"எனக்கு எல்லா புகழையும் தந்தது எனது குலதெய்வம்.. இஷ்ட தெய்வம்தான்' என்று மெய்சிலிர்க்க பக்தி பரவசத்துடன் கூறுகிறார். எம்.பி.ஏ பட்டம் பெற்ற மனைவி திருமதி.பிரவீணா, எம்.பி.பி.எஸ் மூன்றாம் வருடம் படிக்கும் மூத்த மகன் சர்வேஷ், ஆறாம் வகுப்பு படிக்கும் இளைய மகன் ரிஷி ஆகியோருடன் பஹ்ரைன் நாட்டில் "இனிய இல்லறம்' நடத்தி வரும் "சாதனை மாமணி' கா.பொன்.
சங்கரபாண்டியன் அவர்களை சென்னையில் தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற வந்தபோது சந்தித்து அவரின் ஆன்மிக ஈடுபாடுகள் குறித்து கேள்விகளை அடுக்கினோம். நமது அனைத்து கேள்விகளுக்கும் அசராமல் பதில் கூறி நம்மை அசத்தினார்..
உங்கள் குலதெய்வம் பற்றி கூறுங்கள்?
"எங்களுடைய குலதெய்வம் சிவகாசியில் உள்ள பெரியாண்டவர் பேச்சியம்மாள். ஆண்டுதோறும் தவறாமல் குலதெய்வ வழிபாட்டிற்காக சிவகாசி சென்று பொங்கல் வைத்து அர்ச்சனை செய்து குலதெய்வத்தை குடும்பத்துடன் வழிபட்டு வருகிறோம்.'
இஷ்ட தெய்வம் மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன்.
"என்னுடைய ஐந்து வயது முதலே எங்கள் பகுதியில் நடக்கும் ஐயப்பன் பூஜைகளில் தவறாமல் கலந்துகொண்டு, அதில் சரணம் கூறி அழைப்பதும், பஜனையில் பாடுவதும் என்று பக்தி பரவசத்துடன் இருந்தேன். நான் சரணம் பாடி அழைப்பதை பெரியவர்கள் பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். பள்ளி பருவத்திலேயே மூன்று முறை சபரிமலைக்கு சென்று வந்து இருக்கிறேன். என்னுடைய பத்தாம் வயது முதல் மாங்காடு காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வந்தேன். அந்த இளம் வயதில் எனக்கு இருந்த
"எனக்கு எல்லா புகழையும் தந்தது எனது குலதெய்வம்.. இஷ்ட தெய்வம்தான்' என்று மெய்சிலிர்க்க பக்தி பரவசத்துடன் கூறுகிறார். எம்.பி.ஏ பட்டம் பெற்ற மனைவி திருமதி.பிரவீணா, எம்.பி.பி.எஸ் மூன்றாம் வருடம் படிக்கும் மூத்த மகன் சர்வேஷ், ஆறாம் வகுப்பு படிக்கும் இளைய மகன் ரிஷி ஆகியோருடன் பஹ்ரைன் நாட்டில் "இனிய இல்லறம்' நடத்தி வரும் "சாதனை மாமணி' கா.பொன்.
சங்கரபாண்டியன் அவர்களை சென்னையில் தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற வந்தபோது சந்தித்து அவரின் ஆன்மிக ஈடுபாடுகள் குறித்து கேள்விகளை அடுக்கினோம். நமது அனைத்து கேள்விகளுக்கும் அசராமல் பதில் கூறி நம்மை அசத்தினார்..
உங்கள் குலதெய்வம் பற்றி கூறுங்கள்?
"எங்களுடைய குலதெய்வம் சிவகாசியில் உள்ள பெரியாண்டவர் பேச்சியம்மாள். ஆண்டுதோறும் தவறாமல் குலதெய்வ வழிபாட்டிற்காக சிவகாசி சென்று பொங்கல் வைத்து அர்ச்சனை செய்து குலதெய்வத்தை குடும்பத்துடன் வழிபட்டு வருகிறோம்.'
இஷ்ட தெய்வம் மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன்.
