ முனைந்த காலகட்டத்தின் விளிம்பில், தமிழர் மரபு காக்கும் தனிப்பெரும் அரணாக  வள்ளுவம் எழுந்தது... என்ற ஒற்றைக் குறிக்கோளை உலகத் தமிழ் உலகம், எப்போதும் உயர்த்திப் பிடிக்கவேண்டும்.’என்கிறார் கவிஞர்.

அதன்படி அவரே,  

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின். (560) 

-என்னும் குறளில் உள்ள ’அறுதொழில்’ என்ற பதத்திற்கு,  வேதம், வேள்வி என்றெல்லாம் பயணித்து- பரிமேலழகர் சுட்டும், அறுவகைத் தொழிலை மறுப்பதோடு, அவை மக்களும் மக்கள் சார்ந்ததுமான ஆறு தொழில்களாகத்தான் இருக்கும் என்ற கருத்தைக் கீழ்க்காணும் உரைமூலம் ஆணி அறைந்து அறிவிக்கிறார்.

‘ஓர் அரசன் முறைப்படி குடிகளைக் காக்க வில்லையாயின், அவன் நாட்டில் வழக்கமாய் ஆகிவரும் பயன்கள் குறைந்துபோகும். உழவு-நெசவு- அமைச்சு- அரசு-கற்பித்தல்-வாணிபம் என்ற வாழ்வியலை இயக்கும் ஆறு தொழில்களும் மறந்தேபோகும்’  -கவிஞரின் இந்த வரிகளுக்குள் கட்டுடைப் பிற்கான கண்ணிவெடிகள் கண்ணுக்குத் தெரியாமல் பதுங்கியிருக்கின்றன. 

தான் வாழ்ந்த காலத்தின் மாபெரும் முற்போக் குச் சிந்தனையாளரான வள்ளுவரை, நிராகரிக்க முடியாதபடி நிகழ்காலம் ஏற்றுக் கொண்டாடும் நிலையில், எதிர்காலம், எவ்வித பின்னடைவுப் பார்வையோடும் பார்த்துவிடலாகாது என்கிற எச்சரிக்கையைக் கவிஞர் கைக்கொண்டிருக்கிறார் என்று கருதலாம்.

வேள்விக்கென்றே பிரம்மனால் பசுக்கள் படைக்கப்பட்டன. உலக நன்மையை முன்னிட்டு, நடைபெறுவனவான வேள்விகள் செய்யப்படும் போது, அது பசுவதை ஆகாது’-என்று மனுநீதி. வேள்விகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக, அறத்தின் கழுத்தில் கத்தி வைப்பதை முன்னுரையில் எடுத்துக் காட்டிய கவிஞர்,   இந்தப் பழமைவாதச் சிந்தனைக்கு  எதிராக, 

’அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. ( 259)

-எனும் குறள் மூலம் வள்ளுவர், அறக் கம்பத்தில் அகிம்சைக் கொடியை  ஏற்றுவதைச் சுட்டிக்காட்டி, இதன் மூலம் அவர் அறிவுக்குரல் எழுப்புவதாகப் பூரிப்படைகிறார். அந்தப் பூரிப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

மனுதர்மம், கல்வியை ஆரியர்களுக்கு உரியதாக - அதிலும் அவர்களில் ஆண்களுக்கு மட்டும் உரியதாக - சாத்திரங்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு, வாழ்வியலுக்கு வெளியே நின்று உயில்  எழுதிவைத்தது. இதையே, ‘கல்வியின் வாயில்கள் அடைக்கப்பட்ட கதவுகளில், சாத்திரப் பூட்டுகள் கனத்தாடிக் கிடந்தன.’ என்று, முன்னுரையில் உருவகித்திருக்கிறார் கவிஞர். இந்தக் கதவுகளையும் பூட்டுகளையும் 
’எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ (392)

-என்ற குறளில் ஓருசேர உடைத்து. ’கல்வி; பொதுவுடைமை’ என்று குன்றேறிக் கூவுகிறார் என்றபடி, மூலவருக்குப் புகழாரம் சூட்டுகிறார் கவிஞர். 

