நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி - செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இது அவரது 12-வது சுதந்திர தின உரையாகும்.

அந்த சுதந்திர தின உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

Advertisment

நாடு இன்று சுதந்திர தினத்தை பெருமையாக கொண்டாடுகிறது. நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் தியாகம் செய்துள்ளனர். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர் களுக்கு மரியாதை செலுத்துகிறேன். 

அரசியலமைப்பு இந்தியாவின் ஒளிவிளக்கு.

சமீபத்திய பயங்கரவாத தாக்குதல் இந்தியாவின் பலத்தை உலகிற்கு பறை சாற்றியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்களை நினைத்து பார்க்கிறேன். அவர்களை வணங்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. இதனை நினைத்துநான் பெருமிதம் கொள்கிறேன். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நமது ராணுவம் பாடம் புகட்டியது. பல 100 கி.மீட்டர் தூரம் உள்ளே சென்று எதிரிகளை அழித்தோம். பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை பொறுத்து கொள்ள மாட்டோம். இந்தியா எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது. ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் இயல்பை காட்டுகிறது. தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக செல்ல முடியாது. எதிரிகள் மீண்டும் முயன்றால் எங்கு எப்போது தாக்குதல் என்பதை நமது படை தீர்மானிக்கும். இந்திய ராணுவம் முழு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளுக்கு யாரையும் சார்ந்து இந்தியா இருக்கக்கூடாது. சூரிய ஒளி சக்தியை பெருக்குவோம். இந்திய விண்வெளி துறையில் பெரும் அளவில்சாதித்து வருகிறோம். விண்வெளியில் இந்தியாவுக்கான ஒரு தனி இடம் உருவாக்குவோம். இது  தொழில்நுட்ப உலகம். விண்வெளி துறையில் இந்தியாவின் 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுகிறது. பெட்ரோல், டீசல் காஸ் இறக்குமதியை குறைக்க முயற்சிக்கிறோம். வளர்ந்த நாடாக சுயச்சார்பு மிக அவசியம். 

Advertisment

கோவிட் தடுப்பூசியை நாமே தயாரித்துநமது பெருமையை உலகிற்கு அறியசெய்தோம். கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றினோம். உலகச்சந்தையை இந்தியா ஆட்கொள்ள வேண்டும். இந்தியர்கள் உருவாக்கிய பொருட்களையே வாங்குவோம். கடந்த காலங்களில் சுதந்திரத்திற்காக பாடுபட்டோம். தற்போது சுயச்சார்பு இந்தியாவுக்காக உழைப்போம். 

மீனவர்கள் , விவசாயிகள் நலன் விஷயத்தில்எவ்வித சமரசமும் கிடையாது. இந்தியாவின் தண்ணீர் இந்தியாவுக்கே, பிற நாட்டு விவசாய நிலங்களுக்கு தர மாட்டோம். சிந்து நதி நீர் நமக்கு மட்டுமே.

இளைஞர்களுக்காக ரூ.1லட்சம் கோடியில் புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்படும். புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் சுதந்திர தினம் முதல் அமலுக்கு வருகிறது. வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் மூலம் 3.5 கோடி இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும். புதிதாக தனியார் துறையில் பணியில் இணையும் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. 

Advertisment

சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சிறு, குறு நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். 2047-இல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.

சுதந்திர தின உரையில் சாதனை படைத்த மோடிடெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அவர் மொத்தமாக 103 நிமிடங்கள் உரையாற்றினார். இது பிரதமர் மோடியின் நீண்ட உரையாகும். 

மோடி கடந்த 2024-இல் 98 நிமிடங்கள், 2016-இல் 96 நிமிடங்கள் பேசியிருந்தார். 

தற்போதைய உரையின் மூலமாக பிரதமர் மோடி, அவரது சாதனையையேமுறியடித்துள்ளார்.

மேலும் தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரையாற்றி இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்துள்ளார். 

இந்திரா காந்தி, தான் பிரதமராக இருந்த காலத்தில் 11 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.

அதிகபட்சமாக இந்தியாவில் 17 முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பெருமை ஜவஹர்லால் நேருவைச் சேரும்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு முதல் சுதந்திர தினத்தன்று இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 72 நிமிடங்கள் நீண்ட உரையாற்றினார்.

2015-ஆம் ஆண்டு 88 நிமிடங்கள் உரையாற்றி நேருவின் சாதனையை முறியடித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த 1954-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு 14 நிமிடங்களும், 1966-ஆம் ஆண்டு இந்திரா காந்தி 14 நிமிடங்களும் பேசியது, குறைந்த நேர சுதந்திர தின உரைகளாக உள்ளன.