சங்கடங்கள் தரும் ராகுபகவான்! ஜோதிட கலையரசி M.தனம்

bagavan

 


ராகு+சுக்கிரன்

சுக்கிரனின் நல்ல காரகத்துவங்கள் ராகுவால் பாதிக்கப்படுகிறது. ராகு எப்போதும் தனித்து இருக்கும்பொழுது பெரிய பாதிப்பை தருவதில்லை எந்த கிரகத்துடன் சேர்ந்தாலும் 70 சதவீகிதம் தீமையைத்தான் செய்கிறது. சுப கிரகங்களின் பார்வை யால் சுபத்துவம் அடைந்தால் ஒருசில யோகங்களையும் தரும். ஆண்கள் ஜாதகத்தில் இந்த கிரக சேர்க்கை இருந்தால் அதிக அளவு பாதிப்பை தருகிறது. பெண்களால் பிரச்சினைகள், கெட்ட பெயர், தீராத அவ மானம், மனைவியுடன் அல்லது சகோதரியுடன் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும்.

 


ராகு+சுக்கிரன்

சுக்கிரனின் நல்ல காரகத்துவங்கள் ராகுவால் பாதிக்கப்படுகிறது. ராகு எப்போதும் தனித்து இருக்கும்பொழுது பெரிய பாதிப்பை தருவதில்லை எந்த கிரகத்துடன் சேர்ந்தாலும் 70 சதவீகிதம் தீமையைத்தான் செய்கிறது. சுப கிரகங்களின் பார்வை யால் சுபத்துவம் அடைந்தால் ஒருசில யோகங்களையும் தரும். ஆண்கள் ஜாதகத்தில் இந்த கிரக சேர்க்கை இருந்தால் அதிக அளவு பாதிப்பை தருகிறது. பெண்களால் பிரச்சினைகள், கெட்ட பெயர், தீராத அவ மானம், மனைவியுடன் அல்லது சகோதரியுடன் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். ஆண்களுக்கு மறுமணம் அமைத்துக்கொள்கின்ற சூழ்நிலை வரும். பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் நடக்கும். பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்கவேண்டும். பண விஷயத்தில் பேராசைப்பட்டு அதிக லாபம் வருமென்று ஏமாறக்கூடும். அதனால் இவர்கள் எப்போதும் மூதலீடு செய்யும்போது கவனமாக இருக்கவேண்டும். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் நல்ல சுகவாசிகள். ஆடம்பரமான செலவுகள் செய்து வாழ்க்கை வாழவேண்டுமென ஆசைப்படுவார்கள். இவர்கள் திட்டம் எல்லாம் பெரிய அளவில் இருக்கும். ஆண்களாக இருந்தால் பெண்களால் அதிக அளவு பிரச்சினைகள் ஏற்படும். பணம் இழப்பு இருக்கும். 

ஆண்களுக்கு பிடிவாதக்கார, கோபக்கார பெண் மனைவியாக அமைவார்கள். இந்த கிரக சேர்க்கைக்கு சுப கிரகங்களின் பார்வை இருந்தால் மாறுபடும். பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் அல்லது சிறுநீரகத்தில் பிரச்சினை, சக்கரையின் அளவு அதிகமாகி இருப்பதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் சினிமா துறையில் சாதிக்கலாம். திரைக்குப் பின்னால் செய்யும் கேமரா டெக்னீசியன், எடிட்டிங், நடிப்பு, நடனம் இதுபோன்ற திரைக்கு முன்னாலும் பின்னாலும் செய்யும் தொழில் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும். 

அதனுடைய தசாபுக்தி காலத்தில் இவர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். மருத்துவத்துறை சார்ந்த தொழில்கள், எக்ஸ்ரே, ஸ்கேன், டெக்னிக்கல், எலக்ட்ரானிக்கல், கெமிக்கல், பிளாஸ்டிக் பொருட் கள் தயாரிப்பது, விற்பனை செய்வது தொடர்பான வேலைகள் இவர்களுக்கு சிறப்பாக அமையும். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் பைனான்ஸ் பண்ணிக்கொண்டு இருந்தால் அவர்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றத்தையும் கொடுக்கும். அதே சமயத்தில் வேறு பாவங்கள் கிரகங்களின் பாதிப்புகள் ஏதாவது இருந்தால் பணத்தை இழக்க வைத்து மிகப்பெரிய கஷ்டத்தில் தள்ளிவிடும். இந்த கிரக சேர்க்கை சுபத்துவம் அடைந்து இருந்தால் அவர்களை உச்சிக்கே கொண்டுசெல்லும். அதேசமயம் பாதிக்கப் பட்டு இருந்தால் அடிமட்டத்துக்கே கொண்டு தள்ளிவிடும். வளர்ச்சியாக இருந்தாலும், வீழ்ச்சியாக இருந்தாலும் ராகு தசையோ புக்தியோ, அல்லது சுக்கிரன் திசையோ புக்தியின் காலத்தில்தான் நடைபெறும். இவர்கள் வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் நரசிம்ம பெருமாளுக்கு 18 நெய் தீபமேற்றி வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலன் கள் கிடைக்கும்.

பேச: 90802 73877

bala090825
இதையும் படியுங்கள்
Subscribe