காலத்தின் வடிவானவர் காளி.
அழகான சிவனின் உயிரை காப்பாற்றியவர் தாரா. பண்டகா அசுரனை அழிக்க தோன் றியவர் திரிபுரசுந்தரி. உலகையே ஆளவந்தவர் புவனேஸ்வரி. திரிபுரசுந்தரியின் நிழலில் தோன்றியவர் பைரவி. மதனா அசுரனை அழிக்க தோன்றியவர் மகளா முகி. மதங்க முனிவரின் மகளாக பிறந்தவர் மாதங்கி. லட்சுமி தேவியின் வடிவமாக அவதரித்தவர் கலாத் மிகா. இமவானின் மகளாக தோன்றியவர் சைலபுத்திரி மற்றும் பிரம்மசாரணி, சந்திரகாந்தா, குஷ்மகாந்தா, காத்தியாயினி, காளராத்திரி, மகாகவுரி, சித்தாத்ரி, நிசும்ப விசும்ப அரக்கர்களை அழித்தவர் கௌசிகி. மகிஷாசுரனை அழித்தவர் துர்க்கை. துர்மா காசுரனை அழித்தவர் சாகம்பரி. அருணாசுரனை அழிக்க தோன்றியவர் பிரமாரி. வைப்ரசித்த அரக்கர்களை அழித்தவர் ரத்தாந்திகா. இமயமலை முனிவர்களை காக்கவந்தவர் பீமாதேவி. தேவர்களுக்கு உண்டான ஆணவத்தை அழிக்க தோன்றியவர் ஜெகதாத்திரி. மற்றும் மாகாளி அர்த்த நாரீஸ்வரி, உமாதேவி, காமாட்சி, மீனாட்சி, அங்காளம் மன். இப்படி பல அவதாரங்களை அன்னை பார்வதிதேவி எடுத்திருந்தாலும், அவள் அன்பிலே சிறந்தவள் தாயன்பு என்பது, நமக்கு எல்லாம் தேவை என்பதற்காகவே தோன்றியவர். அப்படிப்பட்ட எல்லாம்வல்ல அன்னை ஆதிபராசக்தி பற்பல வடிவங்களில் கோடிக்கணக்கான கோவில் களில் குடிகொண்டுள்ளார்.
அப்படிப்பட்ட அன்னை ஆதிதி சக்தி மாரியம்மன் என்ற பெயருடனும் புகழுடனும் விளங்கிவருகிறார். புன்னை நல்லூரில் இவளை தரிசிக்க பக்தர்கள் தினசரி படையெடுத்து வருகிறார்கள். இவரது கீர்த்தி எப்படிப்பட்டது. தெரியுமா? தஞ்சாவூரை தெரியாதவர்கள் அறியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. ராஜராஜசோழன் உருவாக்கிய தஞ்சை பெருவுடையார் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. அப்படிப்பட்ட புகழ் வாய்ந்த தஞ்சைக்கு அருகில் அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம். இந்த ஆலயம் எப்படி உருவானது. முக்காலத்தில் இப்பகுதியில் தேவர்கள்தவம் செய்யும் பகுதியாக விளங்கி வந்துள்ளது.
அப்படிப்பட்ட இப்பகுதியில் தஞ்சன் என்ற அசுரனும் இறைவனை வேண்டி வ-மையுடன் கடும்தவம் இருந்தான்.
அதன்பயனாக இறைவனிடம் பெற்ற வரத்தினால் ஆணவம் கொண்டு எல்லா அரக்கர்களையும் போலவே தேவர்களையும் முனிவர்களையும் மக்களையும் துன்புறுத் தத் தொடங்கினான். தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானை நாடி ஓடினார்கள்.
ஐயனே தஞ்ச அரக்கனின் அட்டூழியம் தாள

ஐயனே தஞ்ச அரக்கனின் அட்டூழியம் தாள முடியவில்லை.அரக்கனை அழித்து எங்களை காத்தருள் வேண்டும் என்றனர்.
தஞ்சபுரீஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் அம்பாள் ஆனந்த வல்லியை தஞ்ச அசுரனை அழிக்கும் பணியை ஒப்படைத்தார். அம்பாள் தனது வலிமையால் காளி ரூபம் எடுத்தார். தஞ்ச அரக்கனுடன் கடும் போர் நிகழ்ந்தது.
