தமிழகத்தின் தொன்மையான நாகரிக வரலாற்றை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில், ஆதிச்சநல்லூர், கொற்கை உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி கரையில் அகழாய்வுகளில்கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சின்னங்களை காட்சிப்படுத்தும் பொருநைஅருங்காட்சியகம், திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.57 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 54,296 சதுர அடியில் விரிவாக கட்டப்பட்டுள்ள இந்த வளாகம், பாரம்பரிய கட்டிடக்கலை வடிவத்
தமிழகத்தின் தொன்மையான நாகரிக வரலாற்றை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில், ஆதிச்சநல்லூர், கொற்கை உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி கரையில் அகழாய்வுகளில்கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சின்னங்களை காட்சிப்படுத்தும் பொருநைஅருங்காட்சியகம், திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.57 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 54,296 சதுர அடியில் விரிவாக கட்டப்பட்டுள்ள இந்த வளாகம், பாரம்பரிய கட்டிடக்கலை வடிவத்தையும் நவீன வசதி களையும் ஒருங்கிணைத்துள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அருங்காட்சியக வளாகத்தில் அறிமுகக் கூடம், சிவகங்கை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய கட்டடத் தொகுதிகள் என 54,296 சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னொளியில் ஜொலித்த அருங்காட்சியகத்தை இரவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேட்டரி வாகனத்தில் சென்று பார்வையிட்டார்.
தாமிரபரணி நதியைச் சுற்றியுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி போன்ற இடங்கள் தமிழர் வரலாற்றில் தனித்த இடம் பெற்ற தொல்லியல் தளங்களாகும். இப்பகுதிகளில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சமீப காலங்களில் அறிவியல் முறைகளுடன் அகழாய்வுகளை மேற்கொண்டது.
அந்த அகழாய்வுகளின் போது கிடைத்த மனித எலும்புக்கூடுகள், மண் பானைகள், இரும்புக் கருவிகள், ஆபரணங்கள், நாணயங்கள் உள்ளிட்ட அரிய தொல்பொருட்கள் தமிழர்களின் நாகரீகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயர்ந்த நிலையில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. இவ்வளவு மதிப்புமிக்க கண்டுபிடிப்புகளை பொதுமக்கள் நேரில் கண்டு அறிய வேண்டும் என்ற எண்ணத்தில் பொருநை அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் கட்டமைப்பு மட்டும் அல்லாமல் அதன் சுற்றுப்புற வடிவமைப்பும் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. வளாகத்தின் நடுவே அழகிய நீர்த்தடாகம் அமைக்கப்பட்டுள்ளதுடன், திறந்த வெளி அரங்கம் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் மாதிரிகள், உள்ளூர் கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பொதுமக்கள் சுலபமாக நடந்து செல்ல வசதியான நடைபாதைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இயற்கையை ரசிக்க மரங்கள், குறுஞ்செடிகள் நடப்பட்டுள்ளதுடன், குழந்தைகள் மகிழ்ச்சியாக நேரம் செலவிட சிறப்பு பொழுதுபோக்கு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் மற்றும் குடும்பத்தினர் இளைப்பாற அமர்வதற்கான இருக்கைகளும்பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us