ராகு + புதன்
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு படிக்கும் வயதிலேயே படிப்பில் தடைகள் ஏற்படும். படிப்பின்மீது அதிகம் ஆர்வமில்லாமல் இருப்பது. குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமலும் போகிறது. இவர்கள் கஷ்டப்பட்டு படித்தாலும்கூட படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில்லாமல் கிடைத்த வேலையை செய்துகொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு உறவு முறைகள் அதாவது மாமன், நண்பர்கள், இளைய சகோதரி, காதலி, இப்படி உறவுகள் எல்லாம் இவர்களிடம் சுமூகமான உறவு முறைகள் இருக்காது. இந்த உறவுகளால் இவர்களுக்கு அதிகப்படியான தொல்லைகளும்
ராகு + புதன்
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு படிக்கும் வயதிலேயே படிப்பில் தடைகள் ஏற்படும். படிப்பின்மீது அதிகம் ஆர்வமில்லாமல் இருப்பது. குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமலும் போகிறது. இவர்கள் கஷ்டப்பட்டு படித்தாலும்கூட படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில்லாமல் கிடைத்த வேலையை செய்துகொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு உறவு முறைகள் அதாவது மாமன், நண்பர்கள், இளைய சகோதரி, காதலி, இப்படி உறவுகள் எல்லாம் இவர்களிடம் சுமூகமான உறவு முறைகள் இருக்காது. இந்த உறவுகளால் இவர்களுக்கு அதிகப்படியான தொல்லைகளும் மனவருத்தங்களும் வரும். காலி மனைகள் இருப்பின் அதனை பாகம் பிரிப்பதிலும் அதன் எல்லைகளை நிர்ணயிப்பதில் வில்லங்கமும் அதனால் தொந்தரவுகளும் ஏற்படுகிறது. இவர்களுக்கு தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு, பத்திரிகை துறை, கணினி துறை, கணக்கியல், வங்கி இது போன்ற துறைகளில் இவர்களுக்கு நல்ல திறமையும் பலன்களும் கிடைக்கும்.
தன்னைவிட வயது குறைவான அல்லது வயது அதிகமான ஆண்களால் பெண்களுக்கும் பெண்களாக இருந்தால் ஆண்களுக்கும் கடும் தொந்தரவு இருக்கும். இவர்களுக்கு தோல் தொடர்பான நோய்கள் அலர்ஜி, விஷக்கடியால் தோளில் அரிப்பு ஏற்படுதல், நரம்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்படும். இவர்களுக்கு பத்திரங்கள் தொடர்பான பிரச்சனைகள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கும். எந்த ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்பொழுது மிகவும் கவனமாக போடவேண்டும். வங்கியில் கடன்களை பெற்று அதனை கட்ட முடியாமல் மிகவும் சிரமங்கள் ஏற்படும்.
புதன் ராகு சேர்க்கை இருந்தாலும் அல்லது புதன் ஒற்றைப்படை ராசியில் ராகு இருந்தாலும் தனக்கு பிடிக்காத செயலை செய்பவர்களுடனே வேலைசெய்வது அல்லது தன் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாத நண்பர்களுடன் வாழ இந்த கிரக சேர்க்கையே காரணமாகிறது.
இளைய சகோதரிக்கு திருமண வாழ்வில் கடும் பிரச்சினைகளும் ஏற்படுகிறது. சமுதாயத்தில் முகம் சுளிக்கக்கூடிய அளவுக்கு உங்கள் காதல் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட காதல் வரும். அதனால் பிரச்சினைகள், அவமானம் ஏற்படும். காதலித்து திருமணம் செய்பவர்கள் மதம் மாறி திருமணங்கள் செய்வார்கள். மாமன் மகள் இதுபோன்ற உறவுகளில் திருமணம் செய்வார்கள். ஆனால் நிம்மதியான வாழ்க்கை இருக்காது. குடும்பத்தில் அனைவரையும் பகைத்துக்கொள்வார்கள். காதல் திருமணத்தால் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் அடைவார்கள். இந்த கிரகத்தின்மீது கோட்சார ராகு அல்லது புதன் வரும் காலத்தில் பாதிப்பைத் தரும்.
அல்லது இவர்களுக்கு ராகு தசாபுத்தி அல்லது புதன் தசை, புதன் புக்தி நடக்கும்போது பாதிப்பு ஏற்படும்.
சுப கிரகங்களின் பார்வை இந்த கிரக சேர்க்கையின்மீது இருந்தால் இதனுடைய பாதிப்பு குறையும். இந்த கிரக சேர்க்கையின் தோஷ அளவை குறைத்துக் கொள்ள பாம்பின்மீது படுத்திருக்கும் பெருமாள் வழிபாடு செய்வது சிறப்பு. உளுந்து பருப்பு, பச்சைப் பயிர் தானம் கொடுத்து வர வேண்டும். பெருமாளுக்கு புதன்கிழமை ராகுகால வேளையில் ஐந்து நெய் தீபமேற்றி வழிபாடு செய்யும்பொழுது இதனுடைய பாதிப்பு குறையும்.