ராகு+குரு
ராகு+குரு இந்த கிரக சேர்க்கையால் குரு வினுடைய தன்மையும், காரகத்துவமும் ராகுவினால் பாதிப்பு அடைகிறது. ஜாதகருக்கு குணக்கேட்டை ஏற்படுத்துகிறது. தெய்வ வழிபாடுகளில் நாட்டமில்லாமலும் சாஸ்திர சம்பிரதாயங்கüல் நம்பிக்கை இல்லாமலும் எதிலும் முரண்பட்ட கருத்துகள் சிந்தனைகளும் இவர்களுக்கு ஏற்படுகிறது. பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லும் குணமும் இவர்களிடம் குறைவாகவே இருக்கும். குருமார்களும் ஆசிரியர்களும் இவர்களுக்கு நல்ல முறையில் அமைய மாட்டார்கள். அப்படி அமைந்தாலும் அதை இவர்கள் மதிக்காமல் இருப்பார்கள். கடும் புத்திர தோஷமும் இவ
ராகு+குரு
ராகு+குரு இந்த கிரக சேர்க்கையால் குரு வினுடைய தன்மையும், காரகத்துவமும் ராகுவினால் பாதிப்பு அடைகிறது. ஜாதகருக்கு குணக்கேட்டை ஏற்படுத்துகிறது. தெய்வ வழிபாடுகளில் நாட்டமில்லாமலும் சாஸ்திர சம்பிரதாயங்கüல் நம்பிக்கை இல்லாமலும் எதிலும் முரண்பட்ட கருத்துகள் சிந்தனைகளும் இவர்களுக்கு ஏற்படுகிறது. பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லும் குணமும் இவர்களிடம் குறைவாகவே இருக்கும். குருமார்களும் ஆசிரியர்களும் இவர்களுக்கு நல்ல முறையில் அமைய மாட்டார்கள். அப்படி அமைந்தாலும் அதை இவர்கள் மதிக்காமல் இருப்பார்கள். கடும் புத்திர தோஷமும் இவர்களுக்கு ஏற்படுகிறது. கருக்கலைப்பு ஏற்படும். இயற்கையாகவே இவர்களுக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினைகள் ஏற்படும். மருத்துவசிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒருவேளை எளிதாக இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தால் குழந்தை பிறந்தபின்பு குழந்தைக்கு பிரச்சினை அல்லது குழந்தையால் பிரச்சினை என்று ஒரு சங்கடமான சூழ்நிலை ஏற்படும். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் குழந்தைக்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அதுவும் பிறந்தகால குருவின்மீது கோட்சார ராகுவும் பிறந்தகால ராகுவின்மீது கோட்சார குருவும் செல்லும் பொழுது இவர்கள் குழந்தைக்காக மருத்துவம் எடுத்துக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இவர்களுக்கு பொருளாதாரத்திலும் ஒரு குருட்டு அதிர்ஷ்டம் கிடைக்கும். அதேசமயத்தில் ஒரு பண இழப்பும் ஏமாற்றமும் ஏற்படும். இவர்கள் வாழ்நாளில் ஓர் முறையாவது அவப்பெயர் வாங்கி விடுவார்கள். இவர்களுக்கு சதை பகுதிகளில் மெல்-ய தோள்கள் சிதைந்து தோல் நோய்கள் ஏற்படும். கொழுப்பு கட்டிகள் அதிகப்படியான கொழுப்பின் அளவு கூடுதல் இது போன்ற நோய்கள் ஏற்படும். தீய பழக்க வழக்கமுள்ள நட்புகள் ஏற்படும். வேற்று மதத்தினர் அந்நிய பாஷை பேசக்கூடியவர்கள் இவர்களுக்கு நண்பர்களாகக் கிடைப்பார்கள். இவர்களும் அந்நிய மொழிகள் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த கிரக சேர்க்கை உடைய தசாபுக்தி காலங்களில் இவர்கள் வெளியூர், வெளிநாடு செல்லும்பொழுது இவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த கிரக சேர்க்கையின் பாதிப்பை இவர்கள் குறைத்துக்கொள்ள இவர்கள் பெரியோர்களுக்கும் குருமார்களுக்கும் உதவிகள் செய்வதும், மரியாதையுடன் நடந்து கொள்வதும் அவசியம். குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பதும் நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள் செய்யும்பொழுது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். திட்டமிட்டபடி சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில் இவர்களுக்கு பிரச்சினைகள் தடைகள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்காக கடன்கள் அதிகம் பெற்று நடத்தினால் இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பரிகாரம்: சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பான பலனைத் தரும். நாகர்கோவி-ல் நாகராஜா வழிபாடு செய்துவரவேண்டும். வியாழக்கிழமை அன்று 16 நெய் தீபங்களேற்றி வழிபாடு செய்யவேண்டும். கொண்டைக்கடலையும் கருப்பு உளுந்தும் பிராமணர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். இதுபோன்று வழிபாடுகள் தானங்கள் செய்யும்பொழுது உங்களுக்கு அனைத்து காரியங்களும் எளிதில் கைகூடும்.