Advertisment

சனி தோஷம் நீக்கும் பரிகாரங்கள்!

santurn


ந்தப் பஞ்சாங்கத்தின்படி பார்த்தாலும் தற்போது சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவானால் ஏற்படக்கூடிய சுப பலன்களை அதிகரிக்கவும் அசௌகரியங் களை கட்டுப்படுத்தவும் பொதுவான சில பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கோட்சார சனியால் மிகுதியான பாதிப்புள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை பயன்படுத்தி பலன்பெற நல்வாழ்த்துகள் சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது. பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.

Advertisment

சனிக்கிழமை அன்னதானத்திற்கு உதவி செய்யலாம். தினமும் திருக்கோளாற்று பதிகம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது ஒலிக்கச் செய்து கேட்க வேண்டும்.

Advertisment

விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் விவசாய தளவாட பொருட்கள் வாங்கி கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.

திருமணம் தொடர்பான சர்ச்சைகள் நீங்க மதுரை மீனாட்சி அம்மனையும் சொக்கநாதரையும் திருமணக் கோலத்தில் வழிபடவும்.

தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றிபெற, பௌர்ணமிதோறும் நடைபெறும் சத்திய நாராயணர்பூஜையில் கலந்துகொள்வது நற்பலன்களைத் தரும்.

எத்தகைய கிரக தோஷமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடு உங்களை காக்கும்.

புத்திர பாக்கியம் இல்லாதோர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

சனிக்கிழமை விரதம் இருந்து சித்தர்களை ஜீவசமாதி வழிபாடு செய்தால் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். வயதானவர்களின் ஆன்மிக சுற்றுப்பயண ஆசையை நிறைவேற்ற பொருள் உதவி செய்தல் நலம் தரும்.

கோவில் குளம், கிணறு, நீர் நிலைகளை சுத்தம் செய்யும் பணி செய்யவேண்டும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பராமரிப்பிற்கு உதவ வேண்டும்.

ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் காப்பகங்கள், ஊனமுற்றோருக்கு, விதவைகளுக்கு இயன்ற உதவிகளை செய்தால் நன்மைகள் மிகுதியாகும்.

அரசு மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு உணவு தானம், மருத்துவ உதவி செய்ய வேண்டும். துப்புரவு தொழிலாளிகளுக்கு ஆடை தானம் செய்யலாம். 

கோவில் குளத்திலுள்ள மீனுக்கு பொரி போடவேண்டும்.

தினமும் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்திய ஹ்ருதயம் படிக்க வேண்டும் அல்லது ஒலிக்க செய்து கேட்க வேண்டும்.

மன சஞ்சலத்திலிருந்து விடுபட விநாயகரை தினமும் 21 முறை வலம்வர வேண்டும். சனிக்கிழமை அரச மரத்தடியில் தீபம் ஏற்றி வழிபடவும். வீட்டில் பயன்படாத பழைய பேட்டரி, துணிகள், கடிகாரம், செருப்புகள் ஆகியவற்றை நீக்கவும்.

நாமக்கல் ஆஞ்சனேயரை வழிபட வேண்டும். பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு பராமரிப்பு பணிக்கு உதவ வேண்டும். சிவன் கோவில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கிதர வேண்டும். சனிக்கிழமை விரதமிருந்து காலபைரவரை வழிபட வேண்டும்.

சென்ற பிறவில் செய்த தவறுகளால் இந்த பிறவியில் ஏற்பட்ட கடன் தொல்லை இருந்து மீள மூன்று பௌர்ணமி நாளில் தங்கள் குலதெய்வம் வழிப்பாடு செய்துவந்தால் கடன் தொலை படிபடியாக குறையும்; கடனை அடைக்கலாம்.

வன்னிமரத்தை சுற்றிவந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகிவிடும்சக்கரத்தாழ்வார் சந்நிதியில் 12 நெய்தீபம் ஏற்றி 48 நாட்கள் தொடர்ந்து வழிபட தொழில், வழக்கு, சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும்.

ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய, சனிக்கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.

அஸ்த நட்சத்திரத்தன்று  துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி சாற்றி, 27 எண்ணிக்கைகொண்ட  சிகப்பு தாமரை, எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துவர உடனே திருமணம் நடை பெறும்.

பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை 21 முறை சுற்றிவந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட தடை, தாமதம் நீங்கும். 

விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில்  எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும். குலதெய்வ வழிபாடு உங்களை நன்முறையில் வழிநடத்தும்.

தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். தினமும் ஆதித்ய ஹ்ருதயம் படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும்.

பௌர்ணமி நாட்களில் விரதமிருந்து கிரிவலம் வரவேண்டும். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து வழிபடுவதால் சனி தோஷம் அகன்று மன சஞ்சலம் குறையும்.

ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி காலங்களில் கொடுத்த கடன் வசூலாக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து எட்டு செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், ஆதரவற்ற பிணங்களின் தகனத்திற்கு உதவுதல் இவை மூன்றும்  அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.

அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நோட், பேனா, டிக்ஸ்னரி வாங்கி கொடுக்கலாம். துப்புறவு தொழிலாளிகளுக்கு உணவு, ஆடை தானம் தர வேண்டும்.

சனிக்கிழமைகளில் சக்ரத்தாழ்வார் நரசிம்மர் வழிபாடு செய்ய மன நிம்மதி தேடிவரும். தினமும் திருக்கோளறு பதிகம் பாராயணம் செய்வதால் நவகிரக தோஷம் விலகும்.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகங்களின் சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிஷேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

குளத்திலுள்ள மீன்களுக்கு பொரி போடவேண்டும். வெள்ளி, சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்க்கவேண்டும். வசதி வாய்ப்பு குறைந்த பெண்களின் திருமணத்திற்கு உதவ வேண்டும்.

நவகிரக சனி பகவானுக்கு  அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபமேற்றி  வழிபட கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். நெய், பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்த பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒருமுறை வீடுகளில் தெளிக்க, தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.  

குலதெய்வ வழிபாடு சிறப்பைத் தரும். முன்னோர்கள் வழிபாடு தடை, தாமதத்தை நீக்கும், சாலை ஓரங்களில் ஆதரவின்றி அல்லல்படுபவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவி தர வேண்டும்.

சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும்போது பல தலைமுறை சாபம் நீங்கி புண்ணியம் பெறுவோம். கஷ்டங்களில் இருக்கும் உங்கள் சகோதர- சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சனி பகவானின் நல்லருளை பெற்றுதரும். 

சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவகிரகங்கள் திருப்தியடையும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் காலபைரவரை வணங்கி  வரவும் குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யவும்.

வாய்ப்புள்ளவர்கள் ரத்த தானம் செய்ய வேண்டும். காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு ராகு காலத்தில் செய்வது சிறந்தது. அதுவும் ராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.

கோமாதா பூஜை செய்ய பணப்புழக்கம் அதிகரிக்கும். ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

சித்தர்களின் பீடங்கள், ஜீவசமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

ஒருவருக்கு ஏழரைச் சனி அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி மட்டும்தான் பாதிப்பை கொடுக்கும் என்ற பயம் அவசியமற்றது.

சிலருக்கு தசாபுக்திரீதியாகவும் பாதிப்பு வரலாம் சனியின் பயணம் பாதையிலுள்ள ஜனனகால கிரகங்களின் தாக்கமும் ஜாதகருக்கு மன உளைச்சலை தரலாம். எனவே இப்போது மீன ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை வழங்க நல்வாழ்த்துகள்.

செல்: 98652 20406

bala070326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe