மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் செவ்வாயை அதிபதியாகக்கொண்ட மேஷ ராசியினர் ஆவர். நீங்கள் எப்போதும் நெய் தானம் செய்வது சிறப்பு. இந்த மாதம் அனேகருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். அதில் பாதி விருப்ப திருமணமாக இருக்கும். செவ்வாய் தோஷத்தால் திருமணம் கைகூடாமல் இருந்த வரன்களுக்கு, இப்போது நல்ல வரன் கிடைக்கும். திருமணமான தம்பதியர், மல்யுத்தம் புரிவர். பூர்வீக சொத்தை பிரிப்பதன்மூலம் பணம் கிடைக்கும். அல்லது உங்கள் பெண் வாரிசுகள்மூலம் பணவரவு உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தமாக, உங்களுக்கும் உங்கள் இளைய சகோதரனுக்கும் இடையே பெரிய சண்டை ஏற்படும். அதில் உங்களுக்கு செமத்தியான வருமானம் கிடைக்கும். உங்கள் கைபேசி தகவல்கள் நன்மை தரும். ஆன்மிக உபன்யாசகர்கள், நிறைய சிறுதூரப் பயணம் அல்லது கைபேசிமூலம் வெகு லாபம் பெறுவர். உங்களின் சிலரின் வாரிசுகள் அரசு வேலை பெறுவர். அல்லது அரசாங்கம் கொடுக்கும், வாரிசு வழி வேலைகள் சிலருக்கு கிடைக்கும். இந்த எண்ணில் பிறந்தவர்கள், வேலையில்லாமல் இருப்பின், இந்த மாதம், சிறு முயற்சி செய்தாலும் வேலை கிடைத்துவிடும்.
பரிகாரம்: திருவேற்காடு கருமாரியம்மனை வணங்கவும். வேறு மத இளம் பெண்ணிற்கு, திருமண செலவின் தேவையறிந்து உதவுங்கள்.
ஏப்ரல் 20 முதல் மே 20 வரை
இந்த எண்ணில் பிறந்தவர்கள், சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசியினர் ஆவர். இந்த மாதம் உங்கள் வேலையில் எதிர்மறை, இரகசிய பண பலன்கள் நிறைய கிடைக்கும். இதனால் உங்களில் சிலர் வாடகைக்கு இருக்கும் வீட்டை வாங்க முடியுமா எனும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களில் சிலருக்கு தாயாருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சில பெண்களின் கர்ப்பம் உறுதிபடுத்தப்படும். சிலருக்கு அரசிய-ல் மந்திரி பதவி கிடைக்கும். இது குறுக்குவழியில், நிறைய பணம் கொடுத்து பெற்றதாக அமையும். கல்வி பணியில் இருப்பவர்கள், அரசுப்பணி கிடைக்கப் பெறுவர். வாழ்க்கைத்துணையின் வேலையில் மாறுதல் உண்டாவதால் பிரிவு வரும். பேசும்போது கவனம் தேவை. சில சொற்கள் லாபத்தையும், சில சொற்கள் அவமானத்தையும் தரும். தந்தை, தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. உங்கள் தொழில் முன்னேற்றத்துக்கு, வாழ்க்கைத்துணை உதவுவார். சில அரசியல்வாதிகள், இரகசிய திருமணம் செய்து, மறைவாக குடும்பம் நடத்துவர். இந்த மாதம் வருமானம் அதிகரிப்பதால், கடன்களை அடைத்துவிடுவீர்கள். இந்த மாதம் வாரிசு யோகம் வேண்டுவோர், மருத்துவ வசதி பெற்றால், கண்டிப்பாக வாரிசு உண்டாகும்.
பரிகாரம்: சென்னை காளிகாம்பாளை வணங்கவும். வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் கடன் தொல்லை தீர்வதற்கு தேவைக் கேட்டு உதவுங்கள்.
மே 21 முதல் ஜூன் 20 வரை
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் புதனை அதிபதியாகக்கொண்ட மிதுன ராசியை சேர்ந்தவர்கள். பச்சை நிறப் பொருட்கள் தானம் செய்வது சிறப்பு. இந்த மாதம் திருமணம் நடக்கும். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கைத் துணையின் அனுசரணை கிடைக்கும். இந்த ஆதரவு வாழ்க்கைத்துணையின் தொழில் முதன்மை அடைய உதவும். வீடு வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் துறையினர் வெகு மேன்மை பெறுவர். உங்களில் சிலருக்கு, அரசாங்க வீடு சம்பந்தமான குறுஞ்செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் இளைய சகோதரனின் உதவி கிடைக்கும். உங்களில் சிலர் அரசு பணியாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் வாரிசுகளின், வெளிநாட்டு பயணம் சம்பந்தமான தரவுகளை பெறுவீர்கள். சிலர் பங்குகளை விற்க அல்லது மாற்ற தகவல் பெறுவீர்கள். சினிமா கலைஞர்கள் அல்லது டி.வி. கலைஞர்கள், வேறு மொழி படம் அல்லது வேறு ஒருவருக்கு பதிலாக மாற்றப்படுவர். தொழில் நிலை சலனம் உண்டு. சிலர் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வ-யால் துன்பப்பட நேரிடும். அல்லது வாரிசுகளின் மேன்மை, பதவி உயர்வு இவற்றுக்காக கடன் வாங்க நேரிடும். குழந்தை பேறு சம்பந்தமாக, மருத்துவ சந்திப்பு ஏற்படும். அல்லது கர்ப்பபை சம்பந்த மாக மருத்துவரை சந்திக்கக்கூடும். இப்போது நடக்கும் பிரசவம் அனேகமாக சிசேரியனாக இருக்கும்.
