தாம்பத்யத்தில் யாருக்கெல்லாம் பிரச்சினைகள், பாதகத்தை உண்டாக்குகிறது ஜோதிட விதிகள்...

Advertisment

மூன்றாம் அதிபதி நின்ற நட்சத்திராதிபதி, 6, 8, 12-ல், நீசமானால் ஆண்மை குறைபாடு உண்டு.

Advertisment

மூன்றாம் அதிபதி நின்ற நட்சத்திராதிபதி, பகை, நீசம், அஸ்தங்கம் பெற்று மறைவு ஸ்தானங்களில் பெண் ஜாதகத்தில் இருப்பின், இவர்கள் தாம்பத்யத்திற்கு ஏற்புடையவர்கள் அல்ல.

மூன்றாமிடம், மூன்றாமதிபதி, செவ்வாய் இவர்கள் ஆண்மையை குறிப்பவர்கள்.

விரயஸ்தானத்தில் "மாந்தி' இருப்பினும், தாம்பத்ய பிரச்சினை உண்டு.

பெண்களுக்கு செவ்வாய் நீசமானாலோ (அ) உச்சமானாலோ தாம்பத்ய திருப்தி இருக்காது.

Advertisment

சாயா கிரகம், லக்னாதிபதி (அ) களத்திர ஸ்தானாதிபதி சாரத்தில் இருப்பினும், தாம்பத்ய குறைபாடு உண்டு.

பெண் ஜாதகத்தில், செவ்வாயுடன் சாயா கிரக சேர்க்கை (அ) சாயா கிரக சாரத்தில் செவ்வாய் இருப்பதும் ஆண்- எனில் சுக்கிரனுடன் சாயா கிரக சேர்க்கை (அ) சாயா கிரக சாரத்தில் சுக்கிரன் இருப்பதும் தாம்பத்ய முரண்பாட்டை குறிக்கும்.

குரு சுக்கிரன் இருவரும் எட்டுபாகைக்குள் இருப்பின் (அ) சுக்கிரனுடன் குரு இணைவு (அ) இருவரும் சமசப்தமமாக இருப்பின், தாம்பத்ய சுகம் இல்ல.

களத்திர ஸ்தானாதியதியுடனோ (அ) களத்திர ஸ்தானாதிபதி நட்சத்திராதிபதி யுடனோ, சாயா கிரக சேர்க்கை, தாம்பத்யத் தில், பிரச்சினையை ஏற்படுத்தும்.

ஆணுக்கு சுக்கிரனுடன் சாயா கிரக சேர்க்கை காம திரிகோணங்களில் இருப்பின், இவரோடு எந்தப் பெண்ணும் குடும்பம் நடத்த முடியாது; தாம்பத்ய சுகம் அடையவும் முடியாது.

மகர லக்னமாகி, சனி நீசம் பெற்றாலும் (அ) பாவ கிரக சேர்க்கை- பார்வை பெற்றா லும், தாம்பத்ய குறையாடு உண்டு.

பெண்களுக்கு ஏழாமிடம் சர ராசியாகி, களத்திர ஸ்தானாதிபதியும், சர ராசியில் இருப்பின், தாம்பத்ய சுகமடைவதில் குறையுண்டு.

பெண்களுக்கு குரு வலு இழந்தாலோ (அ) பாக்யாதிபதி வலு இழந்தாலோகூட, தாம்பத்ய சுகத்தில் பிரச்சினைகள் உண்டு.

ஆண்களுக்கு சுக்கிரனும் பெண்களுக்கு செவ்வாயும், நீசம் பெற்றாலும்கூட, தாம்பத்ய திருப்தி இருக்காது.

பெண் ஜாதகத்திற்கு, விரய ஸ்தானத்தில் செவ்வாய், சனி -இணைவு (அ) பார்வை (அ) இவர்களுடன் சாயா கிரக இணைவும் எவ்விதத்திலேனும், பன்னிரண்டாமிட தொடர்பு இருப்பின், தாம்பத்ய சுகத்தில் குறையோ (அ) பிரச்சினைகளையோ  ஏற்படுத்தும்.

ஆண் (அ) பெண் யாராயினும், சுக்கிரனு டன் கேது கூடி, ஒரு நட்சத்திரத்தின், ஒரே பாதத்தில் இருப்பின் பாலுணர்வில், பிரச் சினை ஏற்பட்டு, குடும்பம் நடத்த முடியாத நிலையும் ஏற்படலாம்.

விருச்சிக ராசியாகி, சந்திரனை சனி பார்த்தாலோ (அ) இணைந்தாலோ, தாம்பத்ய பிரச்சினை உண்டு.

செவ்வாய் (அ) சுக்கிரனுடன் மாந்தி இணைவு, தாம்பத்ய சுகத்தில் குறைபாடு உடையதே.

மர்ம உறுப்புகளில் நோய் ஏற்பட்டு, தாம்பத்ய சுகம் கெடுவதற்கு, சுக்கிரன் செவ்வாய், ராகு மாந்தி, அஷ்டம ஸ்தானம் மற்றும் விருச்சிக ராசி காரணமாகும்.

செல்: 63824 12545.