அரக்கனை அழிக்க அழிக்க அவன் மீண்டும்.... மீண்டும்..... கோடிக்கணக்கான உருவங்களில் வந்து போராடினான். இதனால காளி காம்பாளின் கோபம் மேலும்.. மேலும்... உக்கிரமடைந்தது. அவனது ரத்தத்தை குடிக்க சிவந்த உருவமாக மாறிகோடி உருவங்கள் எடுத்த தஞ்ச அசுரனை அழித்தாள். தஞ்ச அசுரன் இறக்கும் தருவாயில் அன்னையிடம் சரணடைந்து வரம் கேட்டான். நான் இறந்தபிறகு இந்த பகுதி தஞ்சன் என்று என் பெயரிலேயே விளங்க வேண்டும் என்று வினவினான். கோபத்தை மறந்த அன்னை அவனது விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி தஞ்ச அசுரனை அழித்ததால் தஞ்சன் ஊர் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் பின்னர் காலப்போக்கில் மக்கள் பேச்சுவழக்கில் மருவி தஞ்சாவூர் என்று அழைக்கப்படுகிறது. தஞ்ச அசுரனை அழிப்பதற்கு முன்பு சிவபெருமான் தஞ்சையை சுற்றிலுமுள்ள எட்டு திசை களிலும் மகாசக்திகளை உருவாக்கி அமர்த்தினார்.
அப்படி அமைந்த சக்திகளில் ஒருவர்தான் தஞ்சைக்கு கிழக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம்.
சோழ மன்னர்கள் தங்கள் படைபலத்தை யும் அம்பிகையின் அருளையும் திடமாக நம்பி ஆட்சி செய்தார்கள். தங்கள் தலைநகரில் எட்டு திசைகளிலும் சிவபெருமானால் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட அம்பிக்கைகளுக்கு ஆலயங்கள் எடுத்தார்கள். அவற்றை மக்களும் வழிபட்டுவந்தனர். சோழர்கள் ஆட்சிக் காலத்திற்குப்பிறகு அம்பிகையின் நினைவு மக்களுக்கு மறந்து போனது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/03/punnainalur1-2025-12-03-18-00-19.jpg)
பதினாறாம் நூற்றாண்டில் சோழ மன்னர் களால் உருவாக்கப்பட்டிருந்த 88 கோவில்கள் தஞ்சை அரண்மனை தேவஸ்தான பராமரிப் பில் உள்ளன. அவற்றில் ஒன்றாக புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் மாரியம்மனின மூல ஸ்தானம் புற்று மண்ணால் உருவானது என்பது ஒரு தனி சிறப்பு. இதனால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில் 16-ஆம் நூற்றாண்டில் வெங்கோஜி மன்னர் காலத்தில் இவ்வாலயம் மீண்டும் பொலிவுபெற ஆரம்பித்தது. வெங்கோஜி மகாராஜா பல்வேறு திருத்தலங்களை வணங்கி வழிபடுவதற்காக தல யாத்திரை புறப்பட்டார். அப்படிச் சென்றவர் கண்ணபுரம் என்று அழைக்கப்படும் சமயபுரத்தில் தங்கி அம்மனுக்கு வழிபாடு செய்தார். அன்றிரவு அப்பகுதியில் தங்கி இருந்தார். அந்த இரவில் செங்கோஜி மகாராஜா வின் கனவில் அம்பிகை தோன்றினார். அரசனே தஞ்சைக்கு கிழக்கே சற்று தூரத்திலுள்ள புன்னைவன காட்டில், நான் ஒரு புற்றாக உருவாகி அமர்ந்துள்ளேன். நீ அங்குவந்து என்னை வணங்க வேண்டும் என்று கூறினார்.
செங்கோஜி மகாராஜா விடிந்ததும். தனது தலைநகராகிய தஞ்சைக்கு சென்றவர், கனவில் அன்னை கூரிய புன்னைவன காட்டிற்கு படைப்பறிவாரங்களோடு சென்றார்.