பரிகாரம்: தில்லைக் காளியை வணங்கவும். உங்கள் பெண் பணியாளரின், குழந்தைகளின் படிப்பு செலவுக்கு முடிந்த அளவு உதவுங்கள்.
ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் சந்திரனை அதிபதியாகக்கொண்ட கடக ராசியில் பிறந்தவர்கள் ஆவர். அரிசி அல்லது உப்பு தானம் சிறப்பு. இந்த மாதம் பணவரவு மிக அதிகமாக இருக்கும். அதில் பாதி லஞ்சப்பணம் என தனியாக சொல்ல வேண்டாம். அரசியல்வாதிகள், அதிகமான பணவரவு பெறுவர். பெண் அரசியல்வாதிகள் வீடுகள்மூலமும் வருமானம் அதிகரிக்கப் பெறுவர். அரசு அதிகாரிகள், இடமாற்றம்மூலம் வெகு செழிப்பான பதவியை பிடித்துவிடுவர். போக்குவரத்து அதிலும் அரசு பயணம் சார்ந்தவர்கள் முதலீடு சம்பந்தமான வெகு நன்மை கிடைக்கப் பெறுவார்கள். அரசு சார்ந்த இரு சக்கர வாகனம் பொருட்டு, நல்ல வருமானம் கிடைக்கும். இது சார்ந்து, அரசு பதவியில் இருப்பவர்கள் நிறைய கையெழுத்து போடுவார்கள். கணித ஆசிரியர்கள் அரசு சார்பு பெறுவர். டி.வி.யில் வேலை செய்ய விருப்பமுள்ளவர் கள் இந்த
மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் செவ்வாயை அதிபதியாகக்கொண்ட மேஷ ராசியினர் ஆவர். நீங்கள் எப்போதும் நெய் தானம் செய்வது சிறப்பு. இந்த மாதம் அனேகருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். அதில் பாதி விருப்ப திருமணமாக இருக்கும். செவ்வாய் தோஷத்தால் திருமணம் கைகூடாமல் இருந்த வரன்களுக்கு, இப்போது நல்ல வரன் கிடைக்கும். திருமணமான தம்பதியர், மல்யுத்தம் புரிவர். பூர்வீக சொத்தை பிரிப்பதன்மூலம் பணம் கிடைக்கும். அல்லது உங்கள் பெண் வாரிசுகள்மூலம் பணவரவு உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தமாக, உங்களுக்கும் உங்கள் இளைய சகோதரனுக்கும் இடையே பெரிய சண்டை ஏற்படும். அதில் உங்களுக்கு செமத்தியான வருமானம் கிடைக்கும். உங்கள் கைபேசி தகவல்கள் நன்மை தரும். ஆன்மிக உபன்யாசகர்கள், நிறைய சிறுதூரப் பயணம் அல்லது கைபேசிமூலம் வெகு லாபம் பெறுவர். உங்களின் சிலரின் வாரிசுகள் அரசு வேலை பெறுவர். அல்லது அரசாங்கம் கொடுக்கும், வாரிசு வழி வேலைகள் சிலருக்கு கிடைக்கும். இந்த எண்ணில் பிறந்தவர்கள், வேலையில்லாமல் இருப்பின், இந்த மாதம், சிறு முயற்சி செய்தாலும் வேலை கிடைத்துவிடும்.
பரிகாரம்: திருவேற்காடு கருமாரியம்மனை வணங்கவும். வேறு மத இளம் பெண்ணிற்கு, திருமண செலவின் தேவையறிந்து உதவுங்கள்.
ஏப்ரல் 20 முதல் மே 20 வரை
இந்த எண்ணில் பிறந்தவர்கள், சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசியினர் ஆவர். இந்த மாதம் உங்கள் வேலையில் எதிர்மறை, இரகசிய பண பலன்கள் நிறைய கிடைக்கும். இதனால் உங்களில் சிலர் வாடகைக்கு இருக்கும் வீட்டை வாங்க முடியுமா எனும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களில் சிலருக்கு தாயாருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சில பெண்களின் கர்ப்பம் உறுதிபடுத்தப்படும். சிலருக்கு அரசிய-ல் மந்திரி பதவி கிடைக்கும். இது குறுக்குவழியில், நிறைய பணம் கொடுத்து பெற்றதாக அமையும். கல்வி பணியில் இருப்பவர்கள், அரசுப்பணி கிடைக்கப் பெறுவர். வாழ்க்கைத்துணையின் வேலையில் மாறுதல் உண்டாவதால் பிரிவு வரும். பேசும்போது கவனம் தேவை. சில சொற்கள் லாபத்தையும், சில சொற்கள் அவமானத்தையும் தரும். தந்தை, தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. உங்கள் தொழில் முன்னேற்றத்துக்கு, வாழ்க்கைத்துணை உதவுவார். சில அரசியல்வாதிகள், இரகசிய திருமணம் செய்து, மறைவாக குடும்பம் நடத்துவர். இந்த மாதம் வருமானம் அதிகரிப்பதால், கடன்களை அடைத்துவிடுவீர்கள். இந்த மாதம் வாரிசு யோகம் வேண்டுவோர், மருத்துவ வசதி பெற்றால், கண்டிப்பாக வாரிசு உண்டாகும்.
பரிகாரம்: சென்னை காளிகாம்பாளை வணங்கவும். வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் கடன் தொல்லை தீர்வதற்கு தேவைக் கேட்டு உதவுங்கள்.
மே 21 முதல் ஜூன் 20 வரை
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் புதனை அதிபதியாகக்கொண்ட மிதுன ராசியை சேர்ந்தவர்கள். பச்சை நிறப் பொருட்கள் தானம் செய்வது சிறப்பு. இந்த மாதம் திருமணம் நடக்கும். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கைத் துணையின் அனுசரணை கிடைக்கும். இந்த ஆதரவு வாழ்க்கைத்துணையின் தொழில் முதன்மை அடைய உதவும். வீடு வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் துறையினர் வெகு மேன்மை பெறுவர். உங்களில் சிலருக்கு, அரசாங்க வீடு சம்பந்தமான குறுஞ்செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் இளைய சகோதரனின் உதவி கிடைக்கும். உங்களில் சிலர் அரசு பணியாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் வாரிசுகளின், வெளிநாட்டு பயணம் சம்பந்தமான தரவுகளை பெறுவீர்கள். சிலர் பங்குகளை விற்க அல்லது மாற்ற தகவல் பெறுவீர்கள். சினிமா கலைஞர்கள் அல்லது டி.வி. கலைஞர்கள், வேறு மொழி படம் அல்லது வேறு ஒருவருக்கு பதிலாக மாற்றப்படுவர். தொழில் நிலை சலனம் உண்டு. சிலர் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வ-யால் துன்பப்பட நேரிடும். அல்லது வாரிசுகளின் மேன்மை, பதவி உயர்வு இவற்றுக்காக கடன் வாங்க நேரிடும். குழந்தை பேறு சம்பந்தமாக, மருத்துவ சந்திப்பு ஏற்படும். அல்லது கர்ப்பபை சம்பந்த மாக மருத்துவரை சந்திக்கக்கூடும். இப்போது நடக்கும் பிரசவம் அனேகமாக சிசேரியனாக இருக்கும்.
பரிகாரம்: தில்லைக் காளியை வணங்கவும். உங்கள் பெண் பணியாளரின், குழந்தைகளின் படிப்பு செலவுக்கு முடிந்த அளவு உதவுங்கள்.
ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் சந்திரனை அதிபதியாகக்கொண்ட கடக ராசியில் பிறந்தவர்கள் ஆவர். அரிசி அல்லது உப்பு தானம் சிறப்பு. இந்த மாதம் பணவரவு மிக அதிகமாக இருக்கும். அதில் பாதி லஞ்சப்பணம் என தனியாக சொல்ல வேண்டாம். அரசியல்வாதிகள், அதிகமான பணவரவு பெறுவர். பெண் அரசியல்வாதிகள் வீடுகள்மூலமும் வருமானம் அதிகரிக்கப் பெறுவர். அரசு அதிகாரிகள், இடமாற்றம்மூலம் வெகு செழிப்பான பதவியை பிடித்துவிடுவர். போக்குவரத்து அதிலும் அரசு பயணம் சார்ந்தவர்கள் முதலீடு சம்பந்தமான வெகு நன்மை கிடைக்கப் பெறுவார்கள். அரசு சார்ந்த இரு சக்கர வாகனம் பொருட்டு, நல்ல வருமானம் கிடைக்கும். இது சார்ந்து, அரசு பதவியில் இருப்பவர்கள் நிறைய கையெழுத்து போடுவார்கள். கணித ஆசிரியர்கள் அரசு சார்பு பெறுவர். டி.வி.யில் வேலை செய்ய விருப்பமுள்ளவர் கள் இந்த மாதத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்லபடியாக உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். புது கைபேசி வாங்குவீர்கள். சில மாணவர்கள் தொழில் கல்வி கிடைக்கப் பெறுவர். பணவரவு அதிகரிக்கப்பதால் கடன் அடையும்.
பரிகாரம்: சமயபுரம் மாரியம்மனை வணங்கவும். உங்கள் வீடு அல்லது தொழில் செய்யும் இடத்தில், சமையல் வேலை பார்க்கும் பெண்ணின் பணத் தேவையைக் கேட்டறிந்து முடிந்த உதவி செய்யவும்.
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை
இந்த நாட்களில் பிறந்தவர்கள், சூரியனை அதிபதியாகக்கொண்ட சிம்ம ராசியில் பிறந்தவர் ஆவார்கள். நீங்கள் மோர் தானம் செய்வது சிறப்பு. இந்த மாதம் எதைத் தொட்டாலும், மைடாஸ் டச்போல பணம் கொட்டும். தங்கமாக பொழியும். அரசு சார்ந்த, நிலுவைப் பணம் வர வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், மிக முக்கியமான பொருளாதார, நிதி நிலைமை சார்ந்த பதவிகளைப் பெறுவர். உங்கள் மூத்த சகோதரர் அரசு, அரசியல் சார்ந்த வெகு மேன்மை பெறுவார். இதில் நீங்களும் பயனும், பலனும் பெற்றுக்கொள்வீர்கள். இதில் நிறைய மறைமுக பரிவர்த்தனையும் நடக்கும். அரசு சார்ந்த ஒப்பந்த, குத்தகைகளுக்கு முயன்று வெற்றியும் பெறுவீர்கள். உங்கள் இளைய சகோதரியின் வேலை விஷயமாக அல்லது மாமியார் சார்ந்து ஒரு பிரச்சினை ஏற்படும். உங்கள் பெண் பணியாளர்கள் வேலையை விட்டு நின்றுவிடுவர். உங்கள் பெற்றோர் சிறு தூரப் பயணம் மேற்கொள்வர். உங்களில் சிலர் வீடு மாற்றுவீர்கள். சிலருக்கு மருமகன் வருவார். வேறு சிலர் வந்த மருமகனோடு மல்லுக்கு நிற்க வேண்டியிருக்கும். பங்குவர்த்தகம் எதிர்பாராத லாபம் தரும். சினிமா கலைஞர்கள் குறுக்குவழியில் வாய்ப்பும், லாபமும் பெறுவர். அரசியல்வாதிகள் அக விகடம் செய்து, ஒரு மந்திரி நாற்கா-யில் அமர்ந்துவிடுவர்.