"என்னுடைய ஐந்து வயது முதலே எங்கள் பகுதியில் நடக்கும் ஐயப்பன் பூஜைகளில் தவறாமல் கலந்துகொண்டு, அதில் சரணம் கூறி அழைப்பதும், பஜனையில் பாடுவதும் என்று பக்தி பரவசத்துடன் இருந்தேன். நான் சரணம் பாடி அழைப்பதை பெரியவர்கள் பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். பள்ளி பருவத்திலேயே மூன்று முறை சபரிமலைக்கு சென்று வந்து இருக்கிறேன். என்னுடைய பத்தாம் வயது முதல் மாங்காடு காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வந்தேன். அந்த இளம் வயதில் எனக்கு இருந்த அத்தனை பிரச்சினைகளும் ஒரு ஆறு வார தொடர் வழிபாட்டில் பூரணமாக தீர்ந்து புத்துணர்ச்சி கிடைத்தது. புதிதாக வேண்டிய அத்தனையும் சில வாரங்களில் என் கைக்கு கிடைத்தது. சில மாதங்களில் என் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி தெய் வத்திடம் வேண்டுவதற்கு ஏதும் இல்லாமல் வெறுமனே தெய்வத்தை தரிசித்து விட்டு வருவதை வழக்கமாக வைத்து இருந்தேன். இது அத்தனை சிறிய வயதில் எனக்குள் ஒரு புது ஆன்மீக அலைகளை ஊற்றெடுக்க வைத்தது. நிறைய புது சிந்தனைகள் அதுவும் வயதுக்கு மீறிய நற்சிந்தனைகள் எழுந்தன.
எனக்குள் இருந்த எதிர்மறை சிந்தனைகள் முழுவதும் அழிந்து, மனம் முழுக்க நேர்மறை சிந்தனைகள் நிரம்பி வழிந்தன. இதனால் என்னுடைய பத்து வயது முதல் வெளிநாடு கிளம்பும்வரை ஒவ்வொரு வாரமும் தவறாது மாங்காடு கோவிலுக்கு சென்று அருள்மிகு காமாட்சியம்மனை தரிசனம் செய்து வருகிறேன். பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு வரும்பொழுது முதல் வேலையாக மாங்காடு காமாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு தான் மற்ற பணிகளை தொடர்வேன். இந்த விடுமுறை காலத்திலும் கூட வாரம் ஒருமுறையாவது மாங்காடு சென்று அம்மனை வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
நிறைய பக்தர்கள் நீண்ட பயணம் செய்து வந்து வழிபடும் வடபழனி கோவில் எங்கள் வீட்டில் இருந்து ஒரு 200 மீட்டர் அருகில் தான் உள்ளது. ஆகவே சிறுவயது முதல் வடபழனி முருகனை என் வயதையொத்த நண்பனாக நினைத்து வழிபட்டு வருகிறேன். மேலும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிப்பது விருப்பம்.'
உங்கள் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் என்ன?
"என் இஷ்ட தெய்வம் மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் அருளால் என் வாழ்க்கையில் எத்தனையோ அதிசயங்களும் மறக்க முடியாத நல்ல சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன.
என் திருமணத்திற் கான என் வாழ்க்கைத்துணையை நான் தேர்ந்தெடுத்த உடன் அடுத்த நாளே அவர்களை ஆலயத்திற்கு அழைத்துச் சென்று மாங்காடு காமாட்சியம்மன் அவர்களிடம் என்னுடைய தேர்வு என் வாழ்க்கைக்கு சரியானது என்றால் எங்களை சேர்த்து வைக்கும்படி கேட்டுக்கொண்டேன். அதை தொடர்ந்து அனைத்தும் சுமுகமாக நடந்தது. என் திருமணத் திற்கான சம்மதத்தையும் என் அன்பையும் என் துணைவியாரிடம் மாங்காடு அம்மன் முன் நின்று நெற்றியில் குங்குமம் வைத்து உறுதிமொழி எடுத்து, வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவரது இன்ப துன்பங்களிலும் நான் துணையாக நிற்பேன் என்று உறுதி செய்து என் துணைவியாரை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொண்டேன். அதற்கு பிறகு அனைத்தும் அம்மன் அருளால் மிக சுலபமாக நிகழ்ந்தது. திருமணத்திற்கு பின் இரண்டு மாதங்கள் நிறைந்த நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நாங்கள் நினைத்தவுடன் ஆலயத்திற்கு சென்றோம்.
அன்று ஆலயத்தின் தலைமை பூசாரியாக இருந்த மறைத்திரு சேகர் குருக்கள் அவர்கள் அர்ச்சனை செய்து ஒரு மாம்பழத்தை எங்களுக்கு அளித்து இதை சாப்பிடுங்கள் இந்த மாதமே கருத்தரிப்பு நிகழும் ஒரு அழகான ஆண் மகன் பிறப்பான் என்று ஆசீர்வதித்தார். அப்படியே நடந்தது.
பஹ்ரைன் நாட்டில் இந்துமத தெய்வங்களை கும்பிட அனுமதி உள்ளதா? அங்கே இந்து கோவில்கள் இருக்கிறதா? பூஜை அறையில் வழிபட்டு வருகிறீர்களா?