அங்கு புதர்கள் மண்டிய பகுதியில் அம்பிகை கூறியபடி புற்றுவ வடிவம் இருப்பதை கண்டறிந்தார். அவருக்கு மெய்சிலிர்த்தது விழுந்து வணங்கினார். அந்த புன்னைவன காட்டில் அம்பாள் குடிகொண்டிருந்ததை அடிப்படையாகக்கொண்டு அப்பகுதிக்கு புன்னைநல்லூர் என்று பெயரிட்டதோடு புன்னைவன காட்டை திருத்தி அன்னைக்கு சிரிய அளவில் ஆலயம் உருவாக்கியதோடு அங்கிருந்த கிராமத்தையும் வழிபாட்டுக்கு அர்ப்பணித்தார். சுயம்புவாக புற்று உருவில் அம்மன் தோன்றியதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அதற்கு பதில் தைலக்காப்பு சாற்றப்படுகிறது. அம்பாளுக்கு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஒரு மண்டலம் 48 நாட்கள் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
அதுசமயம் அம்பாளை ஒரு வெண்திறையில் வரைந்து அதை ஆவாகனம் செய்து அதற்குதான் அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் இருவேளை சாம்பிராணி தைலம் புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகின்றன. தைலாபிஷேகம் செய்யும் நேரத்தில் அம்பாளின் தைலக்காப்பின்போது உக்கிரம் அதிகமாகும். அதை தவிர்ப்பதற்காக அம்பாளுக்கு தயிர் படையலும், இளநீர் ஆகியவற்றை நைவேத்தியமாக வைத்து படைக்கிறார்கள்.
சுமார் ஆறு அடி உயரத்தில் பிரம்மாண்டமான கோலத்தில் பளிங்குச் சிலையாக அன்னை காட்சிதரும் புன்னை நல்லூர் மாரியம்மனின் கீர்த்தியும், அவரது அருளும் எண்ணிலடங்காதவை. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி நோய் ஏற்படும். சமயத்தில் இங்குவந்து அம்மனுக்கு பிரார்த்தனை செய்து இங்குள்ள உள் தொட்டி வெளி தொட்டிகளில் தண்ணீரை நிரப்பினால் விரைவில் வைசூரி நோய் கொண்டவர்கள் குணமடைந்து விடுகின்றனர். இது இன்றுவரை கண்கூடாக நடைபெறும் சம்பவங்கள். 1729- 1735, காலகட்டங்களில் தஞ்சாவூரை ஆட்சி செய்துவந்தவர் துளசராஜா. இவரது மகளுக்கு ஏற்பட்ட நோயினால் அவரது மகளின் கண்பார்வை பறிபோனது.
அந்த அரசர் தனது மகளுக்கு கண் பார்வை கொடுக்குமாறு கேட்டு இந்த மாரியம்மனிடம் வந்து வேண்டி நின்றார். அவரது வழிபாட்டின்மீது மனம் குளிர்ந்த மாரியம்மன் அவரது மகளுக்கு பார்வை கிடைக்க செய்தார். அந்த சந்தோஷத்தில் இந்த ஆலயத்தில் பராமரிப்பு பணிகள் அனைத்தையும் செய்துள்ளார். அந்த அடிப்படையில் ஆலயத்தின் அனைத்து பராமரிப்பு பணிகளையும் இன்றுவரை தஞ்சை வம்சாவழியில் வந்த அரச குடும்பத்தினர் பராமரித்து வருவதாகக் கூறுகிறார்கள்.
ஆலய அர்ச்சகர்கள் முதலில் அம்மன் வெள்ளை எரும்பு புற்றாக வளர்ந்து இருந்தார். துளச ராஜாவின் மகளுக்கு கண் பார்வை கிடைத்ததை அடுத்து அந்த அரசருக்கு மிகவும் விருப்பமான கேரளத்தைச் சேர்ந்த சதாசிவ பிரம்மேந்திர சாமிகள் என்பவர் அம்மனை பளிங்கு சிலையாக வடிவமைத்து சக்திவாய்ந்த ஒரு சக்கரத்தையும் பொறுத்தி தனி அம்மனை நிறுவினார். அதன்பிறகு இந்த புன்னைநல்லூர் மாரியம்மனின் புகழ் தமிழகம் தாண்டி உலக அளவில் பிரசித்த பெற்றுள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.
தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த சோழ அரசர்கள் பலர் இத்திருக்கோவிலுக்கு கோபுரங்கள், மண்டபங்கள், நுழைவாயில்கள் போன்றவற்றை அவ்வப்போது கட்டிக் கொடுத்துள்ளனர். இங்குள்ள ஆலய குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மிதக்கும் திருவிழா மிக சிறப்பாக நடைபெறுகிறது. ஆடி, ஆவணி மாதங்களை அம்மனுக்கு ஏற்ற புனிதமான மாதங்களாகக் கருதப்படுகின்றன. அப்போது பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் திரண்டுவந்து நேர்த்திக் கடன் செலுத்தி செல்கிறார்கள். குறிப்பாக தங்களுக்கோ தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கே அம்மை நோய், கண் நோய் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கற்பனையான விஷயங்களை நினைத்து... நினைத்து... மிரண்டு அழும் குழந்தைகளின் பயத்தை இந்த அம்மன் போக்குகிறார். மேலும் தோல்வியாதி, வயிற்று வலி, உடலில் ஏற்பட்டும் சொறி, சிரங்கு, சூட்டு கட்டிகள் இதுபோன்ற காரணங்களால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவரால் கைவிடப்பட்டவர்கள் இக்கோவிலுக்கு வந்து அன்னையிடம் பிரார்த்தனை செய்து குணமடைந்து வருகிறார்கள் மற்றும் வேலை வாய்ப்பு, தொழிலில் அபிவிருத்தி, பணியில் பதவி உயர்வு, பணியிட மாற்றம், உட்பட பக்தர்களின் அனைத்து பிரார்த்தனைகளையும் புன்னை நல்லூர் மாரியம்மன் உடனுக்குடன் நிறைவேற்றி தருகிறார்.
தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் மாவிளக்கு போடுவது, உப்பு, மிளகு போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள். வேப்பஞ்சேலையை உடுத்தியும் தீச்சட்டி எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள். கோவிலின் தீர்த்த குளத்தில் வெல்லம் வாங்கி போடுவது கணவரின் ஆயுளை நீட்டிக்க வேண்டிக்கொண்ட பெண்கள் அம்மனுக்கு மாங்கல்யத்தை நேர்த்திக்கடன் காணிக்கையாக செலுத்துகிறார்கள். திருமணத்தடை உள்ளவர்களும் தாலி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டவுடன் அவர்களுக்கு விரைவில் திருமணங்கள் நடக்கின்றன. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புற்று மண்ணையும், அபிஷேகப் பாலையும் பிரசாதமாக கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடி மாதம் பூச்சொரிதல் விழா முத்து பல்லுக்கு ஊர்வலம் திருவிளக்கு பூஜைகள். ஆவணி மாசம் பிரமோற்சவம் தேரோட்டம். புரட்டாசியில் தெப்ப உற்சவம். மார்கழியில் லட்சத் திருவிளக்கு ஏற்றுதல் இப்படி ஆண்டு முழுவதும் புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு விழா எடுத்து மகிழ்கிறார்கள்.
இந்த அம்மனின் செயல் மிக வித்தியாசமானது. குறிப்பாக கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தினால் வெப்பம் அதிகரிக்கும். அந்த சமயங்களில் அம்மனின் முகத்தில் வியர்வை முத்துக்கள் தானாக தோன்றி மறைவது எங்கும் காணாத காட்சி. அன்னையின் முகத்தில் கோடை காலத்தில் முத்து முத்தாக வியர்வை தோன்றுவதால் இவருக்கு முத்துமாரியம்மன் என்ற பெயரும் உண்டு.
பொதுவாக மன்னர்கள் ஆட்சிசெய்த செய்த நகரங்களில் சிவன்பெருமாள் போன்ற பெரும் தெய்வங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆலயங்கள் அமைத்தார்கள்.
அந்த ஆலயத்தையும் அந்த நகரத்தையும் பாதுகாக்க சுற்றிலும் உள்ள திசைகளில் காவல் (ஏவல்) தெய்வங்களை உருவாக்கினார்கள். அப்படித்தான் தஞ்சை நகரின் எட்டு திசைகளிலும் காளியம்மன், மாரியம்மன், உட்பட எட்டு சக்தி தெய்வங்கள் காவல் தெய்வங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் பெயர்பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன். இவ்வளவு மகாசக்தி மிக்க அன்னை மாரியம்மனை நாமும் தரிசிக்க வேண்டும் அல்லவா?
ஆலய அமைவிடம் தஞ்சைநகரிலிருந்து கிழக்கே எழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள் ளது. ஆலயம் காலை 5.30 மணிமுதல் இரவு 9.00 மணிவரை திறந்திருக்கும்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us