பரிகாரம்: பட்டீஸ்வரம் துர்க்கையை வணங்கவும். உங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பணிப் பெண்கள், வீடு மாற்றும்போது ஏற்படும் செலவுக்கு, முடிந்த உதவி செய்யவும்.
ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் புதனை அதிபதியாகக்கொண்ட கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஆவார்கள். பச்சை வாழைப்பழங்கள் தானம் சிறப்பு. இந்த மாதம் உங்கள் தொழில் நிலை ஓஹோதான். தொழில் நிலை உயரும்போது, கௌரவமும் மிக உச்சம் அடையும் என தனியாக சொல்ல வேண்டாம். இந்த மாதம், எதிர்மறை இனங்களி-ருந்து, நிறைய பணம் வந்தாலும், அதற்கு இரு மடங்காக செலவும் ஏற்படும். கணக்கு பார்த்தால், கையில் மிச்சமில்லை எனும் நிலையே உண்டு. உங்களிடம் பணிபுரியும் பணியாளர்கள் அல்லது உங்களின் இளைய சகோதரன், உங்களை சற்று மிரட்டியே பணம் பிடுங்கிவிடுவர். சில கைபேசி செய்திகள் ஆயிரம் ரூபாய் வரவு, தந்து, லட்சம் ரூபாயை அபகரித்துவிடும்; கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் தொழில் மேம்பாட்டிற்கு உங்களின் தாயாரின் ஒத்தாசை அதிகமிருக்கும். உங்கள் வாரிசுகள் வேலை அல்லது மேற்கல்வி விஷயமாக செலவை ஏற்படுத்துவார்கள். அதில் சில வெளிநாட்டு பயண செலவாகவும் இருக்கும். திருமணம் உங்கள் தொழில் சார்ந்து அமையும். சிலருக்கு வேறு இன, மொழி ஆட்களுடன் காதல் திருமணமாகவும் நடக்கும்.
பரிகாரம்: புன்னை நல்லூர் மாரியம்மனை வணங்கவும். கோவில் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பிற மொழிபேசும் பெண்களுக்கு பயண செலவு அல்லது வேறு செலவுகளின் தேவை அறிந்து உதவவும்.
செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 20 வரை
மேற்கண்ட தினங்களில் பிறந்தவர்கள் சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலா ராசியை சேர்ந்தவர்கள் ஆவீர்கள். இந்த மாதம் நிறைய பேருக்கு திருமண ப்ராப்தம் உண்டு. வரன் உங்களை தேடிவந்து திருமணம் செய்துகொள்வர். பண வசதிக்கும் குறைவிருக்காது. இளைய சகோதரனின் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்கும். வசதி அதிகமான வாடகை வீடு செல்வீர்கள். இந்த மாதம் கிடைக்கும் லாபங்களும், யோகங்களும் கண்டிப்பாக எதிர்மறைத் தன்மையும், கறுப்பு பணமாகவும் இருக்கும். சிலர் தனியார் வேலையில் சேர்வர். அதில் தகவல் தொழில் நுட்பமும் செய்தி தொடர்பும் சிறு தூரப் பயணமும் கலந்திருக்கும். உயர்கல்வி, அல்லது வேலை சார்ந்து வெளிநாட்டு பயணம் உண்டு. சில அரசியல்வாதிகள், தங்களது பெரும் சொத்து முதலீட்டுக்காக வெளிநாடு செல்வர். யாருக்கெல்லாம், வெளிநாடு செல்லவேண்டும் எனும் ஆசை இருக்கிறதோ, அவர்கள் இந்த மாதத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பரிகாரம்: இருக்கன்குடி மாரியம்மனை வணங்கவும். சமையல் தொழில் செய்யும் வேறு மத, இன, மொழி பெண்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தமான உதவி கேட்டு செய்யுங்கள்.
அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்குள் வருவார்கள். நீங்கள் அடிக்கடி மோர் தானம் செய்வது நல்லது. இந்த மாதம் ரொம்ப எதிர்பாராத, வித்தியாசமான நிகழ்வுகள் உங்களுக்கு நடக்கும். கடன் அனைத்தும் அடைந்துவிடும். வீடு மாற்றம் உண்டு. தொழில் முதலீடு உண்டு. சிலர் தொழில் இடத்தை மாற்றுவீர்கள். அதெல்லாம் சரி. இதற்கெல்லாம் பணம் வேண்டுமே அது எங்கிருந்து வரும் எனும் கேள்வி உங்களை பிராண்டுகிறதல்லவா. உங்கள் பூர்வீகம் நிறைய பணம் தரும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒருவரின் உயில் உங்களுக்கு பணம் தரும். சொந்தக்காரர் ஒருவரின் இன்ஷூரன்ஸ் பணம் உங்களை தேடிவரும். எக்குத் தப்பில் வாங்கிய லாட்டரி சீட்டு, பணம் தரும். அட, வீட்டை நோண்டும்போது, டங்கென்ற சத்தத்துடன், உங்கள் முன்னோரின் புதையல் ஒன்று கையில் கிடைக்கும். அரசாங்கம் உங்களுக்கு தரவேண்டிய பணத்தை, ரொம்ப நாள் கண்ணில் காட்டாமல் இருந்தது. இப்போது கையில் கிடைக்கும்.
பரிகாரம்: கோவை கோனியம்மனை வணங்கவும். பயணம் சார்ந்து பணிபுரியும் மகளிரின் தேவைக் கேட்டறிந்து உதவவும்.
நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் குருவை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்குள் வருவர். இந்த மாதம் கண்டிப்பாக திருமணம் கைகூடும். அது உங்கள் தாய்வழி சொந்தமாக அமையக்கூடும். அமையும் வரன், உங்களைவிட அந்தஸ்த்திலும், செழிப்பிலும், அதிர்ஷ்டத்திலும் மிக மிக மேன்மையானவராக இருப்பார். சில சம்பந்தம் அரசாங்க அதிகாரிகளின் சம்பந்தமும், அரசியல் சார்பும் பெற்றிருக்கும். சில அரசு அதிகாரிகள், பதவி உயர்வு பெறுவர். சில அரசியல்வாதிகள் மிக அதிர்ஷ்ட நிகழ்வுகளை பெற்று, செய்திகளில் முதன்மை இடத்தைப் பெறுவர். சிலரின் வாழ்க்கைத்துணை வீடு அல்லது புதிய தொழில் ஆரம்பிக்க தொடங்குவர். சிலருக்கு மருமகன் வருவார். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் தரும். சினிமா கலைஞர்கள் மிக ஏற்றம் பெறுவர். டி.வி. கலைஞர்கள் பிற மொழி சம்பந்த அதிர்ஷ்டம் பெறுவர். சிலர் தனியார் வேலை பெறுவர். சிலரின் மூத்த சகோதரிகள் சுபகடன் வாங்குவர். உங்களின் சில வழக்குகள் வெற்றியடையும். நல்ல பங்குதாரர் கிடைப்பார். உங்களில் சிலர் வாழ்க்கைத்துணை அல்லது பங்குதாரருடன் தொழில் ஆரம்பிக்கும் உத்தேசம் இருப்பின், இந்த மாதத்தை பயன்படுத்திக்கொள்ளவும். இதற்கு உங்கள் தந்தை அல்லது அரசாங்கம் நன்கு கை கொடுத்து உதவுவர்.
பரிகாரம்: பண்ணாரி மாரியம்மனை வணங்கவும். நீதித்துறை, அறநிலையத்துறை என இவை சார்ந்து வேலை செய்யும், பிறமொழி பேசும் பெண்களுக்கு, தேவைக் கேட்டறிந்து உதவவும்.
டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை
மேற்கண்ட தினங்களில் பிறந்தவர்கள் சனீஸ்வரனை அதிபதியாகக்கொண்ட மகர ராசிக்குள் வருவீர்கள். பால், குடிநீர் தானம் சிறப்பு. சாதாரணமாக இந்த எண்ணில், மாதத்தில் பிறந்தவர்கள் சற்று டோண்ட் கேர் எனும் மனப்பான்மை கொண்டவர்கள்தான். ஆனால் இந்த மாதம் அபூர்வமாக, ஏதாவது லஞ்சப் பணம் வந்தால் நன்றாக இருக்குமே என்று யோசிப்பீர்கள். உங்கள் நினைப்புக்கு ஏற்ப, வாங்கிய லாட்டரி பணம் அள்ளித் தரும். பங்குகள் பல பல பணம் கொடுக்கும். சினிமா கலைஞர்கள் கள்ள பண சம்பாத்தியம் அதிகம் பெறுவர். சிலரின் பெண் வாரிசுகள் மூலமும் வெளிநாட்டு பணம் வரும். தொழில் செய்பவர்கள் லஞ்சப் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். இந்த மாதம் வாடகை வீடு மாறுவீர்கள். உங்களில் சிலர் உங்கள் தொழிலையும், உங்கள் வாழ்க்கைத்துணையின் தொழிலையும், லாப நோக்கம் பொருட்டு, ஒன்றாக சேர்த்துவிடுவீர்கள். இந்த லாப வருமானத்தை வைத்து, தொழில் சார்ந்து ஒரு இடம் வாங்கலாமா எனும் யோசனை கொள்வீர்கள். உங்கள் வாரிசுகளின் திருமண ஏற்பாட்டின்போது, வரும் வரனைப் பற்றி பலமுறை விசாரிக்கவும். ஏனெனில் நல்ல சுப விஷயங்களில், ஒரு கபடம் ஒளிந்திருக்கும். உங்களின் வேலை, அதுவும் அரசு வேலை சார்ந்தவர்கள் மிக மேன்மை பெறுவர்.
பரிகாரம்: விழுப்புரம் வட்டப்பாறை அம்மனை வணங்கவும். நீங்கள் தொழில்புரியும் இடத்தில் ஆரோக்கிய குறைவான பிற இன, மொழி பெண்களின், தேவைக் கேட்டறிந்து உதவுங்கள்.
ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை
மேற்கண்ட தினங்களில் பிறந்தவர்கள் சனியை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்குள் வருவர். மோர், பால், குடிநீர் தானம் சிறப்பு. இந்த மாதம் வருமானம் பலவகையிலும் வந்து கொட்டும். அதற்கு ஈடு செய்வதுபோல் சிலவகை செலவுகள் வந்து கதவை தட்டும். இந்த மாதம் பங்குவர்த்தகம் மிக அதிக லாபம் தரும். அதுவும் நீங்கள் சற்றும் எதிர்பாராத பங்குகள், உங்களுக்கு பணத்தை வாரி வழங்கும். சிலருக்கு வாரிசும், அவருடைய துணையும் சேர்ந்து உங்கள் வாழ்வை செழிப்பாக்குவர். இன்னொருபுறமாக அவர்களுக்கு கிடைக்கும் கறுப்பு பணத்தை உங்களிடம் மறைமுகமாக கொடுத்து பத்திரமாக வைத்திருக்கச் சொல்வர். உங்களில் சிலர் காதல் திருமணத்தை கமுக்கமாக முடித்துக்கொள்வர். சிலரின் கலப்பு திருமணம் வெளிப்படையாக நடக்கும். உங்களின் இளைய சகோதரர் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. இள வயதுடைய பணியாளர்கள் கிடைப்பர். கைபேசியில் நிறைய ஆன்மிகம் சம்பந்த செய்தி தரவுகளை பதிவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணையின் தொழிலுக்கு உங்கள் பெற்றோர் உதவுவர். சினிமா சம்பந்தம் கொண்டோர். பொதுஜன தொடர்பில் மிக மேன்மையும் கூடவே சில கரும்புள்ளிகளான செய்தியையும் சேர்த்துப் பெறுவர்.
பரிகாரம்: சேலம் கோட்டை மாரியை வணங்கவும். பிற இன, மொழி பேசும் பெண்களின் திருமணத்திற்கு, முடிந்த உதவி செய்யவும்.
பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை
மேற்கண்ட மாதத்தில் பிறந்தவர்கள் குருவை அதிபதியாகக் கொண்ட மீன ராசியில் அமைவர். மருந்து தானம் செய்வது சிறப்பு. இந்த மாதம் உங்கள் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்கும். திருமணம் உங்கள் தாய் அல்லது தாய்மாமன் வழியில் நடக்கும். வரும் வரன் அரசு அல்லது அரசிய-ல் முதன்மை பெற்றவராக ஓஹோவென்று இருப்பார். இத்திருமணம் வழியாக அல்லது உங்கள் தாயாரின் உதவியால், அரசுப் பணி கிடைக்கும். யாருக்கெல்லாம் அரசுப் பணி தேவையோ, அவர்கள் அது சார்ந்த தொடர்பாளர்கள் மூலம் முயற்சிசெய்து வெற்றியடையுங்கள். இந்த மாதம் பணம் கையில் தட்டுப்படாமல், தட்டுப்பாடு ஏற்படும். உங்களின் சொற்கள் குதர்க்கமாக எடுத்துக்கொள்ளப்படும். எனினும் இது பெரிய சண்டையாக மாறாமல் நிறுத்தப்படும். உங்கள் இளைய சகோதரி, ஆரம்பித்து வைக்கும் ஒரு யுத்தம், பிசுபிசுத்து காணாமல் போகும். உங்கள் பணியாள், உங்களிடம் கோபம்கொண்டு, உங்கள்மீது, வழக்கு தொடரும் நிலை தடுக்கப்படும். இந்த மாதம் அரசு சார்ந்த வீடு ஒன்றை பெற இயலும். திருமணமானவர்கள், உங்கள் தாய் அல்லது உங்கள் வியாபாரம் சார்ந்து உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வீர்கள். உங்கள் வேலை செய்யுமிட தலைமை ஒரு பெரிய பிரச்சினை தர தயாராகும் நேரம் அது தவிர்க்கப்படும்.
பரிகாரம்: மதுரை காளியை வணங்கவும். வேலை செய்யும் பெண்களின், சிறு தூரப் பயணச் செலவுக்கு உதவுங்கள். அல்லது சைக்கிள் பழுது நீக்க உதவவும்.
____________________
புரட்டாசி மாத கிரக நிலைகள்!
சூரியன்
எல்லா வருடமும், புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில்தான் இருப்பார். கூடவே உச்ச புதனும் உள்ளார். அரசாங்கத்தைக் குறிக்கும் சூரியன், காலபுருசனின் 6-ஆமிடத்தில் அமர்ந்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று உள்ளது. காலபுருசனின் 6-ஆமிடம் எதிர் கட்சிகளை குறிக்கும். 6-ஆமிட அதிபதி புதன். இவர் தனது சொந்த வீட்டில் உச்சமாகி உள்ளார். எனவே அரசாங்கமும், பலமான எதிர்கட்சியினரும் கைகோர்த்து விடுவர். நிறைய அரசு அதிகாரிகள் இந்த மாத்தில், எதிர்க்கட்சியினரின் பேச்சைகேட்டு, அதன்படி நடவடிக்கை மேற்கொள்வர். இந்த இணைவு அரசின் குறைகளை, கோல்மால்களை அதிகாரிகள், எதிர்கட்சி ஆட்களிடம் தகவலாக, தரவாக போட்டுக் கொடுத்துவிடுவர். இது போதுமே எதிர்கட்சி ஆட்கள் பேயாட்டம் ஆடுவார்கள். புதன் உச்சமாகி இருப்பதால், உலகிலேயே எதிர்கட்சியினர் மட்டும்தான் உசத்தி. மீதமுள்ளவர்கள் வெகு மட்டம், உருப்படாதவர்கள் எனும் செய்திகளை எங்கும் பரவச் செய்வர். மக்களோ "அட இந்த எதிர்கட்சிக்கு என்ன வந்துவிட்டது. ஓவராக கத்துகிறார்களே'' என வியப்படைவர்.
இதே சூரியனை, திருக்கணிதப்படி சனி பார்வையிடுவார். அப்போது அரசு அதிகாரிகள், வாயைமூடி கப்சிப் என்றிருப்பர். சனி தனது பார்வையால் சூரியனை அடக்குவதால், அரசு அதிகாரிகள், இந்த அரசியல்வாதிகளை நம்பி எதுவும் வாயைத் திறக்கக் கூடாது என அமைதியாகிவிடுவர். எதிர்கட்சியினர் இதையும் ஒரு விஷயமாக்கி ஆர்ப்பாட்டம் செய்வர்.
மொத்தத்தில், இந்த மாதம் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் பாடு திண்டாட்டம்தான்.
