ராகுபகவான் ராசி மண்டலத்தை ஒருமுறை சுற்றி வர 18 ஆண்டுகள் ஆகிறது. கோட்சார ராகு 18 மாதம் ஒரு ராசியில் பயணம் செய்வார். ராகுவின் நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகும். காற்று ராசியில் ராகுவின் நட்சத்திரம் இடம்பெற்றிருப்பதால் ஜாதகரின் முயற்சிகளிலும் செயல்பாடுகளிலும் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் தவிடுபொடி செய்து வெற்றியடைவார்கள்.

ராகு + சந்திரன் 

இந்த கிரக சேர்க்கைகள் ஜாதகருக்கு கடும் மன அழுத்தத்தையும் மன இறுக்கத்தையும் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகளையும் இந்த கிரக சேர்க்கையால் ஏற்படுகின்றன. இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் எல்லாரையும் வசீகரித்து விடுவார்கள். இதனால் வரும் பிரச்சினைகளும் மிக அதிகம். இருந்தாலும் பிரச்சினைகளை போராடி சமாளித்துக் கொள்வார்கள். யாரையும் காயப்படுத்தக் கூடாது என எளிதில் பொய் பேசுவார்கள். அப்பொய்யே பிற்காலத்தில் இவர்களுக்கு எமனாக மாறும். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் எதையும் பெரிதாகதான் ஆசைப்படுவார்கள். இவர்களை யாரும் திருப்திபடுத்த முடியாது. இவர்களுடைய எண்ணங்கள், திட்டங்கள் எல்லாம் பிரம்மாண்டமாகவே இருக்கும். சில நேரங்களில் இவர்கள் பேசும் வார்த்தை கள் மிகவும் கடுமையாக மற்றவர் மனதை காயப்படுத்தி விடும். இவர்கள் நினைத்த காரியத்தை முடித்தாக வேண்டும் என்ற பிடிவாதமும் வைராக்கியமும் இவர்களிடம் இருக்கும். 

Advertisment

மற்றவர்களிடம் பேசும்பொழுது பேச்சுவார்த்தைகளில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் படிப்புக்காக, தொழிலுக்காக சொந்த ஊரில் இல்லாமல் வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்தால் பாதிப்பு குறையும். இவர்களுக்கு அதிகப்படியான பில்லி, சூனியம் ஏவல் போன்ற மன பயங்கள் இவர்களுக்கு ஏற்படும். இவர்கள்தான் அதிகப்படியான மனம் தொடர்பான நோய்களில் பாதிக்கப்படுவார்கள்.

ஜாதகருக்கு தாயாருடன் நல்ல ஒற்றுமை என்பது இருக்காது. கருத்து வேறுபாடுகள் இருக்கும். மாமியாரிடமும் வாக்குவாதங்கள் இருக்கும். இவர்களுக்கு சொன்னது சொன்னபடி நடந்துகொள்ள வேண்டும். சொன்னவர்கள் சொன்னதிலிருந்து ஒரு சதவிகிதம்கூட அதிகமாகவும் சொல்லக்கூடாது. ஒரு சதவிகிதம் குறைவாகவும் சொல்லக்கூடாது. இவர்கள் தனது வேலை சரியாக நடக்காத போது மற்றவர்களிடம் வேட்டையாடுவதுபோல் கடுமையாக நடந்துகொள்வார்கள். பலருக்கு திருமண வாழ்வில் பிரிவினையை ஏற்படுத்துகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களும் நடக்கிறது. இவர்கள் சொல்வதை அனைவரும் கேட்கவேண்டும் என்ற எண்ணம் இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு இருக்கும். 

ஜாதகரின் வாழ்க்கை முற்பகுதி ஒரு மாதிரியாகவும் பிற்பகுதி அதற்கு எவ்வித சம்பந்தம் இல்லாததாகவும் இருக்கின்றது. இறுதியில் போலி வாழ்க்கை வாழ்ந்ததாகவும் இதுவரை வாழ்ந்ததற்கு அர்த்தம் இல்லை என்றும் வருத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு கோவம் வந்து திட்டினால் உயிரே போகும்படியாக இருக்கும். திடீரென ஒரு நாள் அனைத் தையும் விட்டுவிட்டு போய்விட்டால் என்ன என்ற வெறுமையும் ஏற்படும். 

Advertisment

அந்த பிடிப்பற்ற எண்ணங்கள் ரொம்ப நாள் அல்லது ரொம்ப நேரம் நீடிக்காது. எந்த ஒரு முடிவிலும் இவர்கள் நிலைத்து நிற்கமாட்டார்கள். மனநிலையும் திட்டங்களும் மாறிக்கொண்டே இருக்கும். இவர்கள் பேய் ஓட்டுவது, விஷ த்தை முறிப்பது, வாக்கு சொல்லுதல் போன்ற விஷயங்களிலும் மாந்திரீகம் விஷயங்களில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு சில நேரங்களில் உணவு விஷமாக மாறிவிடுகிறது. தோளில் அரிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுகின்றது. ஜீரண உறுப்புகளும் சுவாச உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. வாய்வு தொல்லைகள், விஷ பூச்சி கடிகள் அடிக்கடி ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படுகிறது. லேப்ராஸ்கோப்பி எண்டாஸ்கோபியல் செய்யக்கூடிய நோய்களையும் மருத்துவங்களையும் இவர்கள் எடுக்கக்கூடிய சூழ்நிலைகள் இதனுடைய தசாபுக்தி காலங்களில் வரும். மூளை நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சத்து குறைபாடுகளால்கூட சில பாதிப்புகள் ஏற்படும்.

உங்களுடைய ஜாதகத்திலுள்ள சந்திரன்மீது கோட்சார ராகு வரும் காலகட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வரும். வாழ்க்கையில் விரத்தி ராகுவின் தசையோ- புக்தியோ அல்லது சந்திரனுடைய தசையும் புக்தியோ நடக்கும் காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும். கோட்சார குரு அல்லது ஜன ஜாதக குரு பார்த்தால் மேலே கூறிய பாதிப்புகள் குறையும். இவர்கள் 8அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு. பத்ரகாளி, காளியம்மன், துர்க்கையம்மனுக்கு ராகுகால வேளையில் 11 தீபம் ஏற்றி வழிபாடு செய்துவரவும். இந்த தெய்வங்களுக்கு திங்கட்கிழமை சுத்த பசும்பால் வாங்கி அபிஷேகத்துக்கு கொடுத்து வரவும். உளுந்து வடை செய்து தானம் கொடுப்பது நல்லது.

பேச: 90802 73877