தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கலைவாணர் தொடங்கி கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு என்று நகைச்சுவை கலைஞர்களுக்கு எப்போதுமே தனி இடத்தைக் கொடுத்து கொண்டாடுவார்கள். அவர்கள் சிரிப்பு வைத்தியர்களாக இருந்து அன்றாட வாழ்வில் பல்வேறு உளவியல் சிக்கல் அடைகிறவர்களை சிரிக்க வைப்பவர்களாக இருப்பதுதான் அதற்குக் காரணம்.
அதனால்தான் சினிமாக்காரர்கள் இறந்த போதான சோகத்தைக் காட்டிலும் நகைச்சுவை நடிகர்கள் இறந்தபிறகான சோகம் மக்களை இன்னும் அதீத சோகத்திற்கு ஆட்படுத்துகிறது. விவேக், மயில்சாமி, மனோபாலா போன்ற தமிழ் சினிமாவில் கோலோட்சிய நகைச்சுவை நடிகர்களுக்கு இணையாக, குறுகிய காலத்தில் சில படங்களே நடித்து பிரபலமடைந்த ரோபோ சங்கர் மறைவும் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரோபோ சங்கர் என்ற பெயரைக் கேட்டதுமே அந்த உருவம் பிம்பமாய் கண்முன்னே தோன்றிவிடுகிற அளவிற்கு எல்லோருக் குமே பரிட்சயமானவர். தன்னுடைய நகைச்சுவை யால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஈர்த்தவர். உடல்நலம் குன்றி தன்னுடைய 46 வயதிலேயே சிரிக்கவைப்பதையும், ரசிக்க வைப்பதையும் நிறுத்திக்கொண்டார் என்பது இன்னமும் ஏற்க இயலாததாகவே உள்ளது.
கிராமிய நிகழ்ச்சிகள்
சென்னையில் வசித்து வந்தாலும் மதுரை மாவட்டத்துக்காரர். கட்டுமஸ்தான உடம்புக் காரர், ஆரம்ப காலங்களில் தன் உடலில் சில்வர் பெ
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கலைவாணர் தொடங்கி கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு என்று நகைச்சுவை கலைஞர்களுக்கு எப்போதுமே தனி இடத்தைக் கொடுத்து கொண்டாடுவார்கள். அவர்கள் சிரிப்பு வைத்தியர்களாக இருந்து அன்றாட வாழ்வில் பல்வேறு உளவியல் சிக்கல் அடைகிறவர்களை சிரிக்க வைப்பவர்களாக இருப்பதுதான் அதற்குக் காரணம்.
அதனால்தான் சினிமாக்காரர்கள் இறந்த போதான சோகத்தைக் காட்டிலும் நகைச்சுவை நடிகர்கள் இறந்தபிறகான சோகம் மக்களை இன்னும் அதீத சோகத்திற்கு ஆட்படுத்துகிறது. விவேக், மயில்சாமி, மனோபாலா போன்ற தமிழ் சினிமாவில் கோலோட்சிய நகைச்சுவை நடிகர்களுக்கு இணையாக, குறுகிய காலத்தில் சில படங்களே நடித்து பிரபலமடைந்த ரோபோ சங்கர் மறைவும் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரோபோ சங்கர் என்ற பெயரைக் கேட்டதுமே அந்த உருவம் பிம்பமாய் கண்முன்னே தோன்றிவிடுகிற அளவிற்கு எல்லோருக் குமே பரிட்சயமானவர். தன்னுடைய நகைச்சுவை யால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஈர்த்தவர். உடல்நலம் குன்றி தன்னுடைய 46 வயதிலேயே சிரிக்கவைப்பதையும், ரசிக்க வைப்பதையும் நிறுத்திக்கொண்டார் என்பது இன்னமும் ஏற்க இயலாததாகவே உள்ளது.
கிராமிய நிகழ்ச்சிகள்
சென்னையில் வசித்து வந்தாலும் மதுரை மாவட்டத்துக்காரர். கட்டுமஸ்தான உடம்புக் காரர், ஆரம்ப காலங்களில் தன் உடலில் சில்வர் பெயிண்ட் அடித்துக்கொண்டு மேடையில் இசைக்கு ஏற்ப தன் நெஞ்சு, கை புஜமெல்லாம் துடிக்கச் செய்து ஆடி ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர். ரோபோ மாதிரி ஆடுவதாலேயே இவருக்கு ரோபோ சங்கர் என்று பெயர்வந்தது. தென்மாவட்டங்களில் பிரபலமான அபிநயா நாட்டியக்குழு, சலங்கை ஒலி நாட்டியக்குழு, போன்ற எந்த நாட்டியக்குழுவாக இருந்தாலும் அவர்களுடைய மேடைகளில் இவரது ரோபோ நடனம் கண்டிப்பாக இருக்கும். அந்த அளவிற்கு ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது இவரது நடனம்.
சின்னத்திரை
தென்மாவட்டங்களில் மேடைகளில் மட்டும் ஆடிக்கொண்டிருந்தவர் தன்னுடைய திறமையை உலகறியச் செய்ய சின்னத்திரைக்குள் நுழைகிறார்.
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தன்னுடைய மிமிக்ரி திறமையால் நடிகர்களைப் போல பேசி, அவர்களுடைய உடல்மொழியை அப்படியே வெளிக்கொண்டு வந்து பெரிதும் ஈர்க்கப்பட்டார். அது இது எது என்ற நிகழ்ச்சி யில் சிரிச்சா போச்சு என்று வரும் பகுதியில் பங்கேற்பாளர்களை சிரிக்க வைக்கவேண்டும். ரோபோ சங்கரை பார்த்தாலே பலர் சிரித்து விடுவார்கள். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் அதகளம் செய்வார். பிறகு கிங்க்ஸ் ஆப் காமெடி என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். ராஜூ வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் விருந்தினராக வந்தார். கடைசியாக டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி வரை கலந்துகொண்டிருந்தார்.
சினிமாத்துறை
தீபாவளி திரைப்படத்தில் வடசென்னைவாசியாக நடித்திருப்பார். ரௌத்திரம் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் வந்து போயிருப்பார். பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் சவுண்ட் சங்கர் என்ற கதா பாத்திரம்தான் இவரை அடையாளம் காணும் அளவுக்கு பெயர் வாங்கித்தந்தது. சுகர் பேசண்டாக இருக்கும் பசுபதிக்கு வாயில் மாத்திரையைப் போட்டு தண்ணி ஊத்திவிட்டு அமைதியாக நின்றுகொண்டு சட்டைப் பட்டனை தூக்கி விட்டுக் கொண்டு இருக்கிற அவரது பாடிலாங்வேஜ் சிரிப்பூட்டக்கூடியதாக இருக்கும்.
வாயை மூடிப் பேசவும் படத்தில் மட்ட ரவி என்ற மதுப்பிரியர் கதாபாத்திரத்தில் இவரது உடல்மொழியும், குரலும் பாதிப் படம் முழுவதும் சிரிக்க வைக்கும். மதுப்பிரியராக அந்த கதாபாத்திரத் தில் இவர் வைக்கும் கோரிக்கைகள், இப்படியெல்லாம் செய்யமுடியுமா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு நகைச்சுவை அட்டூழியம் செய்திருப்பார். தான் சிரிக்காமல் பார்ப்பவர்களை சிரிக்க வைப்பதில் கெட்டிக்காரர்.
மாரி படத்தில் சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருப்பார். பல சமயம் நாயகன் தனுஷை இவர் கிண்டலடிப்பது நமக்கு சிரிப்பூட்டும். திரையிலும் உன்னை தனியா வச்சுக்கிறேன் என்று நாயகன் சொல்லுமளவுக்கு கிண்ட லடிச்சுக்கிட்டே இருந்தா அவரை சும்மா விடுவாங்களா என்ற அளவிற்கு நக்கல் செய்வார்.
இமைசிமிட்டும் நேரத்தில் ஒரு நகைச் சுவையை அள்ளித் தெளிப்பது என்றரீதியில், நாம் யோசிக்கும் முன்னரே, அதை உணர்ந்து சிரிக்கும் முன்னரே அடுத்த நகைச்சுவையை அள்ளித் தெளிப்பார்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக் காரன் படத்தில், அன்னைக்கு காலையில ஆறு மணிக்கு என்று சொன்னதையே திரும்பச் சொல்லி நகைப்பூட்டும் காட்சிகள் இப்போ தும் இணையத்தில் அடிக்கடி பார்க்கப்படும் நகைச்சுவைக் காட்சியாகத் திகழ்கிறது.
கொண்டாடப்பட்ட கலைஞன்
சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் சில சமயம் இயல்பை மீறி ஒப்புமையாக அழுவதுண்டு. ஆனால், அப்போதுகூட அவர்களை கிண்டலடித்து சிரிக்க வைக்கக்கூடியவர் ரோபோ சங்கர். அவர் அழுத சின்னத்திரை ஷோக் களே கிடையாது. அப்படி எப்போதுமே புன்னகை யைக் கொண்டிருந்த கலைஞன் மறந்தது ஈடுசெய்ய முடியாத ஈழப்பு.
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுக்கு முன்பே, மரணத்தின் பிடியில் சிக்கியிருக்க வேண்டியவர் ரோபோ சங்கர். மிமிக்ரி குணா மூலம் நக்கீரன் ஆசிரியர் அவர்களின் கவனத்துக்கு வந்தது. உடனே அடையாறில் இருக்கும் டாக்டர் தர்மலிங்கத்திடம் ஆசிரியர் அப்பாயின்ட்மெண்ட் வாங்கி, அவரை எப்படியாவது டாக்டர் தர்மலிங்கத்திடம் கொண்டு வரும்படி அவர் துணைவியாருக்குத் தகவல் கொடுத்தார்.
அதன்படி, டாக்டர் அவருக்கு சிகிச்சை தந்தார். முரண்டுபிடித்த சங்கரை மருந்து மாத்திரைகளைக் கொடுத்து சாப்பிடச்செய்தார். அந்தத் தொடர் சிகிச்சையால் ரோபோ சங்கர் எல்லோரும் ஆச்சரியப் படும் வகையில் மீண்டெ ழுந்து வந்தார்.
அதன்பின் எத்தனையோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப் படங்கள் என்று அவர் நடித்துவிட்டார். இந்த நிலையில், தான் உயிர்மீண்டது குறித்து நெகிழ்ச்சியாக தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் ரோபோ சங்கர் மனம்திறந்து சொல்லியிருக்கிறார். அப்போது நக்கீரன் ஆசிரியர் அண்ணன் கோபால் இல்லை என்றால் நான் இல்லை. அவர்தான் நம்பிக்கை கொடுத்தார். எங்கள் குடும்பத்தின் ரத்தசம்பந்தமில்லாத சகோதரர் நக்கீரன் ஆசிரியர்தான் என்று நிறையவே நெகிழ்ந்திருக்கிறார்.
அவரது மனைவி பிரியங்கா சங்கரும், “நான் சுமங்கலியாக இருக்கக் காரணம் நக்கீரன் அண்ணன் தான். சங்கர் தன் மகள் திருமணத்தைப் பார்ப்பார். பேரன் பேத்திகளைக் கொஞ்சுவார் என்று நம்பிக்கை ஏற்படுத்தினார். அவர் இல்லையென்றால் சங்கர் இல்லை. நான் கடவுளைப் பார்த்தது இல்லை. ஆனால் நக்கீரன் அண்ணன் எனக்குக் கடவுளாகவே வந்து உதவினார். மருத்துவமனைக்கு அனுப்பியது மட்டுமல்லாமல் 6 மாதங்கள் எங்களை ஃபாலோஅப் செய்து, ஊக்கப்படுத்திக் கொண்டே வந்தார்’ என்று நெகிழ்ந்தார்.
இப்படியெல்லாம் மரணத்தை வென்றுவந்த ரோபோ சங்கர் என்ற மகத்தான கலைஞனை, அவரது கடின உழைப்பும் உடல்நலப் பிரச்சினையும் சேர்ந்து நிரந்தர உறக்கத்தில் ஆழ்த்தி யிருக்கிறது.