செவ்வாய்
இவர் காலபுருச தத்துவப்படி ஆளும் கட்சியை குறிப்பார். இந்த மாதம் இவர் காலபுருசனின் 7-ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார். 7-ஆம் வீடு என்பது கூட்டணி கட்சிகளின் வீடு. கூட்டணி கட்சிகளை குறிக்கும் சுக்கிரன் காலபுருசனின் 5-ஆம் வீட்டில் உள்ளார். எனவே ஆளும் கட்சி, தனது மந்திரி பெருமக்கள்மூலம், கூட்டணி கட்சியினருடன் மறைமுகத் தொடர்புகொள்ளும். மறைமுகத் தொடர்பு என ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால், உடனிருக்க கேது, இவ்விதமே செயலாற்ற அனுமதிப்பார். செவ்வாய் தனது சொந்த வீட்டை பார்ப்பதுடன் குருவின் பார்வையையும் பெறுகிறார் என்பது மிக விசேஷம். எனவே ஆளும் கட்சியினர், ஆர்ப்பாட்டமின்றி, தங்களது அரசியல் நிகழ்வுகளை ஸ்திரமாக்கிக்கொள்வர். மேலும் கூட்டணி கட்சியினரை பேச்சு, பணம்மூலம் தன்வசமாக்கி குதூகலிப்பர். சில ஆளும் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் திருமண சம்பந்தம் கொள்ள வாய்ப்புள்ளது. அது காதல், கலப்பு மணமாகவும் அமையும். நீதிமன்றம் இவர்களுக்கு சாதகமாக ஒரு தீர்ப்பு வழங்குவதால் வெகு நிம்மதி அடைவர்.
புதன்
இவர் எதிர்கட்சிகளை குறிப்பவர். இந்த மாதம் எதிர்கட்சிகள் வெகு பலத்துடன், பேயாட்டமாக, ஆர்ப் பாட்டம் செய்வர். இவர்கள், அரசு அதிகாரிகளுடன் மறைமுகமாவாவது தொடர்புகொண்டு, அரசு தரவுகளை பெற்று, ஆளும் கட்சியை விளாசியடிப்பர். எதிர்க் கட்சிக்காரன் எம்புட்டு தைரியமா பேசறான் பார் என்று ஜனங்கள் வியப்படைவர். இந்த தைரியத்தை உடனிருக்கும் சூரியன் அள்ளித் தருவார். ஆளும் கட்சியினரின் மந்திரிகள் பற்றியும், அவர்கள் வீடு வசதிகளையும் மற்றும் அவர்களின் மறைமுக கூட்டணி தொடர்பு பற்றியும் பக்கம் பக்கமாக பேசி களிப்படைவர். ஆக, இந்த மாதம் எதிர்கட்சிகளின் அனுகூல மாதம் என்றே கூறலாம்.
குரு
குருபகவான் காலபுருசனின் 3-ஆமிடமான மிதுனத்தில் தன் சுயசாரம் பெற்று செல்கிறார். இந்த மாதம் குருபகவான், புனர்பூசம் 4-ஆம் பாதத்தில் செல்கிறார். எனவே குரு அம்சத்தில் உச்சம்பெற்று நகர்ந்துகொண்டிருக்கிறார் என்றாகிறது. எனவே நிறைய கோவில்களில் புனருத்தரணம் செய்யப்படும். நிறைய கல்வி நிலையங்கள் புதுப்பிக்கப்படும். கல்வி முறையில் நல்லமாற்றம் ஏற்படும். சிறு தூரப் பயணம், சிறு தூர வாகனங்கள் செம்மை அடையும். நில விற்பனை, பத்திரிகை பணியாளர்கள், வெளிநாட்டுக் கல்வி, வெளியூர், வெளிநாட்டு பயணம் சார்ந்து நீதிமன்றம் பயனுள்ள பலபல உத்தரவுகளை பிறப்பிக்கும். இதில் மாணவர்களின் கல்வி சம்பந்த நீதிமன்ற தீர்ப்பு வெகு முக்கியத்துவம் பெறும். கல்வி ஸ்தாபனங்கள், கல்லூரிகள் என இவைபோன்ற நிறுவனங்கள், உங்களின் பிரச்சினை, நீதிமன்றத்தில் இருந்தால் நல்ல தீர்ப்பு கிடைக்க இந்த மாதம் வெகு வாய்ப்புண்டு; பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாடகைக்கு இருப்பவர்களுக்கு சாதகமாகவும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
சுக்கிரன்
இவர் எப்போதும் கூட்டணிக் கட்சிகளை குறிப்பார். சுக்கிரன் தற்போதைய கோட்சாரத்தில், கேதுவுடன் உள்ளார். கேதுபகவான் எப்போதும் குழப்பம் மற்றும் பிரிவின் காரகர். எனவே கூட்டணிக் கட்சிகளை ரொம்ப குழப்பி அடிப்பார். இதனால் கூட்டணி கட்சிகள் ஆளும் கட்சியுடனும், எதிர்கட்சியுடனும் நன்கு பழகுவர். ஆளும் கட்சிக்கு தலையும், எதிர்கட்சிக்கு வாலும் காண்பித்து மண்டை காய செய்வர். இதற்கு காரணம் இவர்களின் சந்தேகம்+ஒரு மந்திரியின் யோசனை ஆகும். மேலும் சுக்கிரன் காலபுருசனின் 5-ஆமிடத்தில் இருப்பதால், இவர்களுக்கு எப்படியாவது ஒரு மந்திரி பதவியை பிடித்துவிட வேண்டுமெனும் பேரவா மண்டையை பிடித்து ஆட்டும். அதனால் யாரை சந்தித்தாலும், அங்கு ஒரு துண்டை போட்டு ரிசர்வ் பண்ணி வைத்துவிடுவர். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.
சனி
இவர் காலபுருசனின் அரசியல் காரகர் ஆவார். வாக்கியப்படி சனி ராகுவுடன் உள்ளார். எனவே அரசியல் வழக்கத்துக்கும் மேலான அதிரிபுதிரியாக இருக்கும். திருக்கணிதப்படி மீனத்தில் அமர்ந்து சூரியனையும், புதனையும் பார்க்கிறார். இதனால் அரசு துறை அதிகாரிகளை அழ அழ செய்வார். சனிபகவான், சூரியனை பார்ப்பதால், ஒரு வயது முதிர்ந்த மந்திரி சுகவீனம் அடைவார். மருத்துவமனையில் இருக்க நேரிடும். வாக்கியப்படி, கும்பத்தில் சனி அமர்ந்து, சுக்கிரன் கேதுவை பார்ப்பதால், காதல் திருமண ஜோடிகளை மிக இன்னலுக்கு உள்ளாக்குவார். இந்த மாதம் தயவு செய்து காதல், கலப்பு மணத்தை தவிர்த்திடுங்கள்.
ராகு
இவர் கும்ப ராசியில், சனி சாரத்தில் நகர்கிறார். எப்போதும் சனி- ராகு சம்பந்தம் ஏற்புடையதல்ல. காற்று ராசியில் இவ்வமைப்பு உள்ளது. எனவே காற்றில் தாக்கத்தை உண்டாக்குவர். குறிப்பாக மேற்கு திசையிலுள்ள இடங்கள் பாதிப்பு அடையும். புயல், சூழல் காற்று, வான்வழி விபத்து, விண்வெளித்துறையில் தகராறு என இவற்றை கும்ப ராசியில் அமர்ந்த ராகுவும்- உடனுள்ள சனியும் தருவர்.இந்த மாதம் மேற்கண்ட தீமைகள் சற்று அதிகமாகும். ஏனெனில், சனி பூரட்டாதி 1-ல் இருப்பதால் மேஷ அம்சம் பெறுவார்.
ராகுவும் பூரட்டாதி 1-ல் இருப்பதால் அவரும் மேஷ நவாம்சம் பெறுவார். ஆக, இரு பாபர்களும், சனியும், ராகுவும், ஒரே நட்சத்திரக்காலில் நின்று கிரகயுத்த நிலை பெறுகின்றனர். எனவே அவர்களின் தீவிரத்தன்மை அதிகமிருக்கும்.எனவே இந்த மாதம் விமான பயணம், காற்றாலைகள், பௌதீக துறை, மக்கள் கணக்கெடுப்பு துறை, பங்கு வர்த்தகம், தோல் தொழிற்சாலை, கள்ள நோட்டு அச்சடிப்பவர்கள் என அனைவரும் அலார்ட்டாக இருக்கவேண்டியது கட்டாயமாகும்.
கேது
இவர் சிம்ம ராசியில், பூர நட்சத்திரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார். உடன் சுக்கிரன். எதிரே வாக்கியப்படி சனியும் ராகுவும். இந்த மாதம் இளம் பெண்கள் காதல் என்ற வார்த்தையை உச்சரிக்கவும் கூடாது. பழகுகிற ஆட்களிடம் வெகு ஜாக்கிரத்தையாக இருப்பது அவசியம். காதல் கல்யாணம் செய்ய முடிவெடுத்தவர்கள், திருமணத்தை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கவும். இல்லாவிடில், சம்பவம் நிகழ வாய்ப்புண்டு. பெண்கள் மானபங்கம் அடையும் கிரக நிலை, கோட்சாரத்தில் காணப்படுகிறது.
சந்திரன்
புரட்டாசி 1, 2, 3 செப்டம்பர் 17, 18, 19 கடக ராசியில் சந்திரன் ஓட்டம். ஒரு நீர் ராசியில், நீர் கிரகம் செல்லும்போது மழை உண்டாகும்.
புரட்டாசி 4, 5, 6 செப்டம்பர் 20, 21, 22 சந்திரன் சிம்ம ராசியில், சுக்கிரன், கேதுவுடன் செல்வார். காற்றும், குறைவான மழையும் வரும்.
புரட்டாசி 6, 7, 8 செப்டம்பர் 22, 23, 24 கன்னி ராசியில், சூரியன் மற்றும் உச்ச புதனுடன் சந்திரன் நகர்வு. மழை பொழியும் வாய்ப்பு குறைவு. வீசும் காற்றில் வெப்பம் மிகுந்திருக்கும்.
புரட்டாசி 8, 9, 10 செப்டம்பர் 24, 25, 26 துலா ராசியில், செவ்வாயுடன் சந்திரன் செல்லல். வெப்பக்காற்று வீசும்.
புரட்டாசி 18, 19, 20 அக்டோபர் 4, 5, 6 கும்ப ராசியில் சனி, ராகுவுடன் சந்திரன் நடப்பு. ஒரு காற்று ராசியில், காற்று கிரகங்களுடன் சந்திரன் செல்வதால் காற்றின் தாக்கம் அதிகமிருக்கும்.
திருக்கணிதப்படி, மீனத்தில் சனி நிலை கொண்டுள்ளார். புரட்டாசி 19, 20, 21 அக்டோபர் 6, 7, 8-ஆம் தேதிகளில் சந்திரன் அங்கு நகரும்போது கடல் மாறுதல் கொள்ளும். கடல் சுருங்கி, உள்வாங்கி, பாறைகள் தெரியும். இதனை சனிபகவான் செய்வார். இந்த மாதம் காற்று ராசியில் கிரகங்களில் அனேகர் செல்வதால், காற்று தன்மை முதன்மை அதிகம் பெறும்.