பஹ்ரைன் நாட்டில் அரசு அங்கீகாரத்துடன் ஓரிரு கோவில்கள் உள்ளன. ஆனால் அங்கீகாரம் இல்லாமல் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்கள் அனைத்திலும் வில்லா போன்ற வீடுகளின் அமைப்பில் இருக்கும். உள்ளே அமைதியான முறையில் வழிபாடு நடக்கும்.
அங்கீகாரம் பெற்ற கோவிலான கிருஷ்ணன் கோவிலில் வடக்கிடந்தியபாணியில் ஒரு படத்தை வைத்து அதற்கு முன்பாக உள்ள மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து செல்லும் படியான அமைப்பில் உள்ள ஒரு கோவில். நமக்கு சிலை வழிபாடு பழகிவிட்டதால் நிறைய தீபங்கள் ஏற்றி நல்ல மந்திரங்கள் சொல்லி கற்பூர ஆரத்தி காட்டி மணி அடித்து வழிபட்டால்தான் ஒரு திருப்தி கிடைக்கும். ஆகவே மலையாளம் மற்றும் தமிழ் மக்கள் நடத்தக்கூடிய கோவில்களில் இந்த அமைப்பு இருக்கிறது. எண்ணிக்கையில் 50க்கும் அதிகமான கோவில்கள் இருந்தாலும் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.
நீங்கள் சாதனையாளராக திகழ்வதற்கு உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்? இப்போது இருப்பவர்கள் யார்?
"எனக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்பது மாங்காடு காமாட்சியம்மன் அருளும் குலதெய்வத்தின் ஆசியும் மற்றும் என் துணைவியாரின் ஊக்கமும் தான். என் சக சொல்வேந்தர்களின் தொடர் உற்சாகங் களும் இதற்கு காரணமாக அமைகிறது.'
எந்தெந்த நாடுகளின் கோவில்களுக்கு சென்றிருக்கிறீர்கள்?
"இதுவரை 21 நாடுகளுக்கு பயணித் திருக்கிறேன். எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்த நாட்டில் உள்ள ஆலயத்திற்கு செல்வதை என்னுடைய வழக்கமாக வைத்திருக்கிறேன்.'
தினமும் எவ்வளவு நேரம் வழிபாடு செய்வீர்கள்?
"தினமும் இறைவனை வணங்காமல் எந்த வேலையும் துவங்குவது இல்லை. ஆனால் பூஜை அறையில் நான் செலவிடும் நேரம் மிகக்குறைவு என்பதே உண்மை.'
தமிழில் பக்தி பாடல்கள் கேட்பதுண்டா?
"டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய முருகன் பக்தி பாடல்கள் எனக்கு பிடிக்கும். மேலும் கந்த சஷ்டி கவசம் மற்றும் திருப்புகழின் பல வரிகள் என்னைக் கவர்ந்த ஆன்மீக பாடல்கள்.'
ஆன்மிகத்தில் எந்த மாதிரி செயல்பாடு களை இப்போது செய்து வருகிறீர்கள்? எதிர் காலத்தில் எப்படிப்பட்ட ஆன்மீக ஈடுபாடு செய்வதாக உள்ளீர்கள்?
"ஆன்மிகம் என்பது ஆன்மாவுடன் தொடர்புடையது. ஆன்மா என்பது ஒருவரின் தனிப்பட்ட உணர்வு மற்றும் தேடலையும், அதனை அறிவதையும் குறிக்கிறது. நம் நாட்டில் நிலவும் மதம் சார்ந்த தவறான நிலைப்பாடுகளை நம் சமுதாயத்திற்கு எளிய முறையில் எடுத்து சொல்லி, எண்ணங்களில் நல்ல மாற்றங்களை உருவாக்குவது என்னுடைய முக்கிய நோக்கமாகும்.
மதங்கள் உருவானது மனிதர்களுக்குள் ஒரு நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதற் காக, நம் நடத்தையில் மற்றும் நாம் செய்யும் செயல்களில் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கி அதன்மூலம் நல்ல செயல்களையும் நல்ல எண்ணங்களையும் விதைப்பதுதான் ஆன்மிகத்தில் எனது முக்கிய பங்காகும்.
தமிழ்த் தொண்டில் தனிச்சிறப்பு பெற்றவரை சந்தித்த ஆத்ம திருப்தியுடன் நாம் விடை பெற்றோம்.
முனைவர் கா.பொன் சங்கரபாண்டியன் தொடர்பு எண்: +97333308881
பேட்டி, படங்கள்:
ஆர்.பட்டம்மாள்