வர்க்கம் கடந்தும், பால் கடந்தும், பிற பேதங்கள்  கடந்தும், சனாதனத்துக்கு எதிராகவே கல்வியானது புரட்சி செய்துவருவதை நம் கவிஞர் உணர்த்திய விதம், அறிவுக்குச் சுகம் தருகிறது. 

முன்னுரையில் இருந்து  நகர்ந்து, இதே குறளுக்கு அதிகாரத்தினுள் உரை எழுதும்போது,

‘கணிதமென்ற கலை அறிவையும், எழுத்தென்ற மொழி அறிவையும், வாழும் உயிர்களுக்கெல்லாம் வாழ்வை வழி நடத்தும் கண்கள் என்று சொல்லுவார்கள்’ என்று மற்றொரு பரிமாணப் பார்வையைக் கவிஞர் பதிவு செய்திருக்கிறார். ஒரு கிண்ணத்தில் இருந்து பல்வேறு வண்ணங்களை எடுக்கும் கவிஞரின் வல்லமை இங்கே மிளிர்கிறது. 

திருக்குறளின் முதல் அதிகாரத்தைப் பலரும் ‘கடவுள் வாழ்த்து’ எனக் கைகூப்பி வந்தபோது, கலைஞர் அதற்கு  ’வழிபாடு’ என்று பெயர் சூட்டினார். 

நம் கவிஞரோ ‘ அறிவு வணக்கம்’ என்னும் பெயரை அணிவித்து அழகு செய்திருக்கிறார். 

ஆதிபகவன் என்றாலும், வாலறிவன் என்றாலும்,
வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்றாலும்,  
மலர்மிசை ஏகினான் என்றாலும், இறைவனின் 
பெயராகவும் இறைவனின் குறியீட்டுப் பெயராகவுமே 

அவற்றை உரையாசிரியர்கள் அடையாளங்கண்டு  வந்தனர். இவர்களிடமிருந்து கலைஞர் மாறுபட்டு, மனிதரின் உயர்ந்த நிலையாக இவற்றுக்குப் பொருள் கண்டார். அத்தகையோருக்கு அறிவு வணக்கத்தை அறிவித்தபடி, அதே பாட்டையில் கவிஞரின் உரை ரதமும் உருள்கிறது.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05)

-இக்குறளில் நேரடியாக வரும் ’இறைவன்’ என்ற சொல்லுக்குப் பொருள் சொல்லப் புகும்போது, எதன் பின்னாலும் ஒளிந்துகொள்ள விரும்பாத கவிஞர், அப்பட்டமாக ’ இறைவன் என்பது ஒரு கருத்துரு. அது மன மயக்கத்தால் விளையும். நன்மை தீமை என்ற இருவினைகளையும் கடந்தது என்று கருதப்படுவது என்று தெளிவாக வரையறுக்கிறார். பின்னர், அதன் பொருள்புரிந்து தெளிவுபெற்றவர்கள், விருப்புக்கும் வெறுப்புக்கும் ஆளாக மாட்டார்கள்’ என்று உரை வழங்கி  அறிவுலகை மகிழ்விக்கிறார்.

அருள்இல்லார்க்கு 
அவ்வுலகம் இல்லை பொருள் இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247)

-என்னும் குறளுக்கு, ‘பொருளற்றவர்களுக்கு நிகழ்கால உலகம் எப்படி இன்பமற்றுப் போய்விடுமோ, அப்படியே அருட்சிந்தை அற்றவர்களுக்கு எதிர்கால உலகம் இன்பமற்றுப் போய்விடும்’ என்று, அறிவின் ஒளி தொட்டு எழுதுகிறார் நம் உரையாசிரியர். அவ்வுலகம் என்பதற்கு வேறு காதுகுத்துக் கதைகளைச்’ சொல்லாமல், எதிர்கால உலகம் என்று பொருளுரைப்பதிலும், கவிஞரின் வைரநெஞ்சம் சுடர்கிறது. அதேபோல்...

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும். (346)

-இக்குறளுக்கு ‘தனக்கு உரியதல்லாத உடம்பைத் தானென்றும்,  தன்னோடு உடன்வராத பொருளைத் தனதென்றும் கருதுகிற அக மயக்கத்தை, அறுத்தவன், வானம் கடந்து உயர்ந்து நிற்கும் புகழ்பெறுவான்’ என்று கவித்துவமாக உரை எழுதுகிறார் கவிஞர்.

 இக்குறளில் வரும் ’வானோர்க்கு உயர்ந்த உலகம்’ என்பதற்கு ’தேவர்க்கு மேலாகிய உலகம்’ என்று மணக்குடவரும், ’வானோர்க்கும்  எய்தற்கு  அரிய வீட்டுலகம்’ என பரிமேலழகரும், இவர்களின் தடம் ஒற்றியே இன்னும் பலரும் பொருள் காண்கிறார்கள். இவர்களிடமிருந்து வேறுபட்டு, ’வானம் கடந்து உயர்ந்து நிற்கும் புகழ்’ என்று, நம் உரையாசிரியர் உலகியல் பார்வையுடன் உரை பகர்கிறார். 

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (18)

என்ற குறளுக்கு ‘வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?’ என்கிற கலைஞரின் உரையில், சனாதனத்துக்கு எதிரான வள்ளுவரின் பகுத்தறிவுக் குரல் ஒலிக்கிறது. 

இவருடைய உரையில் இருந்து, வானத்தில் வாழ்வ தாகச் சொல்லப்படுகிறவர்கள் யார்?’ என்கிற கேள்வியை உருவாக்கியபடி, அதற்கு ‘ வான்புகழ் கொண்டுமறைந்தவர்கள்” என்கிற பதிலைக் கண்டுபிடித்து, அப்படிப்பட்டவர்களுக்கு வழிபாடுமில்லை; மரபுவழி செய்யப்படும் சிறப்புகளு மில்லை’ என்று உரையின் பொருளை சில அடிகளுக்கு உயர்த்துகிறார் கவிஞர். ’பூசனை’ என்பதற்கு, மரபு வழி சிறப்பு என்று ஒரு குறிப்பையும் இங்கே கவிஞர் கூடுதலாகக் கொடுத்திருக்கிறார். 

அப்பாவின் தோளேறிப் பார்க்கும் மகனின் பார்வைதான் இது என்று கருதலாம்.

அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் 
பேரறிஞராய் அறியப்பட்ட வள்ளுவர், இன்பத்துப்
பாலில் பெருங்கவிஞராக, பேருருவம் காட்டுகிறார் என்று ரசனையுடன் கைத்தட்டும் கவிஞர்,
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.   (குறள் 1221)
-என்னும் குறளுக்கு,
பரிமேலழகர், கலித்தொகையில் வரும் ’

வாலிழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும்’ பொழுதாக , மாலைப்பொழுது காட்டப்பட்டதை, தன் உரைக்குத் துணையாக அழைத்துக்கொள்கிறார்.  

நம் கவிஞரோ,  

‘மணந்தோம். ஆனால் கூடும் துணையின்றிப் பிரிந்திருக்கிறோம். இவ்வேளை பார்த்து வருகிறாயே. 

உன் பெயர் என்ன? மாலைப்பொழுதா? இல்லை, எங்கள் உயிரை உண்டு முடிக்கும் அந்திமக் காலமாகிய அந்திக் காலமா?

நீயாவது வாழ்வாயாக.’-என உரை என்னும் பெயரில் ஒரு உணர்ச்சி ததும்பும் ஓரங்க நாடகத்தையே நடத்திக்காட்டுகிறார்.

வள்ளுவரே  இக்குறளை அழகியலால் இழைத்து இழைத்து நெய்திருக்கும் நிலையில்,  பிரிந்திருக்கும் காதலர்களை நோக்கி வரும் ’ 

அந்திக் காலமும் அந்திமக் காலம்தான்’ என்னும் கவிஞரின் சொல்விளையாட்டு சொக்க வைக்கிறது. 

மேலும், ’நீயாவது வாழ்வாயாக’ என்பதன் மூலம், ’நாங்கள் வாழவில்லை’ என்கிற, அந்தக் காதல் தலைவியின் அடர்ந்த தன்னிரக்கக் குரலையும், இந்நூற்றாண்டில் எதிரொலிக்கச் செய்து, குறளின் பொருளுக்கு மேலும் பொருள் கண்டிருக்கிறார் கவிஞர். 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். ( 1315)

-இந்தக் குறளில் இடம் பெறும் இம்மை என்பதற்கு பலரும் இப்பிறவி என்பதாகவே உரை எழுதினர். கலைஞர் கொஞ்சம் புதிய திசையில் இருந்தபடி, ’இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்' என்று நான் சொன்னவுடன் ஷ’அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?' என்று கேட்டுக் கண்கலங்கினாள் காதலி’ என்று, அக்காலத் தலைவியைக் கொண்டே,  மறுபிறப்பின் மீது சந்தேகத்தை எழுப்ப வைத்தார்.

நம் கவிஞரும், ‘ நம்பிக்கை ஊட்டினேன். 

உறுதிமொழியில் உயிர் ஊற்றினேன்’ என்று கவித்துவமாய் பீடிகை போட்டுவிட்டு, ‘இல்லாத மறுபிறப்பு’ என்று வள்ளுவரின் தலைவியை சனாதனத்துக்கு எதிராகப் பேசவைத்து, சிந்தனையை உயர்த்துகிறார். 

இப்படி, ஆரியத்தின் எதிர்முனையில் குறளின் பொருளைப் பொருத்தமாக மலரவைத்த கவிஞர், 

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.  ( 1291)

-என்னும் குறளுக்கு, அவர் நெஞ்சு 

அவருக்குரியதாய் இருப்பதுபோல், என் நெஞ்சே, நீ ஏன் எனக்குரியதாய் இல்லை’ என்று தீட்டுவதோடு, இதற்கான உரை முற்றிவிடுகிறது. அதற்கு மேல் இருக்கும் 5 வரியும் உபரி என்றே தோன்றுகிறது. கவிஞரின் பெருங்காதல் உள்ளமே இந்தப் பெருக்கத்திற்குக் காரணம் எனலாம். இதுபோன்ற போக்கையும், போகிற போக்கில் இந்த நூலினுள் பார்க்க முடிகிறது.

கவித்துவம், சுவை, அழகியல், செறிவு, ஆராய்ச்சி, கோட்பாடு என கவிஞரின் உரை, பல வகையிலும் மேம்பட்டு இயங்கி இன்பத்தைப் பெருக்குகிறது. அடுத்தடுத்த தலைமுறைக்கு வள்ளுவத்தை எளிதாய் விதைக்கும் ஆவலோடு கவிஞர் மேற்கொண்டிருக்கும் இந்த உரைப்பணி, காலந்தோறும் புகழ் பெருக்கி நிலைத்திருக்கும்.

எவரின் உரையடிகளாலும் முழுதாக வள்ளுவத்தை அளந்துவிட முடியாது என்பதே அதற்கு இருக்கும் பெரும் பெருமை. எதிர் காலத்தின் எந்த நூற்றாண்டில் தோன்றிவரும் உரையாசிரியர்களாக இருப்பினும், அவர்கள் களமாட இடம் வைத்திருக்கிறார் வணக்கத்திற்குரிய நம் வள்ளுவப் பேராசான். 

வள்ளுவத்துக்கு வைரமுத்து எழுதிய உரை, வள்ளுவரை மட்டுமல்லாது,கவிப்பேரரசு வைரமுத்தையும் நம் மனதின் தீராப் பக்கங்களில் தித்திப்பாய் எழுதுகிறது.

வள்ளுவர் மறை வைரமுத்து உரை 
விலை ரூ 250

சூர்யா -ட்ரேச்சர் (பி) லிட்,

32, டைகர் வரதாச்சாரி சாலை,

முதல் குறுக்குத்தெரு, கலாசேத்ரா காலனி,

பெசன்ட் நகர், சென்னை-90

96770 89466

uday010925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe