Advertisment

மாந்தி தோஷம் நீக்கும் பரிகாரங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி சென்ற இதழ் தொடர்ச்சி...

parigaram

சென்ற இதழ் தொடர்ச்சி...

துலாம்

ஒரு ஜாதகத்தில் துலா ராசியில் மாந்தி நின்றால் கீழ் முதுகு, சிறுநீரகங்கள் தொடர்பான உடல் உபாதைகள் இருக்கும். தோல் நோய்கள் வரும். அடிக்கடி அலர்ஜி ஏற்படும். ஆண்களுக்கு கல்லடைப்பு பிரச் சினையும் பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல் வரலாம். உடலும் மனமும் ஒரு நிலைப் படாது. ஓய்வெடுக்க முடியாமல் கடுமையாக உழைக்க நேரும். அடிக்கடி மன அழுத்தத்தில் மந்தமாக இருப்பார்கள். சுத்தமான, சீரான உணவை சாப்பிடுவதால் ஆரோக்கியத்தை காப்பாற்றமுடியும்.இவர்கள் உணவுப் பிரியர்கள் என்பதால் உணவு கட்டுப்பாடு இருக்காது. நல்ல களத்திரம், சுகவாழ்வு கிடைக்காது. களத்திரத்தை இழந்து அல்லது பிரிந்து வாழவும் நேரும். இல்லற இன்பத்தில் நாட்டம் குறையும். இது காலபுருஷ ஏழாம் இடம் என்பதால் சிலருக்கு திருமண வாழ்க்கையில் பாதிப்பு வரும். திருமண வாழ்வில் முழுமை யாக வெற்றி  கிடைக்காது.

Advertisment

பரிகாரம்


அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்களுக்கு உணவு, மருந்து தானம் செய்யவேண்டும்.

Advertisment

விருச்சிகம்

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் விருச்சிக ராசியில் மாந்தி நின்றால் கழிவு அகற்றும் பாதை மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு இருக்கும். அல்லது மறைவிடம் சார்ந்த உபாதைகள் இருக்கும். உடல் கழிவுகளை முழுமையாக வெளியேற்ற முடியாது. சிலருக்கு கல்லீரல் கணையம், சிறுநீரக

சென்ற இதழ் தொடர்ச்சி...

துலாம்

ஒரு ஜாதகத்தில் துலா ராசியில் மாந்தி நின்றால் கீழ் முதுகு, சிறுநீரகங்கள் தொடர்பான உடல் உபாதைகள் இருக்கும். தோல் நோய்கள் வரும். அடிக்கடி அலர்ஜி ஏற்படும். ஆண்களுக்கு கல்லடைப்பு பிரச் சினையும் பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல் வரலாம். உடலும் மனமும் ஒரு நிலைப் படாது. ஓய்வெடுக்க முடியாமல் கடுமையாக உழைக்க நேரும். அடிக்கடி மன அழுத்தத்தில் மந்தமாக இருப்பார்கள். சுத்தமான, சீரான உணவை சாப்பிடுவதால் ஆரோக்கியத்தை காப்பாற்றமுடியும்.இவர்கள் உணவுப் பிரியர்கள் என்பதால் உணவு கட்டுப்பாடு இருக்காது. நல்ல களத்திரம், சுகவாழ்வு கிடைக்காது. களத்திரத்தை இழந்து அல்லது பிரிந்து வாழவும் நேரும். இல்லற இன்பத்தில் நாட்டம் குறையும். இது காலபுருஷ ஏழாம் இடம் என்பதால் சிலருக்கு திருமண வாழ்க்கையில் பாதிப்பு வரும். திருமண வாழ்வில் முழுமை யாக வெற்றி  கிடைக்காது.

Advertisment

பரிகாரம்


அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்களுக்கு உணவு, மருந்து தானம் செய்யவேண்டும்.

Advertisment

விருச்சிகம்

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் விருச்சிக ராசியில் மாந்தி நின்றால் கழிவு அகற்றும் பாதை மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு இருக்கும். அல்லது மறைவிடம் சார்ந்த உபாதைகள் இருக்கும். உடல் கழிவுகளை முழுமையாக வெளியேற்ற முடியாது. சிலருக்கு கல்லீரல் கணையம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பழுதடையும். யூரினரி இன்ஃபெக்ஷன் கல்லடைப்பு, பைல்ஸ் சம்பந்தமான அறுவை சிகிச்சை நடக்கலாம். கருச்சிதைவு ஏற்படும். கருத்தரிக்கும் தன்மை குறைவாக இருக்கும். ஆயுள் முழுவதும் நீதி மன்ற வழக்குகள். பிரச்சினைகள், காரியத்தடங்கல், தீராத கவலை, அவமானம், தவிர்க்க முடியாத விரயம், வீண் அலைச்சல், செய்தாத  தவறுக்கு பழி ஏற்றல், தீராத பய உணர்வு போன்றவற்றை அனுபவிக்க நேரும். தன விரயம் அதிகமாக இருக்கும். விபத்து மற்றும் மரணத்திற்கு ஒப்பான கண்டம் ஏற்படும்.

பரிகாரம்

வருடம் ஒருமுறை ஜென்ம நட்சத்திரநாளில் ஆயுள் ஹோமம் செய்வதால் பாதிப்புகளை குறைக்க முடியும்.

தனுசு

காலபுருஷ ஒன்பதாம் இடமான தனுசு ராசியில் மாந்தி நிற்பது பாக்கிய பலன்களைத் தடை செய்யக்கூடிய அமைப்பாகும்.  உடல் உறுப்பில் கால்கள், இடுப்பு மற்றும் தொடைகள் ஆகிய பாகங்களில் சில அசௌகரியங்கள் வரலாம். இது தந்தைக்கு கண்டம் தரும் அமைப்பாகும். தந்தைக்கு கடும் பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் தந்தையின் ஆரோக் கியம்  பாதிப்படையும். தந்தைவழி உறவு களுடன் கருத்து வேறுபாடு இருக்கும். முன்னோர்கள் வழிபாடு தடைபடும். சமுதாய அந்தஸ்து பங்கப்படும். அதீத மன சஞ்சலத்தால் எந்த சுய முடிவும் எடுக்க முடியாமல் தவிப்பார்கள். அவசர சூழ்நிலையில் எவரும் உதவி செய்ய முன்வர மாட்டார்கள். உரிய வயதில் நடக்க வேண்டிய திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப விசேஷங்கள் தடைபடும். செல்வம், செல்வாக்கு, பூமி, மனை, வாகனம் உள்பட்ட சகல ஐஸ்வர்யங்களும் கேள்விக் குறியாகும்.செல்வத்தை சுகமாக அனுபவிக்க முடியாத நிலை நீடிக்கும்.

பரிகாரம்

வயது முதிர்ந்தவர்களின் தேவையறிந்து உதவ நல்ல பலன் கிட்டும். அமாவாசை காலங்களில் பித்துருக் களை வழிபட வேண்டும். 

மகரம்

காலபுருஷ பத்தாமிடமான மகர ராசியில் மாந்தி நின்றால் எலும்புகள், மூட்டுகள் பலவீனமாக இருக்கும். கால்சியம் சத்து குறைவாக இருக்கும். முதுமையான தோற்றம் இருக்கும். கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். அதிக தூரம் நடக்க முடியாது, நிற்க முடியாது. இதுபோன்ற கஷ்டங்கள் இருக்கும். பல இடத்தில் அவமானம் ஏற்படும். பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க மாட்டார்கள்.  ஜாதகர் வஞ்சனை எண்ணம் மிகுந்தவர். அவச் சொல் பெற நேரும். அதிர்ஷ்டக் குறைவானார். உயர்ந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பு மிகக் குறைவு.தந்தை பெரும் தவிப்புடன் வாழ்க்கை நடத்துவார். நிலையான நிம்மதியை இழப்பார். பெற்றவர்களுக்கு துரோகம் செய்யும் பிள்ளைகள் பிறக்கும். ஜாதகர் முறையாக முன்னோர் வழிபாடு  செய்யாதவர். தகுதிக்கு தகுந்த வேலை கிடைக்காது அல்லது  உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைக் காது. உறவுகளைப் பிரிந்து வாழ்வார்கள் அல்லது வாரிசுகளால் மன வேதனை இருக்கும். சிலர் புத்திர பாக்கியம் இன்மையால்  குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பார்கள்.

பரிகாரம்

சலவைத் தொழிலாளிகளின் தேவையறிந்து உதவ கர்ம வினைகள்  குறையும்.

கும்பம்

ஒருவரின் பிறவி ஜாதகத்தில் கும்ப ராசியில் மாந்தி நின்றால் கணுக்கால் பாதிப்பு இருக்கும். அடிக்கடி கால் உளைச்சல் வலி அதிகமாக இருக்கும். தனித்துவம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். தங்கள் விருப்பங்களை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்வார்கள். யாருக்கும் அடிபணியாதவர்கள். தங்கள் சுதந்திரத்தில் பிறர் தலையிடுவதை விரும்பாதவர்கள். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள். செல்வச் செழிப்பு உண்டு. சுய ஜாதகத்தில் சனிபகவான் நல்ல நிலையில் இருந்தால்  நற்பலன்கள் அதிகமுண்டு. பல தொழில் ஞானம் நிறைந்தவர்களாக  இருப்பார்கள். மாந்தி நின்ற நட்சத்திர அதிபதியின் தசா காலத்தில் தனக்கென்று புதிய பாதையை அமைத்து உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். கல்வி சுமாராக இருந்தாலும் அதை வைத்து யோகம் கிடைக்கும். மூத்த சகோதரன், சித்தப்பா, இளைய மனைவி  போன்றவர்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.

பரிகாரம்

வீடுகளில் தொழில் நிறுவனங்களில் ஸ்ரீ சக்கரம் வைத்து வழிபட, அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவார்கள்.

மீனம்

ஒருவரின் சுய ஜாதகத்தில் மீன ராசி மாந்தி நின்றால் சுகமான நித்திரை இருக்காது. தூக்கத்தில் கெட்ட கனவுகள் வரும். அயல்நாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். சுய ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடம் பலவீனமாக இருந்தால் சிறைவாசம் உண்டு. அதிக ரகசியங்கள் நிறைந்தவர்கள். ரகசிய வாழ்க்கை உண்டு. இடது கண், கால் பாதங்களில் பாதிப்பு இருக்கும். மருத்துவமனை செலவுகள் அதிகரிக்கும். எதையும் குறுக்குவழியில் அடைய விரும்புவார்கள்.ஸ்திரமான முன்னேற்றம் இருக்காது. புதிய முயற்சிகள் வெற்றி தராது. அதிர்ஷ்டம் என்பது மருந்துக்குக்கூட இருக்காது. வழிநடத்திச் செல்ல  நல்ல வழிகாட்டி அமையும் பாக்கிய குறையும். தீராத மன பார்வை உண்டு.

பரிகாரம்

மனதினை ஒரு நிலைப்படுத்தி தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஈடுபட விசேஷமான பலன்கள் உண்டாகும். ஜோதிடத்தில் பலன் சொல்ல பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் கர்மவினை தாக்கத்தையும் தோஷத்தின் வலிமையையும் நிர்ணயம் செய்வதில் பிரசன்ன ஜோதிடமே பிரதானமாக திகழ்கிறது. ஒரு பிரசன்னத்தின் கதாநாயகனான மாந்தியே கர்ம வினையை உணர்த்துபவர். கர்ம வினைகள்  கண்டமாக செயல்படுமா என்பதை ராகு- கேதுக்கள் தெளிவு படுத்துவார்கள். பிரசன்னத்தில் மட்டுமல்ல ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில்  மாந்தி நின்ற இடத்தைக் கொண்டும் தோஷத்தை தீர்மானம் செய்யலாம். ஒரு ஜாதகரின் வாழ்க்கையை அழிக்கவும் நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு உயர்ந்த இடத்தையும் தரும் வல்லமையும் மாந்திக்கு உண்டு. ஆகவே மற்றத் துணைக் கோள்கள்போல் இல்லாமல் மாந்தி தனித்தன்மையான துணைக் கோளாக உள்ளார்.

செல்: 98652 20406

bala270925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe